04 June, 2011 by admin
போரில் தமது படையினருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக கொழும்பில் மூன்றுநாள் கருத்தரங்கு ஒன்று நடந்து முடிந்துள்ளது. இக்கருத்தரங்குக்கு வருமாறு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அந்த அழைப்பை ஏற்று அங்கிருந்து ஒருவரும் வராத நிலையில், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்மித் மேற்படி கருத்தரங்கில் பங்குபற்றினார். அவர் விடுதலைப் புலிகளின் சண்டைப் பிரிவினருக்குத் தெரியாமல் தாம் சரணடைவது என்று நடேசன் தீர்மானம் எடுத்திருக்கலாம் என்பதாகத் தெரிவித்து, இதுகுறித்து பரிசீலனை செய்வது அவசியம் என்று கூறியிருந்தார்.
இக்கருத்துக்கள் ஊடகங்களில் வந்து பரபரப்பைக் கிளப்பியிருக்கும் வேளையில், ஸ்மித்தின் இக்கருத்துக்களுக்கு அமெரிக்க அரசாங்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. குறித்த கருத்தரங்குக்கு தமக்கு வந்த அழைப்பைத் தாம் மறுத்துவிட்டதாகவும், இக்கருத்தரங்கில் பங்கெடுத்த ஸ்மித் கூறிய கருத்துக்கள் அவரின் சொந்தக் கருத்துக்களே என்றும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பிரதிப் பேச்சாளர் மார்க் சி ரோனர் தெரிவித்துள்ளார். ஸ்மித்தின் அன்றாடக் கடமைகளில் ஒன்றாகவே இக்கருத்தரங்கில் அவர் பங்குபற்றியமையும் அமைந்தது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனவே ஸ்மித்தின் கருத்துக்கள் அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கையைப் பிரதிபலிக்கவில்லை என்று ரோனர் தெரிவித்தார். ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து சர்வதேச நாடுகள் இலங்கை அரசின் மீது சீற்றம் கொண்டிருக்கும் நிலையில், ஸ்மித்தின் கருத்துக்கள் இலங்கைக்குச் சாதகமாக அமைந்திருந்தன. ஆனால் உடனும் இக்கருத்துக்களை அமெரிக்கா மறுத்துள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten