குறுந்தகவல்(SMS) அனுப்பி சிக்கியுள்ள பாலித கோஹண: திடுக்கிடும் தகவல் !
14 May, 2011 by admin2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த விடுதலைப் புலிகளுடனான போரில், இலங்கை இராணுவம் சரணடைந்த பா.நடேசன் மற்றும் புலித்தேவன் உட்பட 20 பேரைச் சுட்டுகொண்றுள்ளது. போர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் செயலாளராகப் பணியாற்றியவர் பாலித கோஹண ஆவார். இச் சரணடைவு குறித்து அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து, வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்கு குறுந்தகவல் ஒன்றை மே 17 ம் திகதி அனுப்பியுள்ளார். இத் தகவல் தற்போது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதோடு அது ஒரு ஆதாரமாக மாறும் வாய்ப்பும் அதிகரித்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.
2009 மே மாதம் 17ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) சரியாக காலை 8.46 மணிக்கு அவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து குறுந்தகவல் ஒன்றை வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு அனுப்பியுள்ளார். அதில் பா.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோரை வெள்ளைக்கொடிகளைக் காட்டியவாறு, பசில் ராஜபக்ஷ குறிப்பிட்ட இடம் வழியாக வந்து 58ம் படைப் பிரிவிடம் சரணடையுமாறு பாலித கோஹண எழுதி இருக்கிறார். அவரிடம் இருந்து பெறப்பட்ட குறுந்தகவலை, வெளிநாட்டில் உள்ளவர் புலித்தேவனின் துறையா சட்டலைட் போனுக்கு அனுப்பிவைத்துள்ளார். பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோர் கூறியது போல சுமார் 20 பேர் அடங்கிய குழு முதல் கட்டமாக சரணடையச் சென்றுள்ளது.
அவர்கள் சரணடையச் செல்லும்போது, அதனை நேரில் பார்த்த சாட்சி தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்துவருகிறார்(பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் பெயர் வெளியிடப்படவில்லை). பசில் ராஜபக்ஷ மற்றும் பாலித கோஹண ஆகியோர் கூறியபடி, மறுநாள் காலை தமது குடும்பத்தார் சகிதம் சென்ற புலித்தேவன், மற்றும் பா.நடேசன் ஆகியோரை, 58 வது படைப்பிரிவு ஒரு ரிரக் வண்டியில் ஏற்றிச் சென்றுள்ளது. அவர்கள் சென்று சுமார் 30 நிமிடங்களில் பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக சம்பவ இடத்தில் நின்றவர் தெரிவிக்கிறார். அதன் பின்னர் உடனடியாகவே இலங்கை அரசு புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்தது யாவரும் அறிந்ததே.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள பாலித கோஹண, தற்போது ஐநாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாகக் கடமையாற்றுகிறார். இவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, என்பதனை நீதிமன்ற விசாரணைக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. புலிகளின் அரசியல் தலைவர்களை வஞ்சகமாக ஏமாற்றி, அவ்விடத்துக்கு வரவழைத்து, அவர்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவர்களில் பாலித கோஹண மிக முக்கியமான நபராகக் கருதப்படுகிறார். அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
.தற்போது இது குறித்து பாலித கோஹண எழுதிய குறுந்தகவல்களும், அவர் கையடக்கத் தொலைபேசியில் இருந்து வந்த குறுந்தகவல்களும் ஆதாரமாக இணைக்கப்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றது. இந் நிலையில் ஹெரல்ட் துப்பறியும் நிறுவனம் இது குறித்து மேலதிகத் தகவல்களை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தான் சரணடைவதற்காக வழியை அவர்களுக்கு குறுந்தகவல் ஊடாக தான் சொன்னதாகவும், அவர்களின் உயிருக்கு உத்தரவாதத்தை தான் கொடுக்கவில்லை என்று பாலித கோஹண ஆங்கில இணையம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். எது எவ்வாறு இருந்தாலும், பாலித கோஹணவுக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்கு மிகவும் காத்திரமான ஆதாரங்களைக் கொண்டுள்ளதாக அறியப்படுகிறது.
வழக்கு விசாரணைக்கு வரும் பட்சத்தில் அதில் இருந்து தப்பிக்க தனது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை அவர் ரத்துச்செய்ய தயங்கமாட்டார் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்படுகிறது.

Geen opmerkingen:
Een reactie posten