தொலைக்காட்சி
தொலைக்காட்சி
dinsdag 31 mei 2011
zondag 29 mei 2011
அமெரிக்காவில் பிரபலம் ஆகி வரும் நிர்வாண விளையாட்டுக் கேளிக்கை(காணொளி இணைப்பு )
புதன்கிழமை, 25 மே 2011 19:54

அமெரிக்காவில் பிரபலம் ஆகி வருகின்றது நிர்வாண விளையாட்டுக் கேளிக்கை. ஆண், பெண் இரு பாலரும் ஒளிவு மறைவு இன்றி பிறந்த மேனியாக காட்சி கொடுத்துக் கொண்டு கம்பியூட்டர் கேம்ஸ் விளையாடுகின்றார்கள்.
zaterdag 28 mei 2011
இதுபோல இன்னும் எத்தனை அறிக்கைகள் வர இருக்கிறது: மக்களே உங்களுக்குத் தெரியுமா ?
17 December, 2010 by admin
vrijdag 27 mei 2011
ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கை றோவால் ஆரம்பம்!
(வீடியோ இணைப்பு) |
ஜெயலலிதா என்றுமே ஈழத்தமிழருக்கு எதிராக இருக்கவில்லை என்பதால் இக்கட்டுரையில் இருந்து ஒரு துண்டை நீக்கியுள்ளேன்.புலிகளின் ஆதரவாளரின் தவறுகளால்தான் புலிகளும் தமிழரின் கனவுகளும் அழிந்தன,இனியும் இவர்களை நம்பினால் பாவம் தமிழர்கள்!! |
donderdag 26 mei 2011
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது - கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை
[ புதன்கிழமை, 25 மே 2011, 05:10.46 AM GMT ]
இதுதான் உண்மை!!
இனிவரும் காலங்களில் இலங்கையில் புதிய தாக்குதல்கள் நடக்காதென உத்தரவாதமளிக்க முடியாது: நெதர்லாந்து
woensdag 25 mei 2011
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இலங்கை இராணுவத்தினரின் தகவல்களே உதவின: நெதர்லாந்து ஊடகங்கள்
நெதர்லாந்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ராமச்சந்திரன் கைது - கேபி உள்ளிட்ட 13 முன்னாள் போராளிகளிடம் நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை
[ புதன்கிழமை, 25 மே 2011, 05:10.46 AM GMT ]
zondag 22 mei 2011
vrijdag 20 mei 2011
வயதுக்கு வந்த பெண்கள் இருந்தால் இன்று இரவு வேறுஇடம் சென்றுவிடுங்கள்
(IPKF)
28 December, 2010 by adminஉயிருள்ள வரைக்கும் ஒரு தமிழன் மறப்பானா? சிதைத்து வீசப்பட்ட உறவுகளின் நினைவுகளை..
[ வியாழக்கிழமை, 19 மே 2011, 02:24.02 PM GMT ]
யாழ்.நகரில் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அஞ்சலி - அழையா விருந்தாளிகளாக புகுந்து கொண்ட இராணுவம்
[ வியாழக்கிழமை, 19 மே 2011, 08:03.23 PM GMT ] 
நோர்வேயில் நெடியவன் கைது! விசாரணையின் பின் விடுவிப்பு?
[ வியாழக்கிழமை, 19 மே 2011, 09:45.06 PM GMT ]
dinsdag 17 mei 2011
அடுத்தவரை குற்றம் செய்வதிலிருந்து தடுக்கும் சிறந்த தண்டனை!!
தம்மை போலவே அடுத்தவரும் என்றெண்ணாமல் குற்றமிழைப்போருக்கு இப்படித்தான் தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.இதுதான் யமலோகத்தில் வழங்கப்படும் தண்டனைகள் என்று புராணங்கள் கூறும்,அந்நியன் படத்திலும் கருப்பொருள் இதுவே!!
maandag 16 mei 2011
zaterdag 14 mei 2011
கடைசி நேரத்தில் பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்கா முயன்றதாக சிலர் நம்புகின்றனர். ஆனால் பிரபாகரனின் மரணத்துக்கு அமெரிக்கா பல வழிகளிலும் உதவியுள்ளது
கடைசி நேரத்தில் பிரபாகரனை காப்பாற்ற அமெரிக்கா முயன்றதாக சிலர் நம்புகின்றனர். ஆனால் பிரபாகரனின் மரணத்துக்கு அமெரிக்கா பல வழிகளிலும் உதவியுள்ளது |
2001 செப்ரெம்பர் 11 இல் பின்லேடனின் அல்கெய்டா அமைப்பினர் நடத்திய தாக்குதல் தான் புலிகளினதும், பிரபாகரனினதும் வீழ்ச்சிக்குக் காரணமாக மாறியது. இதன் பின்னர் தான் உலகத்தின் போக்கில் முற்றிலும் மாறுபட்ட சுழற்சி ஒன்று ஏற்பட்டது. ஆயுதப்போராட்டம் நடத்தும் அமைப்புகளினது கொள்கைகள் கருத்தில் எடுக்கப்படாமல், எல்லாமே பயங்கரவாதப் போராட்டம் என்ற முத்திரைக்குள் கொண்டு வரப்பட்டது. இது தான் புலிகளின் வீழச்சியின் தொடக்கம்.அவர்களை உலகநாடுகள் ஒதுக்கி வைத்து, ஓரம்கட்டி இலங்கை அரசின் பொறியில் சிக்கவைக்கக் காரணமாகியது. இந்தவகையில் புலிகளின் அழிவுக்குப் பின்லேடன் ஒருவகையில் காரணமாக அமைந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. இருவரினது மரணம் பற்றியும் சரியானதும் தவறானதுமான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும்,இருவருமே ஊடகங்களில் இடத்தை நிறைத்துள்ளனர். அதுமட்டுமன்றி இவர்கள் இருவராலும் உருவாக்கப்பட்ட அமைப்புகளினதும் எதிர்காலமும் என்பது கேள்விக்குறியாகவே மாற்றப்பட்டு விட்டது. இதுவும் கூட மற்றொரு ஒற்றுமைதான். ஆனால் பின்லேடன் தனது மனைவிகள், குழந்தைகளுக்கு தனக்குப் பின் யாரும் அல்கெய்டாவுடன் இணைந்து ஆயுதப்போராட்டம் நடத்தக் கூடாது என்று உயில் எழுத்திக் கொடுத்து விட்டு மரணித்துள்ளார். ஆனால் பிரபாகரன் தான் சார்ந்த கொள்கைக்காக குடும்பத்தோடு உயிர்துறந்துள்ளார். பிரபாகரன் பின்லேடன் மரணங்களின் ஒப்பீடு சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற ஒரு நிகழ்வும்,கடந்தவாரம் நடந்தேறிய ஒரு நிகழ்வும் பரவலாக ஒப்பிட்டுப் பேசப்பட்டு வருகின்றன. ஒசாமா பின்லேடனின் மரணமும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணமும் பற்றியே இந்த ஒப்பீடுகள் ஊடகங்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கை இராணுவத்தினரின் முற்றுகையில் சிக்கி அங்கு நடந்த சண்டையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் நந்திக்கடலின் ஓரத்தில் மரணத்தை தளுவினர். இது நடந்தது 2009 மே 19ம் நாள். கடந்த மே 2ம் நாள் அதிகாலை அமெரிக்கப் படையினரின் அதிரடித் தாக்குதலில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டார். இந்த இருவருமே யார் என்று விளக்கம் கூறத் தேவையில்லை என்பதால் நேரடியாக விவகாரத்துக்கு வருவோம். இவர்கள் இருவரினதும் மரணம், செயற்பாடுகள் என்பனவற்றுக்கு இடையில் பல ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் உள்ளன. கடந்த வாரம் கொழும்பு வந்திருந்த அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், பின்லேடனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை இருவரும் இரக்கமற்ற பயங்கரவாதிகள் தான் என்று கூறியிருந்தார். இது இந்த இருவர் பற்றிய அவருடைய அமெரிக்காவினுடைய நிலைப்பாடு. இலங்கையில் ஒருவித காய்ச்சல் அண்மைக்காலமாக பரவியுள்ளது. அதாவது, பிரபாகரனைக் கொன்றதை அங்கீகரிக்க அமெரிக்கா போன்ற நாடுகள் தயங்குவதான ஒருவித கருத்து வலுவடைந்து வருகிறது. கடைசி நேரத்தில் அவரைக் காப்பாற்ற அமெரிக்கா முயன்றதாகவும் சிலர் நம்புகின்றனர். ஆனால் பிரபாகரனின் மரணத்துக்கு அமெரிக்கா பல வழிகளிலும் உதவியுள்ளது என்பது ஆட்சியில் உள்ளவர்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் அதை ஏனோ வெளியே சொல்வதில்லை. பின்லேடனைக் கொல்ல வேண்டும் என்பதில் அமெரிக்கா எந்தளவுக்கு உறுதியாக இருந்ததோ அதேயளவுக்கு புலிகள் இயக்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அதனால் தான் புலிகள் பற்றிய ஏராளமாக இரகசியத் தகவல்களை அது இலங்கையுடன் பகிர்ந்து கொண்டது. புலிகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்கள் கொடுத்து அவர்களை முடக்க முனைந்தது. அதாவது அமெரிக்காவே புலிகளுக்கு எதிரான போரை உலகளாவிய ரீதியாக மேற்கொண்ட முதல் நாடு. புலிகளுக்கு எதிரான சர்வதேச வலைப்பின்னலை உருவாக்கியது அமெரிக்கா தான். அந்த சர்வதேச வலைப்பின்னலின் முடிவுரை தான் முள்ளிவாய்க்காலில் எழுதப்பட்டது. இதெல்லாம் கொழும்பின் அரசியல்வாதிகளுக்குத் தெரியாத ஒரு விடயம் அல்ல. ஆனால் அதையெல்லாம் அவர்கள் மறைத்துக் கொண்டு அமெரிக்கா மீது குற்றங்களை அடுக்கிக் கொள்கின்றனர். அரசின் மீதான போர்க்குற்ற அழுத்தங்களை விலக்கிக் கொள்வதற்கு இப்படியொரு குற்றச்சாட்டை அவர்கள் தொடுக்கின்றனர். இதுதான் இந்தக் குரல்களின் அடிப்படை நோக்கம் என்பதில எவ்வித சந்தேகமும் இல்லை. அமெரிக்காவின் பார்வையில் பிரபாகரனுக்கும், பின்லேடனுக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லையென்றாலும், இலங்கை அரசுக்குள் அப்படியான கருத்து இருக்கிறது என்று கூறமுடியாது. ஏனென்றால் பின்லேடன் மீதான தாக்குதலை பிரதமர் எ.எம். ஜெயரட்ண வேறொரு கண்ணோட்டத்துடன் கூறியுள்ளார். மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானாவின் கருத்து பின்லேடனின் மதிப்பை உயர்த்தும் வகையிலும், அவரை நியாயப்படுத்தும் வகையிலும் வெளியாகியுள்ளது. பிரபாகரன், பின்லேடன் இருவருக்கும், இவர்களின் கொள்கைகளுக்கும் மக்களாதரவு இருந்த ஒற்றுமையை யாராலும் மறுக்க முடியாது. பின்லேடனைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய மக்கள் பலரிடம் அவர் இன்னமும் ஹீரோவாகவே இருக்கிறார் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அதேவேளை, பிரபாகரனுக்கும் உலகளாவிய ஆதரவு தளம் இருந்ததை யாரும் மறுக்க முடியாது. அவர்கள் இருவரினது மரணமும் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தே நிகழந்துள்ளது என்ற ஒற்றுமையையும் இங்கு கவனிக்கத்தக்கது. பின்லேடனின் மரணத்துக்குப் பின்னர் வெளியிடப்பட்ட படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுபோன்ற சர்ச்சையைத் புலம்பெயர் தமிழரின் ஒருபகுதியினர் பிரபாகரனின் மரணத்தின் பின்னரும் எழுப்பியிருந்தனர். இன்னமும் கூட இலங்கை அரசு வெளியிட்ட படங்கள் போலியானது என்று வாதிடுவோர் உலகில் இருக்கத் தான் செய்கின்றனர். இப்போது பின்லேடலின் மரணத்தின் பின்னர் வெளிவரும் செய்திகளை,பிரபாகரனின் மரணத்துக்குப் பின்னர் புலம்பெயர் சமூகத்தினரிடையே காணப்படும் ஒருவித குழப்ப நிலையை போன்ற நிலையை உருவாக்கும் எத்தனிப்பாகவே கருத வேண்டியுள்ளது. அதாவது பின்லேடனின் கொள்கையைப் பின்பற்றுபவர்களின் வீரியத்தைக் குறைக்க அமெரிக்கா கையாளும் உத்தியாகவே தெரிகின்றது. இது ஒருவகையில் இலங்கையிடம் இருந்து அமெரிக்கா கற்றுள்ள பாடம் என்பதையும் மறுக்க முடியாது. இன்னொரு பாடத்தை இலங்கையிடம் இருந்து அமெரிக்கா கற்றுள்ளது. பிரபாகரனின் சடலத்தை அடையாளம் கண்ட இலங்கை அரசு அதை எரித்து சாம்பலைக் கடலில் கரைத்து விட்டதாக அறிவித்தது. அது எங்கே நடந்தது என்ற விபரத்தைக் கசிய விடவே இல்லை. அதேபோன்று தான் பின்லேடனின் சடலம் கடலில் எங்கோ அடையாளம் கூறப்படாத இடத்தில் புதைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்கா கூறுகிறது. இந்த விடயத்திலும் இருவருக்கும் இடையில் தொடர்புகள் இருந்துள்ளன. பின்லேடனின் அல்கெய்டாவுக்கும், புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் இருப்பதாக இலங்கை அரசாங்கம் அவ்வப்போது சில கதைகளைக் கூறியிருந்தாலும் அதை நிரூபிக்க எந்த சான்றும் கிடையாது. ஆனால் பின்லேடனின் நடவடிக்கைகள் பிரபாகரனின் செயற்பாடுகளுக்கும், கொள்கைக்கும் பெரும் இடையூறாக மாறியது உண்மை. 2001 செப்ரெம்பர் 11 இல் பின்லேடனின் அல்கெய்டா அமைப்பினர் நடத்திய தாக்குதல் தான் புலிகளினதும், பிரபாகரனினதும் வீழ்ச்சிக்குக் காரணமாக மாறியது. இதன் பின்னர் தான் உலகத்தின் போக்கில் முற்றிலும் மாறுபட்ட சுழற்சி ஒன்று ஏற்பட்டது. ஆயுதப்போராட்டம் நடத்தும் அமைப்புகளினது கொள்கைகள் கருத்தில் எடுக்கப்படாமல், எல்லாமே பயங்கரவாதப் போராட்டம் என்ற முத்திரைக்குள் கொண்டு வரப்பட்டது. இது தான் புலிகளின் வீழச்சியின் தொடக்கம். அவர்களை உலகநாடுகள் ஒதுக்கி வைத்து, ஓரம்கட்டி இலங்கை அரசின் பொறியில் சிக்கவைக்கக் காரணமாகியது. இந்தவகையில் புலிகளின் அழிவுக்குப் பின்லேடன் ஒருவகையில் காரணமாக அமைந்தார் என்பதில் சந்தேகம் இல்லை. பின்லேடனுக்கும், பிரபாகரனின் நடவடிக்கைளுக்கும் இடையில் பல ஒற்றுமை வேற்றுமைகள் இருந்தாலும், அவர்களுக்கு இடையில் நேரடித் தொடர்பு இல்லை. பின்லேடனின் செயற்பாடுகள் பிரபாகரனை வீழ்ச்சி வரை கொண்டு சென்றது. அதேவேளை பிரபாகரனின் மரணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகள், பின்லேடனின் மரணத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. கொள்கை,கோட்பாடுகள் மீதான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நேரடித்தொடர்புகள் இல்லாது போயினும், இந்த இருவருக்கும் இடையில் ஏதோ ஒருவித பிணைப்பு இருந்துள்ளது. இதனால் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நிழ்ந்த பிரபாகரனின் மரணத்தை இப்போது பின்லேடனின் மரணம் நினைவு கூர வைத்துள்ளது. இதுபற்றி இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள ஊடகங்கள் எழுதுகின்றன. இருவரினது மரணம் பற்றியும் சரியானதும் தவறானதுமான செய்திகள் ஊடகங்களில் வந்தாலும்,இருவருமே ஊடகங்களில் இடத்தை நிறைத்துள்ளனர். அதுமட்டுமன்றி இவர்கள் இருவராலும் உருவாக்கப்பட்ட அமைப்புகளினதும் எதிர்காலமும் என்பது கேள்விக்குறியாகவே மாற்றப்பட்டு விட்டது. இதுவும் கூட மற்றொரு ஒற்றுமைதான். ஆனால் பின்லேடன் தனது மனைவிகள், குழந்தைகளுக்கு தனக்குப் பின் யாரும் அல்கெய்டாவுடன் இணைந்து ஆயுதப்போராட்டம் நடத்தக் கூடாது என்று உயில் எழுத்திக் கொடுத்து விட்டு மரணித்துள்ளார். ஆனால் பிரபாகரன் தான் சார்ந்த கொள்கைக்காக குடும்பத்தோடு உயிர்துறந்துள்ளார். இது இந்த இருவரினது மரணங்களிலும் உள்ள முக்கியமான வேற்றுமை. கட்டுரையாளர் ஹரிகரன் இன்போதமிழ் குழுமம் info@infotamil.ch |
போராளிகளுக்கு சயனைட்,தலைமைக்கு சரணடைவா??
குறுந்தகவல்(SMS) அனுப்பி சிக்கியுள்ள பாலித கோஹண: திடுக்கிடும் தகவல் !
நம்பமுடியவில்லை!!
அறிவுக்கு வேலை கொடு!
கொலைக்குற்றவாளி மஹிந்தவை ஜனாதிபதியாக விட்டது ரணில் விக்கிரமசிங்க செய்த குற்றம்: பொலிஸ் மாஅதிபர் பாலசூரிய
donderdag 12 mei 2011
dinsdag 10 mei 2011
சுயலாப நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் இருக்கிறார்களாம் !
08 May, 2011 by adminகீழ்த்தரமான பிரபலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், நிதி திரட்டுவதற்காகவும் புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நிபுணர் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து அவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவி மிகவும் கௌரவமிக்கது எனவும், அவருக்கு எதிராக சேறு பூசும் செயற்பாடுகள் ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றிய போது அப்பாவி பொதுமக்களையும், எஞ்சிய போராளிகளையும் பாதுகாக்குமாறு தாம் பிரபாகரனிடம் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக்கோரிக்கையை பிரபாகரன் அவர்கள் செவிசாய்க்கவில்லை எனவும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தாம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாறாக, அநேகமானோர் நிதி உதவிகளை வழங்கி யுத்தத்தை ஊக்கப்படுத்தியதாக அவர் புலம்பெயர் சமூகம் மீது பாரிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
எத்தனைகாலந்தான் ஏமாற்றுவார் அமெரிக்கர்!!
ஓசாமாவை சுட்டுக்கொலை செய்த அமெரிக்க ராணுவம் அவரின் உடலை கடலில் வீசியமை யாவரும் அறிந்த விடயமே. தற்போது அதன் வீடியோ காட்சி வெளிவந்துள்ளது.
maandag 9 mei 2011
zondag 8 mei 2011
ஆளுக்கொரு நீதி!!பணம் பந்தியிலே..............,
போராளிகள் மீது விமானத்தாக்குதல் நடாத்திய லிபிய ராணுவத்தை அடக்குவதாக சொன்ன நேட்டோ உறுப்பு நாடுகள் லிபிய ராணுவத்தை நோக்கி விமானத்தாக்குதல்(லிபிய ராணுவத்திடமில்லாத பயங்கர வெடி குண்டுகள் மூலம்)செய்வதுடன் அதிபர் கடாபி மாளிகையிலும் தாக்கியுள்ளனர்.அதிபர் மாளிகையில் எதைக்கண்டு தாக்குதல் நடத்தினர் என்று அவர்கள் சார்பின கூறுவார்களா?கடாபி சர்வாதிகாரியாயின் உலகின் அதாக நாடுகளால் ஏற்கப்படாத இந்த யுத்தத்தை செய்யும் நேட்டோ நாடுகள் பயங்கரவாதிகளா?
zaterdag 7 mei 2011
vrijdag 6 mei 2011
“முன்னணி” சஞ்சிகையினை மே தின ஊர்வலத்தில் விற்கக்கூடாது என்ற சொன்ன புலிகள்.
மதியம் 2-மணியளவில் மேதின ஊர்வலம் ஆரம்பமாகும், பாரிஸ் றீபப்பிளிக் மெற்றோ நிலையம் சென்றடைந்தோம். பல அமைப்புக்கள் தம் கொடிகள், பதாகைகளுடன் அணி வகுத்து நின்றனர். அத்துடன் அரசியல் கோசங்களின் முழக்கங்களும், வாத்தியக் கோஸ்டிகளுடனான ஆடல் பாடல்களும் ஆங்காங்கே நடைபெற்றது. இதில் புலிகளின் அணி யாதுமற்ற அமைதி நிலையில். ஊர்வலத்திற்கு வந்தவர்கள் தொகையோ மிகக் குறைந்தளவு. நாம் கொண்டு சென்ற “போர்க்குற்றம் மீது சுதந்திரமான சுயாதீனமான விசாரணையைக் கோருவோம்” புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுர எண்ணிக்கையோ, அங்கு வந்திருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையினை விட அதிகம். என்ன செய்வது புலிகள் நிலை இப்படியாகி விட்டதே, என்றெண்ணியபடி துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தபடி, “முன்னணி” சஞசிகையையும் விற்க ஆரம்பித்தோம்.
விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம், சஞ்சிகையை வாங்கியவர்களில் பெரும்பாலானோர், புலிகள் ஊர்வலத்திற்கென அணி வகுத்து நின்ற இடத்திற்குள் இவற்றினை தம்முடன் கொண்டு சென்றனர். இது புலிகளுக்கு பெரும் கடுப்பை ஏற்படுத்திற்று. முதற்தடவையாக மூவர் கொண்ட குழுவொன்று எமது தோழர்களை நோக்கி வந்து, உங்கள் முன்னணி ஈ.பி.ஆர்.எல்.வா? ஜே.வி.பி.யா? என்று கேட்டனர். (பாவம் அவர்கள் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியா என்று கேட்க மறந்து விட்டனர்.) தோழர்களிற்கு அருகில் துண்டுப்பிரசுரம் விநியோகித்துக் கொண்டு நின்ற ஜே.வி.பி.யைச் சேர்ந்த ஒருவர் (தமிழ் தெரிந்த சிங்கள நண்பர்), உதொன்றும் இல்லை என்றார். அத்தோடு அவர்கள் சிங்கமும் இல்லை புலியும் இல்லை எனக் கிண்டலாக சொல்ல, கேள்வி கேட்டவர்கள் மௌனமாக திரும்பிச் சென்று விட்டனர். இச்சமயம் இச் சம்பவத்தை அவதானித்துக் கொண்டு நின்றவர்கள் மிக ஆர்வமாக எமது பிரசுரத்தையும், சஞ்சிகையையும் வாங்கினர்.
இதையடுத்து மீண்டும் ஐந்து நிமிடத்தில் பத்துப் பேர் கொண்ட கும்பலொன்று எமது தோழர்களை சூழ்ந்து கொண்டது. இக் கும்பல் புலிப் பாணியிலான அராஐகத்தொனியில் கத்தினர். அப்போது ஜே.வி.பி.யைச் சேர்ந்தவர்கள் கதைக்க முற்பட்டபோது, எம் முன்னணியைச் சேர்ந்த தோழரொருவர் தடுத்து நிறுத்தி, இவர்களுடன் தான் கதைப்பதாகச் சொல்லி, உங்கள் பிரச்சினை என்னவென்று கேட்டார். உங்கள் “முன்னணி” சஞ்சிகையின் சில கட்டுரைகள், சிறுகதை என்பன புலிகளை பற்றி குற்றம் சாட்டுகின்றது என்றனர். எனவே இதை இங்கே விற்கக் கூடாது என்றனர்.
இதை இங்கே விற்கக் கூடாது என சொல்ல உங்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது எனக் கூறினர் எமது தோழர்கள். இங்கே வந்துள்ள சில இடதுசாரி அமைப்புக்கள், இந்நாட்டின் ஐனாதிபதி சார்க்கோசியை மக்கள் விரோதி, சர்வாதிகாரி என்ற தொனியில் கோசம் போட்டுச் செல்கின்றனர். இதை பொலிசார் கூட கேட்டு சிரித்துக் கொண்டுதான் நிற்கின்றனர். இவர்களை சார்க்கோசியின் காவல் படையான பொலீஸ், கோசம் போடாதே, ஊர்வலம் போகாதே என தடுத்து நிறுத்தவில்லை. இது போக “முன்னணி” சஞ்சிகை, உங்களை அரசியலில் ரீதியாகதான் விமர்சித்துள்ளது. அத்துடன் இது பற்றி விபரமாக கதைக்க, விவாதிக்க இது உகந்த இடமல்ல எனக் கூறினர் எமது தோழர்கள்.
விரும்பினால் வேறு இடத்தில் கதைக்க நாம் தயார்! நீங்கள் தயாரா? என வினவினர் எமது தோழர்கள். இச் சமயமும் ஜே.வி.யை.ச் சேர்ந்த அதே தமிழ் தெரிந்த சிங்கள நண்பர் “அவர்கள் ரெடி! நீங்கள் ரெடியா”? எனக் கிண்டலாகக் கேட்டார். அப்போது எம் தோழர் அவரை மேற்கொண்டு கதைக்க விடாமல் தடுத்தனர். தொடர்ந்தும் எமது தோழர்கள் கருத்து தெரிவிக்கையில் எம் முன்னணி பற்றி உங்களுக்கு பல ஐயப்பாடுகள் உள்ளதை என்னால் உணரமுடிகின்றது. இதை நிவர்த்தி செய்ய, இத் துண்டுப்பிரசுரத்தில் உள்ள இணைய தளங்களை பாருங்கள்.
உங்கள் விமர்சனங்களை ஆக்கபூர்வமான பின்னூட்டங்களாக எழுதுங்கள். அதை நாம் கண்டிப்பாக பிரசுரிப்போம் என்று கூறினார்கள். இக் கூட்டத்தில் நின்று நடந்தவைகளை கேட்டும், பார்த்துக் கொண்டுமிருந்த அன்பரொருவர் எல்லோரையும் விலத்தி வந்து கை தர எல்லோரும் அமைதியாக கலைந்தனர். “முன்னணி” சஞ்சிகையை விற்கக் கூடாது என பறிக்க முற்பட்ட இன்னொருவர், தன் தவறிற்கு வருந்தி 2 ஈரோ தந்து சஞசிகையை வாங்கியும் சென்றார்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
04/05/2011
வன்னிப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்கிற பாரம்பரிய தோழருக்கு சுமந்திரனின் தோழமையான கடிதம்…!!!
“பிரபாகரனது, தமிழீழ விடுதலைப் புலிகளதும் தோல்வியடைந்த அரசியலின் விளைவாக நாடு ஆயிரமாயிரம் அப்பாவித் மக்களை இழந்துள்ளது. கடந்த முப்பது வருடமாக புலிகளுடைய ஆட்சியில் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட 70 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிகளின் உயிரிற்குப் பிரபாகரனே பொறுப்பானவர். “
கடந்த 28ம் திகதி “மாண்புமிக்க” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ற முன்னை நாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் தளபதி ஆசியன் திரிபியூன் என்ற இலங்கை அரச ஆதரவு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது உதிர்த்த பொன் மொழிகள் இவை.
(இந்தப் “பொன்மொழிகளிலிருந்து” டக்ளஸ் தேவாவிற்கு ஒரு குறுக்கு ஆலோசனைக்கடிதம் எழுத எண்ணியதன் பலன் கீழே தரும் கடிதம். – சுமந்திரன்)
வன்னியில் மக்கள் ஆயிரமாயிரமாய் உங்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்டதைப் பன் கீ மூன் குழு எழுதியதை விடுங்கள், நீங்கள் தானே அந்தத் தேசத்தின் எல்லைப் புறங்களில் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிந்தவர். உங்கள் நண்பரும் உலகின் அரச பயங்கரவாதிகளில் அருவருக்கத் தககவருமான கோதாபாய ராஜபக்ச மில்லியன்கள் செலவு செய்து வாங்கிக் குவித்த ஆயுதங்கள் எல்லாம் வானத்தை நோக்கியா சுட்டுத் தீர்த்தார்கள்?
நீங்கள் சார்ந்த ஒடுகப்படும் தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்தின் வானை நோக்கி ஒலித்த ஆயியமாயிரம் அவலக் குரல்களுக்கு நீங்கள் வாழ்ந்து, கப்பலோட்டி, வணிகம் செய்து, கொலை செய்து, கொள்ளயடித்து மகிழும் ஜனநாயகத்தில் நீதி பெற்றுக் கொடுத்திருக்கலாமே?
கொலை செய்து, சாட்சியின்றி அழித்துத் துவம்சம் செய்யப்பட்டவர்கள் போக எஞ்சிய குழந்தைகள், முதியோர், நிறைமாதப் பெண்கள் என்று 3 லட்சம் அப்பாவிகளைத் திறந்த வெளி முகாம்களில் அடைத்துவைத்து அழித்த போது நீங்கள் எங்கே போனீர்கள்.
மீள் குடியேற்றம் என்ற பெயரில் நடத்தப்படும் அனீதியான வியாபாரத்திற்கு நீங்களுமா துணை போகிறீர்கள்?
எனக்கும் நாலம் வாய்க்கலிற்கும் பிற்ப்புத் தொடர்புண்டு. அதாவது “தொப்புள்கொடி உறவு”. நான் ரெஸ்ரோரன்டில் இரவிரவாக வேலைசெய்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அனுப்பிய பணத்தை உங்களைப் போன்ற துணைக்குழு பகிர்ந்துகொண்டதெல்லாம் பெரிய கதை.
நீங்கள் தளபதியாக தமிழீழம் பெற்றுத் தருவோம் என இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற நூற்றுக் கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் புலம் பெயர் நாடு ஒன்றில் நீங்கள் நடத்திய கூட்டம் ஒன்றிற்கு வந்து அமைதியான மூலையில் அமர்ந்து நீங்கள் ஓதியவற்றைச் செவிமடுத்திருக்கிறேன்.
சங்குவேலியிலும், கட்டுவனிலும், சாவகச்சேரியிலும் துப்பாக்கி நபர்கள் புடை சூழ இயக்கத் தோழனாக மூன்று முறை சந்தித்திருக்கிறேன். இது நான்காவது தடவை. மாண்பு மிகுந்தவரே, அப்போது தமிழ் மக்கள் அழிக்கப்படுவது உண்மை என்றும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதும் அரசாங்கத்திடமிருந்து அத்தனை உரிமைகளையும் பெற்றுத் தருவதாகக் கூறினீர்கள்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுத் தான் இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டதே, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், பட்டினிச் சாவு, நாளாந்தக் கைதுகள், கொலைகள் என்று அத்தனையும் நடக்கும் போது காந்தித் தாத்தா பொம்மை போல “தீயதைக் கேளாதே” என்று கண்களைப் பொத்திக் கொள்கிறீர்களோ?
நான் ஒரு புலம் பெயர் நாட்டில் தான் வாழ்கிறேன். புலியாக மாறிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்! அதுதானே உங்கள் பிரசாரத் தந்திரோபாயம்!! நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் வன்னியில் நடந்தது என்ன என்று அப்பாவி மக்கள் சொன்னதும், யாழ்ப்பாணத்தில் நடப்பது என்ன என்று அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்வதும் உங்கள் காதுகளில் விழவில்லையோ. அதுவும் கொல்லப்படலாம் எனத் தெரிந்தும் அவர்கள் துணிந்து சாட்ட்சியமளிக்கும் தியாகத்தை, வீரத்தை, துணிவைக் கண்டு நீங்கள் வெட்கப்பட்டதில்லையா?
தோள்களில் துணிப்பையை மாட்டிக்கொண்டு கொழும்புத் தெருக்களில் அலையும் பிரகீத் போன்ற எத்தனை ஊடகவியலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சிங்களத்தில் தேசிய கீதமும் தமிழில் தேவாரமும் படித்தால் உரிமை பெற்றுவிட்டதாக அருத்தப்படுத்தினீர்களோ?
சரி தமிழ்ப் பேசும் மக்களில் ஒரு பெரிய பகுதி புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மீது தீராத வெறுப்படைந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். சிங்கள மக்கள் மத்தியில் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைக்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள், மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகள் நடுத்தெருவில் கொலைசெய்யப்பட்டு வீசியெறியப்படும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.?
நீங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டவர் என்று பெருமிதமாகச் சொல்கிறீர்கள். நீங்கள் ஆயுதம் ஏந்திய போது இருந்த அடக்கு முறைகள் இன்றிருப்பதைவிடக் குறைவாகத் தான் இருந்தன. இன்றோ நேரடியான குடியேற்றங்கள்,இராணுவ அழிப்பு, சிங்கள மயமாக்கல், கொலை, குடும்ப சர்வாதிகாரம், ஜனநாயகமறுப்பு என்பன எல்லாம் மனித குலம் அவமானப்படும் வகையில் மக்களை உயிருடன் தின்ன்றுகொண்டிருக்கிறதே? ஆக, இன்னொரு முறை நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என எண்னவில்லையா?
சில மாதங்களின் முன்னால் யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் சென்று வந்த போதுதான் தெரிந்துகொண்டேன்! அரச பாசிசம் என்பதன் உள்ளர்த்தத்தை கண்முன்னால் புரிந்துகொண்டேன்!! உங்களது காவல்படைகளின் அட்டூழியம், அநாகரீகம் எல்லாம் தெளிவாகத்தெரிந்தது!!!
முன்னை நாள் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனோவியல் மற்றும் உடலியல் சித்திரவதைகள், முகாம்களில் மக்கள் படும் வேதனை எல்லாம் நீங்கள் அரச பாசிசத்தின் விசுவாசமான பிரதிநிதி என்பதைற்கு வாழும் ஆதாரங்கள்..
உங்களது நேர்காணலில் பன் கீ மூன், அன்பான மகிந்தவிற்கும், திறமையான இராணுவத்திற்கும் எதிரான அறிக்கை விட்டுப் பணத்தை விரயமாக்கியுள்ளதாக அங்கலாய்க்கிறீர்கள். உங்கள் மகிந்த குடும்ப வியாபாரிகளின் வருமான வரி எச்சங்களே நீங்கள் சில முகாம்களில் உள்ளவர்களுக்கு வாழ்வளிக்கப் போதுமானது.
மக்கள் பாவம். உயிர் மீது அக்கறையற்றவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் வேறு. அமைச்சர் வேடமெல்லாம் போட்டு ஒரு அந்தஸ்த்தை வைத்திருக்கிறீர்கள். பருத்தித் துறை முனையிலிருந்து கதிர்காமம் ஈறாக எத்தனை பேர் உங்களுக்கு இருக்கிறார்கள். உங்களால் எல்லாத்தையும் கைவிட்டு மக்களைப் போல் மகிந்தவிற்கு எதிர்ப்புக்க்காட்ட முடியுமா? இல்லையே! உங்களது “முன்னைநாள்” என்ற வகையில் எனக்கு ஒரு குறுக்கு யோசனை தோன்றுகிறது.
எங்காவது அன்னிய தேசத்திற்கு ஏலக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு வாருங்கள். மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். மகிந்த குடும்பத்தை அம்பலப்படுத்துங்கள். பேரினவாதிகளின் கொடுமைகளைக் கூறுங்கள். அப்பட்டிச் செய்தால் உங்கள் மாண்புமிகுவிற்குப் பதிலாகப் பொறுக்கி என்பதைப் போடலாம் என்று எண்ணுகிற மௌனமாய் அழும் மக்கள் “தியாகி” என்று போட்டுக்கொள்வார்கள். நீங்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினீர்களோ அதற்காக, பிரபாகரன் வழியில் இல்லாமல் நிதானமாக ஆயுதம் ஏந்தக் காத்திருகும் எதிர்காலச் சந்ததி உங்களை நண்பனாக, தோழனாகப் போற்றும்.
மகாவம்சம் போல அல்லாமல், ராமாயணம் போல அல்லாமல், இலங்கைப் பாடப் புத்தகங்கள் சொல்லும் வரலாறு போல அல்லாமல் உண்மையான வரலாறு உங்களைப் பற்றி எழுதும். செய்வீர்களா?
நன்றி! இனியொரு இணையம்
அமெரிக்கப்பிரஜையின் தமிழீழதலைமையும் தமிழனின் ஏமாற்றங்களும்
எமது போராட்டம் அமரிக்க ஏகாதிபத்யத்துக்கு சாமரம் வீசுகிறதா?அமரிக்க பிரஜையா நம்மை ஆழ்வது?தமிழனின் அடிமைத்தனம் ரத்தத்திலே ஊறியதா??
donderdag 5 mei 2011
woensdag 4 mei 2011
Abonneren op:
Posts (Atom)