தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 mei 2011

ஆளுக்கொரு நீதியா?

லிபியாவில் அமெரிக்க சதியால் வெடித்த புரட்சியை  ஒடுக்கப்பட கடாபி ராணுவம் தாக்குதல் நடத்திய போது அதை பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல் என்று கூறி நேட்டோ தாக்குதல் நடத்த அதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஆசிவளங்கியது.அமெரிக்கா பாகிச்தானுள் அத்துமீறி பொதுமக்களை கொன்றபோது அவர்களை பயங்கரவாதிகள் என்று நேட்டோ நாடுகள் கூற அதை ஐக்கிய நாடுகள் சபையும் ஏற்றுக்கொண்டது.அப்படியானால் ஐக்கிய நாடுகள் சபை என்ன செய்கிறது?வலிமையானவர்களுக்கு தலையாட்டவும் நலிந்தோரை வதைக்கவுமா இவை இயங்குகின்றன??கடாபியும் ஒரு சர்வாதிகாரிதான்,அதன் உள்நாட்டுப் பிரச்சனையில் தலை நுழைப்பது சரி என்றால் அமெரிக்காவின் அநீதிகளை,இத்தாலியின் முதல்வர் காமக்களியாட்டங்களை,சக்கூசி போன்றோர் பார்த்தும் பாராமல் இருப்பது ஏனோ?சக்கூசி கூட பல ஊழல்களின் சொந்தக்காரர்தானே!!அப்படியிருக்க இவர்களுக்கு கல்லெறியும் உரிமையை கொடுத்த கிறிஸ்து யாரோ?
 பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா
[ சனிக்கிழமை, 07 மே 2011, 08:18.29 மு.ப GMT ] பாகிஸ்தானின் வடக்கு வெஜிரிஸ்தானில் அமெரிக்க படைகள் வான் தாக்குதல் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாகிஸ்தானின் தொலைக்காட்சி சானல் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான வடக்கு வெஜிரிஸ்தானில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கூறி அமெரிக்கப்படைகள் வான் தாக்குதல் நடத்தின. இதில் 13 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.
கடந்த 30ம் திகதியன்று தான் நள்ளிரவில் பின்‌லேடன் பதுங்கியிருந்த அபோதாபாத் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். அதன் பிறகு ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக அமெரிக்க வான் தாக்குதல் நடத்தியுள்ளது.
2011ம் ஆண்டு வரை அமெரிக்கப்படைகள் பாகிஸ்தானில் அத்துமீறி 26 முறை வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் பயங்கரவாதிகள் என நினைத்து வடக்கு வெஜரிஸ்தானில் 22 முறையும், தெற்கு வெஜரிஸ்தானில் 4 மு‌றையும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.
இந்த தாக்கதல்களால் இதுவரை மொத்தம் 180 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு பெரும்பாலும் அப்பாவி கிராம மக்களே பலியாகியுள்ளனர். இவ்வாறு அந்த தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த செயலுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

Geen opmerkingen:

Een reactie posten