17 June, 2011 by admin
விடுதலைப் புலிகளின் நிவாகக் கட்டமைப்பைச் சேர்ந்த பூவண்ணன், பிரியன் மற்றும் சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த சிலர் உட்பட சுமார் 12 பேரை நெதர்லாந்து அதிகாரிகள் விசாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனால் இவர்களில் பலரை இலங்கை இராணுவம் ஏற்கனவே கொன்றுவிட்டது என்ற ஊர்ஜிதமற்ற செய்திகளும் இருக்கிறது. இந் நிலையில் இலங்கை இராணுவம் இவர் தான் அவர் என்று ஆள் காட்டும் நபரிடமே நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளனரா என்ற கேள்விகளும் மேலோங்கியுள்ளது. எது எவ்வாறு இருப்பினும் புலிகளின் நிதியை முடக்க அல்லது அதன் செயல்பாடுகளைக் கண்டு பிடிக்க நெதர்லாந்து அரசு ஏன் முற்படுகிறது என்பது ஒரு கேள்விக்குறியாக அமைந்துள்ளது. அமெரிக்கா இந்தியா போன்ற வல்லரசுகள் காட்டாத கவனத்தை நெதர்லாந்து ஏன் காட்டவேண்டும் ?
இதனை இலங்கை வரவேற்பது வியப்பான விடயம் அல்ல. ஆனால் இது நெதர்லாந்து அரசு தனிப்பட்ட ரீதியில் எடுக்கும் நடவடிக்கையா இல்லை இலங்கை அரசுடன் கூட்டுச் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கையா என்பதே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. புலிகளின் சர்வதேச சொத்து மதிப்பு சுமார் 2.3 பில்லியன் டாலர்களைத் தாண்டும் என சில வெளிநாட்டுப் பத்திரிகைகள் முன்னர் செய்தி வெளியிட்டிருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதனை முடக்கி இலங்கைக்கு கொண்டு செல்ல இலங்கை கடந்த இரண்டுவருடமாக முனைப்புக்காட்டி வருகிறது. இந் நிலையில் நெதர்லாந்து அரசோடு இலங்கை இணைந்தே ஒப்பரேஷன் கொனிக் நடவடிக்கையில் ஈடுபடுகிறதா என்ற சந்தேகங்கள் வலுப்பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Geen opmerkingen:
Een reactie posten