தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 mei 2011

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை! உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் கோரிக்கை

 
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2011, 02:00.04 AM GMT ]
இலங்கை போர்க்குற்றம் புரிந்தது தொடர்பாக ஐ.நா., சபை அறிக்கை வெளியிடப்பட்டது. இறுதிப் போரில் பல ஆயிரம் தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்றுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இறுதிப்போரில் இலங்கை இராணுவத் தாக்குதலால் தான் உயிரிழப்பு அதிகமானது. 214 பக்க அறிக்கையில், இராணுவத் தாக்குதல் குறித்த படங்களும், ஆதாரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை தாக்கப்பட்டது தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் ஐ.நா., வெளியிட்டுள்ளது.
ஐ.நா. வல்லுநர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை தெரிவிக்குமாறு அனைத்து உறுப்பு நாடுகளையும் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரிந்துரைகள் கிடைத்தவுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten