தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 16 juni 2011

லண்டனில் நாடு கடத்த இருந்தோரில் ஒருவர் தற்கொலை முயற்சி! ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

 
[ வியாழக்கிழமை, 16 யூன் 2011, 10:59.13 AM GMT ]
இன்று மாலை லண்டன், ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந்நிலையில் அவர்களில் சுதாகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 5.00 மணிக்கு தனி விமானம் மூலம் தமிழர்கள் நாடுகடத்தப்படுகின்றனர்.
எனவே இதனைத் தடுக்க தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என தடுத்து வைத்துள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு போராட்டம் நடைபெற்றால் சனல் 4 தொலைக்காட்சி அதனை ஒளிபரப்ப தயாராகவும் உள்ளது எனவும் அறியப்படுகிறது.
ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என திடீர் போராட்டம் அறிவிக்கப்பட வேண்டும் என தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒருவேளை அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றாலும், அவர்கள் இலங்கை செல்லும்போது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை நாம் உலகிற்கு வெளிக்கொண்டுவருதல் வேண்டும்.
இந்த வகையில் ஒரு திடீர் போராட்டம் இன்று மாலை 3 மணி முதல் 5 மணிவரை இடம்பெற்றால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை நாம் ஒரு அளவிற்கேனும் தடுக்க முடியும்.
இல்லையேல் அவர்கள் இலங்கை சென்றுள்ள விடையத்தை நாம் வெளியுலகிற்க்கு கொண்டுவந்தால், அவர்கள் உயிர் இலங்கையில் பாதுகாக்கப்படும்.
அதனால் தமிழர்களே உடனடியாக ஹீத்ரூ விமானநிலையத்தில் 3 மணி முதல் 5 மணிவரை ஒன்று கூடி உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்கள். என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten