தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 mei 2011

நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகப் புரளி: விசாரணை நடைபெற்றதாகத் தகவல் !

20 May, 2011 by admin
நோர்வேயில் வசித்துவரும் நெடியவன் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர் தடுப்புக்கவலில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அவர் கைதுசெய்யப்படவில்லை என்றும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் எனவும் அதிர்வு இணையத்துக்கு நம்பகரமான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது. நோர்வே நாட்டில், சிறுவர் பயிலும் பள்ளியில் வேலைசெய்துவரும் நெடியவனை புலிகளின் வெளிநாட்டுப் பிரிவின் தலைவர் என்றும், அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் கடந்தகாலங்களில் திட்டமிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. அவரைக் கைதுசெய்யவேண்டும் என்றும், இலங்கைக்கு நாடு கடத்தவேண்டும் என இலங்கை அரசு கோரிவந்தது யாவரும் அறிந்ததே.

இந் நிலையில் ஹொலன் அரசாங்கம் நோர்வே நாட்டில் நெடியவனுக்கு எதிராக ஒரு வழக்கை நடத்திவருகிறது. அந் நாட்டு நீதிமன்றம் கேட்டுகொண்டதற்கு அமைவாக, ஹொலன் நாட்டுப் பொலிசார், நெடியவன் வீட்டிற்குச் சென்று அவரை விசாரித்துள்ளனர். வாக்கு மூலம் பெறுவதற்காக அவர் ஓசிலோ நகருக்கு கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் உடனடியாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இதனிடையே பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் அவர் கைதாகியுள்ளதாக சில பொறுப்பற்ற ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது.

வெளிநாடுகளில் செயல்படும் தமிழ் உணர்வாளர்களையும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் மற்றும் ஆதரவாளர்களை இலங்கை அரசு தற்போது குறிவைத்து அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாகவே, இந் நகர்வு ஹொலன் நாட்டினூடாக ஆரம்பமாகியுள்ளது. புலிகளுக்கு பணம் சேர்த்தார் என பிரித்தானியாவில், சாந்தன் என்பவர் கைதாகி பின்னர் அவர் குற்றங்களை நிரூபிக்கமுடியாத பிரித்தானிய அரசு அவரைப் பின்னர் விடுதலை செய்தது. அதுபோல யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடரலாம் , ஆனால் அவை தகுந்த ஆதாரங்களோடு நிரூபிக்கப்படவேண்டும். நெடியவன் நோர்வேயில் கைது, என்பது போன்ற தகவல்களைப் பிரசுரித்து, செயல்பாட்டாளர்களையும், புலிகள் ஆதரவாளர்களையும் முடக்க இலங்கை அரசு போடும் நாடகமே இவையாகும்.

இதற்கு முகம்கொடுக்கவும், புலிகள் இயக்கத்தை மேலும் பலப்படுத்தவும் புலம்பெயர் மக்கள் எப்போதுமே தயாராகவே உள்ளனர். தேசிய கொடியை தாங்கிய வண்ணம் பல்லாயிரக்கணக்கான மக்கள் மே 18 அணிவகுத்ததை உலகம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. விடுதலைப் புலிகள் இலங்கையில் பின்னடைவைச் சந்தித்திருக்கலாம், ஆனால் புலம் பெயர் மக்கள் தமக்கு என்ன பிடிக்கும், தமது தலைவர் யார் என்பதனை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளனர் என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.

Geen opmerkingen:

Een reactie posten