தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 mei 2011

1-இலங்கையில் போர்க்குற்றங்கள் - ஐ.நா. நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கையின் மொழியாக்கம்: இணைக்கப்பட்ட பாகங்கள்:01, 02, 03,.. 04, 05, 06, 07,08,09,10,11, 12, 13,14,15,16,17,.. 18,19,20,21,..

ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையினை நாம் மொழியாக்கம் செய்து வெளியிட முயற்சித்திருந்தோம். ஆனால் அதன் மொழியாக்கத்தை கொழும்பில் இருந்து வெளிவரும் 'வீரகேசரி' நாளிதழ் தொடராக வெளியிட தொடங்கியிருந்தது. ஆதலால் அதனை 'புதினப்பலகை' நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கின்றது. இணைக்கப்பட்ட பாகங்கள்:01, 02, 03,.. 04, 05, 06, 07,08,09,10,11, 12, 13,14,15,16,17,..

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

அறிமுகம்:

1.
கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய மோதல் முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம் முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன ஆறுதல் அடைந்தனர்.

ஆயினும், நாட்டின் ஆயுதப்படையினர் வெற்றியை அடைவதற்காகக் கையாண்ட வழிமுறைகள் பற்றி இலங்கை மற்றும் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் அதிக மனத்தாக்கம் அடைந்தனர். நாட்டின் வடகிழக்குக் கரையோரப்பகுதியான வன்னியின் ஒரு சிறிய இடத்தில் தப்பியோட முடியாமல் மும்முரமாக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கிடையே பல இலட்சக்கணக்கான தமிழ் பிரஜைகள் சிக்குண்டிருப்பதை அதிகரித்து வரும் அச்சத்துடன் பல மாதங்களாக அவர்கள் நோக்கியவண்ணம் இருந்தனர்.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. அரசாங்க தரப்பிலிருந்து எறியப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கினர்“ அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலரை எல்ரிரிஈ இனர் சுட்டனர். மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்த போதிலும், அரசாங்கத்தினால் அது தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டது.

அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக யுத்தத்தைப் போதியளவு தளர்த்துவதற்கான முயற்சிகள் தடுமாற்றமடைந்தன.

2.
மோதல் வலயத்தில் இருந்து பாரபட்சமற்ற அறிக்கை விடுத்தலுக்குத் தட்டுப்பாடு நிலவியதால், 2009 மே மாதம் 19ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி வெற்றியைப் பிரகடனப்படுத்திய நாள் வரை இறுதி இராணுவத் தாக்குதலின் போது என்ன நேர்ந்தது என்பதை சரியாக நிர்ணயிப்பது சிரமாக இருந்தது.

ஆயினும், அரசாங்கம் அப்பிரதேசத்தில் இருந்ததாக முன்னர் கூறிய மதிப்பீட்டை அதிக எண்ணிக்கையால் விஞ்சுமளவிற்கு யுத்த வலயத்தில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 290,000 மக்கள் மூடப்பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

பாரிய காயங்களுக்கு இலக்காகிய பலர் அடங்கிய சுமார் 14,00 மக்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினால் கடல் மார்க்கமாக பாதுகாப்பான இடத்துக்கு அகற்றப்பட்டனர். எல்லா அறிகுறிகளின்படி, மரணித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்ததோடு, இன்று கூட சரியான கணிப்பொன்று நிர்ணியக்கப்படவில்லை.

எனினும், "பூஜ்ய பொதுமக்கள் சேதத்துடன்' தான் "மனிதாபிமான மீட்டு நடவடிக்கையொன்றினை' மேற்கொண்டதாக அரசாங்கம் உறுதியாக வாதிட்டு வந்துள்ளது.

3.
யுத்தம் முடிவுற்று மூன்று நாட்களுக்குப் பின்னரே செயலாளர் நாயகம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டதோடு மோதல் வலயத்தின் சில இடங்களையும் மோதல் பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான ஒரு முகாமையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார்.

அவரின் விஜயத்தின் முடிவில், இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து செயலாளர் நாயாகம் கூட்டு அறிக்கையொன்றை விடுத்தார். இராணுவ நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார் என்பதோடு அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு ஜனதிபதி இணக்கம் தெரிவித்தார்.

நிபுணர்கள் குழுவின் நியமனம் அந்த கூட்டு அறிக்கையின் தொடர் நடவடிக்கையாக செயலாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகும்.

4.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பான கூட்டு இணக்கப்பாட்டை அமுல் செய்வது பற்றி செயலாளர் நாயகத்துக்கு அறிவுரை வழங்குவது குழுவின் ஆணையாகும்.

இவ்வறிக்கையில் இக்குழு குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச சட்டங்களின் மீறல்களின் சுபாவம் மற்றும் அவற்றின் நோக்கெல்லை அத்துடன் இலங்கை அரசாங்கத்தின் பதில் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.

குறிப்பாக, கற்ற பாடங்கள் மற்றும் மீளிணைக்கப்பாட்டு ஆணைக்குழு சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் ஆகியவற்றின் பின்னணியில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இலங்கையின் சட்ட அமைப்பு மற்றும் பொறுப்பக் கூறல் தொடர்பான உள்நாட்டு நிறுவனங்களையும் குழு மறுபரிசீலனை செய்கிறது.

அதன் செயற்பாடு முழுவதிலும், இலங்கையின் வரலாற்று மற்றும் அரசியல் சூழ்நிலைப் பொருத்தங்களையும் பொறுப்புக் கூறல் பற்றிய இலங்கையின் தற்கால சூழலையும் குழு கவனத்துக்கு எடுத்துக் கொண்டது.

இவ்வறிக்கை குழு மேற்கொண்ட செயற்பாட்டின் பிரதிபலானாகவுள்ளதோடு சிபாரிசுகள் தொகுதிகளாக செயலாளர் நாயகத்துக்கான அறிவறுத்தலையும் அது உள்ளடக்குகிறது.

1. ஆணை, தொகுப்பு மற்றும் வேலைத் திட்டம்.

அ. குழுவினை அமைத்தல்.

5.
இலங்கையின் ஆயுத மோதலின் இறுதிக் கட்டங்களின்போது குற்றஞ் சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக பொறுப்புக்கூறல் விடயங்கள் பற்றித் தனக்கு அறிவுரை வழங்குவதற்காக 2010 யூன் 22ஆம் திகதி இக்குழுவின் நியனமத்தை செயலாளர் நாயகம் அறிவித்தார்.

குழுவின் நோக்கெல்லை பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டது: செயலாளர் நாயகமும் இலங்கை ஜனாதிபதியும், 2009 மே 23ஆம் திகதி நாட்டுக்கான செயலாளர் நாயகத்தின் விஜயத்தின் முடிவில் விடுத்த கூட்டு அறிக்கையில், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவ நடவடிக்கைகளின் போது நேர்ந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி நடவடிக்கை எடுப்பதற்காக பொறுப்புக்கூறும் ஒரு செயற்பாட்டின் முக்கியவத்துவத்தை செயலாளர் நாயகம் அதில் வலியுறுத்தினார்.

அத்தகைய இன்னல்கள் பற்றிய நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார். இத்தருணத்தில் மற்றும் இதன் பின்னணியில்:

1. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக சொல்லப்பட்ட உறுதிப்பாட்டினை அமுல் செய்வதற்காக தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பதற்கு செயலாளர் நாயகம் தீர்மானித்தார்.

2.குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றியவற்றைக் கவனத்துக்கெடுத்து, கூட்டு அறிக்கையின் பொறுப்புக் கூறுவதற்கான செயற்பாட்டு பற்றிய உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான தோதான முறைமைகள், ஏற்படைத்தான சர்வதேச தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவம் பற்றிய செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் குறிக்கோளாகும்.

3.ஏற்ற மற்றும் சம்பந்தப்பட்ட அனுபவத்தைக் கொண்ட மூன்று உறுப்பினர்களை அது கொண்டிருக்கும். குழு அதற்கென்றே தனது செயற்பாட்டு முறைமைகளை ஏற்படுத்திக் கொள்வதோடு OHCHR இன் துணையோடு செயலயகமொன்று அதற்கு உதவி வழங்கும்.

4.அது செயற்பாட்டை ஆரம்பித்து நான்கு மாதங்களுக்குள் குழு அதன் அறிக்கையை செயலாளர் நாயகத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும். 5.குழுவுக்கான நிதியளிப்பு செயலாளர் நாயகத்தின் எதிர்பாரான நிகழ்வுகள் வரவு செலவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

6.மர்சுக்கி தாருஸ்ஸமான் (இந்தோனேசியா), தலைவர்; ஸ்ரீவன் ரத்னர் (ஐக்கிய அமெரிக்கக் குடியரசு“ மற்றும் யஸ்மின் சூக்கா (தென் ஆபிரிக்கா) ஆகியவர்களை குழுவின் உறுப்பினர்களாக செயலாளர் நாயகம் நியமித்தார்.

ஆ. குழுவின் ஆணை

1.குழுவின் சகலதையும் உள்ளிட்ட பொறுப்பு

7.
செயலாளர் நாயகத்துக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையிலான 2009 மே 23ஆம் தேதிய கூட்டு அறிக்கையை சகல குற்றஞ்சாட்டல்கள் பற்றிய உண்மையான சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றி அமுல் படுத்துவதற்காக இலங்கை இதுகாலவரை மேற்கொண்ட மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவின் பணியாகும்.

இவ்வாறாகக் குறிப்பாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்று இலகுவாகத் தாக்கமுறக் கூடிய குழுக்களுக்கெதிரான தெளிவான மீறல்கள் உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறல் பற்றிய முறைமைகள், தரங்கள் மற்றும் ஒப்பீட்டளவிலான அனுபவங்கள் மீது குழு பரவலாகக் கவனம் செலுத்தியது.

இப்பிரச்சினை தொடர்பான நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புக்களின் தற்கால அணுகுமுறை பற்றி இயன்றவரை முழுமையானதொரு காட்சியைக் கண்டு பிடிக்க அது முயற்சியெடுத்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதெச கடப்பாடுகளை அவை நிறைவு செய்கின்றனவா மற்றும் எவ்வளவு தூரம் அவை சிறந்த சர்வதேச நடைமுறைகளை பிரதிபலிக்கிறது என்பதை நிர்ணயிப்பதற்காக பொறுப்புக் கூறல் தொடர்பாக தோதான அல்லது தோதான நிலைச்சக்தியைக் கொண்ட இலங்கையின் உள்நாட்டுப் பொறித்தொகுதியையும் அது ஆராய்ந்தது.

இறுதியாக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் பொறுப்புக் கூறல் தொடர்பான அரசாங்கத்தின் தற்கால கொள்கைகளையும் குழு கவனத்துக்கெடுத்துக் கொண்டது. கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குவினை அமைத்தலை இக்கொள்கைகள் உள்ளிட்டது.

8.
கடந்த கால மனித உரிமைகள் மற்றும் கௌரவம் ஆகியவற்றின் மீறல்கள் தொடர்பாக நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் அரசியல், சட்ட மற்றும் நல்லொழுக்கப் பொறுப்புக்களை நிர்ணயிப்பதில் விரிவானதொரு செயற்பாடாக பொறுப்புக்கூறலை குழு நோக்குகிறது“ உண்மை, நீதி, மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கான நக்ஷ்ட ஈடு ஆகியவற்றையும் பொறுப்புக்கூறல் உள்ளடக்குகிறதோடு, மோதலுக்குப் பின்னர் ஒரு நாட்டில் நிலைத்தகவுள்ள சமாதானத்தை அடைவதற்காக பாரியதொரு செயற்பாட்டின் ஒன்றிணைந்த அம்சமாகவுள்ளது.

பின்னர் இந்த அறிக்கையில் பொறுப்கூறலின் அம்சங்களையும் பொறுப்புக்கூறல் பற்றிய இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களையும் இக்குழு விளக்குகிறது.

9.
சூன்யத்தில் பொறுப்புக்கூறலுக்கான தரங்கள் மற்றும் பொறித்தொகுதிகளை ஆராய முடியாது என்பதோடு, "குற்றம்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை தொடர்பாக' செயலாளர் நாயகத்துக்கு அதன் ஆலோசனையை வழங்க வேண்டும் என்பதை குழுவின் வரையறை நோக்கெல்லை சுட்டிக் காட்டுகிறது.

"சுபாவம் மற்றும் நோக்கெல்லை' என்பது குற்றச்சாட்டுக்களின் அளவு மற்றும் சட்ட தகைமைகள் என்பதைக் குறிக்கிறது. குற்றச்சாட்டுக்களின் அளவினை வருணிப்பதற்காக, குழு பல்வேறு மூலங்களின் இருந்து தகவலைப் பெற்று, சட்டத்தின் அடிப்படையில் அவற்றைச் சீர்தூக்கிப்பார்த்து, பொறுப்புக்கூறல் பற்றிய கூட்டு அறிக்கையை செயற்படுத்துவது தொடர்பில் செயலாளர் நாயகத்துக்கு சிறந்த ஆலோசனையை வழங்குவதை இவ்வேற்பாடு தேவைப்படுத்தியது.

அது சர்ச்சைக்குள்ளான உண்மைகள் பற்றி நிஜத் தீர்மானங்களை எடுக்கவில்லை என்பதால் வழக்கமான ஐக்கிய நாடுகள் சொற்றொடர் குறிக்கும் உண்மையைக் கண்டறியும் நடவடிக்கையை குழு மேற்கொள்ளவில்லை என்பதோடு நாடுகள், நாடற்ற அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் சட்டப்படியான பொறுப்பு அல்லது குறைகூறத்தக்க நிலை பற்றிய தீர்மானங்களை எடுப்பதற்கான முறைசார்ந்த புலனாய்வொன்றையும் மேற்கொள்ளவில்லை.

10.

குற்றச்சாட்டுக்கள் பற்றிய மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய பல்வேறு முறைமைகள் பற்றிக் குழு மேற்கொண்ட மதிப்பீட்டின் அடிப்படையில், இலங்கையில் பொறுப்புக்கூறலை தொடர்வதற்கான சிபாரிசுகள் தொகுதியொன்றை செயலாளர் நாயகத்தின் பாவனைக்காக குழு முன் வைத்துள்ளது. குழு அதன் கடமையைச் செய்யும் கால வரையறையின் போது அதற்குக் கிடைத்த தகவல் மற்றும் கிடைத்த இலக்கியங்களின் அடிப்படையில் இவ்வறிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

4000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குழுவுக்குக் கிடைத்தன: ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை பாகம் - 02

(05) 11.
அதன் நடவடிக்கையின் ஆரம்பத்தில் இருந்தே, செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. வின் சிரேக்ஷ்ட அலுவலர்கள், அது செயலாளர் நாயகத்துக்கு அறிக்கை விடுத்து இறுதியில் ஆலோசனை வழங்கிய போதிலும், அதன் ஆணையை நிறைவேற்றுவதில் சுயேச்சையாக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அதிகாரம் உண்டு என குழுவுக்குத் தெளிவாக விளக்கியுள்ளனர். மேலும், பின்வரும் சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கத்தை விட்டும் சுயேச்சையாக குழு இருக்கும் என்பதை ஐ.நா. குழுவிற்குத் தெளிவுபடுத்தியுள்ளது.

2. குழுவின் காலம் சார்ந்த வரையறைப் பொறுப்பு

12.
"யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள்' தொடர்பான கூட்டு அறிக்கையினைச் செயற்படுத்துவது பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்கு வரையறை ஆணை தேவைப்படுத்துகிறது.

குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச சட்டப் பாரிய மீறல்கள் அநேகமானவை நேர்ந்த யுத்தத்தின் மிக உக்கிரமான கட்டத்தை உள்ளடக்கிய 2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலப்பகுதிக்கு குழு கவனம் செலுத்தியது.

எல்.ரி.ரி.ஈ. இன் நடப்பிலுள்ள தலைநகரான கிளிநொச்சி மீது அரசாங்கம் இறுதி இராணுவத் தாக்குதல் மேற்கொண்டதற்கு 2008 செப்டெம்பர் ஒத்திருக்கிறது. வன்னியில் செயற்படும் சர்வதேச அமைப்புக்களில் தொழில்புரியும் சர்வதேச பணியாட்களின் பாதுகாப்புக்குத் தொடர்ந்தும் உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற அரசாங்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து சர்வதேச யுத்த அவதானிப்பு முடிவடைந்ததற்கும் அது ஒத்திருக்கிறது. 2009 மே மாதம் யுத்தத்தின் முடிவையும் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் தோல்வியையும் குறிக்கிறது.

13.
சூழ்நிலைத் தொடர்பினை வழங்குவதற்காக, மேலே விவரிக்கப்பட்ட இறுதிக் கட்டங்களுக்கு முந்திய விடயங்கள் பற்றி சில சமயங்களில் குழு கலந்துரையாடுகிறது.

மேலும், யுத்தத்தின் முடிவுக்கு முன்னர் அல்லது அதனுடன் நெருக்கமாக தொடர்புபட்ட, யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்ந்தவை சில சந்தர்ப்பங்களில் இன்றுவரை இடம்பெறுவது போன்ற மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீறல்கள் பற்றியும் குழு அறிந்துள்ளது.

ஆயுதம் தாங்கிய மோதலுடன் நெருக்கமற்ற, குறிப்பாக இலங்கையின் ஏனைய பாகங்களில் தற்போது நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் பற்றி குழு கவனம் செலுத்தவில்லை. (06) 3. குற்றம் சாட்டப்பட்ட மீறல்கள் தொடர்பான விடயங்கள்

14.
குற்றம் சாட்டப்பட்ட சர்வதேச மற்றும் மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் தொடர்பாக வரையறை ஆணை உள்ளது. மனிதாபிமான சட்டம் தொடர்பில், மோதல்களில் ஈடுபடாதவர்கள் மற்றும் தொடர்ந்தும் ஈடுபடாதவர்கள் அத்துடன் நலன்புரி வழிகள் மற்றும் முறைமைகள் தொடர்பான ஜெனீவா கோட்பாடுகளில் வழங்கப்பட்டுள்ள தோதான வழக்கமான விதிமுறைகள் பற்றி குழு கவனம் செலுத்துகிறது. மனித உரிமைகள் சட்டத்தைப் பொறுத்தவரை, இலங்கை ஒப்புதல் அளித்துள்ள சர்வதேச மனித உரிமைகள் ஒப்பந்தங்கள் மீது கவனம் செலுத்தி அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் அத்துடன் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் ஆகியவை பற்றி குழு கவனம் செலுத்துகிறது.

இந்நடவடிக்கையின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது ஆயுதந் தாங்கிய மோதல் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் பரஸ்பரம் ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துவதை குழு நினைவூட்டுகிறதோடு, நிலையான சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாடு ஆகியவை மீது அவற்றின் விளைவான தாக்கத்தையும் இனங்காண்கிறது.

இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்டம் அத்துடன் பொறுப்புக் கூறல் பற்றிய ஏனைய சட்டங்கள் உள்ளடக்குகிறது என்ற அளவில்,இலங்கையின் சட்டம் மற்றும் தோதான நிறுவனங்களும் ஆராயப்படுகின்றன. இறுதியாக, யுத்தத்தின் முக்கிய பாத்திரங்களான அரசாங்கம் மற்றும் எல்.ரி.ரி.ஈ. ஆகியவற்றின் மீறல்கள் பற்றிய குற்றச் சாட்டுக்களை குழு ஆராய்கிறது.

(07) (இ) செயற்றிட்டம்

15.
ஆய்வுரிமை வரம்பின் படி, குழு அதற்கே உரித்தான முறைமைகளை அபிவிருத்தி செய்வதோடு, செயலகமொன்று அதற்கு உதவி வழங்கும். 2010 செப்டெம்பர் நடுப்பகுதி அளவில் அதன் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஐக்கிய நாடுகள் அமைப்பினுள் தொழில் புரியும் நெறிசார்ந்த தொழில்புரிவோர்களிடையே இருந்து செயலகம் ஒன்று திரட்டப்பட்டது.

மேலும், வேறு வகையாய் கிடைக்காத ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக புற உசாத்துணையாளர்களின் சேவையை குழு பெற்றுக் கொண்டது. ஐக்கிய நாடுகள் செயலகத்தில் ஏற்கனவே உள்ள பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மேற்கோள் குழுவொன்றும் குழுவுக்கு உதவியளித்தது.

16. குழுவின் செயல் திட்டம் இரு கட்டங்களாக நெறிப்படுத்தப்பட்டது. முதற் கட்டத்தில், அதன் ஆய்வுரிமை வரம்பு தொடர்பான நிபுணத்துவம் அல்லது அனுபவம் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் பற்றிய பல்வேறு தகவல்களை குழு சேகரித்தது.

இவ்வாறான சில தகவல்கள் எழுத்து வடிவத்தில் உதா: அரசாங்க, ஐ.நா. அல்லது அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகள் மற்றும் குழுவுக்கு இரகசியமான முறையில் வழங்கப்பட்ட தகவல்கள் மூலமாகக் கிடைத்தன. ஏனைய தகவல்கள் குழுவின் பல கூட்டங்கள் மற்றும் அதன் செயலகத்தின் மூலமும் பெறப்பட்டன.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது நடந்தேறிய நிகழ்வுகளினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்கள் அத்துடன் அரசாங்கங்களின் பிரதிநிதிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோருடன் குழு சந்திப்புக்களை நடத்தியது. அதன் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் போது, குழு இவ்வறிக்கையின் நகலைத் தயாரித்தது. பிரசுரிப்பதற்கு ஏதுவான வகையில் இவ்வறிக்கை வரையப்பட்டது.

17.
பரவலாக பொதுமக்களின் தொடர்பு கொள்வது தொடர்பில், அக்கறைகொண்ட அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் எழுத்து மூலமாக முறையீடுகளைச் சமர்ப்பிக்குமாறு பொதுவானதொரு அழைப்பு விடுக்கப்பட்டது. 2010 ஒக்டோபர் 21ஆம் திகதி, குழுவின் பணியாட்டொகுதித் தலைவர், அறிவித்தலின் பிரதியொன்றை இணைத்து அது ஐ.நா. இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்து இத்தீர்மானம் பற்றி இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதிக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஆங்கில அறிவித்தல் 2010 ஒக்டோபர் 27 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்டதோடு, சிங்கள மற்றும் தமிழ் மொழிகளிலான அறிவித்தல்கள் பின்னர் பிரசுரிக்கப்பட்டன. கருத்துக்களைச் சமர்ப்பிப்பதற்கு ஆரம்பத்தில் கடைசித் திகதியாகக் குறிப்பிடப்பட்ட 2010 டிசம்பர் 15ஆம் திகதி பின்னர் 2010 டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. 2010 டிசம்பர் 31ஆம் திகதி இருந்தவாறாக, 2,300க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து 4,000 க்கும் அதிகமான முறையீடுகள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன.

(08) 18.
குறிப்பிட்டதொரு வகைகளிலான மீறல்கள் அல்லது இறுதிக் கட்டங்களின் போதான குறிப்பிட்டதொரு காலப்பகுதிகள் தொடர்பானதாக மற்றும் மனித உரிமைகள் அல்லது மனிதாபிமான சட்டத்தின் குறித்துரைக்கப்பட்ட மீறல்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறையீடுகளில் கணிசமானவை இருந்தன. ஆவணப்படுத்தப்பட்ட தகவல், நிகழ்வுகளின் பட்டியல்கள் அல்லது பாதிக்கப்பட்டோர், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்கள் ஆகியவற்றை உள்ளடக்கின.

பாரபட்சமற்றவையாக பகுப்பாய்வு ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட சில முறையீடுகள் பொதுவான தகவல்கள், போக்குகள் அல்லது நிலைமை பற்றிய குறிப்பின் அம்சங்களின் பகுப்பாய்வினை வழங்கின.

பொதுவான தகவல்கள் ஊடக அறிக்கைகள், இணையத் தொடர்புகள் பொதுவாகக் கிடைக்கக் கூடிய மூலங்களில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் வரலாற்று ரீதியிலான விளக்கங்கள் குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முறையீடுகளில் அடங்கின. இறுதியாக, உண்மையினை அடிப்படையாக அல்லது பகுப்பாய்வினைக் கொண்டிராத நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பான பரிந்துரைகளைச் செய்யுமாறும் குழுவினை வேண்டிக் கொண்டவை பெறப்பட்ட கணிசமான முறையீடுகளில் அடங்கின.

19.
முறையீடுகளை ஒவ்வொன்றாக குழுவினால் சரி பிழை பார்க்க முடியவில்லை என்பதால் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய தன்மையினை நிறைவு செய்யவும் குழுவின் நியதிக்கேற்ப அவை நேரடி மூலமாகப் பாவிக்கப்படவில்லை (அத்தியாயம் டிடி அ பார்க்கவும்).

சில விடயங்களில், முறையீடுகள் தகவலின் ஏனைய மூலங்களை உறுதிப்படுத்துவதற்கு உதவின. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக மாத்திரமன்றி மேலும் விரிவாக கடந்த காலம் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அவசரத் தேவையை குழுவின் காலம் சார்ந்த ஆணைக்கு முன்பதான நிகழ்வுகளை உள்ளிட்டதாகக் கிடைக்கப்பெற்ற கணிசமான முறையீடுகள் வலியுறுத்திக் காட்டுகின்றன.

ஈ. இலங்கை அரசாங்கத்துடனான இணைச் செயற்பாடு

20.
அதன் ஆரம்பந்தொட்டு, அதன் ஆணையை அமுல் செய்வது பற்றி இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடி பொறுப்புக்கூறும் விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் அரசாங்கத்தின் நோக்கம் எவ்வாறாக உள்ளது என்பதை அறிவதற்காகக் குழு விருப்பம் கொண்டிருந்தது.

உண்மையிலேயே, குழு அரசாங்கத்துக்கானதொரு மூலவளமாகச் செயற்படலாம் என்பதாக குழுவுக்கும் அரசாங்கத்துக்கும் செயலாளர் நாயகம் தன் நம்பிக்கையைத் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக, உள்நாட்டிலேயே அபிவிருத்தி செய்யப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றியதொரு பொறித்தொகுதி என பகிரங்கமாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ள கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவுடன் தொடர்புகளைப் பேணுவது பெறுமதி மிக்கதாகும் என்ற நிலைப்பாட்டின தொடர்ச்சியுமாகக் குழு பேணி வந்துள்ளது.

அதேநேரத்தில், பொறுப்புக்கூறலைப் பொறுத்தவரையில் ஏனைய உள்நாட்டு நிறுவனங்களுக்கும் பாரியதொரு பங்களிப்பு உண்டு என குழு கருதியதோடு, அரசாங்கத்தினுடாக அவற்றுடனும் தொடர்புகளைப் பேண குழு முயற்சிகளை மேற்கொண்டது.

(09) 21.
இவ்விளக்கம் எடுத்துக் காட்டுவது போன்று, 2010 செப்டெம்பர் ஆரம்பத்தில் இருந்து குழு அதன் ஆணையை நிறைவு செய்யும் சந்தர்ப்பம் நெருங்கும் வரை, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட சொல் மூலமும் எழுத்து மூலமும் பலதடவைகள் குழு முயற்சியினை மேற்கொண்டது.

குழுவின் நோக்கெல்லை செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதாக உள்ளதாகவும் ஏதும் புலனாய்வினை மேற்கொள்வதில் அது ஈடுபடவில்லை என்பதை உள்ளிட்டவாறு இலங்கை அரசாங்கத்துக்கு குழுவும் ஐ.நா. அலுவலர்களும் பலதடவை தெளிவுபடுத்தியுள்ளனர்.

குழுவுடன் எதுவிதத் தொடர்பாடலும் இன்றிப் பல மாதங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு வருமாறு அரசாங்கம் குழுவுக்கு அழைப்பு விடுத்த போதிலும் அத்தகைய விஜயத்துக்கான ஏற்பாடுகள் பற்றிக் கலந்துரையாடாமல் அதன் நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டது.

குழு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணைக்குழுவுக்கு "பிரதிநிதித்துவங்களை' மாத்திரம் செய்யலாம் என 2010 டிசம்பர் மாதம் கடித மூலம் அரசாங்கம் வற்புறுத்திய போதிலும் நாட்டுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்கான அதன் விருப்பத்தைக் குழு வலியுறுத்தியது. இதனையும் 2011 ஜனவரி ஆரம்பத்தில் வழங்கிய குறிப்பொன்றின் மூலம் அரசாங்கம் நிராகரித்ததோடு அதன் பின்னர் விஜயம் பற்றி மேற்கொண்டு எதுவித தொடர்பினையும் பேணவில்லை.

மாறாக, கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாடு பற்றிய ஆணைக்குழு மற்றும் ஏனைய உள்நாட்டுப் பொறித்தொகுதிகள் பற்றிய குழுவின் கேள்விகளுக்கு எழுத்து மூலமான பதிலை ஜனவரி இறுதி அளவில் அனுப்பி வைத்ததோடு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழுவின் எந்தவொரு உறுப்பினரையும் உள்ளடக்காத சிறியதொரு தூதுக்குழுவினை நியூயோர்க்குக்கு அது அனுப்பி வைத்தது.

22.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களில் ஈடுபட்டுள்ள பலதரப்பட்டட அதிகாரிகளைக் குழு சந்திப்பதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கவில்லை என்பதையிட்டு குழு கவலை தெரிவிக்கிறது.

இலங்கைக்கு விஜயம் செய்வது அதன் நடவடிக்கைகளுக்கு அவசியமானதல்ல என்றிருந்த போதிலும், கற்ற பாடங்கள் மற்றும் மீளிணக்கப்பாட்டு ஆணைக்குழு மற்றும் அரசாங்க அலுவலர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்துக்களை மேலும் நேரடியாகக் கேட்டு அவர்களுடன் நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு (வேறு வழிகளில் உத்தியோகபூர்வ கருத்துக்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு குழு முடிந்த போதிலும்) குழுவுக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கும்.

எழுத்து மூலமான பதில்களையும் இலங்கை அதிகாரிகளுடனான நேருக்கு நேரான உரையாடலுக்கான சந்தர்ப்பத்தை குழு வரவேற்ற போதிலும், அப்படியானதொரு ஈடுபாட்டிற்காக குழு முயற்சி செய்யவில்லை.

உ. குழுவினது பதிவுகளின் இரகசியத் தன்மை

23.
பின்னர் தகவலைப் பிரயோகிப்பது பற்றிய முழுமையான இரகசியத்தன்மையின் உறுதிப்பாட்டின் பேரில் சில சந்தர்ப்பங்களில் எழுத்து மூலமான மற்றும் வாய் மூலமான சமர்ப்பணங்கள் குழுவுக்குக் கிடைக்கப் பெற்றன. இது பற்றி அறிவுரை வழங்கிய சட்ட விவகாரங்கள் அலுவலகம், செயலாளர் நாயகத்தின் "தகவலின் பதிவு நுட்பத்தன்மை, வகைப்படுத்தல் மற்றும் கையாளுதல்' தொடர்பான அறிக்கையின் (குகூ/குஎஆ/2007/6) ஏற்பாடுகளை அதன் பதிவுகளுக்கு உரியதாய்க் கருதலாம் என உறுதிப்படுத்தியது.

ஒரு (10) ஆவணத்தை "கண்டிப்பான இரகசியத்தன்மை' என வகைப்படுத்தி அதற்கான பிரவேசத்தை 20 வருட காலத்துக்கு மட்டுப்படுத்துவதோடு அதனைத் தொடர்ந்தும் தடுத்து வைத்தல் அல்லது வெளியிடுதல் தொடர்பான நியாயம் பற்றிய மீளாய்வொன்றை மேற்கொள்ளலாம் என்பதற்கான ஏற்பாட்டினை இவ்வறிக்கை விளக்குகிறது.

மேலும், குழுவின் நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் மற்றும் தோதானவிடத்து, பின்னர் பிரயோகிப்பது தொடர்பான கண்டிப்பான இரகசியத்தன்மை பற்றிய உறுதிப்பாட்டினை குழு வழங்கலாம் என்பதை சட்ட விவகாரங்கள் அலுவலகங்கள் உறுதிப்படுத்தியது. இதன் விளைவாக, குழுவின் பொருள் செறிந்த பதிவுகள் கிட்டத்தட்ட முழுமையாக "கண்டிப்பான இரகசியத்தன்மை' எனவும், சில விடயங்கள் தொடர்பாக எதிர்கால பாவனை பற்றிய மேலதிகப் பாதுகாப்புடனும் வகைப்படுத்தப்படும்.

டிடி. மோதலுக்கான வரலாற்று ரீதியிலான மற்றும் அரசியல் பின்னணி

24.
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் நடைபெற்று வந்த மூர்க்கத்தனமான மோதலின் பின்னர், 2009 மே 19ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) மீதான அதன் வெற்றியை இலங்கை அரசாங்கம் பிரகடனப்படுத்தியது.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது சர்வதேச மனிதாபிமான மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் மீறல்கள் பற்றிய ஏராளமான குற்றச்சாட்டுக்கள் விடுக்கப்பட்டதோடு, அவை பற்றி செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவது குழுவுக்குப் பொறுப்பு சாட்டப்பட்டது. இலங்கையின் சிக்கலான மற்றும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட அரசியல் வரலாற்றினை கூறுபடுத்தி ஆராய்வது குழுவின் பணியல்ல.

இருந்த போதிலும், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை தோதான அரசியல் மற்றும் சமூகப் பின்னணியின் கண்ணோட்டத்தில் ஆராய்வதற்காக, மோதலின் வரலாற்றின் சில அம்சங்களை கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என குழு கண்டது.

25.
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு இந்தியாவின் தென் கிழக்குக் கரைக்கு 18 மைல்களுக்கு அப்பால் இந்திய சமுத்திரத்தில் உள்ள தீவு தேசமாகும். இலங்கை 21 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இனத்துவ, மொழிவாரியான அத்துடன் சமயம் தொடர்பான பன்முகத் தன்மையுடையதொரு நாடு என்பதோடு, அதில் 74 சதவீதத்தினர் அதிகமாக பௌத்தர்களை உள்ளடக்கிய சிங்கள மொழி பேசும் சிங்களவர்களாகவும், 18 சதவீதத்தினர் அநேகமாக இந்துக்களான தமிழ் மொழியைப் பேசும் தமிழர்களாகவும் (இலங்கைத் தமிழர் மற்றும் இந்திய தமிழர்கள் என முறையே 13 சதவீதத்தையும் 5 சதவீதத்தையும் உள்ளடக்கியதாக), மற்றும் 7 சதவீதத்தினர் இஸ்லாம் மதத்தை அனுஷ்டிக்கும் பொதுவாகத் தமிழ் மொழியைப் பேசும் சோனகர்கள் மற்றும் மலேயர்களைக் கொண்ட முஸ்லிம்களாகவும் மற்றும் 1 சதவீதத்தினர் ஏனையவர்களுள் பறங்கியர் மற்றும் ஆதிவாசிகளைக் கொண்ட சிறிய இனத்துவச் சமூகங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சில சமூகங்களில் சிறிய வீதத்தினராக கிறிஸ்தவர்கள் உள்ளனர்.

26.
முதலில் போர்த்துக்கேயர், அடுத்து ஒல்லாந்தர் மற்றும் இறுதியாக பிரித்தானியர்களின் 4 நூற்றாண்டுகள் தொடர்ந்த காலனித்துவ ஆட்சிக்குப் பின்னர். பிரித்தானியாவிடம் இருந்து 1948 இல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு இனத்துவச் சமூகங்களை உள்ளடக்கியதாகச் சிங்களவர் ஆதிக்கம் செலுத்தும் சிங்களப் பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் இலங்கையை ஆட்சி செய்து வந்தது.

சகலருக்குமான வாக்குரிமை, பல்கட்சி அமைப்பு மற்றும் துடிப்பானதொரு தேர்தல் செயற்பாடு, அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு சாராருக்குமான உயர் நிலையிலான எழுத்தறிவு, குறைந்த சிசு மரண வீதம் போன்ற முக்கியமான மனித அபிவிருத்திச் சித்திகள் ஆகியவற்றை உள்ளிட்ட உறுதியான ஜனநாயகச் சுட்டிகளை இலங்கையின் நீண்ட கால யுத்தம் பற்றிய வரலாற்றுடன் தெளிவாக ஒப்பிடக் கூடியதாகவுள்ளது

(11) அ. இனத்துவமும் அரசியலும்

27.
அரசியல் மற்றும் இனத்துவக் கோடுகளூடான ஆழமானதொரு விரிசலின் வன்முறைப் பிரதிபலிப்பாக இலங்கையின் ஆயுதந் தாங்கிய மோதல் இருந்துள்ளது.

1. இனத்துவம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றம் 28. சுதந்திரத்தின் பின், அரசியல் பிரமுகர்கள் குறுகிய கால அரசியல் இலாபங்களுக்கு முன்னுரிமை வழங்கி, நீண்ட கால கொள்கைகளுக்கு மேலாக சமுதாயம் சார்ந்த அத்துடன் இனத்துவ வாத மன உணர்ச்சிகளை கவர்வதற்கான ஒரு போக்கினைக் கொண்டிருந்தனர்.

நீண்ட கால கொள்கைகள் பிரஜைகளின் பல்கலாசார இயல்பினைப் போதியளவு பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சகலரையும் உள்ளிட்டதொரு நாட்டைக் கட்டியெழுப்பியிருக்கலாம். இத்தகைய செயற்பாடு மற்றும் பிரிவுகள் காரணமாக ஒருமைப்படுத்தும் தேசிய தனித்தன்மை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், சிங்களபௌத்த தேசியவாதம் செயற்பட ஆரம்பித்தது, பௌத்த மதத்தின் பரிசுத்த இல்லமாகிய இலங்கையின் பாதுகாப்பாளர்கள் என்பதாக சிங்களவர்களுக்கு தனிச்சிறப்பினைக் கொண்டதொரு தன்மையை வலியுறுத்தியது. இக்காரணிகள் இலங்கையில் நாடு, அரசாட்சி மற்றும் இனங்களுக்கிடையிலான தொடர்புகளைப் பாழாக்கி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியது.

29.
1970ஆம் ஆண்டுகளில், ஒரு புறம் வகுப்பு அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த தெற்கின் இளம் சிங்களவர்கள் மற்றும் இனத்துவ அடிப்படையிலான ஓரங்கட்டலால் விரக்தியடைந்த வடக்கைச் சேர்ந்த இளம் தமிழர்கள் மறு பக்கம் உருவாகி வரும் நாடு சம்பந்தப்பட்ட வகையில் வெவ்வேறு விதமான எதிர்ச்செயலில் ஈடுபட்டு, தீவிரவாதத்தின் பக்கம் திரும்பி, அரசுக்கு எதிரான ஆயுதந்தாங்கிய புரட்சிகளில் ஈடுபட்டனர். அரசாங்கம் இவ்வியக்கங்களை தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கணித்து, அடிப்படையான அரசியல் சிக்கல்களைத் தீர்ப்பதை விடுத்து, அரச அதிகாரத்துக்கு எதிரான சவால்களான காணாமல்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட அடக்குமுறையினைக் கொண்டு எதிர்கொண்டது.

30.
வேறுபாடு காட்டும் அரசாங்கக் கொள்கைகள் மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஆகியவற்றைத் தொடர்ந்து, காந்தியின் அகிம்சா வழியைப் பின்பற்றி ஆரம்பித்த உரிமைகளுக்கான தமிழ் போராட்டம், தனி நாடு என்ற கோரிக்கையை மையமாகக் கொண்டு மேலும் மேலும் தமிழ் தீவிரவாதம் மற்றும் ஆயுதம் ஏந்திய புரட்சியை தோற்றுவித்தது.

ஒத்துப்போவதில் இருந்து பிரிவினை வாதத்துக்கு கலந்துரையாடல் மாறியபோது, 1970ஆம் ஆண்டுகளில் எல்.ரி.ரி.ஈ. உள்ளிட்ட பல தமிழ் அரசியல்தீவிரவாதக் குழுக்கள் தோன்றின. ஆயுதந்தாங்கிய தமிழ் குழுக்கள் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்குச் சமாந்தரமாக சிங்கள தேசியவாதிகள் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட கடுமையான அடக்கு முறை தீவிரமடைந்தது.

1977, 1979, 1981 மற்றும் 1983 இல் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளை அரசாங்கத்தில் இருந்த சில சக்திகள் உற்சாகப்படுத்தின அல்லது சில சந்தர்ப்பங்களில் அவற்றுக்கு அனுசரணை வழங்கின. இந்த வன்முறை 1983இல் ஆகப் பரவலாக நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களின் உச்ச நிலையை அடைந்தது.

அரசாங்கத்துக்குச் சொந்தமான பேருந்துகளில் சிங்களக் கும்பல்கள் போக்குவரத்துச் செய்யப்பட்டதோடு தமிழர்களை இனங்கண்டு அவர்களை இலக்குப் பார்ப்பதற்காக உத்தியோகபூர்வமான வாக்காளர் பதிவேடுகள் பிரயோகிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததோடு பாரிய அளவில் இடம் பெயர்வு, தமிழர்களின் சொத்துக்களுக்கான சேதம் அத்துடன் தமிழர்களின் புலம்பெயர்வு நேர்ந்தது.

வடக்கு மாகாணமான யாழ்ப்பாணத்தில் 13 இலங்கை இராணுவ வீரர்களை எல்.ரி.ரி.ஈ. கொலை செய்ததற்குப் பதிலாக இத்தாக்குதல்கள் நடைபெற்றதாக அரசாங்கம் உறுதியாகக் கூறியது. இவ்வாறாக, 1983ஆம் ஆண்டுக்கு முன்னர் இரு தரப்பினருக்கிடையிலான வன்செயல்கள் நேர்ந்த போதிலும், அரசாங்கத்துக்கும் எல்.ரி.ரி.ஈ. இனருக்கும் இடையிலான யுத்தத்தின் ஆரம்பம் 1983 எனப் பொதுவாகக் கருதப்படுகிறது.

2. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரி.ரி.ஈ) 31. 1983ஆம் ஆண்டின் இனக் கலவரங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறை மும்முரமடைந்த போது, தமிழ் சமூகமும் மேலும் தீவிரவாதத்தில் ஆழ்ந்து, தமிழ் நாட்டில் பயிற்சி மற்றும் அமைப்புக்கு ஏதுவான சூழலைப் பிரயோசனப் படுத்தியதோடு, தீவிரவாதக் குழுக்களின் அணிகளும் அதிகரித்தன.

தமிழ் விடுதலை இயக்கமாக ஆரம்பித்த எல்.ரி.ரி.ஈ, நாளடைவில் மிகவும் ஒழுங்கு சார்ந்த மற்றும் தமிழ் தீவிரவாதக் குழுக்களிடையே மிகவும் தேசியவாதத்தைக் கொண்டதாகவும் மாறி 1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை அரவணைக்கும் தலையாய சக்தியாக தலைதூக்கியது.

இக்கால கட்டத்தின் போது, எல்.ரி.ரி.ஈ. ஏனைய தமிழ் குழுக்களை பணிய வைப்பதற்காக கூடிய அளவிலான வன்முறைப் போக்கினைக் கடைப்பிடித்ததோடு, தாமாகவே நியமிக்கப்பட்ட தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தாம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.

அதன் புதிரான தலைவர், வேலுப்பிள்ளை பிரபாகரன், முழுமையான விசுவாசத்தையும் அர்ப்பணிப்பையும் அதிகாரத்துடன் கோரியதோடு பக்தி சார்ந்ததொரு ஆதரவாளர்களை உருவாக்கினார்.

தமக்குள்ளே எந்தவொரு கருத்து வேறுபாட்டையும் சகிக்காததோடு, அரசாங்கத்துடன் செயற்படுவோர் அல்லது ஒத்துழைப்போர் எனச் சந்தேகிக்கப்படுபவர்கள் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டு அநேகமாக எல்.ரி.ரி.ஈ. இனால் கொலை செய்யப்பட்டார்கள்.

தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட எல்.ரி.ரி.ஈ. இன் வன்முறை தமிழ் சமுதாயத்தினுள் ஆழ்ந்த பயத்தையும் சந்தேகத்தையும் தோற்றுவித்தது.


கருணாவின் பிரிவு புலிகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது: ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை பாகம் - 03

32.
எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுத்தாக்குதலைத் தோற்றுவித்து, இரா ணுவ, அரசியல் மற்றும் சிவில் இலக்குகளுக்கு எதிராக அதனைப் பிரயோகித்தது. இந்திய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி (1991) அத்துடன் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச (1993) மற்றும் அதிக எண்ணிக்கையிலான இலங்கை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மிதவாதப் போக்குடைய தமிழ் அரசியல் தலைவர்களின் கொலைகளுக்கு ஆண் மற்றும் பெண் எல்.ரி.ரி.ஈ. தற்கொலைக் குண்டுதாரிகள் பொறுப்பாகவிருந்தனர்.

அநேகமான சந்தர்ப்பங்களில் பல சிவில் பிரஜைகளின் உயிர்களைப் பறித்த பொருளாதார மற்றும் சமய இலக்குகள் மீதும் அது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டது. எல்.ரி.ரி.ஈ. புறந்தள்ளும் அரசியலைப் பின்பற்றியதோடு, 1990 ஆம் ஆண்டில் வடக்கில் தம் வீடுகளில் இருந்து முஸ்லிம் மக்களை துரத்தியதோடு, அதன் கட்டுப்பாட்டில் இருந்த எல்லைக் கிராமங்களில் வசித்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்தது.

தமிழ் மக்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அதிகமாக வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் பயமுறுத்தலை எல்.ரி.ரி.ஈ.பிரயோகித்தது. வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பதில், சிறுவர்கள் சிறுமியரை உள்ளிட்ட வயது குறைந்தவர்களை படைவீரர்களாகப் பாவிப்பதில் எல்.ரி.ரி.ஈ. ஈடுபட்டதும் தெரிந்த விடயமே.

அதன் நடைமுறை காரணமாக கனடா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ஐக்கிய இராஜதானி மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு ஆகியவற்றை உள்ளிட்ட நாடுகள் இவ்வமைப்பை தடை செய்ததோடு, 2001 செப்டெம்பர் 11 இன் பின்னர் தடை செய்வது மேலும் தீவிரமடைந்தது.

33.
1990ஆம் ஆண்டுகள் தொடக்கம் மே 2009 வரை, எல்.ரி.ரி.ஈ. இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் பாரிய நிலப்பரப்பினை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்ததோடு, அரசாங்கப் படையினரும் எல்.ரி.ரி.ஈ.இனரும் பிரதேசத்தின் கட்டுப்பாட்டுக்காக போட்டியிட்ட போது, நாளடைவில் இந்த எல்லைக் கோடு மாற்றமடைந்தது.

நடப்பிலுள்ள ஒரு தேசத்தை அது செயற்படுத்தி தானே அது என்ற தோற்றத்தை முன்வைக்க முனைந்தது. இதனை நோக்காகக் கொண்டு நன்கு வடிவமைக்கப்பட்ட சர்வதேச உபாயம் ஒன்றை அது அபிவிருத்தி செய்ததோடு, தன் கட்டுபாட்டில் உள்ள பிரதேசத்தில் அதன் காவல் அமைப்பு, சிறைச்சாலைகள், நீதி மன்றங்கள், உள்வரவுத் திணைக்களம் வங்கிகள், மற்றும் சில சமூக சேவைகள் ஆகியவற்றை நிறுவியது.

தரை, வான் மற்றும் கடல் திறன்கொண்ட முன்னேறியதொரு இராணுவத்தையும் அது கட்டியெழுப்பியதோடு, விரிவானதொரு உளவு பார்க்கும் அமைப்பின் உதவியுடன் கெரில்லா மற்றும் பாரம்பரிய நடைமுறைகளையும் மேற்கொண்டது.

34.
வன்முறை மற்றும் அரச அடக்குமுறை காரணமாக அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் மற்றும்“ ஏனையோர் சிறந்த பொருளாதார சந்தர்ப்பங்களுக்காக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததால் இலங்கையின் புலம்பெயர்ந்த தமிழ் சனத்தொகை உலகின் பல பாகங்களிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வரை 1980ஆம் ஆண்டுகள் முதல் வளர்ச்சியடைந்து புலம்பெயர்ந்தவர்கள் யுத்தம் நடைபெற்ற காலம் பூராவும், அவர்களுள் சிலர் ஏன் ஏது என்று கேட்காது எல்ரிரிஈ இனருக்கு ஆதரவு வழங்கி, யுத்தம் நடைபெற்ற முழுக்காலப்பகுதியிலும் நிதிகளை வழங்கி, எல்ரிரிஈ தவறிழைக்கவில்லை என வாதாடி முக்கியதொரு பங்கினை வகித்தனர்.

ஆயினும், ஆதரவு அனைத்தும் சுயமாகவே வழங்கப்படவில்லை. இலங்கைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான தமிழ் அகதிகள் வாழும் நாடுகளுக்கு எல்.ரி.ரி.ஈ. அச்சுறுத்தலை உள்ளிட்ட அதன் நடைமுறைகளை விரிவாக்கி, அதனை தனிநாட்டுக்கான தமிழ் மக்களின் அபிலாசை என வருணனை செய்து அதனை அடைவதற்கான வழியாகப் பிரயோகித்தது. அது எவ்வித விமர்சனத்தையும் சகிக்காததோடு, எல்ரிரிஈ இன் வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் குரல் எழுப்புவதற்கான எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அளிக்கவில்லை.

(14) ஆ. சட்டத்தின் நல்லாட்சி மற்றும் மனித உரிமைகள் படிப்படியாக அழிந்துபோதல்

35.
இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு நாட்டின் கூறுபடாத சுபாவத்தை வலியுறுத்துவதோடு, தேசத்தின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர் மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி ஆக பதவி வகிக்கும் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவருக்கு பரவலான மற்றும் குவிசார்ந்த அதிகாரங்களை வழங்குகிறது“ மேலும், தனது வரையறைக்கு உட்பட்டவாறு ஜனாதிபதி எந்தவொரு அமைச்சுக்கும் தலைமை தாங்கலாம்.

தற்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு, நிதி மற்றும் திட்டமிடல், துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய ஐந்து அமைச்சுக்களுக்குப் பொறுப்பாகவுள்ளார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதி மன்றம் ஆகியவற்றுக்கான தலைவர்களையும் நீதிபதிகளையும் நியமிப்பதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தையும் அரசியல் யாப்பு நிலைநாட்டுகிறது.

மேலும், நெருங்கிய குடும்பத்தினரை ஜனாதிபதி நியமிப்பதற்கான கட்டுப்பாடுகளும் இல்லை என்பதோடு, அத்தகைய தெரிவுகளைப் பாவிப்பதால், தற்போதைய அரசாங்கம் உறவினர்களுக்குச் சலுகை அளிக்கிறது என்ற விமர்சனத்தை எதிர்நோக்குகிறது.

36.
அவசரகாலச் சட்டத்தின் கீழான நீடிக் கப்பட்ட காலப்பகுதிகள், அரசியல் யாப்பு அனுமதித்த அவசரகால ஒழுங்குவிதிகளைப் பாவித்தல், ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தல், அது போன்று நீதித்துறை உள்ளிட்ட அரச நிறுவனங்களில் அரசியல் ஈடுபாடு அதிகரித்தல், அத்தோடு சுயாதீனமாகத் தட்டிக் கேட்பதை நலிவடையச் செய்தல்.

1989 இல் சிறியதொரு இடைவெளியைத் தவிர 1983 முதல் 2001 வரை மற்றும் மீண்டும் 2005 முதல் இன்று வரை அவசரகாலச் சட்ட ஆட்சி அமுலில் இருந்து வருகிறது. ஏனைய விடயங்களுள், தற்போது அமுலில் உள்ள அவசரகால ஒழுங்குவிதிகள் 1979 ஆண்டு பயங்கரவாதத் தடுப்பு சட்டத்துடன் சேர்ந்து, அரசாங்கத்துக்கு அசாதாரணமான அதிகாரங்களை வழங்குவதோடு, அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மற்றும் உரிமைகள் மீறல்கள் பற்றி ஆராய்வதற்கான நீதி மன்றங்களின் ஆளுமையைக் கட்டுப்படுத்துகின்றன.

ஏனைய சட்டங்களும், குறிப்பாக 1982ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க சட்டவிலக்கு உரிமைச் சட்டம் (1977 ஆகஸ்ட் முதல் 1988 டிசம்பர் 16 வரைக்கும் ஏற்புடைத்தான) பாரிய உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாங்கத்தின் கடமையை மிகுந்த அளவில் நலிவடையச் செய்துள்ளன. சட்டத்தை அமுல் செய்வதற்காக அல்லது வேறு விதமாக பொது மக்களின் அக்கறைக்காக நல்ல நோக்குடன் சட்டப்படி அல்லது சட்டவிரோதமாக எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும் எந்தவொரு அமைச்சர், இராணுவ அதிகாரி அல்லது அவர்கள் பணிப்பின் கீழ் செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுப்பதை இது தடை செய்கிறது. தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமையை முறைசார்ந்ததாக்குவதன் மூலம், சட்டவிலக்கு உரிமைச் சட்டம் பயங்கரமானதொரு முன்மாதிரியை வழங்குகிறது.

37.
அநேகமாக சூத்திரகாரர்கள் தண்டிக்கப்படாத காணாமற்போதல்கள், சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் மற்றும் சித்திரவதை உள்ளிட்ட மனித உரிமைகள் மீறல்கள், அத்தகைய துஷ்பிரயோகங்களுக்கு எதிரான முறைசார்ந்த சட்ட மற்றும் அரசியலமைப்பின் கீழான பாதுகாப்புக்கள் இருந்த போதிலும், நேருவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதற்கு இந்நடைமுறைகள் உதவியுள்ளன.

சட்டத்திலான பாதுகாப்பு இருந்த போதிலும் கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியலைப் பயன்படுத்தல் ஆகியவற்றை உள்ளிட்ட பாலியல் சார்ந்த வன்முறைகளும் நேர்ந்துள்ளன. வலுக்கட்டாயமான காணாமல்போதல்கள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய தொடர்ச்சியான அமைப்பினை ஆராய்வதற்கான பல ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், சில சந்தர்ப்பங்களில், உண்மையைக் கண்டறியும் முக்கிய தேவையை நிறைவு செய்துள்ளன.

ஆயினும், இவை எதுவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவது அல்லது மீறல்களின் முறைசார்ந்த சுபாவம் பற்றி நடவடிக்கை எடுக்க வழிவகுக்கவில்லை. இந்நோக்கில் பார்க்கும் போது, தண்டனையிலிருந்து விலக்கீட்டுரிமைக்கு எதிராகச் செயற்படுவதற்கு, உண்மையை நிலைநாட்டுவதற்கு அல்லது நீதியைப் பெற்றுக் கொள்வதற்கு விசாரணை ஆணைக்குழுக்கள் பயனுறு கருவியாக அமையவில்லை.

38.
அரசாங்க நிறுவனங்களைப் பலப்படுத்தி அவற்றின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகள் 2001 இல் 17ஆம் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு வழிகோலின. ஜனாதிபதியின் அதிகாரங்களை அரசியல் யாப்பினூடாக கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்ட அது பொலிஸ், தேர்தல்கள், மனித உரிமைகள், லஞ்சம், நிதி மற்றும் பகிரங்கச் சேவை ஆகியவற்றுக்கான ஆணைக்குழுக்களின் நியமனங்களை மேற்பார்வை செய்வதற்கான சுயாதீன அரசியல் யாப்புச் சபையை ஏற்படுத்தியது.

மேலும், ஏனையவற்றுக்குப் புறம்பாக, உயர் நீதித் துறை, நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் நியமனங்களை இச்சபை அனுமதிக்க வேண்டியிருந்தது. அண்மைக் கால ஜனாதிபதிகள் எவ்விதப் பாரிய விளைவுமின்றி அதனைப் புறக்கணிக்க முடியுமென்பதால் இத்திருத்தம் ஒப்பீட்டளவில் பயனற்றதாகியுள்ளது. 2010 செப்டெம்பரில் பாராளுமன்றம் 18ஆம் திருத்தத்தை நிறைவேற்றியது. அது 17ஆம் திருத்தத்தை பயனற்றதாக்கியதோடு, அதன் சுயாதீனக் கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கைகளை அகற்றி ஜனாதிபதியின் பதவிக்கால மட்டுப்படுத்தல்களை இல்லாமலாக்கியது.

39.
மூன்று தசாப்தங்கள் நடைபெற்ற யுத்தம் காரணமாக சகல பிரஜைகளின் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டு, சுயாதீன நிறுவனங்கள் தரமிழந்து சட்டத்தின் நல்லாட்சி நலிவடைந்தது. எல்ரிரிஈ இக்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்கு அரசாங்கம் தயாராகிய போது, மனித உரிமைகள் மேலும் பாதிப்படைந்ததோடு, பல நடவடிக்கைகள் காரணமாக சுயாதீன செய்தி அறிக்கை விடுத்தல், கருத்து வேறுபாடு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குக் கூட மேலும் பாரிய கட்டுப்பாடுகள் ஏற்பட்டன.

2006 ஆரம்பத்தில் இருந்து, இராணுவ நடவடிக்கைகள் பற்றி அறிக்கை விடுக்கும் ஊடகவியலாளர்களுக்கு மேலும் கட்டுப்படுத்தும் வழிகாட்டல்களை பாதுகாப்புச் செயலாளர் விடுத்ததோடு, நடவடிக்கைகளை எதிர்மாறாகச் சித்தரிப்பது ஒரு குற்றச் செயலாக ஆக்கப்பட்டது. பிரபல்யமான தாக்குதல்கள், காணாமல்போதல்கள் மற்றும் கொலைகைளை உள்ளிட்ட ஊடகங்கள் மீதான மேலதிக தாக்கங்கள், அதிக அளவிலான சுய தணிக்கைக்கு வழிவகுத்தது.

இனங்காணப்படாத மூலங்களில் இருந்து உள்நாட்டு ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு, அதன் விளைவாக சிலர் நாட்டை விட்டுச் சென்றனர். விசா மறுத்தல் அதிகரிப்பு மற்றும் இரத்துச் செய்தல் சர்வதேச பணியாட்டொகுதியினர் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை அச்சத்துக்குள்ளாக்கியதோடு, சில சந்தர்ப்பங்களில், அவர்கள் தம் நிலைமைகளை விட்டுக் கொடுக்க வேண்டியும் ஏற்பட்டிருக்கலாம்.

(16) யுத்தத்தின் இறுதிக் கட்டங்களை நோக்கி

40. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களாக மாறுவதற்கான காட்சியை தோற்றுவிப்பதில் குறைந்த பட்சம் மூன்று மேலதிக காரணிகள் முக்கியமானவையாகும்.

41.
முதலாவதாக, இலங்கை அரசாங்கமும் எல்ரிரிஈயும் நோர்வையை அனுசரணையாளர்களாக பணியாற்றுமாறு கேட்டுக் கொண்டபோது 2000 ஆம் ஆண்டில் குறுகிய காலப்பகுதியொன் றிலான சமாதானச் செயற்பாடு ஆரம்பித்தது. பெப்ரவரி 2002 இல் தரப்பினர் போர் நிறுத்த உடன்படிக்கையொன்றுக்கு இணங்கியதோடு, நேரடிப் பேச்சுக்களை ஆரம்பிக்கு முன்பதாக ஆண் பெண் பாகுபாடு பற்றிய உப குழுவொன்றை நிறுவுவதன் மூலம் எல்ரிரிஈ இன் பக்கத்தில் இருந்து மற்றும் தெற்கில் இருந்து பெண்கள் கலந்துரையாடுவதை உள்ளிட்ட நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன.

டோக்கியோ இணைத் தலைமைகள் ஊடாக (ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், நோர்வே மற்றும் ஐக்கிய அமெரிக்கக் குடியரசு) அரசியல் முன்னேற்றத்தைக் கண்காணித்த மீளிணக்கப்பாடு மற்றும் அபிவிருத்தி பற்றிய டோக்கியோ மாநாட்டின் அடிப்படையில் (2003) சர்வதேச சமூகம் இச்செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்கியது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தரப்பினரால் ஏற்படுத்தப்பட்ட சுயாதீன சர்வதேச அமைப்பான இலங்கைக் கண்காணிப்புத் தூதுக்குழு, அரசாங்கம் அதனைக் கலைத்து உத்தியோகபூர்வமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்த 2008 ஜனவரி வரை கள மீறல்களைக் கண்காணித்து வந்தது. ஏப்ரல் 2003 இல் எல்.ரி.ரி.ஈ.ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருந்தது.

அதன் பின்னர் போர் நடவடிக்கைகள் 2006 இல் மீண்டும் ஆரம்பித்ததைத் தொடர்ந்தும் போர் நிறுத்த ஒப்பந்தம் பெரும்பாலும் பெயரளவில் மாத்திரம் இருந்த போதிலும் அது தொடர்ந்தும் உத்தியோகபூர்வ ரீதியில் இருந்ததால் இலங்கை கண்காணிப்புத் தூதுக்குழுவின் நடைமுறையிலான சர்வதேச பிரசன்னத்தை அது உறுதி செய்தது.

42.
தொடர்ச்சியான இனவாதப் பிரிவு மற்றும் சகிப்புத் தன்மை இன்மை ஆகியவற்றை முன்னெடுத்துச் சென்ற இரு தரப்பினரிடையேயும் காணப்பட்ட தீவிரப் போக்கு நீண்ட காலமாக இருந்து வந்த மோதலைத் தீர்ப்பதற்கான முன்னைய சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் பட்டியலில் இவ்வாறாக இந்த சமாதானச் செயற்பாட்டையும் விரைவில் சேர்த்து விட்டது.

கடுந்தீவிரப்போக்குடைய சிங்களத் தேசியவாதிகள் ஆரம்பத்திலிருந்தே போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதை எதிர்த்தனர்“ மேலும், ஏப்பிரல் 2003 இல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய எல்.ரி.ரி.ஈ. எடுத்த முடிவும் வடகிழக்கில் இடைக்கால சுயாட்சி அதிகார சபை ஒன்றை அமைப்பதற்கான அதன் ஒரு தலைப்பட்சமான பிரேரணையும் சிங்கள தேசியவாத எதிர்ப்பினை மேலும் உக்கிரமடையச் செய்து, அரசியல் கட்சிகளின் ஆழமான தேசிய கூட்டணியை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை திடீரெனத் தோற்றுவித்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தற்போதைய ஜனாதிபதியின் தலைமையின் கீழ் 2005 இல் நடைபெற்ற தேர்தல்களில் சுமாரான வெற்றியை ஈட்டியதோடு, இறுதி யுத்தத்தை மேற்கொள்வதற்கான அரசியல் ஆதரவையும் அது வழங்கியது.

(17)

43.
இரண்டாவதாக, மார்ச் 2004 இல் பொதுவாக கேணல் கருணா என்றழைக்கப்படும் எல்ரிரிஈ இன் கிழக்குத் தளபதி, விநாயகமூர்த்தி முரளீதரன், சுமார் 5,000 போராளிகளைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு எல்.ரி.ரி.ஈ. இல் இருந்து பிரிந்து சென்றார். பின்னர் அவர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியொன்றான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரிஎம்விபி) அமைப்பினை அமைத்து, அது துணை இராணுவப் பிரிவொன்றைப் பேணும் அதே வேளையில், பதவியில் இருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினராகச் சேர்ந்தார்.

இப்பிளவு எல்.ரி.ரி.ஈ. இக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. எல்ரிரிஈ இன் தலைமைத்துவத்தில் கருணாவிற்கு இருந்த இடத்தைக் கவனிக்குமிடத்து, மிகவும் இரகசியமான இவ்வமைப்புப் பற்றிய ஆழ்ந்த அறிவு அவருக்கு இருந்ததோடு, இறுதி யுத்தத்திற்குத் தயாராகும் போது அரசாங்கம் அதனைப் பயனுறு விதத்தில் பாவித்துக் கொண்டது.

மேலும், எல்.ரி.ரி.ஈ.பற்றி அதிருப்தி கொண்டிருந்த ரி.எம்.வி.பி.யி.ன் துணை இராணுவப் படைகள், அத்துடன் முன்னாள் தமிழ் போராளிக் குழுக்களின் உறுப்பினர்களை எல்ரிரிஈ க்கு எதிரான இராணுவ நடவடிக்கையிலும் தமிழ் பொதுமக்களுக்கு இடையே உளவு பார்க்கும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபடுத்தியது.

44.
மூன்றாவதாக, சர்வதேச காரணிகளும் முக்கியமானவையாக இருந்தன. பயங்கரவாத அமைப்புக்களுக்கு மற்றும் அவர்களின் சர்வதேச வலைப்பின்னல்களுக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் நாடுகளுடன், "பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய யுத்தம்' என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய அமெரிக்கக் குடியரசு மற்றும் ஏனைய மேற்கத்திய அரசாங்கங்கள் ஒத்துழைப்பதற்காக எடுத்த முயற்சி எல்.ரி.ரி.ஈ. இக்குப் பாரிய விளைவுகளைக் கொண்டிருந்தது.

ஏற்கனவே பல நாடுகளால் பயங்கரவாத அமைப்பு என பட்டியலிடப்பட்ட எல்.ரி.ரி.ஈ. உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் மேலும் தனிமையாக்கப்பட்டு வந்தது. தமிழரான இலங்கையின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் 2005 இல் படுகொலை செய்ததானது இவ்வமைப்பின் சர்வதேச பின்புலத்துக்கு இறுதி அடியாக இருந்திருக்கலாம். இச்சூழலில் எல்ரிரிஈ க்கு எதிரான அதன் இறுதித் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் ஏனைய நாடுகளுடன் பங்காளர் உறவுகளை கட்டியெழுப்ப முயற்சிகளை மேற்கொண்டது.

45.
2005 ஆம் ஆண்டில் நடந்தேறிய தேர்தல்களின் பின்னர், போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளைத் தாம் மதிக்கப் போவதாக அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. இனரும் உறுதியளித்த போதிலும், 2006 ஆகஸ்டில் மீண்டும் பாரிய அளவிலான ஆயுதந்தாங்கிய போராட்டம் ஆரம்பிக்கும் வரை இரு தரப்பினரும் தமது இராணுவச் சீண்டல்களைத் தொடர்ந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் இருந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை வழங்கும் மாவில் ஆறு நீர்த்தேக்கத்தின் அணைக் கதவுகளை எல்ரிரிஈ மூடியதும், எல்.ரி.ரி.ஈ. இன் பிடியில் இருந்து கிழக்கு மாகாணத்தை மீட்பதற்காக ஆயிரக்கணக்கான படைவீரர்களை தாக்குதல் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுத்தியது. கருணாப் பிரிவினரின் உதவியுடன், சுமார் இரு தசாப்தங்களின் பின்னர் முதற்தடவையாக 2007 ஜூலை மாதத்தில் அரசாங்கம் முழுமையாக கிழக்கு மாகாணத்தைத் தன் வசப்படுத்தியது.

(18)

46.
கிழக்கு மாகாணத்தில் மற்றும் 2008 ஜனவரியில் வட மாகாணத்தின் சில பகுதிகளில் அரசாங்கப் படையினர் அடைந்த இராணுவ வெற்றி காரணமாக எல்.ரி.ரி.ஈ. வன்னிப் பிரதேசத்தில் மாத்திரம் பாரிய இடப்பரப்பை தன் ஆதிக்கத்தில் வைத்திருக்க முடிந்தது.

குறிப்பாக வன்னிப் பிரதேசத்தின் நான்கு மாவட்டங்களுள், தமது நடைமுறைத் தலைநகரான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்கள்“ எல்.ரி.ரி.ஈ. இன் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. வவுனியாவின் வட பகுதி, வடமேற்கு மன்னார் மற்றும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சிறிய சில நிலப்பரப்புக்களையும் அது தன் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது.

47.
கிழக்கில் கிடைத்த இராணுவ வெற்றியினால் உற்சாகமடைந்த அரசாங்கம், கிட்டத்தட்ட இரு வருடங்களாக மேற்கொண்ட போர்த் தந்திரத் தயாரிப்புக்களின் பின்னர் 2008 ஜனவரி 16ஆம் திகதி முழு அளவிலானதொரு இராணுவ நடவடிக்கையை அறிவித்தது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், டோக்கியோ இணைத் தலைமைகள் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்கான மற்றும் இராணுவத் தீர்வொன்றைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்த போதிலும், அதன் இடப்பரப்பில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் உரிமையையும் ஏற்றுக் கொண்டன.

2008 பெப்ரவரி நடுப்பகுதியளவில், நாடு பூராவும் தற்கொலைத் தாக்குதல்களை எல்ரிரிஈ தீவிரப்படுத்திய போது யுத்தப் பிரதேசத்துக்கு வெளியேயுள்ள பொதுமக்கள் மீதான யுத்தத்தின் தாக்கம் அச்சுறுத்தும் நிலையை அடைந்தது. அரசாங்கத்தின் வான் குண்டுத் தாக்குதல்களும் ஆழ ஊடுருவித் தாக்கும் நடவடிக்கைகளும் யுத்தப் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களை மேலும் தாக்கமுறச் செய்தன. 2008 செட்டெம்பரில் கிளிநொச்சியை நோக்கிய அதன் இறுதி இராணுவத் தாக்குதலை அரசாங்கம் மேற்கொண்டது. ஐஐஐ. குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை

48.
அதன் ஆணைப் பிரகாரம், செயலாளர் நாயகத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக "குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையைக் கவனத்துக்கெடுத்து' யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது (செப்டெம்பர் 2008 மே 2009) மற்றும் அதனை உடனடுத்து நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் சட்ட மீறல்கள் பற்றி இப்போது குழு கவனம் செலுத்துகிறது.

குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லையே குழு பொறுப்புக்கூறல் பற்றி வழங்கும் ஆலோசனையின் இயல்பை நிர்ணயிக்கிறது. அத்தியாயம் ஐஏ இல், இம்மீறல்கள், நிரூபிக்கப்படின், சர்வதேச சட்டத்தை மீறியதாக அமையுமா என்பதை நிர்ணயிப்பதற்காக இக்குற்றச்சாட்டுக்களை சட்டக் கண்ணோட்டத்தில் குழு சீர்தூக்கிப் பார்க்கிறது.

(19)

அ. குற்றச்சாட்டுக்களைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான முறைமை

49. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக விடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை கவனமாக ஆராய்ந்து அவற்றின் உண்மையை எடைபோடுவதின் அடிப்படையில் குழுவின் மதிப்பீடு அமைந்துள்ளது. எழுத்து மூலமான தகவல்கள் மற்றும் பல்வேறு நபர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள் ஆகியவற்றை குழுவின் பரிசீலனை உள்ளடக்கியது.

அறிக்கைகள், ஆவணங்கள் மற்றும் பல்வேறு முகவர்கள், திணைக்களங்கள், நிதியங்கள், அலுவலகங்கள் மற்றும் ஐ.நா. வேலைத் திட்டங்கள், ஏனைய அரசாங்கத்துக்கிடையிலான அமைப்புக்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அத்துடன் இலங்கை பற்றிய நிபுணர்களை உள்ளிட்ட தனி நபர்களினால் எழுதப்பட்ட ஏனைய விவரணங்கள் ஆகியவற்றை எழுத்து மூலமான மூலங்கள் கொண்டிருந்தன.

இலங்கைப் படையினருக்கு இந்திய கடற்படை உதவியது: ஐநா நிபுணர் குழு அறிக்கை பாகம் - 04.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பற்றிய செய்மதி உருவங்கள், நிழற்படங்கள் மற்றும் வீடியோப் படங்களை அது உள்ளடக்கியது. ஐக்கிய நாடுகள் இணையத்தளத்தின் மூலம் விடுக்கப்பட்ட அதன் நடவடிக்கைகள் பற்றிய அறிவித்தலுக்குப் பதிலளிக்கு முகமாக கிடைக்கப்பட்ட சமர்ப்பணங்களையும் அது உள்ளடக்கியது. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக சரி பிழை பார்க்க முடியவில்லை என்ற போதிலும், சில சமயங்களில் அவை ஏனைய மூலகங்கைளை உறுதிப்படுத்த உதவின.

உதாரணமாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது குறிப்பான வேறு பகிரங்க அறிவித்தல்கள் பற்றிய சம்பந்தப்பட்ட ஊடக மூலங்கள் இவ்வத்தியாயத்தில் மேற்கோள் காட்டப்பட்ட போதிலும், குழு சேகரித்த தகவலை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரம் அவை உதவுகின்றன.

வன்னியில் நடந்தேறிய விடயங்கள் பற்றிய பல அரச சார்பற்ற அமைப்புக்களின் அறிக்கைகள் இருக்கின்றன.

இவ்வறிக்கைகள் சிலவற்றை இக்குழு மீளாய்வு செய்த போதிலும், இக்குற்றச்சாட்டுக்களைத் தொகுப்பதற்காக அது அவற்றில் தங்கியிருக்கவில்லை என்பதோடு, குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றிய மதிப்பீட்டினை குழு தானாகவே மேற்கொண்டது.

50.
சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இலங்கையில் அல்லது வன்னியில் இருந்த சில சர்வதேச அமைப்புக்களின் அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள், தூதுவர்கள், கல்விமான்கள் மற்றும் ஏனைய தனிநபர்களை உள்ளிட்ட ஆயுதந்தாங்கிய மோதல் பற்றிய நிபுணத்துவம் அல்லது அனுபவம் கொண்ட பலருடன் குழு கலந்துரையாடியது.
51.
குழுவின் ஆணை உண்மையைக் கண்டறிவதை அல்லது புலனாய்வினை உள்ளடக்காத அதே வேளையில் பகிரங்க செயற்களத்தில் கிடைக்கக்கூடிய குற்றச் சாட்டுக்கள் மேலதிக புலனாய்வினை போதிய அளவில் தேவைப்படுத்துகின் றனவா என்பதை மதிப்பீடு செய்வது அவசியம் என குழு நம்புகிறது. அவை காரணமாக எழும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் சிக்கல்களை நெறிப்படுத்த இக்குற்றச்சாட்டுக்களின் சுபாவம் மற்றும் நோக்கெல்லை பற்றி நிர்ணயிப்பது குழுவுக்கு வழிவகுக்கும்.

சம்பந்தப்பட்ட செயல் அல்லது சம்பவம் நேர்ந்தது என்பதை நம்புவதற்கான நியாயமான அடிப்படை இருந்தால் ஒரு குற்றச்சாட்டு நம்பகமானது என்பதாக குழு நிர்ணயிக்கும். குழு பிரயோகிக்கும் இத்தரக் கட்டளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஒன்றுக்கு அல்லது வேறு பாத்திரங்களுக்கு பதிலளிப்பதற்கான பொறுப்பை ஏற்படுத்துகிறது.

(20)

52.
குற்றச்சாட்டொன்று நம்பகமானதா என்பதை நிர்ணயிப்பதற்காக, தன் வசள்ள தகவலை ழுமையாக, அதன் ஏற்புடைய தன்மை, எடை மற்றும் ஒவ்வொரு லங்களினதும் நம்பத்தகு நிலை அத்துடன் ழுமையாக தகவலுடனான அதன் தொடர்பு ஆகியவற்றைக் குழு கவனத்துக்கு எடுத்துக் கொள்கிறது. ஏற்புடைத்தானது மற்றும் நம்பகரமானது என குழு தீர்மானிக்கும் அடிப்படை லங்களைக் கொண்டிருந்தால் மாத்திரமே குற்றச்சாட்டொன்று நம்பகரமானது என எடுத்துக் கொள்ளப்படுறது. இந்த அடிப்படை லங்களை, நேரடி மற்றும் மறைவான, ஏனைய தகவல்களின் லங்கள் உறுதிப்படுத்துகின்றன. கீழே தரப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் நம்பரகமான மற்றும் ரண்பாடற்ற தகவல் லங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. உண்மையிலேயே, அநேகமான குற்றச்சாட்டுக்கள் சான்றின் உயர் தரத்தினை நிறைவு செய்வதாகத் தென்படுகின்றன.

53.
நம்பகமானவை என அது காணும் இக்குற்றச்சாட்டுக்களை, கூடிய அளவிலான அவற்றின் சூழ்நிலைப் பொருத்தம் மற்றும் சகல அம்சங்களையும் வழங்குவதற்காக சட்ட வகுதிகளின் கீழ் அவற்றை வசைப்படுத்தாமல் சொற்றொடர் விளக்கமாக சமர்ப்பிப்பதை குழு தெவு செய்துள்ளது.
இவ்விளக்கத்தை நிரூபிக்கப்பட்ட உண்மை எனக் கொள்ளலாகாது என்பதோடு, குறிப்பான பொறுப்புக்களை நிர்ணயிப்பதற்கான ஏதும் யற்சி மேலும் உயர்நிலையிலான ஒரு அமைப்பைத் தேவைப்படுத்தும்.

ஆ. இராணுவ உத்திகள் மற்றும் நடவடி க்கைகளின் பின்னணி 54. இவ்வத்தியாயத்தின் இ முதல் ஊ பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ள நம்பகமான குற்றச்சாட்டுக்களை புரிந்து கொள்வதற்கான அவற்றின் சூழ்நிலைப் பொருத்தத்தைப் பெறுவதற்காக, யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போதான அரசாங்கத்தின் மற்றும் எல்.ரி.ரி.ஈ இன் அரசியல் மற்றும் இராணுவ உத்திகள் அத்துடன் கொள்ளளவுகளை குழு ஆராய்ந்தது.

பொதுவான உத்தியின் பகுப்பாய்வுக்காக, பகிரங்கமாகக் கிடைக்கக்கூடிய அரசியல் மற்றும் இராணுவ பகுப்பாய்வுகள், இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் மற்றும் ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் இராணுவ அலுவல்களுக்கான சர்வதேச இராணுவ நிபுணர்கள் போன்ற பல்வேறு மூலங்களில் குழு சார்ந்திருந்தது.

குறிப்பான குற்றச்சாட்டுக்களை குழு ஆராயும் போது, அடிப்படை மூலங்களை அடிப்படையாகக் கொண்டு அதனை அது மேற்கொண்டது.

1. இலங்கை அரசாங்கம் 55. தோல்வியில் முடிவடைந்த சமாதானச் செயற்பாட்டைத் தொடர்ந்து 2006 இல் எல்...ஈ இனைத் தோற்கடிப்பதற் காக பல னை கொண்ட ழுமையான தொரு உபாயத்தை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டது. இராஜதந்திர மற்றும் அரசியல் அம்சங்கள், யுத்த வலயம் பற்றிய தகவல் மற்றும் அதற்கான பிரவேசத்தை மட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அத்துடன் மிகவும் கண்டிப்பான இராணுவ அம்சங்களை இவ்வுபாயம் உள்ளடக்கியது.

21
56.
இராஜதந்திர ரீதியில், “பயங்கர வாதம் மீதான யுத்தத்தின்' சூழ்நிலைப் பொருத்தத்தில், பல நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக சாதகமான உலகளாவிய சூழலை அரசு பயன்படுத்திய தோடு, ராஜீவ் காந்தியை எல்.ரி.ரி.ஈ படுகொலை செய்த காரணத்தினால், இப்பிராந்தியத்தில் இந்திய அரசாங்கத்தின் கூடிய ஒத்துழைப்பையும் அது பெற்றுக் கொண்டது. ஒரு முக்கிய உதாரணமாக, எல்.ரி.ரி.ஈ கடல் மூலம் அதன் விநியோகத்தைப் பேணுவதற்காக வைத்திருந்த மிதக்கும் களஞ்சியங்களை இடைமறிப்பதில் இலங்கைப் படையினருக்கு இந்திய கடற்படை நேரடியாக உதவியது.

57.
உள்நாட்டு ரீதியில், ஒன்றுபட்ட அரசியல் மற்றும் இராணுவத் தலைமைத்துவத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தியது. ஜனாதிபதி தன்னையே பாதுகாப்பு அமைச்சராக நியமித்து, தனது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவை பாதுகாப்புச் செயலாளராக நியமித்தார். பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதியாக நியமித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகிய இருவருக்கும் எல்.ரி.ரி.ஈக்கு எதிரான பரவலான யுத்த அனுபவம் இருந்ததோடு, 2006 இல் இருவரும் எல்.ரி.ரி.ஈ இன் படுகொலை முயற்சிகளில் இருந்து தப்பிக் கொண்டவர்களாவர்.

தொடர்ந்து இராணுவ வரவு செலவுத் திட்டத்தில் பாரிய அதிகரிப்புக்கான பாராளுமன்ற அனுமதியை ஜனாதிபதி பெற்றுக் கொண்டார். 2008 இல் 1.8 பில்லியன் அமெக்க டொலர்களாக அது அதிகரித்ததோடு, தேசிய வரவு செலவுத் திட்டத்தின் சுமார் 20 சதவீதத்தை அது பிரதிநிதித்துவப் படுத்தியது.

58.
இராணுவத்தைப் பொறுத்த வரையில், லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா இலங்கை இராணுவத்தை நன்றாக உற்சாகப்படுத்தி அதற்கு ஆற்றலை வழங்கினார். ஆயுதப் படையினன் எண்ணிக்கை 300,000 என மும்மடங்காக அதிகரிக்கப்பட்டு கிரமமான சுழற்சி மூலம் யுத்தமுனைக்கு புதிய படையினர் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டனர்.

புதிய உபகரணங்கள் மற்றும் ஆயுதங்களை இராணுவம் கொள்வனவு செய்ததோடு, பல்குழல் ஏவுகணை செலுத்திகள், மோட்டார் மற்றும் ஹோவிட்சர்கள், எம்ஐஜி 29 உலங்கு வானூர்திகள், கீபிர் விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர் துப்பாக்கி தாங்கிய விமானங்கள் ஆகியவற்றைக் கொண்டு அதன் போர்க்கருவிகளை அது பலப்படுத்தியது. இலங்கை விமானப்படை ஆளற்ற பறக்கும் கலன்களை ஏவுபார்ப்பதற்காக, இலக்குகளைக் கண்டு பிடிப்பதற்காக மற்றும் அதனைத் தொடரும் யுத்த சேதத்தை மதிப்பீடு செய்வதற்காகப் பெற்று சேவையில் ஈடுபடுத்தியது.

59.
சளைக்காத தாக்குதலை பல முனைகளில் மேற்கொள்வதற்காக, இலங்கை இராணுவம் அதன் சிறந்த ஆயுதங்கள் மற்றும் படையினர் எண்ணிக்கை அத்துடன் ஆகாயத்தில் அதன் ஆதிக்கம் ஆகியவற்றில் தங்கியிருந்ததோடு, அவற்றினை எல்.ரி.ரி.ஈ இனால் சமாளிக்க முடியவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கான சகல முயற்சிகளும் நிராகரிக்கப்பட்ட தோடு, யுத்த நிறுத்தமொன்றை மீண்டும் அணி திரள்வதற்காக எல்.ரி.ரி.ஈ பாவிக்கும் என்று அரசாங்கம் வாதிட்டதால், யுத்த நிறுத்தம் எதுவும் வழங்கப்படவில்லை.

60.
வளைந்து கொடுக்கக் கூடிய, உளவுத் தகவலினால் உந்தப்பட்ட மற்றும் கெரில்லா செயல்முறை போன்றவற்றை காலாட்படையை முன்னடத்திச் சென்று எதிரிக்கு ஆகக் கூடிய சேதத்தை விளைவிப்பதற்காக இலங்கை இராணுவம் பிரயோகித்தது.

இதற்காக, கொமாண்டோ நுட்பங்களில் தேர்ச்சி பெற்ற தன்னிறைவுள்ள சிறப்புக் காலாட்படை நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதை உள்ளிட்டவாறு, இராணுவத் தளபதி தனது படையினரை மறுசீரமைத்து அவர்களுக்கு மீள் பயிற்சி அளித்தார்.

எல்.ரி.ரி.ஈ தளபதி மாத்தயாவுடன் முன்பு சம்பந்தப்பட்டிருந்த தமிழ் போராளிகளை உள்ளடக்கிய ஆழ ஊடுருவும் அலகுகளை எதிரிகளின் அணிகளுக்குப் பின்னால் சடுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் வேவு பார்ப்பதற்காகவும் இலங்கை இராணுவம் பிரயோகித்தது.

முன்னேறிச் செல்லும் போது இராணுவத்தினரிடையே காயமேற்படுவதைக் குறைப்பதற்காக களத்தை எளிதாக்குவதற்கும் எல்.ரி.ரி.ஈ இன் பாதுகாப்பு அரண்களை ஊடுருவுவதற்காக கனரக பீரங்கிகள் பாவிப்பதற்கானதுமான சில இலங்கை இராணுவ நடவடிக்கைகளும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

மனிதாபிமான நடவடிக்கையொன்றின் மூலம் அப்பிரதேசத்தில் இருந்து பொதுமக்களை விடுவிப்பதற்காக மற்றும் அச்செயற்பாட்டின் போது பூஜ்ய பொதுமக்கள் பாதிப்புக்கான அதன் முயற்சிகள் பற்றி அரசாங்கம் கூறி வந்த அதே வேளையில், முன்னேறிச் செல்லும் போது பீரங்கிகளைப் பிரயோகிப்பது பற்றி தீர்மானம் எடுப்பதற்கான கணிசமான தன்விருப்புரிமை களத்திலுள்ள படையினருக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

61.
செல்வெடிகளைச் செலுத்து முன், இலக்குகளை இனங்காண்பதற்காக ஆளற்ற பறக்கும் கலன்கள் அதிகமாகப் பாவிக்கப்பட்டன. அவற்றிலிருந்து தொடர்ச்சியாக படங்கள் புவிச் செயற்பாட் டுத் தளங்களுக்கு அனுப்பப்பட்டதோடு, தாமதமின்றி தீர்மானம் எடுப்பதற்காக அத்தகவலை தளபதிகள் பிரயோகிக்கக் கூடியதாகவிருந்தது.

62.
கொழும்பிலுள்ள இணை நடவடிக்கைகள் தலைமையகத்தில் இருந்து யுத்த முன்னெடுப்புக்கு லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமை தாங்கியதோடு நடவடிக்கையை நடத்திச் செல்வதற்காக அனுபவமிக்க தளபதிகளை அவர் தேர்ந்தெடுத்தார்.

வன்னி பாதுகாப்புப் படையினருக்கு வன்னியில் தலைமையகம் அமைத்து மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தலைமை தாங்கினார். மேலும், யாழ்ப்பாண தீபகத்திலிருந்து தெற்கு நோக்கி ன்னேறிச் சென்ற (மேஜர் ஜெனரல் கர்மல் குணரத்ன தலைமையிலான) 53ஆவது பிரிவு மற்றும் (பிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான) 55ஆவது பிரிவு, (மேஜர் ஜெனரல் எச்.சி.பி.குணதிலக்க தலைமையிலான) 56ஆவது பிரிவு, (மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையிலான) 57ஆவது பிரிவு, (பிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான) 58 ஆவது பிரிவு மற்றும் (மேஜர் ஜெனரல் நந்தன உடபத்த தலைமையிலான) 59 ஆவது பிரிவு ஆகியவற்றை உள்ளிட்ட 6 முக்கிய படைப்பிரிவுகள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது செயலாற்றின. அவை அனைத்தும் தெற்கில் இருந்து தென்மேற்குத் திசையில் முன்னேறின.

சிறப்புப் படைகள் மற்றும் கொமாண்டோக்களும் முக்கியமானதொரு பங்கினை வகித்தன. வலுவான தலைமைத்துவம், புதிய பயிற்சி மற்றும் காயம் சாதிப்பதற்கான உறுதிப்பாடு பல வெற்றிகளுக்கு வழிவகுத்து, கைவிட்டுச் செல்பவர்களின் வீதத்தைக் குறைத்து இலங்கை இராணுத்தினரிடையே மனத் தைரியத்தை மேம்படுத்தின.

63.
அதன் கிரமமான இராணுவ நடவடிக்கைகளுக்குப் புறம்பாக, எல்...ஈ. இன் பாதுகாப்பான மறைவிடங்களைக் கண்டுபிடிப்பதற்காக, தெற்கில் உள்ள எல்...ஈ. இன் வலைப்பின்னல்களை சிதைப்பதற்காக மற்றும் எல்...ஈ. உடன் சம்பந்தப்பட்ட வர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களை அகற்றுவதற்காக அரசாங்கம் இரகசியமான நடவடிக்கைகளைப் பிரயோகித்தது.

இந்நடவடிக்கைகளின் ஆற்றல் மிக்கதொரு சின்னமாக “வெள்ளை வான்' இருந்தது.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அல்லது எல்.ரி.ரி.ஈ. உடன் தொடர்பு உள்ளவர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை கடத்துவதற்காக மற்றும் அநேகமாக மாயமாகச் செய்வதற்காக மற்றும் பொதுவாக மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்துவதற்காக வெள்ளை வான்கள் பாவிக்கப்பட்டன.

இந்த வெள்ளை வான் நடவடிக்கைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் விசேட அலகொன்று நடத்தியதாகச் சம்பந்தப்படுத்தப்பட்டது. அவ்வாறாகக் கடத்தப் பட்டவர்கள் இரகசிய இடங்களுக்கு ஏற்றிச் செல்லப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு மற்றும் பல்வேறு விதமாகச் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பலர் கொலை செய்யப்பட்டு அவர்களின் சடலங்கள் இரகசியமாக அப்புறப்படுத்தப் பட்டன.

“புலிகளின் ஆதரவாளர்கள்' எனக் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமைகள் ஈடுபாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை ஆசியர்கள் ஆகியோரும் இவ்வலைக்குள் சிக்கினர். 2006 முதல் யுத்தம் முடிவடைந்ததற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் 66 மனிதாபிமான ஊழியர்கள் காணாமல் போனார்கள் அல்லது கொலை செய்யப்பட்டர்கள்.

64.
இந்த உபாயம் ஊடகம் மற்றும் தகவலின் ஓட்டம் மீது மேலும் கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்து, ஊடக இருட்டடிப்பைத் திணித்து யுத்த முன்னெடுப்புக்களை விமர்சிக்கும் கருத்துக்களை நசுக்குவதையும் கொண்டிருந்தது.

2006 முதல் சுயாதீன ஊடகவியலாளர்கள் எல்.ரி.ரி.ஈ. இன் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டதோடு, சில ஊடகவியலாளர்களை “புலிகளின் ஆதரவாளர்கள்' என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் குறிப்பிட்டது.

யுத்தம் பற்றி அறிக்கை விடுவது தொடர்பாக 2008 இல் மேலும் விவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. இச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியாத ஊடகவியலாளர்கள் அல்லது வேறு விதத்தில் அரசாங்கத்தை விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள் அல்லது கடுமையான அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

யூன் 2008 இல் பாதுகாப்புச் செயலாளர் அசோசியேடட் நியூஸ் பேப்பர்ஸ் ஒவ் சிலோன் லிமிடட் இனைச் சார்ந்த பிரபலமான இரு ஊடகவியலாளர்களை நேரடியாக அச்சுறுத்தினார். பின்னர் அவர்களுள் ஒருவரான போத்தல ஜயந்த என்பவர் யூன் 2009 இல் வெள்ளை வானில் ஏற்றிச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டார்.

2009 ஜனவரி 8 ஆம் திகதி, பிரபல பத்திகை ஆசிரியர், லசந்த விக்கிரமதுங்க கொழும்பில் வைத்து இனங்காணப்படாதவர்களால் கொலை செய்யப்பட்டார். பாதுகாப்புச் செயலாளர் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவக் கொள்வனவுகளின் ஊழலை வழக்கொன்றின் மூலம் பகிரங்கப் படுத்துவதற்காக அவர் தகவலைச் சேகத்திருந்தார்.

அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சுயாதீன மகாராஜா தொலைக்காட்சி ஒளிபரப்புப் பின்னலை ஆயுததாரிகள் தாக்கி பாதுகாப்பு ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி அங்குள்ள உபகரணங்களை நொறுக்கினர். இச்சம்பவங்கள் எதுவும் புலனாய்வு செய்யப்படவில்லை.

2006 மற்றும் 2009 ஆரம்பத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறைந்த பட்சம் 10 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இத்தணிக்கை நடவடிக்கைகளின் திரண்ட விளைவாக மற்றும் கொலை செய்யப்படுவோமோ அல்லது தாக்கப்படுவோமோ என்ற அச்சம் ஊடகத்தின் சுயாதீன மேற்பார்வைப் பங்களிப்பில் தீங்கானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது.

“என்னிடம் இரு குழுக்கள் மாத்திரமே உள்ளன அவை பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடும் மக்களும் பயங்கரவாதிகளுமே' என பாதுகாப்புச் செயலாளர் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தது..

65.
எல்.ரி.ரி.ஈ. இனை அதிகளவில் பொறுத்துக் கொள்வது மற்றும் “பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழங்குதல்' தொடர்பாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தைச் தொடர்ச்சியாகப் பகிரங்கமான முறையில் விமர்சித்தும் வந்துள்ளது.

இவ்வுத்தியின் ஓர் அங்கமாக அதனை படிப்படியாக யுத்த வலயத்தில் இருந்து அகற்றி யுத்தத்தை நிறுத்து வதற்கான அல்லது யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இராஜதந்திர முயற்சிகள் மறுக்கப்பட்டன அல்லது உதாசீனம் செய்யப்பட்டன.

எல்.ரி.ரி.ஈ.

66.
2008 செப்டெம்பர் அளவில், அதன் கடந்த கால பலத்துடன் ஒப்பீட்டளவில் எல்.ரி.ரி.ஈ. இன் இராணுவத் திறன்கள் கடுமையாகக் குறைந்திருந்தன. அதன் சரி யான பலம் அத்தருணத்தில் தெரியாதிருந்த போதிலும், உச்சக்கட்டத்தில் அதன் பலம் 20,000 ஆட்களை விஞ்சவில்லை எனலாம். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அதன் முக்கிய போராளிகள் எண்ணிக்கை இப்பலத்தின் ஒரு சிறிய அளவாக, 5,000 வரை இருந்திருக்கலாம்.

தெற்கில், கொழும்பில் மற்றும் ஏனைய இடங்களில் அதன் வலைப்பின்னல்கள் மற்றும் செயற்படாமல் காத்திருந்த அதன் கூறுகள் நலி வுற்று அரசாங்கத்தின் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, தற் கொலை நடவடிக்கைகளை மேற்கொள் வதற் கான திறனை அதிக அளவில் இழந்து காணப்பட்டன.

'ஈழம்' தேசம் என இடப்பரப்பைப் பிடித்து வைத்திருப்பதற்கான எல்.ரி.ரி.ஈ.இன் முயற்சி, கெரில்லா அணுகுறையில் இருந்து விலகி முன் அணிகள் மற்றும் நிரந்தர இடங்களில் யுத்தம் புரிவதற்கான பாரம்பரிய யுத்தமொன்றை மேற்கொள்வதற்கான மாற்றத்தைத் தேவைப்படுத்தியது. யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது, அதன் முயற்சிகள் அநேகமாக தற்காப்பு நடவடிக்கைகளாக இருந்ததோடு, கடந்த காலத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்ப ட்ட அதன் சடுதியான எதிர்த்தாக்குதல்கள் இடம்பெறவில்லை.

இதன் விளைவாக, தொடர்ந்து சுருங்கி வரும் பிரதேசத்தினுள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்ட எல்.ரி.ரி.ஈ. மண் அணைகள், அரண்கள், கண்ணிவெடிகள் மற்றும் அகழிகள், மறைந்திருந்து தாக்குதல், கண்ணி வெடிப் பொறிகள் மற்றும் வெடிக்கும் சாதனங்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் இருந்து கொண்டு தற்காப்பு முயற்சியில் ஈடுபட்டது.

67.
சுமார் 32 நாடுகளில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்ற நிலை அதன் சர்வதேச நடவடிக்கைகளை மற்றும் ஆதரவை மட்டுப்படுத்தியது. இலங்கை இராணுவத்துடன் ஒப்பீட்டளவில் எல்.ரி.ரி.ஈ. மிகக் குறைந்த அளவாக இருந்ததோடு, பெரும்பாலான அதன் அணியினர் அனுபவமற்றவர்களாக இருந்த போதிலும், அதன் அடிப்படைக் கட்டமைப்பு அதன் கீழ் செயற்படும் இராணுவ மற்றும் அரசியல் பிவு ஆகியவற்றுடன் சீர்குலையாமல் இருந்தது.

அவை இரண்டுக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிநடாத்திய மத்திய ஆளுமைக் குழுவொன்று தலைமை தாங்கியது. இக்குழு (சூசையின் கீழான) கடல் புலிகள், (பிரபாகரனின் மகன் சார்ள்ஸ் அன்ரனி மற்றும் ரத்னம் மாஸ்டர் தலைமையிலான) வான் புலிகள், சார்ள்ஸ் அன்ரனி பிகேட் என்ற சிறந்ததொரு யுத்தம் புரியும் அலகு, கரும் புலிகள், பொட்டு அம்மான் தலைமையிலான உளவுப் பிரிவு மற்றும் நடேசன் தலைமை தாங்கிய அரசியல் அலுவலகம் ஆகியவற்றை மேற்பார்வை செய்தது. அநேகமாக இத்தலைவர்கள் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் கொல்லப்பட்டார்கள்.

68.
அதன் அணிகளைத் தக்க வைப்ப தற்காக எல்.ரி.ரி.ஈ. முக்கியமாக வலுக்கட் டாயமாக ஆட்சேர்ப்பதில் தங்கியிருந்தது.
ஆரம்பத்தில் அதன் படைக்கு ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பிள்ளையை எடுத்த எல்.ரி.ரி.ஈ., யுத்தம் மும்ரமடைந்ததும் கொடூரமாகச் செயற்பட நிர்ப்பந்திக் கப்பட்டு, 14 வயதுடைய இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தில் இருந்து பல பிள்ளைகளை அணிசேர்த்தது. அவர்களது யுத்த நடவடிக்கைகளுக்கு வேறு விதமாக பொதுமக்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, அவர்கள் மேலதிக இடர்களுக்கு உட்படும் வண்ணம் உதாரணமாக அவர்களை அகழிகள் தோண்டுவதற்கு, அரண் அமைப்பதற்கு ஈடுபடுத்தியது.

69.
குறிப்பாக அதன் மிதக்கும் களஞ்சியங்களின் இழப்புக்குப் பின்னர் எல்.ரி.ரி.ஈ. இன் விநியோகச் சங்கிலித் தொடர் தடைப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அது பீரங்கிக் குண்டு மற்றும் மோட்டார் வெடிகள் அத்துடன் சில பல்குழல் எறிகணை செலுத்திகள் உள்ளிட்ட சில ஆயுதக் குவியல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. தாம் அமைத்துக் கொண்ட அரண்களுக்குப் பின்னால் இருந்து கடினமான எதிர்ப்பை வழங்கியதோடு சரமாரியான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் அது மேற்கொண்டன. கரும் புலிகள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு, முன்னேறிக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான அதிகமான மற்றும் பொதுமக்களுக்கு அதிக சேதத்தை விளைவித்த யுத்த வலயத்துக்கு வெளியே சில தற்கொலைத் தாக்குதல்களையும் மேற்கொண்டது.

கடல் புலிகளிடம் தொடர்ந்தும் சில கடற்படை உபகரணங் கள் மற்றும் படகுகள் இருந்ததோடு, 2009 பெப்ரவரியில் எல்.ரி.ரி.ஈ. வசம் எஞ்சியிருந்த செயற்படக்கூடிய விமானம் கொழும்புக்கு மேலாகத் தற்கொலை நடவடிக்கை ஒன்றின் போது சுட்டு வீழ்த்தப்பட்டது.

70.
தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் பொதுமக்களைத் தடுத்து வைத்திருப்பது எல்.ரி.ரி.ஈ. இன் வியூகத்துக்கு முக்கியமானதாகவிருந்தது.
பொது மக்கள் இருப்பதானது தனி நாட்டுக்கான எல்.ரி.ரி.ஈ. இன் வாதத்தை நியாயப்படுத்துவதாகவும் இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு எதிரான கேடயமாகவும் இருந்தது.

இதன் காரணமாக, வன்னியில் இருந்த பொதுமக்களை அங்கிருந்து சென்று விடாமல் எல்.ரி.ரி.ஈ. தடுத்தது.பொதுமக்களுக்கான சேதம் கணிசமான அளவு அதிகத்த போதிலும், சர்வதே தலையீடு ஏற்பட்டு யுத்தம் நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் வெளியேறுவதை எல்.ரி.ரி.ஈ. தடுத்தது.
இறுதி நேரம் வரை அதன் தலைமைத்துவத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக பீரங்கிச் சூட்டுக்கு பெருமளவானோர் பலியாக புதிய மற்றும் நன்கு பயிற்றப்படாத அணியினரையும் பொதுமக்களையும் அது பயன்படுத்தியது.

ஐநா அலுவலர்களை வெளியேற்ற வேண்டாமென கெஞ்சிய வன்னி மக்கள்: ஐநா நிபுணர் குழு அறிக்கை பாகம் - 05.

3. யுத்தப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்கள்

71.
2008 செப்ரெம்பரில் இலங்கை இராணுவம் பல முனைகளில் இருந்தும் வன்னி நோக்கி முன்னேறியதோடு அதனால் அப்பிரதேசத்தில் இருந்து வெளியேற முடியாத அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் அங்கு சிக்குண்டனர்.

அப்பிரதேசத்தை விட்டகலுமாறு கிரமமாக அரசாங்கம் துண்டுப் பிரசுரங்களை மேலிருந்து வீசியது (ஆயின் அதனை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றிய குறிப்பான தகவலை வழங்கவில்லை).

ஆயினும், அதிகமானோர் அங்கேயே இருந்தனர். எல்.ரி.ரி.ஈ.இன் அனுமதிச் சீட்டுத் திட்டத்துக்குப் புறம்பாக, எல்.ரி.ரி.ஈ. இன் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பொதுமக்கள் சிக்குண்டதற்கு மேலும் பல காரணிகளும் பங்களித்தன. இம்மக்களுள் பெரும்பாலானோருக்கு வன்னியே அவர்களின் குடியிருப்புப் பிரதேசமாகும்.

இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய அனுபவம் பலருக்கு இருந்ததோடு, 1995 முதல் அவர்கள் எல்.ரி.ரி.ஈ. உடன் சேர்ந்து நகர்ந்தனர். தம் அனுபவத்தில் இருந்து அவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குச் சென்றால் அவர்கள் அங்கு தடுத்து வைக்கப்படுவார்கள் என அவர்கள அஞ்சினர்.

அவர்கள் வெள்ளை வான் பற்றியும் அச்சம் கொண்டிருந்ததோடு, இராணுவத்தினரால் கற்பழிப்பு அல்லது சித்திரவதை செய்யப்படுவதையிட்டும் பயந்தனர். மேலும், வலுக்கட்டாயமாக எல்.ரி.ரி.ஈ. அணிதிரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், அநேக குடும்பங்களின் உறவுகள் எல்.ரி.ரி.ஈ. இல் இருந்தனர். அது எவ்வாறாயிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குச் செல்வதாயிருந்தால், செல் வெடி வரும் திசை நோக்கி, யுத்தம் நடைபெறும் இடங்களை மற்றும் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்த இடங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியும் இருந்தது.

72.
இலங்கை இராணுவம் குண்டுகளை எறிந்த வண்ணம் வன்னி நோக்கி மேலும் முன்னேறிய போது, வேறு எங்கும் இனிச் செல்ல முடியாது என்ற நிலைக்கு வரும்வரை உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மேலும் ஆழமாக எல்.ரி.ரி.ஈ. இன் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் சென்றனர். சில இடம்பெயர்ந்தவர்கள் தொடர்ச்சியாக, சிலர் இரு வருடங்களாக, மேற்கில் மன்னாரில் இருந்து வந்திருந்தனர்.

அவர்கள் நகர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இடம்பெயர்ந்தவர்கள் தமது உடமைகளை உழவு இயந்திரங்கள், பைசிக்கில்கள் அல்லது மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வீட்டுப் பிராணிகள் இருந்தால் அவற்றையும் தம்டன் எடுத்துக் கொண்டு சென்றனர்.

அதிகமாக அவர்கள் தம் உடமைகளை கைவிட்டுவிட்டு, கடினமான சில சந்தர்ப்பங்களில், தம் உறவுகளை கைவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது.

இடம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கைத் தரம் குறைவாக இருந்ததோடு தொடர்ச்சியாக இடம்பெயர்வதால் அது மேலும் மோசமடைந்து உணவு உட்பட அடிப்படைத் தேவைகள் தட்டுப்பாடும் அதிகரித்தன. பொதுமக்கள் அதிகமாகத் தாக்கமுறும் நிலையை அடைந்து உணவு மற்றும் தங்குமிட வசதிகளுக்காக மனிதாபிமான உதவி மீது தங்கியிருக்க வேண்டியிருந்தது.

தனியாகப் பயணித்த பெண்கள், விதவைகள் அல்லது கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் வயோதிபர்களை உள்ளிட்ட இடம்பெயர்ந்த சனத்தொகையில் அதிகமானோர் குறிப்பாக இலகுவாகத் தாக்கமடையக் கூடியவர்களாக இருந்தனர்.

இ. யுத்தத்தின் போதான அது தொடர்பான நம்பத்தக்க குற்றச்சாட்டுக்கள் 1. பீடிகை: வன்னியில் இருந்து சர்வதேசத்தை அகற்றல்

73.
2008 செப்டெம்பரில், எல்.ரி.ரி.ஈ.இன் வலுவான இடமாகவும் நடப்பிலுள்ள தலைநகருமான கிளிநொச்சி நோக்கி 57 ஆவது மற்றும் 58ஆவது படைப்பிரிவுகள் முன்னேறியபோது, அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கை முனைப்பான ஒரு கட்டத்தை அடைந்தது. முக்கியமாக “கிளிநொச்சிப் பெட்டி' என்று நகரினுள் அழைக்கப்பட்ட பிரதேசமொன்றில் தமது மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் அலுவலகங்களைக் கொண்டிருந்த ஐ.நா. எல்.ரி.ரி.ஈ. இன் கிளிநொச்சிப் பகுதியில் மனிதாபிமான மையமொன்றைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

1. போர்முனைகள், செப்டெம்பர் 2010 லம்: இலங்கை அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்

74.
2008 கோடைக்கால இறுதியில், பாதுகாப்புப் பிரதேசம் என அது குறிப்பிடப்பட்டு அதன் எல்லைகள் இலங்கை அரசாங்கத்துக்கு நன்கு தெரிந்திருந்த போதிலும், கிளிநொச்சிப் பெட்டி மீது பீரங்கி மற்றும் வான் தாக்குதல்கள் பல மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் 2008 செப்டெம்பரில், வன்னியில் உள்ள மனிதாபிமான பணியாட்களின் பாதுகாப்பைத் தொடர்ந்தும் தன்னால் உறுதிப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்தது. அம்மாத இறுதியில், ஐ.நா. மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் சர்வதேச பணியாட்டொகுதியினரை கிளிநொச்சியில் இருந்து வெளியேறுமாறு அது கேட்டுக்கொண்டது.

அச்சமயத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுக்கான அச்சுறுத்தல் முக்கியமாக இலங்கை இராணுவத்தின் தாக்குதலாக இருந்ததோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் நம்பகத்தன்மையை அவ்வாறு அது வலுவிழக்கச் செய்தது. மாறாக அது அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

75.
ஐக்கிய நாடுகள் அதன் நடவடிக்கைகளை வன்னியில் இடைநிறுத்தி கிளிநொச்சியில் இருந்து அதன் அலுவலகங்களை வவுனியாவுக்கு இடமாற்றம் செய்ய டிவு செய்தது.
ஏனைய சர்வதேச அமைப்புக்களும் தமது சர்வதேச பணியாட்டொகுதியினை வாபஸ் பெற்றனர். இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகள் உள்நாட்டு ஊழியர்களுக்கு அங்கிருந்து செல்வதற்கான அனுமதியை எல்.ரி.ரி.ஈ. மறுத்தது.

சுமார் 320 எண்ணிக்கையிலான சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் பலவற்றின் தேசிய ஊழியர்களும் அவர்களைச் சார்ந்தோரும் வன்னியில் தொடர்ந்தும் தங்கியிருந்தனர்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஊழியர்கள் கிளிநொச்சியில் இருந்து வெளியேறத் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், ஐக்கிய நாடுகள் வளவுக்கு அருகில் வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

அவர்கள் அங்கிருந்து வெளியேறும் தினம், 2009 செப்டெம்பர் 15 அல்லது அதற்குச் சமீபத்தில், அவர்கள் இல்லாத நிலையில் தமக்கு என்ன நேருமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் கூட்டமொன்று அவர்களைச் சூழ்ந்து கொண்டு போக வேண்டாம் எனக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது.

(29)

76.
கிளிநொச்சியில் இருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்களின் சர்வதேச ஊழியர்கள் வாபஸ் பெறப்பட்டது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் முக்கியமானதொரு திருப்பத்தைக் குறிப்பதாகவிருந்தது.

அத்தருணம் முதல் வன்னியில் என்ன நடந்தேறுகிறது என்பதை வெளியுலகுக்கு அறிவிப்பதற்கு இயலுமான சர்வதேச அவதானிகள் எவரும் அங்கிருக்கவில்லை.

இலங்கை இராணுவத்துடன் இருந்த அல்லது எல்.ரி.ரி.ஈ. உடன் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் மாத்திரமே தொடர்ச்சியாகச் செய்தி அறிக்கைகளை விடுத்தனர். சர்வதேச அமைப்புக்களின் உள்நாட்டு ஊழியர்கள், சமயத் தலைவர்கள், உள்நாட்டு அரச ஊழியர்கள், வைத்தியர்கள் அல்லது எல்.ரி.ரி.ஈ. இனருக்கு ஆதரவான தமிழ்நெட் இணையத்தளம் போன்றவற்றில் இருந்து கிடைத்த குறுந்தகவல், மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் ஏனைய மூலங்களில் இருந்து அறிக்கைகள் வெளியாகின. இம்மூலங்கள் அனைத்தும் தமிழர்களிடம் இருந்து கிடைத்ததால் அவற்றை அரசாங்கம் கிரமமாக கேள்விக்குட்படுத்தி அல்லது நிராகரித்து விட்டது.

77.
2009 ஜனவரியில், மிக முக்கியத்துவம் வாய்ந்த பல வெற்றிகளை அரசாங்கம் ஈட்டியது. 2008 நவம்பரில், யுத்த வியூகக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பூநகரியையும் மேற்குக் கரையோரத்தின் பெரும்பாலான பகுதிகளையும் இலங்கை இராணுவம் கைப்பற்றி ஏ32 வீதியைத் திறந்தது.

மீண்டும் 2009 ஜனவரி 2ஆம் திகதி, இலங்கை இராணுவத்தின் 57ஆவது மற்றும் 58ஆவது படைப்பிவுகள் கிளிநொச்சியைக் கைப்பற்றின.

ஜனாதிபதியும் சர்வதேச சமூகம் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு எல்.ரி.ரி.ஈ. இனை வலியுறுத்தினர். 2009 ஜனவரி 9ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 53ஆவது மற்றும் 55ஆவது படைப்பிரிவுகள் ஆனையிறவைக் கைப்பற்றி ஏ9 வீதியைத் திறந்து, 23 வருடங்களில் முதற்தடவையாக நெடுஞ்சாலை முழுவதையும் அரசாங்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

பின்பு அதே மாதத்தில், ஜனவரி 25 ஆம் திகதி, 59ஆவது படைப்பிரிவு மேலுமொரு முக்கிய எல்.ரி.ரி.ஈ. தளமான முல்லைத்தீவைக் கைப்பற்றியது.
இந்நிகழ்வுகள் ஆயுதப் போராட்டத்தின் வேகம் மற்றும் தீவிரத் தன்மையில் புதியதொரு கட்டத்தைக் குறித்து, எல்.ரி.ரி.ஈ. இன் தோல்வி நிச்சயம் என்பதை உறுதிப்படுத்தியது.

(30)

2. போர்முனைகள், ஜனவரி 2009 லம்: இலங்கை அரசாங்க பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்.

2. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் தடைகள்

78.
ஐக்கிய நாடுகளின் சர்வதேச பணியாட்தொகுதியினர் கிளிநொச்சியில் இருந்து வெளியேறிய பின்னர், இலங்கையில் உள்ள ஐ.நா.வின் வதிவிட/ மனிதாபிமான கூட்டிணைப்பாளர் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் தலைவர், உணவு, தங்குமிட வசதிகள் மற்றும் மருந்துகளை வன்னிக்கு வாராந்தம் எடுத்துச் செல்வதற்கான வாகனத் தொடர்களைக் கொண்ட மனிதாபிமான உதவியைத் தொடர்வதற்காக அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றனர்.

இருந்த போதிலும், பாதுகாப்பு அமைச்சு வாகனத் தொடரில் செல்பவர்கள் மற்றும் உணவு சாராத பொருட்கள், அவை இராணுவத் தேவைகளுக்காகப் பாவிக்கப்படலாம் எனக் கூறி கடினமான கட்டுப்பாடுகளை விதித்தது.

கீழே விபரமாக விளக்கப்பட்டுள்ளது போன்று எடுத்துச் செல்லக் கூடிய மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் அளவுகள் மீதும் அவர்கள் கட்டுப்பாடுகளை விதித்தனர். 2008 ஒக்டோபர் 8ஆம் திகதி முதலாவது வாகனத் தொடர் வவுனியாவைச் சென்றடைந்தது. ஐந்து மாதக் காலப்பகுதியொன்றில் மொத்தம் 11 வாகனத் தொடர்கள், 7,435 மெட்க் தொன் உணவுப் பொருட்களுடன், அது பொதுமக்களுக்குப் போதுமானதாக இல்லாவிடினும், வவுனியாவுக்குச் சென்றன.

79.
வாகனத் தொடரின் பயணத்தை சூழ்ந்த நிலைமைகள் மிகவும் ஆபத்தாக இருந்தன. 9ஆவது மற்றும் 10ஆவது வாகனத் தொடர்களின் போது, வீதியில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் செல்வெடிகள் விழுந்ததோடு, இலங்கை இராணுவமும் எல்.ரி.ரி.ஈ. இனரும் வாகனத்தொடரைப் பாவித்து மறைந்திருந்தும் இராணுவ நிலைகளை முன்நகர்த்துவதில் ஈடுபட்டனர் 2009 ஜனவ 16ஆம் திகதி, வவுனியாவிலிருந்து ஓமந்தை ஊடாக புதுக்குடியிருப்புக்கு (பிகே) அதன் பதினொராவது வாகனத் தொடரை ஐ.நா.அனுப்பியது.

மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்குப் புறம்பாக தொடரில் இருந்த சிலர் எல்.ரி.ரி.ஈ. இடம் இருந்து ஐ.நா.தேசிய ஊழியர்களையும் அவர்களைச் சார்ந்தவர்களையும் விடுவிப்பதற்காகப் பேச்சுக்களில் ஈடுபட நாடினர். 11ஆவது வாகனத் தொடரில் 7 சர்வதேச ஊழியர்கள் இருந்ததோடு அத்தியாவசியப் பொருட்களான அசி, சீனி, எண்ணெய் மற்றும் கோதுமை ஆகியவற்றை ஏற்றிய சுமார் 50 லொறிகள் அதில் அடங்கின.

வாகனத் தொடர் பொருட்களை இறக்கிய போதிலும், வவுனியாவுக்கான வீதியில் கடும் சண்டை நடைபெற்றதால் அங்கிருந்து செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. யுத்தம் நான்கு நாட்கள் நீடித்தது.

3. யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் செல்லடித் தாக்குதல் “முல்லைத்தீவின் விடுவிக்கப்படாத பிரதேசங்களில் சிக்குண்டுள்ள அல்லது எல்.ரி.ரி.ஈ. இனால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆகக் கூடிய பாதுகாப்பை வழங்குவதற்கு பாதுகாப்புப் படையினர் ழுமையாக உறுதிபூண்டுள்ளதால், இதனை இராணுவத் தலைமையகம் பாதுகாப்பு வலயமாக குறித்துள்ளது'. என வன்னிக்கான கட்டளைத் தளபதி, மேஜர் ஜெனரல் ஜயசூய அறிவித்தார்.

யுத்த சூன்ய வலயத்தின் மற்றும் எல்லைகள் பற்றிய படங்கள் அரசாங்க அதிபர்களினால் தெளிவு படுத்தப்பட்டன.
தம்மீது கடப்பாடானது என யுத்த சூன்ய வலயத்தை எல்.ரி.ரி.ஈ. ஏற்றுக் கொள்ளவில்லை.

(31)

எல்.ரி.ரி.ஈ. இன் மேற்கு மற்றும் தெற்குப் பாதுகாப்புக் கோடுகள் மற்றும் முன்னேறி வரும் இலங்கை இராணுவத்தினரின் முன்னிலைக்கு 800 மீற்றர் வடக்கே ஏ 35 வீதியின் எல்லை அமைந்திருப்பது ஆகியவற்றை நோக்குமிடத்து, அங்கு யுத்த சூன்ய வலயத்தை அமைப்பதற்கான விவேகம் தெளிவாகவில்லை,

3. யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போதான யுத்த சூன்ய வலயங்கள்

81.
ஜனவ 19 இல் இருந்து 21 வரை அல்லது அதற்கு அண்மித்த தினங்களில், இலங்கை இராணுவத்தினரின் செல் குண்டுகள் தலாவது யுத்த சூன்ய வலயத்தில் அமைந்திருந்த வல்லிபுரம் ஆஸ்பத்திரியில் விழுந்து அதனால் நோயாளிகள் இறந்தனர்.

யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் ழுவதிலும், குறிப்பாக காயமடைந்த எல்.ரி.ரி.ஈ. இனர் இருந்த வன்னியிலுள்ள நிரந்தர மற்றும் தற்காலிக ஆஸ்பத்திரிகள் அனைத்தும் போல பலமுறை பீரங்கித் தாக்குதலுக்கு இலக்காகின. .

82.
2009 ஜனவரி 21ஆம் திகதி, தேசிய ஊழியர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களையும் ஏற்றிக் கொண்டு வாகனத் தொடர் 11 பிகேட் இல் இருந்து வவுனியா செல்ல முயற்சித்தது. ஆயினும் தேசிய ஊழியர்கள் இருந்ததால் வாகனத் தொடரை வவுனியா நோக்கிச் செல்ல எல்.ரி.ரி.ஈ. அனுமதிக்கவில்லை. தேசிய ஊழியர்களுடன் இருக்க விரும்பிய இரு ஐ.நா. சர்வதேச ஊழியர்களை அங்கேயே விட்டு விட்டு அநேகமான சர்வதேச ஊழியர்கள் வவுனியாவுக்குத் திரும்பினர்.

(32)

83.
2009 ஜனவரி 23ஆம் திகதி, புதுக்குடியிருப்பு (பிகே) மீது இலங்கை இராணுவத்தின் பாரிய தாக்குதல் ஒன்று கட்டாயமாக நடைபெறப் போகிறது என்பதால் ஐ.நா. வின் ஊழியர்கள் முதலாவது யுத்த சூன்ய வலயத்துக்கு இடம் பெயர்ந்தனர். ஏ 35 வீதியினூடாக சுதந்திரபுறம் சந்திக்கு அருகில் தளம் அமைத்த அவர்கள், தாம் இருக்கும் இடம் பற்றி வன்னி கட்டளைத் தளபதிக்கு அறிவித்தனர்.

அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களும் யுத்த சூன்ய வலயத்துக்கு இடம் பெயர்ந்து தம் தங்குமிடங்களை ஐ.நா. தலத்தைச் சுற்றி அமைத்துக் கொண்டனர். யுத்த சூன்ய வலயத்தின் ஏனைய பகுதிகள் தங்குமிடங்களை அமைப்பதற்கு ஏற்றதாயில்லை என்பதால் ஏ 35 வீதிக்குச் சற்று வடக்கே அவர்கள் நிலைகொண்டனர்.

அருகில் உணவு விநியோக மத்தியொன்றை உதவி அரசாங்க அதிபர் அமைத்தார். பகல் வேளையில் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து செலுத்தப்பட்ட செல் வெடிகள் அவ்வப்போது யுத்த சூன்ய வலயத்தில் விழுந்தன. இரவில், உணவு விநியோக மத்தியில் விழுந்த செல் வெடிகளால் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்தனர். .

84.
ஜனவரி 24ஆம் திகதி அதிகாலையில், யுத்த சூன்ய வலயத்தில் நூற்றுக் கணக்கான செல் வெடிகள் வந்து விழுந்தன. ஐக்கிய நாடுகளின் பதுங்கு குழிக்குச் செல்ல முடிந்தவர்கள் பாதுகாப்புக்காக அதற்குள் விரைந்தனர்.

பெரும்பாலான உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு பதுங்கு குழிகள் இருக்கவில்லை என்பதோடு பாதுகாப்புத் தேடி அவர்களால் எங்குமே செல்ல டியவில்லை. மக்கள் உதவி கோ கூச்சலிட்டு அழுது கொண்டிருந்தனர்.

நன்கு அனுபவம் உள்ள இராணுவ அதிகாரியான ஐ.நா. பாதுகாப்பு அதிகாரியும் ஏனையவர்களும் செல்வெடிகள் இலங்கை இராணுவத்தினரின் தெற்குத் திசையில் அமைந்த நிலைகளில் இருந்து வருவதை அவதானித்தனர்.

கொழும்பிலுள்ள ஐ.நா. பாதுகாப்புத் தலைவருக்கும் வவுனியாவில் உள்ள வன்னி பாதுகாப்புப் படைத் தளபதியின் தலைமை அலுவலகத்துக்கும் கொழும்பிலுள்ள இணைந்த நடவடிக்கைகள் தலைமையகத்துக்கும் அவர் அவசரமாக தொலைபேசியில் கதைத்து செல்வெடிகளை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். சிறிது நேரத்தில் செல்வெடிகள் திசையை சரி செய்த பின் மீண்டும் செல்வெடிகள் வந்து விழ ஆரம்பித்தன.

இரவு ழுவதும் செல் தாக்குதல் தொடர்ந்தது. ஐக்கிய நாடுகள் தலத்தையும் உணவு விநியோக மத்தியையும் தாக்கியதில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

85.
பொழுது புலர்ந்தவுடன் ஐக்கிய நாடுகள் ஊழியர்கள் பதுங்கு குழியில் இருந்து வெளியே வந்து பார்த்ததும், பெண்கள் மற்றும் சிறார்களை உள்ளிட்ட பலன் துண்டிக்கப்பட்ட உடல்களும் உடல் உறுப்புக்களும் அங்கு சிதறிக் கிடப்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

சிறு குழந்தைகளின் உடல்கள் சிதறி மேலே மரங்களில் சிக்குண்டிருந்தன. முந்திய நாள் பதுங்கு குழியை அமைக்க உதவியார்களும் இறந்தவர்களுள் இருந்தனர்.

86.
யுத்த சூன்ய வலயத்தில் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் இருந்த போதிலும், ஐ.நா. தலத்தினுள் எல்...ஈ. இனர் எவரும் இருக்கவில்லை. 500 மீற்றர்களுக்கு அப்பால் மற்றும் யுத்த சூன்ய வலயத்தின் பின்னால் தூரத்தில் இருந்து எல்.ரி.ரி.ஈ. பீரங்கிக் குண்டுகளைச் செலுத்திய போதிலும் ஐ.நா. தலம் இருந்த இடத்தில் தெளிவாகப் பொது மக்களே இருந்தனர்.
யுத்த சூன்ய வலயத்தில் இருந்த ஒரேயொரு சர்வதேசத் தொடர்பான ஐ.நா. தலத்தை நோக்கி அது ஏன் செல் வெடிகளை ஏவியது என்பதற்கான விளக்கத்தை அரசாங்கம் வழங்கவேயில்லை..

(33)

87.
கடுமையான செல்தாக்குதல் இடை விடாது தொடர்ந்தது. ஜனவரி 24ஆம் திகதி, யுத்த சூன்ய வலயத்தில் அதுவும் அமைந்திருந்த மற்றும் சின்னங்களால் தெளிவாக அடையாளமிடப்பட்டிருந்த உடையார்கட்டு ஆஸ்பத்தி பல செல் வெடிகளினால் தாக்கப்பட்டது.

ஜனவரி 25ஆம் திகதி இரவில், முதலாவது யுத்த சூன்ய வலயம் ஐ.நா. தலத்தைச் சூழவுள்ள பிரதேசம் தொடர்ந்து செல் தாக்குதலுக்கு இலக்காகின. யுத்த சூன்ய வலயத்தின் மீது இரண்டு நாளாக நடை பெற்ற செல் தாக்குதலில், நூற்று கணக் கான பொதுமக்கள் உயிழந்ததோடு பலர் காயமடைந்தனர். சரமாயான செல் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக இலங்கை இராணுவத்தினருக்கு எதிர்த் திசையில் வடக்கில் இரணைபாலை அல்லது மீண்டும் பிகே நோக்கி பொதுமக்கள் தப்பியோட ஆரம்பித்தனர்.

செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ஐசிஆர்சி) மற்றும் உதவி அரசாங்க அதிபருடன் சேர்ந்து யுத்த சூன்ய வலயத்தை விட்டும் மீண்டும் பிகேவுக்குத் செல்ல ஐ.நா. குழுவினரும் தீர்மானித்தனர். அவர்கள் அங்கிருந்து சென்றதும் கைவிடப்பட்ட பதுங்கு குழியில் பாதுகாப்புத் தேடி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்றனர்.

88.
பிகேவுக்குச் (பிகே புதுக்குடியிருப்பு) செல்லும் ஏ35 வீதி மருங்கில் யுத்த சூன்ய வலயத்தினுள் பாய அழிவினைக் குறிக்கும் காட்சியே தென்பட்டதோடு, தாவரங்கள் கூட சிதைந்து காணப்பட்டன. வீதியின் பக்கத்தில் அழிந்த தங்குமிடங்கள், சிதறிக்கிடந்த பொருட்கள் மற்றும் இறந்த மிருகங்களுக்கிடையே இறந்த அல்லது படுகாயத்துக்குள்ளானவர்கள் விழுந்து காணப்பட்டனர். நூற்றுக்கணக்கான சேதமடைந்த வாகனங்களும் வீதியில் கிடந்ததோடு, வல்லிபுரம் ஆஸ்பத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டிகள் பாரிய சேதத்துக்குள்ளாகியிருந்தன.

89.
ஏ35 வீதியில் யுத்த சூன்ய வலயத் துக்கு அப்பால் அமைந்திருந்த மஞ்சள் பாலத்தைக் கடந்த பிரதேசம் இங்கிருந்த நிலைமையை விட மிக மாற்றமானதாக இருந்ததோடு அங்கு சிறிய அளவிலான செல் தாக்குதலே நடைபெற்றிருந்தது.

ரண்பாடாக, அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சூன்ய வலயத்துக்கு வெளியே அமைந்திருந்த புதுக்குடியிருப்பு, அங்கு அதிக எண்ணிக்கையிலான எல்.ரி.ரி.ஈ.. இனர் மற்றும் குறைவாக பொதுமக்கள் இருந்த போதிலும், செல்தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெயவில்லை.

4. பிகே ஆஸ்பத்திரி மீது இலங்கை இராணுவத்தின் செல்வெடித் தாக்குதல்

90.
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி அளவில் பிகே இனை (புதுக்குடியிருப்பை)த் தாம் கைப்பற்றுவோம் என 55ஆவது மற்றும் 58ஆவது படைப்பிவுகள் வெளியிட்டிருந்த முனைப்பின் ஓர் அங்கமாக இப்பிரதேசத்தில் யுத்தம் உக்கிரமடைந்தது. வன்னியில் பிகே ஆஸ்பத்திரி மாத்திரமே எஞ்சியிருந்த நிரந்தர ஆஸ்பத்திரி என்பதோடு அரசாங்கமும் எல்.ரி.ரி.ஈ. அது நடுநிலையானது என்பதை ஏற்றுக் கொண்டிருந்தனர்.

ஐந்து வைத்தியர்களை உள்ளிட்ட மருத்துவப் பணியாட்டொகுதியினர் அதிக சிரமத்தை எதிர்நோக்கியதோடு மட்டுப்பட்ட அளவிலேயே மருந்து வகைகளும் இருந்தன. முதலாவது யுத்த சூன்ய வலயம் மீதான தாக்குதல் யுத்தத்தின் ஒரு திருப்பு முனையாக இருந்ததோடு, பொதுமக்களிடையே சேதம் அதிகரித்த வண்ணம் இருந்தது. யுத்த சூன்யப் பிரதேசத்தில் காயமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பிகே ஆஸ்பத்திரியில் இருந்தனர்.

தினம்தோறும் 100க்கும் அதிகமான புதிய நோயாளிகள், அவர்களுள் அநேகர் யுத்த சூன்ய வலயத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். பலர் படுகாயம் அல்லது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய செல்வெடிக் காயங்களுக்குள்ளாகியிருந்தனர். அதிகமாக கைக்குழந்தைகள், சிறு பிள்ளைகள் மற்றும் முதியோரைக் கொண்ட காயமடைந்தோர் எங்கெல்லாம் இடம் இருக்கிறதோ அங்கெல்லாம் நிறைந்து காணப்பட்டனர்.

(34)

91.
2009 ஜனவரி 29ஆம் திகதி, எல்.ரி.ரி.ஈ.இனால் வெளியேற அனுமதிக்கப்படாத தேசிய ஊழியர்கள் இன்றி எஞ்சியிருந்த இரண்டு ஐ.நா.சர்வதேச ஊழியர்களும் வவுனியாவுக்குப் பயணமாயினர்.

ஐ.சி.ஆர்.சி பிறிதொரு வாகனத் தொடரை அனுப்பியதோடு அது 200 காயமடைந்தோரை அங்கிருந்து அகற்றியது. இதனையடுத்து உடனே, ஜனவ 29ஆம் திகதிக்கும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கும் இடைப்பட்ட வாரத்தில் தினம் பல்குழல் எறிகணைகள் மற்றும் ஏனைய பீரங்கிக் குண்டுகள் பிகே ஆஸ்பத்தியைத் தாக்கியதோடு, அவற்றுள் 9 சரியாக ஆஸ்பத்தியில் விழுந்தன. ஏற்கனவே காயமடைந்திருந்து ஆஸ்பத்தியில் இருந்தவர்கள் உள்ளிட்ட காயமடைந்தவர்கள் மற்றும் பணியாட்கள் பலரும் அங்கு கொல்லப்பட்டனர். சத்திர சிகிச்சைக் கூடம் தாக்கப்பட்டது.

2009 பெப்ரவரி 4 ஆம் திகதி ஆஸ்பத்திரி தாக்கப்படும் போது அங்கு ஐ.சி.ஆர்.சி. இன் சர்வதேச உறுப்பினர்கள் இருவரும் இருந்தனர். செல்வெடிகள் இலங்கை இராணுவ நிலைகளின் திசையில் இருந்து வந்து கொண்டிருந்தன.



அதிக எண்ணிக்ககையான பொதுமக்கள் தப்பியோட முயன்றனர்: ஐநா நிபுணர் குழு அறிக்கை பாகம் - 06


92.
புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியின் ஜி.பி.எஸ் நிர்ணய எல்லைகள் இலங்கை இராணுவத்துக்கு நன்கு தெரிந்திருந்ததோடு, ஆளில்லாத விமானங்களுக்குத் தெளிவாகத் தெரியும் விதத்தில் ஆஸ்பத்திரி மீது சின்னங்கள் இடப்பட்டிருந்தன. 2009 பெப்ரவரி 01ஆம் திகதி, “காயமடைந்தோர், நோயாளிகள், மருத்துவப் பணியாட்டொகுதியினர் மற்றும் மருத்துவ வசதிகள் அனைத்தும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டனவாகும்.

எச்சந்தர்ப்பத்திலும் அவற்றின் மீது நேரடித் தாக்குதல் மேற்கொள்ளப்படக் கூடாது' என்பதை வலியுறுத்திப் பகிரங்க அறிக்கையொன்றை ஐ.சி.ஆர்.சி. வெளியிட்டது.

93.
இதற்குப் பதிலளித்த மனித வள மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, ஐ.சி.ஆர்.சி. “வேண்டுமென்றே தெரியாதது போல் அல்லது அப்பாவியாக' இருக்கிறது எனக் குற்றம் சாட்டியது. ஆரம்பத்தில் ஆஸ்பத்தி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அரசாங்கம் நிராகரித்தது, ஆயினும் 2009 பெப்ரவரி 02 ஆம் திகதி, ஸ்கைநியூஸ் உடனான நேர்காணலின் போது பாதுகாப்புச் செயலாளர் பின்வரும் அறிக்கையைச் சமர்ப்பித்தார்:

அவர்கள் (அறிக்கைகள்) புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள் என்றால், ஆஸ்பத்திரியோ வேறு எதுவுமோ அங்கு இருக்க முடியாது. அதனை நாம் வாபஸ் பெற்றுள்ளோம். எல்லா நோயாளிகளையும் நாம் வவுனியாவுக்கு வரவழைத்துக் கொண்டோம்.. எனவே யுத்த சூன்ய வலயத்துக்கு அப்பால் ஒன்றுமே இருக்க முடியாது.. எந்தவொரு ஆஸ்பத்திரியும் அங்கு செயற்பட முடியாது. ஒன்றுமே செயற்படக் கூடாது. இதற்காகத்தான் நாம் தெளிவாகவே இந்த யுத்த சூன்ய வலயத்தை வழங்கினோம். பயங்கரவாதிகளை நசுக்கும் போது ஏற்றதல்ல என எதுவுமே கிடையாது.

(35)

94.
கிளிநொச்சி வீழ்ந்த பின், இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான எல்.ரி.ரி.ஈ யின் யுத்தத்தில் புதுக்குடியிருப்பு கேந்திர வலுப்பீடமாக இருந்தது. அதன் காரணமாக புதுக்குடியிருப்பு எல்.ரி.ரி.ஈ இனர் கணிசமானோர் இருந்ததோடு, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் காயமடைந்து ஆயுதம் தாங்காத நிலையில் இருந்த உறுப்பினர்களுக்குப் பிரத்தியேகப் பிவொன்றை அது பேணி வந்தது.
யுத்த முனை அருகில் இருந்ததோடு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யுத்தம் தீவிரமடைந்த போது, மேலும் காயமடைந்த எல்.ரி.ரி.ஈ யினர் ஆஸ்பத்திக்கு எடுத்து வரப்பட்டனர். ஆஸ்பத்திரிக்கு சமீபத்தில் இருந்து நடமாடும் பீரங்கிகளை எல்.ரி.ரி.ஈ பிரயோகித்த போதிலும், ஆஸ்பத்திரியில் இருந்தோர் அகற்றப்படும் வரை ஆஸ்பத்திரியை அது இராணுவத் தேவைகளுக்காகப் பயன்படுத்தவில்லை.

எனினும், பிரதேசத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற அதன் அவாவினால், இலங்கை இராணுவம் தொடர்ந்தும் ஆஸ்பத்திரியையும் அதன் சுற்றுப்புறங்களையும் நோக்கிச் செல்வெடிகளைச் செலுத்தியது.

தொடரும் ஷெல்தாக்குதல் காரணமாக, புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் இருந்த கிட்டத்தட்ட 300 நோயாளிகளை 6 முதல் 8 கிலோமீற்றர் தூரத்தில் நந்திக்கடல் குடாவுக்கு அடுத்திருந்த கடல் ஓரப் பகுதியான புதுமாத்தளனுக்கு அகற்றுவதற்கு பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சர்கள், ஐ.நா.. உதவி அரசாங்க அதிபர் மற்றும் ஐ.சி.ஆர்.சி. யினர் தீர்மானித்தனர்.

எல்.ரி.ரி.ஈயும் பிரயோகித்த தனியார் ஆஸ்பத்திரியான பொன்னம்பலம் ஆஸ்பத்திரி 2009, பெப்ரவரி 6 ஆம் திகதி ஷெல்லடித் தாக்குதலுக்கு உள்ளாகி அதன் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.

95.
எல்.ரி.ரி.ஈ உடனான யுத்தத்தின் போது அவர்கள் கடுமையாக எதிர்த்துப் போராடியதால், புதுக்குடியிருப்பில் இலங்கை இராணுவம் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளையும் இழப்புக்களையும் எதிர்கொண்டது. 2009 ஏப்ரல் 5ஆம் திகதி வரை 58 ஆவது மற்றும் 53 ஆவது படைப்பிவுகள் புதுக்குடியிருப்பைக் கைப்பற்றவில்லை. கடல் புலிகளின் முக்கிய தளமான சாலை பெப்ரவரி 05ஆம் திகதி கைப்பற்றப்பட்டது.

96.
அச்சந்தர்ப்பத்தில், ஆனந்தபுரம், இரணைப்பாலை மற்றும் தேவிபுரம் ஆகிய இடங்களில் நடைபெற்று வந்த உக்கிரமான சண்டையில் இருந்து தப்புவதற்காக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் எஞ்சியிருந்த பாதுகாப்பான ஒரே இடமான கடற் கரையை நோக்கி விரைந்தனர். 2009 பெப்ரவரி 12 ஆம் திகதி, அரசாங்கம், அம்பலவன் பொக்கணை, கரயான் முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், வலையர்மடம் மற்றும் வெள்ள முள்ளிவாய்க்கால் கிராமங்களை உள்ளிட்ட இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தை (பொதுமக்கள் பாதுகாப்பு வலயம் எனவும் குறிப்பிட்ட) பிரகடனப்படுத்தியது.

(36)

97.
மேலும் மேலும், தம் கடைசி நிலைப் பாதுகாப்பை மேற்கொண்டு இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தினுள், குறிப்பாக எல்.ரி.ரி.ஈ தலைமைத்துவம் சிக்கலான பதுங்கு குழிகள் மற்றும் அரண்கள் அடங்கிய வலைப்பின்னலைக் கொண்டிருந்த முள்ளிவாய்க்கால் பிரதேச கரையோரப் பகுதிக்கு எல்.ரி.ரி.ஈ படையினர் புகுந்தனர். இங்குதான் அவர்கள் தம் இறுதி நிலையை அமைத்துக் கொண்டனர்.

இப்போது எல்.ரி.ரி.ஈஅதன் நடமாடும் சக்தியை இழந்து வலயம் முழுவதிலும் பாதுகாப்பான மண் அணைகளை அமைத்தது. இடம்பெயர்ந்தவர்களுக்கிடையே மோட்டார் மற்றும் ஏனைய பீரங்கிகளை அது வைத்திருந்ததால், அதிகமான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் எதிர்த்தாக்குதலுக்கு அவை வழிவகுத்ததோடு, அதனால் பொதுமக்களுக்குச் சேதம் ஏற்பட்டது.

இக்கட்டத்தில் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் எந்நேரம் சீருடை அணிந்திருக்கவில்லை. யாழ்ப்பாண மற்றும் கிளிநொச்சி யுத்த முனைகளின் இழப்பைத் தொடர்ந்து, எல்.ரி.ரி.ஈ இன் விநியோக மற்றும் போக்குவரத்து அமைப்புக்கள் செயலிழந்ததோடு, முல்லைத்தீவு மாகாணத்துக்குத் தம் பொருட்களையும் பேணல் அமைப்புக்களையும் அகற்றுவது முடியாத என்றாகிவிட்டது.

இதன் விளைவாக, எபொருள், வெடிபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றுக்கான பிரவேசத்தை எல்.ரி.ரி.ஈ இழந்தது. எல்.ரி.ரி.ஈயினடம் சில ஆயுதக் குவியல்கள் இருந்த போதிலும், சில சிறிய பல்குழல் செலுத்திகளை உள்ளிட்ட கனரக ஆயுதங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவர்கள் வசம் இருந்தன.

இலங்கை வான் படை முழுமையாக ஆதிக்கத்தைக் கொண்டிருந்ததோடு, ஆகாயத்தில் இருந்து நோட்டமிடுவதைத் தடுப்பதற்காக தமது அமைவிடங்களை எல்.ரி.ரி.ஈ மறைக்க வேண்டியிருந்தது.

(37)

98.
பயனற்ற தமது இராணுவ நிலையிலும், எல்.ரி.ரி.ஈ சரணடைய மறுத்ததோடு, பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதைத் தொடர்ந்து தடுத்து மனிதக் கேடயங்களாக அவர்கள் அங்கிருப்பதை உறுதி செய்து கொண்டனர்.

இராணுவக் கட்டுமானங்களையும் அரண்களையும் கட்டுவதற்காக அல்லது ஏனைய கட்டாயக் கடமைக்காக அவர்களைக் கட்டாயப்படுத்தினர். அருகி வரும் தம் அணிகளைத் தக்க வைப்பதற்காக சிறுவர்கள் உள்ளிட்ட கட்டாய அணிசேர்க்கும் பழக்கத்தை அவர்கள் மேலும் தீவிரமாகக் கடைப்பிடித்தனர்.

எல்.ரி.ரி.ஈ யின் ஆட்சேர்ப்பு அதிகத்த போது, பெற்றோர் அதனை எதிர்த்து தம் குழந்தைகளை அணிசேர்ப்பதைத் தடுப்பதற்காக அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யுமளவுக்குத் துணிந்தனர். இரகசியமான இடங்களில் அவர்கள் குழந்தைகளை மறைத்து வைத்தனர் அல்லது அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.. அவர்கள் அணி சேர்ப்பதைத் தடுக்க முயற்சிக்கும் போது எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் சொந்தங்களையோ அல்லது பெற்றோரையோ சிலசமயம் மூர்க்கத்தனமாகத் தாக்கவும் முனைந்தனர்.

எல்.ரி.ரி.ஈ இன் தலைமைத்துவத்தைப் பாதுகாப்பதற்கான பலவற்றை உள்ளிட்ட இவ்வாறான சகல அணுகுறைகளும் பொதுமக்களின் அவஸ்தை பற்றிய அலட்சியப் போக்கையும் அவர்களைப் பலியிடுவதற்கான விருப்பத்தையும் சித்தரித்துக் காட்டுவதாக இருந்தது.


99.
ஆயினும், இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் நிலைமை மோசமடையத் தொடங்கியதும், அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் எல்.ரி.ரி.ஈ யின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து தப்பியோட முனைந்தனர். அநேகமாக நடுநிசியில் மண்மேடுகளைக் கொண்ட ஏரிகளில் இறங்கிச் செல்லவும் அல்லது கண்ணி வெடிகள் நிறைந்த பிரதேசங்களினூடாகச் செல்லவும் மக்கள் ஆரம்பித்தனர்.

மிகுதியான சந்தர்ப்பங்களில் மக்கள் கண்ணி வெடிகள் மீது அடிவைத்து அவை வெடித்ததும் தம் உறுப்புக்களை இழந்தனர் அல்லது உயிழந்தனர். பெப்ரவரி மாத ஆரம்பத்தில் இருந்து, தப்பியோட முயற்சிப்பவர்களைச் சுடும் கொள்கையொன்றை எல்.ரி.ரி.ஈ பின்பற்றியதோடு, தப்பியோடும் பொதுமக்களைக் கண்டு பிடிப்பதற்காக உறுப்பினர்கள் காத்திருந்தனர்.

6. இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் இலங்கை இராணுவத்தின் ஷெல்லடித் தாக்குதல்

100.
2009 பெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம், சகல திசைகளில் இருந்தும், தரை, ஆகாய மற்றும் கடல் மார்க்கமாக இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தை இலங்கை இராணுவம் தொடர்ச்சியாகச் ஷெல்லடித் தாக்குதலுக்கு உள்ளாகியது.

அப்பிரதேசத்தில் சுமார் 300,000 க்கும் 330,000 க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான பொதுமக்கள் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டது.

இலங்கை இராணுவம் அதன் தாக்குதல் நடவடிக்கைக்காக வான் தாக்குதல், நீண்ட தூரம் தாக்கக் கூடிய பீரங்கிகள், ஹோவிட்டசர்ஸ், பல்குழல் எறிகணைச் செலுத்திகள் மற்றும் சிறிய ஆயுதங்களைப் பாவித்தது.(38)

101.
அச்சமயம், “பொதுமக்கள் காயமடைவதைத் தடுப்பதற்காக எம்மிடையே காயமேற்படுகிறது' என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டார்.

“இவ்விடயம் எமக்கு மிகவும் கவலையளிப்பதாக இருக்கிறது. இல்லாவிடின், சரமாரியாக குண்டுகளை வீசி எம்மால் அப்படியே முன்னேறிச் சென்றிருக்க முடியும்.' பெப்ரவாரி 25 ஆம் திகதியும் அதன் பின்னர் ஏப்பிரல் 27ஆம் திகதியும், இலங்கை இராணுவம் தொடர்ந்தும் இரண்டாம் மற்றும் மூன்றாம் யுத்த சூன்ய வலயங்கள் மீது கன ரக ஆயுதங்களைப் பாவிக்கவில்லை என அரசாங்கம் அறிவித்தது. ஆனால் களத்தில் நடப்பது இதற்கு மாற்றமானதாகவே இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே தீவிரமாக பீரங்கிகளைப் பிரயோகிப்பது இலங்கை இராணுவத்தின் இராணுவ நடவடிக்கையின் அடிப்படை அணுகுமுறையாக இருந்தது.

வெற்றி நெருங்கியதும், இப்பழக்கம் கைவிடப்படவில்ல் மாறாக எல்.ரி.ரி.ஈ யினை நகரவிடாது அது அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உள்ள பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையிலும் அது தொடர்ந்தது. தீவிர ஷெல்வீசசு காரணமாக அப்பிரதேசத்தில் இருந்து தப்பியோட பல பொதுமக்கள் முயற்சித்த போது, பொதுமக்கள் அங்கிருந்து செல்வதற்கு அவர்கள் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் இன்னுமொரு அரசாங்க நோக்கம் நிறைவேறுவதாக அமைந்தது.

தொடர்ந்து யுத்த சூன்ய வலயத்தை இலக்கு வைப்பதற்காக இலங்கை இராணுவத்தின் பீரங்கிக் குண்டுப் பிரிவுகள் தக்கவாறு அமைத்துக் கொள்ளப்படுவதை அரசாங்கத்தின் அறிவிப்புக்கள், செய்மதிப் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ஒப்பீட்டளவில் எல்.ரி.ரி.ஈ யினரிடம் குறைவான கன ரக ஆயுதங்களே எஞ்சியிருந்ததோடு, அவற்றைப் பாவிப்பதற்கான இடவசதியும் குறைவாகவே இருந்தது.

102.
சிறிய கடலோரப் பகுதியில் நெசல் அதிகமாகி அங்கு வாழக்கூடிய இடவசதியும் மிகக் குறைவாகி இருந்தது.

இடம்பெயர்ந்தோர் தம் கூடாரங்களை அமைத்திருந்த பெரும்பாலான பிரதேசம் நீர் கசியும் கடலோர மணல் தரையாக இருந்ததோடு அது குடியிருப்புக்கு ஏற்றதாகவும் இருக்கவில்லை, அத்தோடு, இடம்பெயர்ந்தோர் அங்கு தம் பாதுகாப்புக்காக தற்காலிக பதுங்கு குழிகளை அமைத்துக் கொள்வதும் கஷ்டமாகவே இருந்தது.

அக்கால கட்டத்தில் இடம்பெயர்ந்தோரின் அன்றாட வாழ்க்கை பதுங்கு குழிகளிலேயே கழிந்ததோடு, சிலர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத் தம் இருப்பிடங்களுக்கு மேலே வெள்ளைக் கொடிகளைப் பறக்கவிட்டிருந்தனர். நன்னீர் அரிதாக இருந்ததோடு உணவுக்கும் தட்டுப்பாடு நிலவியதால் சிலர் பசியினால் மரணித்தனர். பருவ கால மழை ஆரம்பித்ததும் பல பதுங்கு குழிகளில் நீர் நிறைந்து மக்களின் வாழ்க்கை மேலும் மோசமடைந்தது.

7. புதுமாத்தளன் ஆஸ்பத்தி மீதான ஷெல்லடித் தாக்குதல்

103.
புதுக்குடியிருப்பு ஆஸ்பத்தி புதுமாத்தளனுக்கு இடம் பெயர்ந்தபோது, “வன்னியின் மீட்கப்படாட பிரதேசங்களில் இப்போது எந்தவொரு ஆஸ்பத்தியும் செயற்படவில்லை' என அரசு அறிவித்தது.

இருந்தபோதிலும், இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில், புதுமாத்தளை உள்ளிட்ட மூன்று தற்காலிக ஆஸ்பத்திரிகளும், வேலாயன்மடத்தில் சிறிய வைத்தியசாலையொன்றும் முள்ளிவாய்க்காலில் ஒரு ஆஸ்பததிரியும் இருந்தன. அவற்றின் அமைவிட எல்லைகள் அனைத்தும் அரசாங்கத்துக்குத் தெரிந்தே இருந்ததோடு, அவற்றின் மீது சின்னங்கள் இடப்பட்டு அவை தெளிவாகவே குறிக்கப்பட்டிருந்தன. அங்கு அரசாங்க வைத்தியர்களே தொடர்ந்தும் சேவையாற்றி வந்தனர். புதிதாகக் காயமடைந்த நூற்றுக் கணக்கான பொதுமக்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் நிரம்பி இருந்தனர்.

அடிப்படை மருத்துவப் பொருட்களை வன்னிக்குள் அரசாங்கம் அனுமதிக்காததால், புதுமாத்தளன் ஆஸ்பத்திரியின் நிலைமை மிக மோசமாக இருந்ததோடு, அங்கு காயமடைந்தோரின் உறுப்புக்கள் கசாப்புக் கடைக் கத்திகளைக் கொண்டே மயக்க மருந்து இன்றி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

சுகாதாரத் துவாய்கள் மற்றும் பருத்தித் துணிகள் புண் கட்டுத் துணியாகப் பாவிக்கப்பட்டன. போத்தல்கள் மரங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டு பாரிய காயமடைந்தோர் மரங்களுக்குக் கீழே படுக்க வைக்கப்பட்டனர். அங்கிருந்த சில வைத்தியர்களின் கடுமையான உழைப்புக்கு மத்தியிலும் போதிய மருத்துவ வசதிகள் இன்மையால் பல நோயாளிகள் மரணித்தனர். சடலங்கள் தினம் ஆஸ்பத்திரிக்கு முன்னால் குவித்து வைக்கப்பட்டன.

104.
2009 பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் ஷெல் வெடிகள் விழுந்ததால் குறைந்த பட்சம் 16 நோயாளிகள் அங்கு கொல்லப்பட்டனர். சாலையில் அமைந்திருத்த இலங்கை இராணுவத்தின் தளங்களில் இருந்தே ஷெல் வெடிகள் வந்தன. ஆனால், பின்னர் ஏரிக்கு அப்புறம் இருந்த இலங்கை இராணுவ நிலைகளில் இருந்தும் (அங்கிருந்த இலங்கை இராணுவத்தினருக்கு ஆஸ்பத்திரி தெளிவாகப் பார்வைக்குத் தெரிந்த போதிலும்) ஷெல் வெடிகள் செலுத்தப்பட்டன.

சில காயமடைந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் புதுமாத்தளன் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வந்த போதிலும், அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்ததோடு அவர்கள் தனியானதொரு பிரிவில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பெப்ரவரியிலும் மார்ச்சிலும் புதுமாத்தளன் ஆஸ்பத்திரி பலமுறை ஷெல் தாக்குலுக்கு உள்ளாகியது. மார்ச்சு 27ஆம் திகதி அளவில் ஆர்பிஜிக்கள் ஆஸ்பத்திரி மீது செலுத்தப்பட்டபோது பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்கு விளைந்த சேதத்துக்குப் புறம்பாக, சத்திர சிகிச்சை கூடம், தற்காலிக வார்ட்டுக்கள் மற்றும் கூரையும் சேதமடைந்தன.

105.
தினம் பல உயிர்களைப் பலிகொண்டு பல குடும்பங்களை நிர்க்கதியாக்கும் ஷெல் வெடிகள் மற்றும் துப்பாக்கிச் சூடுகள் நடைபெற்று வந்த போதிலும், ஆளில்லா விமானம் மூலம் இனங் கண்டு கொள்ளக் கூடிய பொதுமக்கள் திரண்டிருந்த இடங்கள் மீது இலங்கை இராணுவம் ஷெல் வீச்சுக்களை மேற்கொண்டது. மார்ச் 25ஆம் திகதி அம்பலவன்பொக்கணை மீதான பல்குழல் ரொக்கட் தாக்குதலில் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 140 பேர்கள் உயிரிழந்னர்.

2009 ஏப்பிரல் 8ஆம் திகதி, பிரதேச சுகாதார சேவைகள் அத்தியட்சகர் ஒழுங்கு செய்திருந்த பால் மா விநியோக வரிசையொன்றில் இருந்த அதிக எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அம்பலவன்பொக்கணையில் ஷெல் வெடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இறந்த சில பெண்கள் தமது குழந்தைகளுக்குப் பால் மாவைப் பெற்றுக் கொள்ளும் அட்டைகளைக் கைகளில் வைத்திருந்தனர்.

8. ஐ.சிஆர்சி கப்பல்கள் லம் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கான ட்டுக்கட்டைகள்

106.
2009 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் கரையோரப் பகுதியிலிருந்து காயமடைந்த பொதுமக்களை கப்பல் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வன்னியில் உள்ள பொதுமக்களின் கஷ்டங்களைக் குறைப்பதற்காக ஐ.சி.ஆர்.சி தொடர்ந்தும் முன்னணிப் பங்களிப்பை வழங்கியது.

இறுதி மாதங்களின் போது மொத்தம் 16 ஐசிஆர்சி கப்பல்கள் யுத்த வலயத்துக்கு வந்து சென்றன. புதுமாத்தளனில் இருந்து ஐ.சி.ஆர்.சி இன் சர்வதேச ஊழியர்கள் தலாவது கப்பல் மூலம் அங்கிருந்து சென்ற போதிலும், ஒவ்வொரு தடவையும் கப்பல்கள் வந்தபோது, அவர்கள் மீண்டும் சில மணி நேரங்கள் கரையில் இருந்தனர்.
ஐ.நா. ஊழியர்களை அரசாங்கம் கப்பலில் இருக்க விடவில்லை.

107.
காயமடைந்த பொதுமக்களுக்கும் அவர்களைச் சார்ந்த சிலருக்கும் ஐ.சி.ஆர்.சி. கப்பல்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்து செல்ல அனுமதிச் சீட்டுக்களை எல்.ரி.ரி.ஈ வழங்கிய போதிலும், கரையில் இருந்து 1 கிலோ மீற்றருக்குள் கப்பல்களை வர விடாததால் காயமடைந்தோரை சிறு படகுகள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

காயமடைந்தோர் கரையில் வசையாக நிறுத்தப்பட்ட போது பல தடவை இலங்கை இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இலங்கை இராணுவத்தினால் செலுத்தப்பட்ட ஷெல் வெடிகள் சில சமயங்களில் கடலில் ஐ.சி.ஆர்.சி. கப்பல்களுக்கு அருகில் வந்து விழுந்தன. ஏப்பிரல் 22ஆம் திகதி அளவில் செல் வெடி காரணமாக மாலுமி கப்பலை ஆழமான இடத்துக்குச் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டார்.

108.
உணவுப் பொருட்களை போக்குவரத்துச் செய்யும் ஒரே வழியாக ஐசிஆர்சிக் கப்பல்கள் இருந்த போதிலும், ஏற்றி வருவதற்கு அவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் போதியளவாக இருக்கவில்லை. யுத்த சூன்ய வலயத்தில் நிலைமை படுமோசமாக மாறிய நிலையில் கரைக்கு வந்த ஐசிஆர்சி ஊழியர் ஒருவரைச் சூழ்ந்து கொண்ட அதிக எண்ணிக்கையிலான இடம்பெயர்ந்த மக்கள் தம்மை வன்னியில் இருந்து அழைத்துச் செல்லுமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தனர்.

எல்.ரி.ரி.ஈ அக்கூட்டத்தை முரட்டுத்தனமாகக் கலைத்தது. இறுதி ஐ.சி.ஆர்.சி கப்பல் 2009 மே 9 ஆம் திகதி வன்னிக்கு வந்தது. 2009 மே 15 ஆம் திகதி மேலுமொரு கப்பல் வந்த போதிலும் யுத்தத்தின் தீவிரத் தன்மை காரணமாக திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. மொத்தம் 14,000 காயமடைந்தோரையும் அவர்கள் உறவுகளையும் இரண்டாம் மற்றும் மூறாம் யுத்த சூன்ய வலயங்களில் இருந்து ஐ.சி.ஆர்.சி. அகற்றியதோடு சுமார் 2,350 மெட்ரிக் தொன் உணவுப் பொருட்களையும் முள்ளிவாய்க்காலுக்கு எடுத்து வந்தது. எல்.ரி.ரி.ஈ. அதன் உறுப்பினர்களை யுத்த களத்திலிருந்து சிகிச்சைக்காகச் செல்ல அனுமதிக்காததால், பாதுகாப்பாக அகற்றப்பட்ட அனைவரும் பொது மக்களாகவே இருந்தனர்.

9. ள்ளிவாய்க்கால் உள்ளிட்ட இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதல்

109.
2009 ஏப்பிரல் ஆரம்பத்தில், ஆனந்தபுரத்தில் நேர்ந்த தோல்விக்குப் பின், எஞ்சியிருந்த எல்...ஈ. யின் படைப்பிவுகள் அனைத்தும் போல கரையோரப் பகுதிக்குப் பின்வாங்கின.
சூன்ய வலயத்தினுள் அரசாங்கத்தின் ஷெல் தாக்குதல் உக்கிரமடைந்தது.

இறுதிக் கட்டம் வரை மோதல் முழுவதிலும் அது மோட்டார்களைச் சார்ந்திருந்த போதிலும், பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பொது மக்களை விடுவிப்பதற்காக “மனிதாபிமான நடவடிக்கை' ஒன்றை மேற்கொள்வதாக அக்கட்டத்தில் அரசாங்கம் கூறியபோதிலும், அது பல்குழல் குண்டு செலுத்திகள் மற்றும் விமானக் குண்டு வீச்சு போன்ற கன ரக ஆயுதங்களைத் தொடர்ந்து பிரயோகித்து வந்தது.

2009 ஏப்பிரல் 19 ஆம் திகதி, புதுமாத்தளன் மற்றும் அம்பலன்பொக்கணை ஆகியவற்றுக்கு இடையிலான பிரதேசம் தீவிர ஷெல்லடித் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு, இலங்கை இராணுவத்தின் 58ஆவது படைப்பிவு, யுத்த சூன்ய வலயத்தினூடாக எல்.ரி.ரி.ஈ யின் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி முதற்தடவையாகக் கரையோரப் பகுதியை அண்மியது.

இதனால் யுத்த சூன்ய வலயம் இரு கூறாக்கப்பட்டு பொது மக்களிடையே பலத்த சேதம் ஏற்பட்டது. யுத்த சூன்ய வலயம் இவ்வாறாக கூறுபட்டதை அடுத்து, ஏற்கனவே தப்பியோடிய சுமார் 70,000 பேர்களுக்கு மேலதிகமாக மேலும் ஒரு 100,000 பொதுமக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச் செல்ல முடிந்தது. குறைந்த பட்சம் மேலுமொரு 130,000 பொதுமக்கள் தென் பகுதியில் சிக்குண்டு இருந்தனர்.

(43)

110.
யுத்த சூன்ய வலயத்தின் வட பகுதியை இலங்கை இராணுவம் கைப்பற்றிய பின்னர், யுத்த வலயத்தில் ள்ளிவாய்க்கால் ஆஸ்பத்தி மாத்திரமே எஞ்சியிருந்த ஒரேயொரு ஆஸ்பத்திரியாக இருந்தது. சீருடை அணிந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினர் ஒருவரும் ஆஸ்பத்திரியில் இருக்கவில்லையென்பதோடு, ஒருவரும் அங்கு ஆயுதங்களைக் கொண்டு வரவில்லை. இப்போது நிலைமைகள் மிக மோசமாக இருந்தன. ஆஸ்பத்தியில் நான்கு வைத்தியர்கள் இருந்ததோடு அங்கு இடத்துக்கு ஏற்றவாறு இரண்டு சத்திர சிகிச்சை கூடங்கள் செயற்படுத்தப்பட்டன.

பாரிய தலைக் காயங்கள் மற்றும் ஏனைய உயிரைப் பறிக்கக் கூடிய காயங்கள் உள்ளிட்ட நோயாளிகள் நோவு தணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்தார்களே அன்றி அவர்களைக் காப்பாற்ற முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. சிறிய எண்ணிக்கையிலான கட்டில்கள் மாத்திரமே இருந்ததால், காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு முன்பாகவும் மண் தரையிலும் தனியாக அல்லது தம் உறவுகளின் அரவணைப்பில் இருந்தனர்.

புண்களைக் கட்டுவதற்கான துணிகள் கிடைக்காததால், பழைய துணிகள் அல்லது சாறிகள் புண்களைக் கட்டுவதற்காகப் பாவிக்கப்பட்டதோடு, சுத்தமின்மையினால் நோய்கள் பரவும் ஆபத்தும் அதிகமாக இருந்தது. அநேகமாக சத்திர சிகிச்சை மயக்க மருந்து இன்றி பாரிய கத்திகளால் மேற்கொள்ளப்பட்டதோடு துண்டிக்கப்பட்ட உறுப்புக்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. பொதுவாக இரத்தத்துக்கான தட்டுப்பாடு நிலவியதால், மீண்டும் துணியால் வடிகட்டிப் பாவிப்பதற்காக நோயாளியின் இரத்தம் பைகளில் சேகரிக்கப்பட்டது.

111.
பலதடவை ஆஸ்பத்திரி ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததால், வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியின் பிறிதொரு இடத்துக்கு ஆர்டிஎச்எஸ் இடம்பெயாந்த போதிலும், அங்கு கூட தெளிவான சின்னங்கள் இடப்பட்டிருந்த போதிலும், ஆஸ்பத்திரி இலங்கை இராணுவத்தின் ஷெல்லடித் தாக்குதலுக்கு ஆளாகி பலர் உயிரிழந்தனர். இரண்டாவது ஆஸ்பத்ரிதியிலும் நிலைமைகள் மோசமாக இருந்ததோடு இலங்கை இராணுவத்தின் ஷெல் தாக்குதல் காரணமாக சில ஆஸ்பத்திரி ஊழியர்கள் கொல்லப்பட்டார்கள்.


வைத்தியர்களின் மறுப்புரைகள் உண்மையை பாதிக்காது: ஐநா நிபுணர் குழு அறிக்கை பாகம் - 07

(44)

10. எல்...ஈ. யினால் பொதுமக்கள் கொல்லப்படுதல் மற்றும் கட்டாய ஆட்சேர்த்தல்

112.
இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து எல்.ரி.ரி.ஈ யின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இருந்து தப்புவதற்காக அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் முயன்றபோது அதனை நிறுத்துவதற்கு மேலும் அதிக வன்றைகளை எல்.ரி.ரி.ஈ.கடைப்பிடித்தது.

சில எல்.ரி.ரி.ஈ.உறுப்பினர்கள் தப்பிச் செல்லும் பொதுமக்களை போகவிட்டபோது ஏனையோர் ஏகே47 துப்பாக்கி கொண்டு அவர்களை நோக்கிச் சுட்டு ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என பாரபட்சம் காட்டாமல் கொன்றனர்.

தப்பிச் செல்வதற்காக முனைந்த இடம்பெயர்ந்தோர் எப்படியாவது தப்பிச் சென்று இலங்கை இராணுவத்தினர் அணிகளைப் போய் அடைவதற்காக குழந்தைகளையும் மற்றும் பொருட்களையும் தூக்கிக் கொண்டும் சில வேளைகளில் பயத்தினால் அவற்றைக் கீழே போட்டு விட்டும் ஓடினர்.

சிலர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர், மேலும் சிலர் ஆழமற்ற நீரில் தடுமாறினர் அல்லது மிதி வெடிகளில் சிக்குண்டு படுகாயமடைந்தனர். சிறுவர்கள் மற்றும் சிலர் ஏரியில் மூழ்கி இறந்தனர். இவ்வாறு இறந்தவர்களின் எண்ணிக்கை தெரியாவிட்டாலும் அது கணிசமானதாக இருந்ததோடு யுத்தம் தீவிரமடைந்த போது அவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

113.
புது அணியினரின் தேவை அதிகரிக்கவே, எல்.ரி.ரி.ஈ மீண்டும் அதன் பலவந்தமாக ஆட்சேர்க்கும் கொள்கையைத் தீவிரப்படுத்தி பாதுகாப்பு முன் அரண்களில் நிறுத்துவதற்காக இளைஞர்களையும் வயது குறைந்தோரையும் இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.

ஏப்ரல் நடுப்பகுதியில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, முன்னாள் திருகோணமலை அரசியல் துறைத் தலைவரான எழிலனின் தலைமையில் எல்.ரி.ரி.ஈ யினர் நூற்றுக்கணக்கான இளைஞர்களை வலையர் மடம் கோயிலில் இருந்து நிர்ப்பந்தமாக அணியில் சேர்த்து முள்ளிவாய்க்காலுக்கு அவர்களை பேருந்துகளில் எடுத்துச் சென்றனர்.

பெற்றோர் தம் பிள்ளைகளை யுத்தத்துக்காக எடுத்துச் செல்ல வேண்டாம் என அழுது மன்றாடிய போதிலும் அது பலனளிக்கவில்லை.

114.
ஏப்ரல் 26 ஆம் திகதி, ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்தம் ஒன்றை எல்.ரி.ரி.ஈ. பிரகடனப்படுத்திய போதிலும் அதனை ஒரு “கோமாளிக் கூத்து' என அரசாங்கம் நிராகரித்து விட்டது. 2009 ஏப்ரல் 27ஆம் திகதி, எல்.ரி.ரி.ஈக்கு எதிரான யுத்த நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கனரக ஆயுதங்களின் பாவனையை நிறுத்துவதாகவும் இரண்டாவது தடவையாகவும் அரசாங்கம் அறிவித்தது.

2009 மே 8 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியில் இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தின் தெற்கில் மிகச் சிறிய பிரிவொன்றை மூன்றாவது யுத்த சூன்ய வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியது..

11.இறுதி நாட்களில் இலங்கை இராணுவத்தின் ஷெல் வீச்சு (மே 13-18)

115.
மே 13ஆம் திகதி, 58ஆவது படை அணி கிழக்குத் திசையில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறுவதற்காக அதன் பயணத்தைத் தொடர்ந்ததோடு, 53ஆம் படைப்பிரிவு ஏரியை நோக்கி ஏ35 வீதியினூடாக கிழக்கு நோக்கி முன்னேறியது.

55ஆவது படைப் பிரிவின் அணியினர் புதுமாத்தளனில் இருந்து மேலும் தெற்கு நோக்கிப் படையெடுத்தனர். அத்தருணத்தில், அரசாங்கம் 10,000 பேர்கள் மாத்திரமே அங்கு இருந்தனர் எனக் கூறிய போதிலும், மூன்று சதுர கிலோமீற்றர் பகுதியொன்றில் 100,000 பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என ஐ.நா. மதிப்பீடு செய்கிறது.

(45)
116.
யுத்தத்தின் இறுதி நாட்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை அதிக அளவில் அதிகரித்தது.வெள்ளமுள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரியில், இரத்தம் கசியும் பலத்த காயங்களுடன் நூற்றுக்கணக்கான நோயாளிகள் தரையில் படுத்திருந்தனர். கடும் நோய் வாய்ப்பட்டவர்களுக்கிடையே இறந்தவர்களும் காணப்பட்டனர்.

நோயாளிகளைக் கவனித்து வந்த உறவினர்களும் கூட உணவுச் சத்தின்றி நலிந்து போயிருந்தனர்.

9. இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் பொதுமக்கள் மரணங்கள், மே 2009லம் குழுவுக்குப் புகைப்படைப்பிடிப்பாளர் சமர்ப்பித்தது.

117.
ஐ.சி.ஆர்.சி. தொடர்ந்து எதுவித மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு மூன்றாவது யுத்த சூன்ய வலயத்தில் ஷெல் தாக்குதல் இருந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்குண்டிருந்த போதிலும், எல்.ரி.ரி.ஈ யின் சிரேஷ்ட தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை நெருங்க நெருங்க இலங்கை இராணுவத்தின் தாக்குதல் ஒரு புது மட்டத்திலான தீவிரத்தை அடைந்தது.

எல்.ரி.ரி.ஈ தலைமைத்துவமோ தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைத் தாக்குதல்களை உள்ளிட்ட உயிர்துறக்கும் தாக்குதல்களில் தம் உறுப்பினர்களை ஈடுபடுத்தினர்.

118.
மூன்றாவது யுத்த சூன்ய வலயத்தின் இட நெருக்கடி காரணமாக பல பக்கங்களில் இருந்து வரும் ஷெல் வீச்சுக்களில் இருந்து தப்புவதற்காக பொதுமக்களுக்கு எந்தவொரு மறைவிடமும் இருக்கவில்லை. ஷெல்வெடிகள் சரமாறியாகப் பொழிந்ததோடு வேட்டுக்கள் பறந்து கொண்டிருந்தன. பலர் இறந்ததோடு, எதுவிதப் பதிவுமின்றி அவர்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டார்கள்.

கரும்புகையும் சடலங்களில் இருந்து வரும் வாடையும் காற்றில் நிறைந்திருந்தது. சிலர் தம் குழந்தைகளின் உணவுக்காக அல்லது காயமுற்ற மற்றும் குற்றுயிராகக் கிடப்பவர்களுக்கு உதவி கோரி மன்றாடிக் கொண்டிருந்தார்கள். அக்காட்சி நரகத்தை ஒத்ததாக இருந்தது.

(46)
119.
காயமடைந்தோர் மற்றும் இறந்தவர் பற்றிக் கவனிப்பதற்காக ஷெல் தாக்குதலை நிறுத்துமாறு உதவி அரசாங்க அதிபரும் வைத்தியர்களும் பல முறை அவசரத் தொலைபேசி அழைப்புக்களை விடுத்த போதிலும், இலங்கை இராணுவம் எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.

2009 மே 14ஆம் திகதிக்குப் பின்னர், ஷெல் வீச்சின் கடுமை காரணமாக வைத்தியர்கள் ஆஸ்பத்திரிக்குச் செல்ல முடியவில்லையாதலால் அதனை மூட வேண்டியேற்பட்டது. அகற்றப்பட முடியாத பல நோயாளிகள் அங்கு அப்படியே கைவிடப்பட்டனர். உயிர் பிழைத்த அனைவரும் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான இடங்களில் முடங்கியிருந்தனர்.

உணவு சமைப்பது முடியாத காரியமாக இருந்ததோடு, மலசலம் கழிக்க வெளியே போனால் கூட உயிருக்கு ஆபத்து நேரும் நிலையே இருந்தது. சில பொதுமக்கள் கூட்டமாக வெளியேற முயன்றபோது எல்.ரி.ரி.ஈஅவர்களை நோக்கிச் சுட்டு ஷெல் வெடிகளை ஏவினர். தப்பியோடியவர்களை தனித்தனி இலங்கை இராணுவ வீரர்கள் பாதுகாப்பாகச் செல்ல உதவினர்.

120.
மே 15ஆம் திகதி எல்.ரி.ரி.ஈ. தம் தொடர்பாடல் சாதனங்களை தகர்த்து நொருக்கினர். மே 16ஆம் திகதி பாரியதொரு அதிர்வெடி எல்.ரி.ரி.ஈ பிரதேசத்தைக் குலுக்கியதோடு பல இடம் பெயர்ந்த மக்களின் குடிசைகள் நெருப்பினால் அழிந்தன.

அதே தினம் இலங்கை இராணுவத்தின் 58ஆவது மற்றும் 59ஆவது படைப்பிரிவுகள் கரையோரத்தில் இணைந்தனர். அப்போது இராணுவக் கட்டளைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா எல்.ரி.ரி.ஈ க்கு எதிரான வெற்றியைப் பிரகடனப்படுத்தினார்.

53ஆவது படைப்பிரிவு தெற்கு நோக்கி அதன் பயணத்தை நந்திக் கடல் ஏரியினூடாகக் தொடர்ந்தது. உயர்பீடத் தலைவர்கள் பலரை உள்ளிட்ட எல்.ரி.ரி.ஈ. யின் எஞ்சியிருந்தவர்கள் மற்றும் சுமார் 250 உறுதியான போராளிகள் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 3 சதுர கிலோமீற்றர் பிரதேசமொன்றில் சுற்றி வளைக்கப்பட்டனர். முடிவு நெருங்கிவிட்டது. அத்தலைவர்கள் பலன் மரணங்களைச் சூழ்ந்த நிலைமைகள் சர்ச்சைக்குயதாயுள்ளது.

121.
2009 மே 18ஆம் திகதி, யுத்த சூன்ய வலயத்தில் இருந்து தப்பியோட முயன்றபோது பிரபாகரன், சூசை மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர் என பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் கூறின. சார்ள்ஸ் அன்ரனி, நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோரும் இறந்தவர்களுள் அடங்கினர்.

பிரபாகரன் மற்றும் அவன் நெருங்கிய சகாக்கள் கொல்லப்பட்டார்கள் என மே 19ஆம் திகதி, இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்ததோடு, அவர்களின் சடலங்கள் தொலைக்காட்சியினூடாகவும் காட்டப்பட்டன. சடலங்களின் பல புகைப்படங்கள் பின்னர் வெளியாகின.

எல்.ரி.ரி.ஈ. மீது கிடைத்த வெற்றியைப் பிரகடனப்படுத்தி அதே தினம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

122.
மே 16 மற்றும் 19ஆம் திகதிகளுக்கிடையே, வலயத்தில் சிக்குண்டிருந்த எஞ்சியிருந்த பொதுமக்கள் கரையோரப்பகுதியில் இருந்து தெற்கே வட்டுவாய்கால் பாலத்தைக் கடந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சென்றனர்.

ஷெல் வெடிகள் தொடர்ந்ததோடு, (எல்.ரி.ரி.ஈயின் அழிக்கப்பட்ட ஆயுதக் குவியல்கள் உள்ளிட்ட) பாரிய நெருப்புக்கள் எரிந்து கொண்டிருந்தன. சடலங்கள் எல்லாவிடத்திலும் சிதறிக் கிடந்ததோடு, வழியில் விழுந்திருந்த காயற்றோர் நடக்கக் கூடியவர்களிடம் உதவி கேட்ட போதிலும் அவர்களுக்கு உதவ முன்வருவோர் அரிதாகவேயிருந்தனர்.

பாசமுள்ள இறந்த உறவினர்களைக் கட்டியணைத்துக் கொண்டிருந்தவர்களை இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது. எங்குமே மரண வாடை வீசிக் கொண்டிருந்தது.

(47)
123.
2009 மே 18ஆம் திகதி வன்னியில் ஆயுதந்தரித்த யுத்தத்தின் முடிவைக் குறித்தது. “கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவிலான மனிதாபிமான அவலத்தில்' இறுதி நாட்கள் முடிவடைந்தது என்பதாக ஐ.சி.ஆர்.சி. குறிப்பிட்டது.

ஈ.மனிதாபிமான உதவியை நிராகப்பதற்காக இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை பற்றிச் சர்ச்சை எழுப்பல்

124.
யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் முழுவதிலும், குறிப்பாக 2009 ஜனவரி முதல் மே வரை, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறைவாகக் காட்டி, மனிதாபிமான உதவிகளைக் குறிப்பாக உணவு மற்றும் மருந்து வகைகளின் அளவைக் குறைப்பதற்காக குறைந்த மதிப்பீட்டை அரசாங்கம் பிரயோகித்தது.

125.
இறுதிக் கட்டத்தின் ஆரம்பத்தில், 2009 ஜனவரி 13ஆம் திகதி, சுயாதீன மதிப்பீடுகளின் படி, வன்னிப் பிரதேசப் பொதுமக்களின் எண்ணிக்கை 150,000 க்கும் 250,000 க்கும் இடைப்பட்டதாக இருந்தது என அரசாங்க இணையத்தளம் தெவித்தது.

ஆரம்பத்தில் ஐ.நா. இன் மதிப்பீடு 250,000 ஆக இருந்தது. (பின்னர் அந்த மதிப்பீடுகள் அதிகமாக இருந்த போதிலும்). பின்னர் 2009 ஜனவயில், வன்னியில் இருந்த பொதுமக்கள் எண்ணிக்கை 75,000 க்கும் கூடிய மதிப்பீட்டின் படி 100,000 க்கும் இடைப்பட்டதாக இருந்தது என பாதுகாப்பு அமைச்சு கூறியது.

ஆயினும், வன்னியில் இருந்த பொதுமக்களின் சரியான எண்ணிக்கையை பிழையற்ற முறையில் மதிப்பீடு செய்வதற்கான போதியளவை விஞ்சிய தகவல் அரசாங்கம் வசம் இருந்தது.
ஒவ்வொரு மாதம் உலக உணவுத் திட்டத்தில் இருந்து உலர் உணவு பங்கீடுகளைக் கோருவதற்காக அரசாங்க அதிபர்கள் ஐ.டி.பி.யினர் பற்றிய தரவுகளை ஒப்பிட்டுப் பார்த்து வந்துள்ளனர்.

2008 செப்டெம்பருக்கு முன் அச்சமயம் எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் சுமார் 420,000 பொதுமக்கள் இருந்ததாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அரசாங்க அதிபர்களினால் தொகுக்கப்பட்ட எண்ணிக்கைகள் குறிப்பிட்டன.

இவ்வெண்ணிக்கைகள் அதிகரித்துக் காட்டப்பட்டிருக்கலாம் என்றிருந்த போதிலும், ஐ.நா. சிறுவர் நிதியத்தின் படி, வன்னியில் பதிவு செய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை 70,000 ஆக. அதாவது அரசாங்கத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கைக்குச் சுமார் சமமானதாக இருந்தது.

126.
பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட எண்ணிக்கைகள் மாறுபட்டதாக இருந்த போதிலும், வேண்டுமென்றே அவை குறைவாகவே வைக்கப்பட்டிருந்ததோடு, வலயத்தில் தொழில்புரிந்த சில அரசாங்க ஊழியர்கள் வேறு கணக்குகளை அல்லது தேவைக்கான வேறு மதிப்பீடுகளை வழங்கிய போது அவர்கள் கண்டிக்கப்பட்டனர்.

உதாரணமாக, 2009 பெப்ரவரி 2ஆம் திகதி, இரண்டாவது யுத்த சூன்ய வலயத்தில் இருந்து உதவி அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்டத்தில் அச்சந்தர்ப்பத்தில் சுமார் 81,000 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் சுமார் 330,000 ஆட்கள் இருப்பதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஆயினும், மார்ச் 18 ஆம் திகதி 330,000 என்ற அக்கணக்கு “விதிகளுக்குக் கட்டுப்படாததும் அடிப்படையற்றதும்' எனவும். “குறிப்பாக ஐ.டி.பி. கணக்குகள் தொடர்பாக எந்தவொரு மூலத்துக்கும் தவறான தகவலை வழங்கியதற்காக' அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அரசாங்கம் “விருப்பத்துக்கெதிராக நிர்ப்பந்திக்கப்படும்' எனவும் உதவி அதிபருக்கான பதிலில் தேசத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டிருந்தார்.

(48)

127.
2009 பெப்ரவ இறுதியில், இடம்பெயர்ந்தோன் குடிசைகளைக் கணக்கெடுத்து ருமற்றும் வேர்ல்ட்வியூ செய்மதிப் படங்களை ஒரு பகுதியாக வைத்து மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாட்டுப் பகுதியில் 267,618 பொதுமக்கள் இருப்பதாக அது கருதுவதாக ஐ.நா. நாட்டுக்கான குழு அரசாங்கத்துக்கு அறிவித்தது.

ஏப்ரல் கடைசியில், ஐ.நா. இன் மதிப்பீடுகளின் படி தொடர்ந்தும் 127,177 பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என்ற போதிலும், அக்காலப்பகுதியில் 10,000 பேர்கள் மாத்திரமே எஞ்சியிருந்தனர் என அரசாங்கம் கூறியது.

இறுதியாக அப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மற்றும் மெனிக் பாம் அத்துடன் வேறு முகாம்களில் குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை சுமார் 290,000 ஆக இருந்தது.

இவ்வெண்ணிக்கைகளுக்கிடையிலான வேறுபாட்டினை போதியளவு அரசாங்கம் விளக்கவில்லை.

128.
அரசாங்கத்தின் குறைவான மதிப்பீட்டின் விளைவாக, வன்னிக்கு உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்கள் நிஜத் தேவையைவிட மிகக் குறைவாக இருந்ததால், பட்டினிச் சாவு மற்றும் போசாக்கின்மை அங்கு பரவலாகக் காணப்பட்டது.

அதே போன்று, வன்னிப் பிரதேசத்துக்கு அனுமதிக்கப்பட்ட மருந்து வகைகள் ஷெல் வீச்சுக் காரணமாக ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கு கொஞ்சம் கூடப் போதியதாக இருக்கவில்லை. மார்ச் 2010 இல் காயமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்த போது, தேவைப்படும் மருந்து வகைகள் இல்லாதது பாரிய கக்ஷ்டங்களுக்கும் தேவையற்ற உயிழப்புக்களுக்கும் வழிகோலியது.

ஆர்.டி.எச். வைத்தியர்கள் தொடர்ந்து மருந்து பற்றாக்குறை பற்றி கடிதங்கள் மற்றும் தொலைக்காட்சியினூடாகவும் தெவித்த போது, ஊடகங்களுடன் பேசுவதை புகார் செய்வதை நிறுத்துமாறும் அல்லது அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர்களை சுகாதார அமைச்சு எச்சக்கை செய்தது.

129.
2009 மார்ச் 19ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஆஸ்பத்திரியில் தேர்ச்சி பெற்ற மயக்க மருந்து கொடுக்கும் வைத்தியர் இல்லாததால், கடுமையான வலி தடுப்பு மருந்துகளும் நரம்புக்குள் செலுத்தும் திரவங்களை மாத்திரமே அனுப்படியும் என சுகாதார பராமரிப்பு மற்றும் போசாக்கு அமைச்சின் செயலாளர் வைத்தியர்களுக்கான பதிலில் தெவித்தார்.

இந்திய உயர் ஸ்தானிகருக்கு அல்லது தமிழ் நாடு முதலமைச்சருக்குக் கடிதங்களை அனுப்பி இராஜதந்திர மரபு முறைகளை மீற வேண்டாமென்றும் அப்படி மீறினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அக்கடிதத்தில் வைத்தியர்கள் எச்சரிக்கப்பட்டார்கள்.

130.
மே 16ஆம் திகதி வைத்தியர்கள் யுத்த வலயத்தில் இருந்து வெளியேறியதும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு பல மாதங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள். 2009 ஜூலை ஆரம்பத்தில், வைத்தியர்கள் பத்திரிகையாளர் மாநாடொன்றை நடாத்தி, யுத்தத்தில் உண்மையிலேயே சிலரே மரணித்ததாகவும் காயமடைந்ததாகவும் அது பற்றி பொய் சொல்ல எல்.ரி.ரி.ஈ .தம்மை நிர்ப்பந்தப்படுத்தினர் எனவும் அங்கு அவர்கள் கூறினர்.

இம்மறுப்புரை தாம் தொடர்ந்து வன்னியில் இருந்த போது வழங்கிய நேர்காணல்கள், இலத்திரனியல் தபால் மற்றும் விடுத்த பகிரங்க அறிக்கைகளுடன் மாறுபட்டதாக இருந்தது. அரசாங்கம் அவர்களை அழுத்தத்துக்குள்ளாக்கியதாகவும் இம்மறுப்புரைகள் அவர்கள் முன்னர் வழங்கிய அறிக்கைகளின் உண்மையைப் பாதிக்காது எனவும் இக்குழு நம்புகிறது.

(49)

பொதுமக்கள் எண்ணிக்கை மறறும் அவர்கள் தேவைகள் பற்றிய 1ஆம் நிலைத் தகவலைக் கைவசம் வைத்திருந்த போதிலும், இலங்கை அரசாங்கம் பொது மக்கள் மீது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக வன்னிக்கான பொருட்களின் விநியோகத்தைக் குறைப்பதற்கான வியூகத்தின் ஓர் அங்கமாக மிகவும் குறைவான எண்ணிக்கை பற்றிய மதிப்பீட்டையே பிரயோகித்தது. இதற்காக மதிப்பீடுகள் குறைக்கப்பட்டன என்பதை பின்னர் சிரேஷ்ட அரசாங்க அதிகாயொருவர் ஒப்புக்கொண்டார். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது அரசாங்கம் பொதுமக்களை எல்.ரி.ரி.ஈ உடன் இணைத்துக் காட்டியதையும் குறைவான எண்ணிக்கைககள் குறிக்கிறது.

உ.இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை

132.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது வன்னியில் இறந்த அல்லது காயமடைந்த பொதுமக்கள் பற்றிய உறுதியானதொரு கணிப்பு இல்லை உண்மையானதொரு கணிப்பை மேற்கொள்வதைப் பல காரணிகள் சிரமமாக்கியுள்ளன:

(அ) யுத்தப் பிரதேசத்தில் இருந்த பொதுமக்கள் எண்ணிக்கை 330,000 ஆக இருந்திருக்கலாம் என்ற போதிலும் அந்த எண்ணிக்கை நிச்சயமற்றதாகும்,

(ஆ) பிரிக்கும் செயற்பாட்டில் வெளிப்படையற்ற தன்மை காரணமாக வன்னியில் இருந்து வெளியே வந்தவர்களின் சரியானதொரு கணிப்பு இல்லாதமை,

(இ) இறுதிக் கட்டத்தின் போது கட்டாயமாக ஆட்சேர்த்தல் காரணமாக சிக்கலாகிய நிலைமையில் எல்.ரி.ரி.ஈ இன் போராளிகள் பற்றிய எண்ணிக்கை பற்றிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பல பொதுமக்கள் தாம் விழுந்த இடத்திலேயே அவர்கள் மரணம் பற்றிய எவ்வித அவதானிப்பும் பதிவும் இன்றி அவர்கள் புதைக்கப்பட்டது.

133.
வைத்தியர்களால் சேகரிக்கப்பட்ட காயமடைந்த மற்றும் மரணமாகியவர்கள் பற்றிய, ஆஸ்பத்திகளால் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகுகளினால் ஒத்துப்பார்க்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் சில மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இறுதிக் கட்டத்தின் போது சுமார் 40,000 சத்திர சிகிச்சை நடவடிக்கைகளையும் 5,000 அறுவைச் சிகிச்சை மூலம் உறுப்புக்கள் அகற்றப்பட்டதையும் ஒரு மதிப்பீடு கொண்டுள்ளது. காயம் மற்றும் மரணங்களுக்கிடையிலான 1:2 அல்லது 1:3 என்ற விகிதாசாரத்தின் படி பார்த்தால மிகஅதிகளவிலானபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அது குறிக்கக் கூடியதாகவுள்ளது.

ஏனையவர்கள் இந்த மதிப்பீட்டை 75,000 எனக் குறிப்பிடுகிறார்கள், அதாவது யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியாகியவர்களின் எணிக்கை (சுமார் 290,000) மற்றும் யுத்த வலயத்தில் இருந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (யுத்த சூன்ய வலயத்தில் ஜனவரி முதல் இருந்த சுமார் 330,000 அத்துடன் அதற்கு முன்னர் எல்.ரி.ரி.ஈ. யின் பிரதேசங்களில் இருந்து வெளியேறிய சுமார் 35,000).

134.
ஐக்கிய நாடுகள் நாடு சார்ந்த குழுவே தகவலின் ஒரே லமாக இருந்தது பகிரங்கப்படுத்தப்படாத ஆவணமொன்றில், கணிப்பு நடவடிக்கைகள் கஷ்டமாகும் வரை ஆகஸ்ட் 2008 முதல் 2009 மே 13ஆம் தகதி வரை மொத்தம் 7,721 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 18,479 பேர் காயமடைந்துள்ளதாகவும் அது மதிப்பீடு செய்துள்ளது. 2009 பெப்ரவ ஆரம்பத்தில், தகவலுக்கான பிரவேசம் கஷ்டமாக இருந்த போதிலும், காயமடைந்த மற்றும் இறந்தவர்கள் எண்ணிக்கையைத் தொகுக்கும் செயற்பாடொன்றை ஐ.நா. ஆரம்பித்தது.

இச்செயற்பாட்டின் போது ஆர்டிஎச்எஸ் இடம் கிடைக்கும் கணக்கு விபரங்களை அது அடிமட்டக் கோடாக எடுத்துக் கொண்டதோடு, உறுதிப்படுத்த டியாத அல்லது தமிழ்நெட் மற்றும் வன்னிக்கு வெளியேயிருந்து வந்த அரசாங்கக் கணிப்புக்கள் போன்ற பக்கச்சார்பான லங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

(50)

135.
ஐ.நா. நாடுசார்ந்த குழுவினால் கணிக்கப்பட்ட எண் ஒரு ஆரம்பத்தை வழங்குகிறது என்ற போதிலும் பல காரணங்களுக்காக அது மிகக் குறைவாக இருந்தது.

முதலாவதாக, எல்.ரி.ரி.ஈ கட்டுப்பாடடுப் பிரதேசங்களில் செயற்பட்ட அவதானிப்பாளர்கள் வலைப்பின்னல் ஊடாக நிஜமாகவே அவதானிக்கப்பட்ட காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் பற்றிய விபரத்தில் மாத்திரம் அது தங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட பலர் அவதானிக்கப்படாதிருக்கலாம்.

இரண்டாவதாக, ஐ.நா. மே 13ஆம் திகதி கணக்கெடுப்பதை நிறுத்திய பின்னர், காயமடைந்த மற்றும் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகத்திருக்கலாம். ஷெல்வீச்சின் தீவிரத்தன்மை காரணமாக, பல பொதுமக்கள் அவர்கள் இறந்த இடத்திலேயே விட்டு விடப்பட்டதோடு அவை பதியப்படவோ, ஆஸ்பத்திக்குக் கொண்டு வரப்படவோ அல்லது புதைக்கப்படவோ இல்லை. இதனால், உண்மையிலேயே மொத்தக எண்ணிக்கை ஐ.நா. யின் கணிப்பை விட மிக அதிகமாயிருக்கும்.

136.
அரசாங்கத்திடம் பந்து கேட்டுக் கொள்ளும் போது ஐ.நா. காயமடைந்த மற்றும் இறந்தவர்களின் கூடிய எண்ணிக்கையைக் குறிப்பிட்டதோடு, அதன் குறிப்பான மதிப்பீடுகளைப் என்றுமே பகிரங்கப்படுத்தவில்லை. ஐ.நா.வழங்கிய கணக்குகளை, அவை கற்பனை செய்யப்பட்டவை எனவும் அது ஐ.நா.வின் காரியமல்ல வென்றும் அரசாங்க அதிகாரிகள் கடுமையாக அக்கணிப்புக்களைச் சர்ச்சைக்குட்படுத்தினர்.

பகிரங்கமாக யுத்தத்தினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட “பலத்த சேதம்' பற்றி அல்லது காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை “ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு' அதிகமாக இருந்தது என ஐ.நா. குறிப்பிட்ட போதிலும் உண்மையான எண்ணிக்கையை சரி பிழை பார்க்க முடியவில்லை. குறிப்பான கணிப்புக்களை வழங்குவதில்லை என்ற முடிவு பொதுமக்கள் காயமடைந்தது மற்றும் மரணித்தது பற்றிய செய்தி அறிக்கை விடுப்பதை முக்கியத்துவமற்றதாக்கி விட்டது.

ஆயினும், ஜனவரி 20ஆம் திகதி முதல் அநேகமாக யுத்த சூன்ய வலயங்களினுள் 2,800 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 7,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துமிருக்கலாம் என மனித உரிமையகளுக்கான உயர் ஸ்தானிகள் பகிரங்கமாக அறிவித்த 2009 மார்ச்சு 13ஆம் திகதி வரை இந்நிலைப்பாடு பேணப்பட்டு வந்தது.

137.
யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் படி, தம் சொந்தங்களின் மரணம் பற்றி அறிவிப்பர்வகளின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. பல நம்பகமான மூலங்களின் மதிப்பீட்டின் படி, 40,000 வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம். யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கழிந்த பின்பும், பொதுமக்கள் மரணம் பற்றிய ஏற்றுக் கொள்ளப்படடிக்கூடிய கணிப்பு இல்லை என்ற போதிலும், இத்தருணத்தில் 40,000 பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை நிராகரிக்க முடியாது என பல மூலங்களின் தகவல் குறிப்பிடுகிறது. பாதிக்கப்பட்ட அனைவர் பற்றி இனங்காண்பதற்கும் கொல்லப்பட்ட பொதுமக்கள் பற்றிய சரியானதொரு கணக்கைப் பெறுவதற்கும் உரியதொரு புலனாய்வு மாத்திரமே வழிவகுக்கும்.

பாதுகாப்பு விடயத்துக்கே அரசாங்கம் முக்கியத்துவம் அளித்தது: ஐநா நிபுணர் குழு அறிக்கை பாகம் - 08

(51)

(ஊ) யுத்த வலயத்திற்கு வெளியே மற்றும் பின்னர் நடந்தேறிய சம்பவங்கள் தொடர்பான நம்பத்தகு குற்றச்சாட்டுக்கள்

138.
வன்னி யுத்தத்தில் பிழைத்த பொதுமக்களின் இக்கட்டு நிலை அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங் களுக்குச் சென்றதும் முடிவுக்கு வரவில்லை. வன்னியிலிருந்து வெளியேறும் பெருந்திரளான மக்களை வரவேற்கத் தான் தயார் என அரசாங்கம் 2009 ஜனவரியில் இருந்தே அறிவித்திருந்த போதிலும், பெருந்திரளான மக்கள் வெளியே வந்தபோது அதற்கான போதிய வசதியினை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கவில்லை என்பதோடு, அதனைச் சமாளிப்பதற்கும் கஷ்டப்பட்டது. பொதுவாக மனிதாபிமான தேவைகள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் நலனை விட பாதுகாப்பு விடயங்களுக்கே அரசாங்கம் முன்னுரிமை வழங்கியது. .

139.
யுத்த வலயத்தில் இருந்து பொது மக்கள் வெளியே வந்ததும், தமக்குக் கிடைக்கும் வரவேற்பினைப் பற்றிப் பலர் அச்சம் கொண்டிருந்தனர். அவர்கள் பாரிய அழுத்தத்துக்குட்பட்டும் களைப்படைந்துமிருந்தனர். அநேகம் பேர் புதிதாக விதவைகளானவர்களாகவும், அனாதைகளானவர்களாகவும் அல்லது அங்கவீனற்றவர்களாகவும் இருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான இடம்பெயர்ந்தோர் யுத்தக் காயங்களுடன் காணப்பட்டனர். அவர்களுள் குறைந்த பட்சம் 2,000 அங்கவீனர்கள் இருந்தனர்.

பெருந்திரளானவர்கள் வெளியேறியதும் நிலைமை குழப்பமாக இருந்ததோடு, பல குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்திருந்தனர்.
இச்செயற்பாட்டின் போது குடும்பங்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு முகாம்களில் வைக்கப்பட்டன குடும்பத்தினரைக் கண்டு பிடித்து ஒன்று சேர்ப்பதற்கான ஏற்பாடு போதியளவாக இருக்கவில்லை என்பதோடு, இதில் பங்களிப்பதற்கு ஐ.சி.ஆர்.சி. அனுமதிக்கப்படவில்லை..

140.
குடும்பங்களில் இருந்து பிரிந்த நிலையில் பல பெண்கள் தனியாக்கப்பட்டதோடு பாலியல் வன்றைக்குப் பலியாகும் நிலையை எதிர்நோக்க வேண்டியி ருந்தது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் போதியளவு போசாக்கு, மருத்துவப் பராமரிப்பு இன்றியும் யுத்த வலயத்தில் இருந்த போது பாரிய மனோ தத்துவ ரீதியிலான அழுத்தங்களுக்கும் ஆளாகியிருந்தனர். கட்டாயமாகக் குழந்தைகள் அணி சேர்க்கப்பட்டது தாய்மார் மீது பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

141.
யுத்தம் இளம் வயதினர் மேல் குறிப்பானதொரு தாக்கத்தைக் கொண்டிருந்தது.

14 வயது சிறுவர்கள் கூட எல்.ரி.ரி.ஈ யினால் பலவந்தமாக அணி சேர்க்கப் பட்டனர். இள வயதில் திருமணத்தை உள்ளிட்ட அணி சேர்ப்பதைத் தவிர்ப்பதற் கான நடவடிக்கைகள் இளம் பெண் குழந்தைகளின் ஆரோக்கியம் மீது கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும், ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஷெல் வீச்சுக் காரணமாக மரணமடைந்து அல்லது அங்கவீனர்களாக ஆகினர். சில குழந்தைகள் பதுங்கு குழிகளில் இருந்து விளையாடுவதற்காக வெளியே சென்றதால் கொல்லப் பட்டார்கள். தீவிர போசாக்கு மதிப்பீடொன்றின் படி, 25 சதவீதமான குழந்தைகள் பாரிய ஊட்டச் சத்தின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

142.
பலமுறை இடம்பெயர நேர்ந்ததால் பல குழந்தைகள் மனோதத்துவ ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தனர். பலர் தம் பெற்றோரை இழந்திருந்ததோடு, தனியாக வெளியேறியதால் அவர்கள் பதியப் படவில்லை. அநேகமான குழந்தைகள் சத்துணவின்றியும் பல சிறு குழந்தைகள் உலர் தன்மையினால் அல்லது வயிற்றோட்டத்தினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

(52)

143.
அதேபோன்று, யுத்தத்தினால் முதியவர்களும் பாதிக்கப்பட்டார்கள். பல முறை நேர்ந்த இடம் பெயர்வு காரணமாக, முதியவர்களால் தொடர்ந்தும் நடக்க முடியவில்லையாதலால் அநேக சந்தர்ப்பங்களில் அவர்கள் கைவிடப்பட்டனர்.
இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் கவனிப்பாரற்ற நிலையில் இருந்த இன்னும் சிலர் களைப்பு மற்றும் தடுக்கக் கூடிய நோய்களினால் மரணமானார்கள்.

1. பிரிக்கும் செயற்பாட்டின் போதான மீறல்கள்

144.
வன்னியை விட்டகன்று வட்டுவாகல் பாலம் மற்றும் ஏனைய அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை அடைந்து யுத்தத்தில் உயிர் தப்பியவர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். உள்ளே வரும் பொதுமக்கள் பல்வேறு குழுக்களாகப் பிக்கப்பட்டார்கள்.

முதலில், இலங்கை இராணுவம் பொதுவாக ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்கள் இருக்கிறதா எனப் பார்ப்பதற்காக அவர்கள் உடம்பைச் சோதனை யிட்டது. (ஒரு சில) மடிக் கணணிகளும் கமராக்களும் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டபோது அவற்றிலிருந்த பெறுமதிமிக்க தகவல்கள் இல்லா மற்போயின. மக்கள் பின்பு அநேகமாக கால்நடையாக கிளிநொச்சி, புல்மோட்டை மற்றும் பதவிய போன்ற இடங்களில் அமைக்கப்பட்டிருந்த ஆரம்ப பிரிக்கும் அமைவிடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வமைவிடங்களில், ஒரு நாளாவது எல்.ரி.ரி.ஈ உடன் தொடர்புபட்டிருந்தவர்களை தம்மை இனங்கண்டு சரணடையுமாறு இலங்கை இராணுவம் அழைத் தது, அப்படிச் செய்பவர்களுக்குத் தொழிற் பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக உறுதி மொழி அளித்தது. மாறாக, எல்.ரி.ரி.ஈ என இனங்காணப்பட்டவர்கள் வேறு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கணிசமான எண்ணிக்கையிலான சந்தேகிக்கப்பட்ட எல்.ரி.ரி.ஈ இனர் பெண்களாகவும் சிறுவர்களாகவும் இருந்தனர்.

145.
மேலும், பிக்கப்பட்டு வேறு அமைவிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட முன்னாள் எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்களை இனங்காண்பதற்காக கருணா பிரிவு அல்லது தமிழ் ஈழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்) உறுப்பினர்களை அரசாங்கம் உபயோகித்தது. ஆரம்பப் பிரிக்கும் அமைவிடங்களுக்கான சர்வதேச மனிதாபிமான முகவர்களின் பிரவேசத்தை வேண்டுமென்றே அரசாங்கம் தடுத்தது.

146.
ஆரம்பப் பிரித்தெடுக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் ஓமந்தையில் உள்ள மற்றுமொரு பிரிக்கும் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட் டார்கள். ஆண்களும் பெண்களும் வெவ்வேறாகப் பரிசோதிக்கப்பட்ட போதிலும், பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் ஒரு அங்கமாக ஆடைகள் களையப்பட்டு அவர்கள் சோதனை இடப்பட்டதால் அவர்கள் அவமானத்துக்கு உட்பட்டதோடு, குறிப்பாக பெண்களும் சிறுமிகளும் தாக்கமுறும் சாத்தியம் அதிகத்தது.

எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு, அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஐ.சி.ஆர்.சி. ஓமந்தையில் ஓரளவிலான பிரவேசத்தைப் பெற்ற போதிலும், தனியாக மக்களை சந்தித்துப் பேச அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜூலை 2009 இற்குப் பின்னர், ஐ.சி.ஆர்.சி. இதிலிருந்து ழுமையாகத தடுக்கப்பட்டது.

(53)

147.
சிகிச்சை தேவைப்பட்ட பொது மக்கள் வவுனியாவில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள் அல்லது புல்மோட்டையில் இந்திய வைத் தியர்கள் சேவை புரிந்த மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார்கள்.

வவுனியா ஆஸ்பத்திரியில் காயமுற்றோர் நிரம்பி வழிந்து கொண்டிருந்ததால் பலர் சிகிச்சை முடிவடையுன்னர் வெளியேற்றப்பட்டதோடு சகல நோயாளிகளும் இலங்கை இராணுவத்தினன் காவலில் வைக்கப்பட்டு பொலிஸ் புலனாய்வாளர்களினால் (குற்றப் புலனாய்வுப் பிவு அல்லது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு) விசாரிக்கப்பட்டார்கள். சில நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் இருந்து மாயமானார்கள்.

148.
குறிப்பாக பிரிக்கும் செயற்பாட்டின் விளைவாக கொலைத் தண்டனைகள், காணாமாற்போதல், வன்புணர்ச்சி மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றன.

(அ) கொலைத் தண்டனைகள்

149.
இலங்கை இராணுவத்தின் பொறுப்பில் இருந்த சில எல்.ரி.ரி.ஈ . உறுப்பினர்கள் கொலைத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்பதை உறுதி செய்யப்பட்ட படச் சுருள்களும் பல புகைப்படங்களும் குறிப்பிடுவதாக இருந்தது. சிலரின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த பல இறந்த உறுப்பினர்களின் சடலங்களைக் (பொதுமக்களாகவும் இருக்கலாம்) காட்டும் புகைப்படங்கள் குழுவுக்குக் கிடைத்தன.

2009 ஆகஸ்ட் 25ஆம் திகதி யூகே யினைத் தளமாகக் கொண்ட சனல் 4 நியூஸ் ஊடகம் பல சிறைக்கைதிகள் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டு இலங்கை படை வீரர்களால் சடுதியாக மரண தண்டனை நிறைவேற்றப்படும் வீடியோப் படங்களை ஒளிபரப்பியது.

படத்திலிருந்த கைதிகள் நிர்வாணமாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டனர். மிக அருகில் இருந்து தலையில் சுடப்படு முன்னர் அவர்கள் உதைக்கப்பட்டு சேற்றில் தடுமாற விடப்பட்டார்கள்.

அதற்கு முன்னர் கொல்லப்பட்டிருக்கக் கூடிய ஏனைய பல சிறைக்கைதிகளையும் அப்படம் காட்டுகிறது. சனல் 4 இனால் 2010 டிசம்பர் 2ஆம் திகதி அதே காட்சியைக் கொண்ட இன்னுமொரு படம் நிலப்பரப்பின் மீது பார்வையைச் செலுத்தி கொலைத் தண்டனை நிறைவேற்றப்பட்ட நிர்வாண கோலத்தில் இருந்த மேலும் பல ஆண் மற்றும் பெண்களின் சடலங்களைக் காட்டியது. அவர்களுள் இளம் வயது சிறுவன் ஒருவனும் ஒரு பெண்ணும் காணப்பட்டார்கள். அப்பெண் எல்.ரி.ரி.ஈ யின் பிரசித்தி பெற்ற ஊடக தொகுப்பாளர் “இசைபிரியா' என இனங்காணப்பட்டது.

2009 மே 18ஆம் திகதி 53ஆவது படைப்பிரிவின் “எதிரி நடவடிக்கை' ஒன்றின் போது இசைப்பிரியா கொல்லப் பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணை யத்தளம் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கதாகும். நீடிக்கப்பட்ட வீடியோப் படம் சில படைவீரர்களின் முகங்களைக் காட்டுவதோடு சிலர் காட்சியை கைய டக்கத் தொலைபேசி மூலம் படம் பிடிப்பதையும் காணக் கூடியதாகவிருக்கிறது. .

150.
கொலைத் தண்டனை நிறை வேற்றப்படுவதற்கு முன் எடுக்கப்பட டதாகத் தெரியும் புகைப்படங்களில் உயிருடன் இருக்கும் சிறைக்கைதிகள் இடையே இச்சிறுவனை ஒத்த ஒருவன் இருப்பதையும் அவர்கள் கைகள் பின்னால் கட்டப்பட்டிருப்பதையும் காணக் கூடிய தாகவிருக்கிறது.

ஆரம்பத்தில் இலங்கை இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்ட சில எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் சித்திர வதைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதையும் புகைப்படங்களில் காணக் கூடியதாக விருக்கிறது. இரத்தம் வழிந்தோடும் நிலையில் மரமொன்றில் கட்டப்பட்ட இளம் ஆண் ஒருவரையும் வீடியோப்படம் ஒன்று காட்டுகிறது. பின்னர் புலிக் கொடியொன் றினால் போர்த்தப்பட்ட புதை குழியொன்றில் அவரைக் காணக் கூடியதாகவுள்ளது.

(54)

(ஆ) காணாமல்போதல்கள்

Geen opmerkingen:

Een reactie posten