தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 26 mei 2011

நெடியவனை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை

[ சனிக்கிழமை, 21 மே 2011, 01:41.01 AM GMT ]
கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர்   நெடியவனை  இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் அரசாங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கப் பிரமுகர் நெடியவன் கடந்த இருபதாம் திகதி நோர்வேயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தது தொடர்பான விசாரணைகள் தற்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவ்வாறான நிலையில் அவரைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நோர்வேயிடம் இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக நெடியவன் எனப்படும் சிவபரன் பேரின்பநாயகம் இலங்கையால் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருப்பவர் என்று  அரசாங்கம் தனது கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டியுள்ளது.
மேலும் நெடியவன் கைது செய்யப்பட்டிருக்கின்றமை தொடர்பான அனைத்து விபரங்களையும் தங்களிடம் சமர்ப்பிக்குமாறும் அரசாங்கம் நோர்வேயிடம் வேண்டிக்கொண்டுள்ளது. வெளிநாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதரகம் நெடியவன் சம்பந்தப்பட்ட விடயங்களைக் கையாளுகின்றது.

Geen opmerkingen:

Een reactie posten