தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 mei 2011

மக்கள் மீது எறிகணை வீசிய தூதுவர்: அவுஸ்திரேலிய வானொலி !

20 May, 2011 by admin
கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியிருந்த 300,000 இற்கு மேற்பட்ட பொதுமக்கள் மீது கடற்படைக் கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்களை மேற்கொண்ட சிறீலங்கா கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் திஸ்ஸரா சமரசிங்கா அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இக் கூற்றுகள் இலங்கைக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

1974 ஆம் ஆண்டு சிறீலங்கா கடற்படையில் இணைந்துகொண்ட சமரசிங்கா 2011 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றுள்ளார். சிறீலங்கா கடற்படையின் பிரதம அதிகாரியாக அவர் பணியாற்றியபோது தான் கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியிருந்த 300,000 பொதுமக்கள் மீது கடற்படை கப்பல்களில் இருந்து கண்மூடித்தனமாக எறிகணை வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அங்கு சிக்கியிருந்த காயமடைந்த பெண்களையும், குழந்தைகளையும் மீட்பதற்கு சென்ற அனைத்துலகச் செஞ்சிலுவைச்சங்கத்தின் கப்பலும் தடுக்கப்பட்டது.

இந்தோனேசியா படைகளின் ஜெனரல் ஹெமன் மன்ரிறி என்பவரை அவுஸ்திரேலியாவுக்கான தூதுவராக இந்தோனேசியா 1995 ஆம் ஆண்டு நியமித்தபோது அதனை அவுஸ்திரேலியா நிராகரித்திருந்தது. கிழக்கு தீமோரில் அவர் போர்க்குற்றங்களை மேற்கொண்டதாக அவுஸ்திரேலியா தெரிவித்திருந்தது என அவுஸ்திரேலியா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அரசுக்கு தொடர்ந்தும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Geen opmerkingen:

Een reactie posten