வெளிவராத பின்லேடனின் இறந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது ?
06 May, 2011 by adminகடந்த திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2.00 மணிக்கு அமெரிக்க துறுப்புகள் பின்லேடன் மறைந்திருந்த பண்ணை விட்டுமேல் தாக்குதலை நடத்தியதாக தற்போது செய்திகள் துல்லியமாக வெளியாகியுள்ளது. சுமார் 40 நிமிடத்தில் நடந்து முடிந்த இத் தாக்குதலில் பின்லேடன் நிராயுதபாணியாக இருந்தவேளை அவரை தாம் சுட்டுக்கொண்றோம் என அமெரிக்கா தெரிவித்திருந்தது. அத்தோடு பின்லேடனின் படங்களையும் தாம் வெளியிடவில்லை என அமெரிக்க அறிவித்திருந்தது. இருப்பினும் சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டவேளை அவரின் புகைப்படங்கள் சில வெளியானபோது அவை போலியானவை என பின்னர் தெரியவந்தது யாவரும் அறிந்ததே.
தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்களில், அவரின் தலையில் சூடுபட்டு இருப்பது தெரிகிறது. அவருடன் சேர்ந்து மேலும் 2வரின் உடலங்கள் அடங்கிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இவை அனைத்தையும் தாம் அமெரிக்க சிறப்புப்படையினரிடம் இருந்து பெற்றதாக, ஆங்கில இணையம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் தற்போது வெளியான புகைப்படங்களை சுயாதீனமாக ஊர்ஜிதம் செய்யமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:
Een reactie posten