தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 mei 2011

வி.புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயார்: ரெஜி தெரிவிக்கிறார் !

30 April, 2011 by admin
ஐ.நா நிபுணர்கள் குழு தெரிவித்துள்ள பரிந்துரைகளில், சர்வதேச விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இவ்வறிக்கையை இலங்கை அரசு முற்று முழுதாக மறுத்துள்ளது. எந்த ஒரு விசாரணைக்கும் தாம் முகம் கொடுக்கத் தயார் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் விடுதலைப் புலிகள் அனைத்துலக விசாரணைக்கு தயாராக இருப்பதாக பிரேம் ரெஜி என்று அழைக்கப்படும் ரெஜி அவர்கள் தெரிவித்துள்ளார். ரெஜி அவர்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். இவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்துலக மட்டத்திலான விசாரணை ஒன்றிற்கு ஒத்துழைப்புகொடுக்கத் தயராகவே இருக்கின்றார்கள் என்றும், உண்மையில் இது தொடர்பாக ஏற்கனவே அவர்கள் நிபுணர் குழுவிற்குக் கடித மூலம் ஒத்துழைப்பதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தம்மீதான குற்றச்சாட்டுக்களை நியாயமான முறையில் எதிர்கொள்ளவே விரும்புகின்றார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

போரின் இறுதிக் கட்டங்களில் பொதுமக்களை அனைத்துலகப் பாதுகாப்புடன் ஒப்படைக்க அல்லது அவர்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்ல விடுதலைப்புலிகள் விருப்பம் தெரிவித்திருந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத்தின் உறுதிமொழி ஒன்றினைக் கேட்டிருந்தார்கள். ஆனால் அனைத்துலகம் சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. சிங்கள அரசிடம் பொதுமக்களைச் செல்ல அனுமதிப்பதன் மூலம் எத்தகைய விளைவுகள் ஏற்படும் என்பதை விடுதலைப்புலிகள் முன்பே அறிந்திருந்தார்கள். அவர்கள் நினைத்தது போலத்தான் இறுதியில் எல்லாம் நடந்தது.

விடுதலைப்புலிகள் ஏன் மக்களைச் சிறிலங்கா அரசிடம் ஒப்படைக்கத் தயக்கம் காட்டினார்கள் என்பதற்கான காரணத்திற்கும் நியாயத்திற்கும் அதன் பின்னர் சிங்கள அரசு அவர்களைக் கொடூரமாக நடத்திய விதம் சாட்சியாக இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten