தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 13 juni 2011

Student Visa வில்வந்த மாணவியைக் கற்பழிக்க தமிழ் வர்த்தகர் முயற்சி அம்பலம்

13 June, 2011 by admin


மறுக்கும் பட்சத்தில் வேலையும் போய், வீடும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் நிலைவரும் எனவும் மிரட்டியுள்ளார். அர்த்த ராத்திரியில் என்னசெய்வது என்று தெரியாத அந்த மாணவி தனது நண்பிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முற்பட்டவேளை, வீட்டுத் தொலைபேசி வயரையும் அவர் அறுத்து எறிந்துள்ளார். மோபைல் போன் இருந்தும் அதில் கிரெடிட் இல்லாத காரணத்தால் நண்பியோடு அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை. தமிழ் வர்த்தகரின் ஆசைக்கு இணங்காத அம்மாணவி தொடர்ந்து போராடி கூச்சலிட்டதால், வீட்டின் கதவை வெளித் தாழ்ப்பாள் இட்டுவிட்டு அந்த வர்த்தகர் சென்றுவிட்டார்.

இதனால் அம்மாணவி சுமார் 1 நாளாக அத்தொடர்மாடி வீட்டில், அடைபட்டு இருந்திருக்கிறார். வார இறுதி நாள் என்பதனால், அவர் வேலையில் இருப்பார் அதனால் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என அவர் நண்பர்கள் குறிப்பிட்ட மாணவிக்கு தொலைபேசி அழைப்பையும் மேற்கொள்ளவில்லை. பின்னர் திங்கட் கிழமை அவர் காலேஜுக்கு வராத காரணத்தால் அவர்கள் இம் மாணவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு நிலையை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். ஏன் 999 க்கு போன் செய்து பொலிசாரிடம் முறையிட்டிருக்கலாமே என மற்றைய மாணவிகள் கேட்டபோதுதான், அப்படி ஒன்று இருப்பதே அவருக்கு தெரிந்துள்ளது. குறித்த மாணவியின் வீட்டிற்குச் சென்ற தமிழ் மாணவ மாணவிகள் வெளிப்பூட்டை உடைத்து அவரை மீட்டுள்ளனர்.

மேற்படி சில நண்பர்கள் அந்த தமிழ் வர்த்தகரைச் சந்தித்து மிரட்டியும் உள்ளனர். இருப்பினும் எதற்கும் அவர் அடிபணியவில்லை. தனது வீட்டில் காசு தராமல் அப் பெண் தங்கியிருந்தாகவும், தாம் அவர் இல்லை என நினைத்தே வெளிப்பூட்டைப் பூட்டியதாகவும் அவர் தெரிவித்துவருகிறார். இந் நிலையில் போலிஸில் சென்று முறையிட மேற்படி அப் பெண் தயங்குவதோடு, திரும்பவும் இலங்கைக்கே சென்றுவிட உத்தேசித்தும் உள்ளார். தமிழர்கள் சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம்வேண்டும் என்று போராடி வர, இதுபோன்ற கொழுத்த தமிழ் முதலாளிகள் சிலர் தமிழர்களை அடிமையாக புலம்பெயர் நாடுகளில் வைத்திருக்கின்றனர் என்பது ஒரு கசப்பான உண்மை ! முதலில் தமிழர்கள் இவர்களிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது !

சரியான ஆவணங்கள் இல்லாத தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதும், அவர்களுக்கு மணித்தியாலத்துக்கு � 1.50 பவுன்ஸ் என்ற ரீதியில் சம்பளம் வழங்கப்பட்டு வருவதும், பல தமிழர்கள் அறிந்த கசப்பான உண்மை. பிரித்தானிய அரசு வேலைசெய்வோருக்கு மணித்தியாலத்துக்கு குறைந்த பட்சம் � 5.95 பவுன்ஸுகள் ஊதியமக வழங்கப்படவேண்டும் என்று சட்டம் வகுத்துள்ளது. ஆனால் காலை முதல் மாலை வரை செக்கு மாடுகளைப் போல பல தமிழ் இளைஞர்கள், தமிழ் வர்த்தக நிலையங்களிலும் இந்திய வர்த்தக நிலையங்களிலும் வேலைசெய்து முறிகின்றனர். எமது இனமே எமக்கு எதிரியாக இருக்கும் நிலை லண்டன் போன்ற பல நாடுகளில் காணப்படுகிறது.

சம்பளத்தைக் குறைத்து தந்தாலும் பரவாயில்லை, ஒரு மனிதனைப் போல நடத்துங்கள் என்று கண்ணீர் விட்டு அழும் தமிழ் இளைஞர்களும் லண்டனில் உள்ளனர். ஆனால் இவை அனைத்தும் சில தமிழ் முதலாளிகள்மார் காதில் கேட்ப்பதே இல்லை. இவர்களிடம் இருந்து எமக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கப்போகிறதோ தெரியவில்லை ?

YOUR COMMENTS:

comments by: Chella
செய்தியினை தேடி வெளியிட்ட அதிர்வு இணையத்திற்கு நன்றி, மேலும் வறுமையை சாதகமாக்கி உலகில் எங்கும் நடக்கும் பாலியல் முறைகேடுகளுக்கு இவ்வளவு இழப்புகளையும் தாங்கி சொந்த நாட்டை இழந்து நிற்கும் தமிழ் இனமும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துள்ளது, அத்துடன் இந்த செய்தியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் சேகரித்த உங்களால் நிச்சயமாக குற்றவாளியின் புகைப்படத்த!
ையோ அல்லது அவரின் கடையின் முகவரியையோ வெளியிட முடியாதது எதற்காக? இந்த மனநிலை எம் ஊடகவியலாளரிடம் மாறவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன், குற்றவாளியை உலகிற்கு வெளிக்காட்டுங்கள். பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்காதீர்கள். இது ஊடக தர்மம்.
நன்றி.
-----------------------------------------
comments ny: Kumar
நிச்சயமாக இப்படியானவர்களின் முகத்திரையை கிழிக்க அந்த அயோக்கியனின் நிழற் படம் உதவும்.வெளியிட்டால் பலரிற்கு பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஆவன செய்வீர்களா?
------------------------------------------
comments by: மண்மகன்
சபாஸ் அதிர்வு இணையம்!
இப்போதுதான் மிகச்சரியான தகவல் வழங்கியுள்ளீர்கள். லண்டன் மட்டுமல்ல நோர்வே கனடா பிரான்ஸ் என்று பல இடங்களில் இப்படியான சுரண்டல் தமிழர்கள் தமிழர்களுக்கே செய்கின்றார்கள் கேட்டால் அவர்கள் கூறும் பதில் சரியான ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு வேலை கொடுப்பதே பெரிய கரியம் நாங்கள் கடவுள் என்கின்றனர் இந்த அருவருப்பான சுரண்டல் பேர்வழிகள்! நோர்வே ஒஸ்லோவில் �!
எனும் �!
��ளைஞன், த**ண் எனும் இன்னொருபேர்வழி அதுபோல நோர்வே பேர்கனில் ஜாக்** எனும் ஒருவர், லண்டனில் காசு பா**, முருக***, உதயர** இப்படியனவர்கள் சுரண்டல்களை மேற்கொள்கின்றனர். உங்களுக்கு தைரியம் இருந்தால் சுரண்டல் பேர்வழிகள் திருந்தும் பொருட்டு இதை வெளியிடுவீகளா ?
--------------------------------------------
comments by: Kavitha
I am also victim. When I was asylum since 1998 I wasn't permitted to take work in UK. So I lived with my relatives. Her husband is business man he has off licence. they never pay me only food and accommodation. I have been raped 3 or more than per day. it took me 4 years get out from that place. that time I haven't got any body to go and I have no idea about UK. His wife doesn't bother or trust me. If i never agree with him he will beat me to death. now I lost my hearing. My brain damaged because he always bang my head with central heating. Now I got the status and but living in nightmare. every single minute I am dying. I never get chance to tell any one. now I help people who ever come to UK as a asylum or student because I don't want them to become like me. meantime some of them never listen to me or never trust my story. if I see any body working in that off licence I will wait for them and send them to different job. and explained them how we can use the la!
w here. please try to do that. as much you can.

Geen opmerkingen:

Een reactie posten