தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 mei 2011

ஆடு நனையுதுன்னு ஓநாய்கள் அழுததாம்!!

கடாபி வீடு அருகே அடுத்தடுத்து குண்டு மழை

[ செவ்வாய்க்கிழமை, 17 மே 2011, 08:44.52 மு.ப GMT ]
நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதலை நிறுத்தினால் போர் நிறுத்தம் மேற்கொள்ள தயாராக உள்ளதாக கடாபி தெரிவித்து உள்ளார்.
போர் நிறுத்தத்தை அறிவிக்க கடாபி தயாரானாலும் அவரை கைது செய்வதற்கான வாரண்டை பெற சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் தலைமை விசாரணையாளர் விண்ணப்பித்துள்ளார்.
லிபிய தலைநகர் திரிபோலியில் கடாபி வீடு அருகே உள்ள அல் அசிசியா பகுதியில் செவ்வாய்க்கிழமை 2 குண்டு வெடிப்புகள் ஏற்பட்டன. இந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து வெள்ளை நிற புகை அந்த பகுதியில் பரவியது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.30 மணிக்கும், 11.30 மணிக்கும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்தது.
திரிபோலிக்கு புறநகர் பகுதியிலும் நேட்டோ படைகள் தங்களது தாக்குதலை துவக்கின. இந்த தாக்குதலில் லிபிய ராணுவத்தின் ரேடார் மையங்கள் அழிக்கப்பட்டன.
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொல்வதற்கு காரணமாக உள்ள கடாபி, அவரது மகன் செய்ப் அல் இஸ்லம், புலனாய்வுத் துறை தலைவர் அப்துல்லா செனுசி ஆகியோரை மனித இனத்திற்கு எதிரான குற்ற நிகழ்வுகளுக்காக கைது செய்ய வாரண்ட கோருகிறோம் என விசாரணயாளர் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten