தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 mei 2011

நெடியவன் விசாரணை: மர்மக் கதை போன்ற உளவுத்துறை பின்னணி!

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தற்போதைய தலைவராக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுவந்த நெடியவன், நோர்வேயில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

நெடியவனின் இயற்பெயர் பேரின்பநாயகம் சிவபரன். நெடியவன் விசாரணை செய்யப்பட்டுள்ள விபரத்தை நோர்வேயின் தொலைக்காட்சி சேவையான TV-2 இன்று காலை உறுதிப்படுத்தியிருக்கின்றது.

நோர்வேயில் வைத்து விசாரிக்கப்பட்டாலும், நெதர்லாந்து உளவுப் பிரிவினரின் வேண்டுகோளின் பேரிலேயே நெடியவன் விசாரிக்கப்பட்டுள்ளார்.

நோர்வே பொலீஸ் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மில்லியன் கணக்கிலான யூரோ பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாகவே இவர் விசாரிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது.

இந்தப் பண விவகாரம் தொடர்பாக சிலர் ஏற்கனவே நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதுபற்றிய முக்கிய வழக்கு ஒன்றும் நெதர்லாந்து நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது. இந்த விவகாரம் முதலில் வெளியே தெரியவந்தது, கடந்த வருடம் (2010) ஏப்ரல் மாதத்தில்தான்.

அப்போதுதான் நெதர்லாந்தில் இதனுடன் தொடர்பான முதல் கைதுகள் இடம்பெற்றன. ஆனால் அதற்கு முன்னரே, பின்னணியில் பல காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

விறுவிறுப்பான மர்ம நாவல் போன்ற அந்த விபரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். ஆரம்பத்தில் நெதர்லாந்து பொலீஸ்தான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருந்தது.

நெதர்லாந்துப் பிரஜை ஒருவர், ரொத்தர்டாம் பொலீஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார். குறிப்பிட்ட ஒரு நபர், தம்மை வற்புறுத்தி பண வசூல் செய்கின்றார் என்பதே அந்த முறைப்பாடு.

அடுத்த சில தினங்களில், இதேபோல வேறு சில முறைப்பாடுகளும் வெவ்வேறு பொலீஸ் நிலையங்களில் பதிவாகின. இந்தப் பதிவுகள் நெதர்லாந்தின் வெவ்வேறு நகரங்களிலும் பதிவாகியிருந்தன.

இந்தப் பதிவுகள் நெதர்லாந்து பொலீஸ் இலாகாவுக்கு ‘தலைக்குள் மணியடிக்க’ வைத்தது! இது ஒரு தனிப்பட்ட கொடுக்கல்-வாங்கல் அல்ல, ஒருவிதமான பணச் சேகரிப்பு என்பது அவர்களுக்குப் புரிந்தது. அவர்கள் தமக்குக் கிடைத்திருந்த சில ‘பணச் சேகரிப்பு’ தொடர்பான விபரங்களை ஆராய்ந்தபோது, சில வில்லங்கமான தகவல்கள் கிடைத்தன.

இவை சாதாரண பணப்பரிமாற்றங்கள் அல்ல என்பதற்கான அறிகுறிகளும் தென்பட்டன. ஆனால், நெதர்லாந்து பொலீஸ் யாரையும் கைது செய்யவில்லை.

வற்புறுத்தி பணம் சேகரிப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரை, சுதந்திரமாக வெளியே திரிய விட்டிருந்தது நெதர்லாந்து பொலீஸ். ஆனால் அவரது நடமாட்டங்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டன. இது மாதக்கணக்கில் நடந்தது.

இந்தக் கண்காணிப்பு ஒருபக்கமாக நடந்து கொண்டிருக்க, தமது விசாரணையை ரகசியமாக விஸ்தரித்தது நெதர்லாந்து பொலீஸ். அந்த விசாரணைகளில், பணச் சேகரிப்பு நடைபெறுவது உறுதியாகியது.

இந்தப் பணம் போய்ச் சேர்ந்த இடம், நெதர்லாந்துக்கு வெளியே, விடுதலைப்புலிகள் அமைப்பின் அலுவலகம் ஒன்றுக்கு என்ற விபரமும் கிடைத்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தினால் 2006ம் ஆண்டே பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டு, தடைசெய்யப்பட்டிருந்தது.

நெதர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளில் ஒன்று. இதனால், இந்தப் பணப் பரிமாற்றங்கள், தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றுக்கான ‘நிதி சேகரிப்பு’ என்ற வகைக்குள் வந்தது. விஷயம் ‘பெரியது’ என்று தெரிய வந்ததும் நெதர்லாந்து பொலீஸ் இலாகா, இந்த விவகாரம் தமது சக்திக்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து கொண்டது.

அதையடுத்து தாம் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் நெதர்லாந்து உளவுப்பிரிவு ஒன்றிடம் ஒப்படைத்தது பொலீஸ் இலாகா.

மற்றைய நாடுகளைப் போலவே, நெதர்லாந்திலும் ஒன்றுக்கு மேற்பட்ட உளவுப்பிரிவுகள் உள்ளன. இவற்றில் நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவின் கைகளிலேயே இந்த விபரங்கள் போய்ச் சேர்ந்தன.

டச் மொழியில் Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்று அழைக்கப்படும் இந்த உளவுப்பிரிவின் தலைமையகம், Zoetermeer என்ற இடத்தில் உள்ளது. AIVD, தமது பாணியில் மேலதிக விபரங்களைச் சேகரிக்கத் தொடங்கியது.

நெதர்லாந்திலிருந்த சில தொலைபேசி இலக்கங்கள் அவர்களது கண்காணிப்புக்குள் வந்தன.

அந்தத் தொலைபேசி இலக்கங்களுக்கு வந்த சில அழைப்புகள் அவர்களை ஆச்சரியப்பட வைத்தன. சில வெளிநாடுகளில் இருந்து வந்த தொலைபேசி அழைப்புகளில், நெதர்லாந்தில் நடைபெறும் பணப் பரிமாற்றங்கள் பற்றி அவ்வளவாக பேசப்படவில்லை.

ஆனால், அந்தந்த வெளிநாடுகளில் நடைபெற்ற பணப்பரிமாற்றங்கள் பற்றிய கணக்குகள், நெதர்லாந்து தொலைபேசி இலக்கத்துக்கு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. இது AIVDக்கு முதலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், போகப்போக, வெளிநாட்டுப் பணச் சேகரிப்புக் கணக்குகளும் நெதர்லாந்திலுள்ள ஒரு நபருக்குத் தெரிவிக்கப்படுகின்றது என்று புரிந்து போனது.

அந்த நபர் சர்வதேச அளவில் பணச்சேகரிப்புக் கணக்குகளைக் கையாளும் நபராக இருக்கலாம் எனவும் ஊகிக்கப்பட்டது. இது நடைபெற்றுக்கொண்டு இருக்கையில், வெளிநாடுகளில் இருந்து பணம் பற்றிய கணக்குகள் மாத்திரமே நெதர்லாந்துக்குள் வருகின்றன, ஆனால், பணம் வருவதில்லை என்பது கவனிக்கப்பட்டது.

மாறாக, நெதர்லாந்தில் சேகரிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி, நெதர்லாந்துக்கு வெளியே செல்வது தெரியவந்தது. இதிலிருந்து, பணம் கணக்குப் பார்க்கப்படும் இடம்தான் நெதர்லாந்து என்றும், பணம் போய்ச்சேரும் இடம் நெதர்லாந்துக்கு வெளியே இருக்கிறது என்றும் ஊகித்தது உளவுத்துறை.

அதையடுத்து, சில வெளிநாட்டு உளவுத்துறைகளிடமிருந்தும் இந்தப் பணப்பரிமாற்றங்கள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டது AIVD. இந்த வகையில் AIVD தொடர்புகொண்ட வெளிநாட்டு உளவுத்துறைகளில் ஒன்று, ஜேர்மன் உளவுத்துறையான Bundesnachrichtendienst (BND) அவர்களும் கிட்டத்தட்ட இதேபோன்ற பணப்பரிமாற்றங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பில் இருந்தது அப்போது தெரியவந்தது.

நெதர்லாந்து உளவுத்துறையும், ஜேர்மன் உளவுத்துறையும் தத்தமது கையிலுள்ள தகவல்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர். அப்போதுதான், முதன்முதலில் இந்த விவகாரத்துக்கு ஒரு முழு உருவம் கிடைக்கத் தொடங்கியது.

பணப்பரிமாற்றத்தின் ஜேர்மனித் தொடர்புகள் பற்றிய விபரங்கள் கிடைத்தன. நெதர்லாந்து உளவுத்துறை சம்மந்தப்பட்ட ஆட்களை வெளியே சுதந்திரமாக உலாவவிட்டு விபரங்களைச் சேகரித்ததுபோலச் செயற்படவில்லை ஜேர்மன் உளவுத்துறை.

அவர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிவிட்டனர். கடந்த வருடம் மார்ச் மாத முதல் வாரத்தில், ஜேர்மன் உளவுப்பிரிவினர் ஜேர்மனியிலுள்ள மொத்தம் 8 இடங்களை ஒரேநேரத்தில் சுற்றி வளைத்தனர். இந்த 8 இடங்களில், தமிழர் தொடர்பு மையம் ஒன்றின் அலுவலகமும் அடக்கம்.

இந்தச் சுற்றிவளைப்பில் ஜேர்மன் பிரஜாவுரிமை பெற்றவர்கள் உட்பட, 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஜேர்மன் கைதுகளுடன், நெதர்லாந்தில் விஷயங்கள் கொஞ்சம் குழம்பிப் போயின. தங்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஆட்கள் உடனடியாகவே வெளித் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்துக் கொண்டதை AIVD கவனித்தது.

இனியும் இவர்களை வெளியே விட்டு வைத்திருப்பதால், மேலதிக தகவல்கள் கிடைக்கப் போவதில்லை என்பதும் புரிந்து போனது. இதன் பின்னரே, AIVD தனது வேட்டையைத் தொடங்கியது. ஏப்ரல் மாதம், நான்காவது வாரம்.

நெதர்லாந்து உளவுத்துறை ஒரே நேரத்தில் மொத்தம் 16 இடங்களைச் சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதாகினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ரொக்கப் பணமாக 40,000 யூரோக்களும் எடுக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு பிரதான கணக்காளரும், நெதர்லாந்துத் தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது. இந்தக் கட்டத்தில், விவகாரம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது.

தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது. வழக்கு ஒருபுறத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்க, AIVD இந்த விவகாரத்தில் மேலதிக உளவுத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது. காரணம், இந்தப் பணப்பரிமாற்றங்கள், ஒரு சர்வதேச வலையமைப்பாகச் செயற்பட்ட தகவல்கள் அவர்களிடம் கிடைத்திருந்தன.

அதேநேரத்தில் ஜேர்மனியில் BND, தமது விசாரணை வட்டத்துக்குள் இருந்தவர்களை விசாரித்து, இந்த வலையமைப்பின் பரிமாணங்களைப் புரிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்தது.. அவர்களது விசாரணையில் வித்தியாசமான தகவல் ஒன்று கிடைத்தது. அது என்னவென்றால், ஜேர்மனியில் பணச் சேகரிப்புடன் தொடர்புடைய ஒருவர், யுத்தம் முடிவடைந்தபின் தம்வசமிருந்த பணத்துடன் ஜேர்மனியைவிட்டு வெளியேறிவிட்டார் என்பது.

அவருக்கு வலைவிரித்த ஜேர்மன் உளவுத்துறை, அவர் ஆபிரிக்காவில் மடகாஸ்கரில் தன்னிடமுள்ள பணத்துடன் செட்டிலாகிவிட்டதைத் தெரிந்து கொண்டது. BND கோரியதையடுத்து அந்த நபர் மடகாஸ்காரிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

ஜேர்மன் பிரஜையான அவர் டியூசல்டோஃப் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது, அவரைக் கைது செய்து தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டது BND. நெதர்லாந்து உளவுத்துறையிடம் இந்த சர்வதேச வலையமைப்பு தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கத் தொடங்கின.

பிரிட்டன், சுவிஸ், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே உட்பட சில நாடுகளில் இந்த வலையமைப்பில் இணைக்கப்பட்டிருந்த தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அந்த நாடுகளின் உளவுத் துறைகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டது. AIVDயின் அதிகாரிகள் இந்த நாடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

சேகரிக்கப்பட்ட பணத்துக்கு என்ன ஆயிற்று என்று விசாரித்தபோது, இவர்களால் விசாரிக்கப்பட்ட அனைவருமே ஒரே திசையை நோக்கித்தான் கையைக் காட்டியிருக்கிறார்கள். “All roads lead to Rome” என்று சொல்வதைப்போல, எல்லாத் தகவல்களும் நோர்வேயில் வசிக்கும் நெடியவன் என்ற நபரை நோக்கியே இருந்திருக்கின்றன.

அதையடுத்தே நெடியவனை விசாரிக்கும் முடிவு நெதர்லாந்தில் எடுக்கப்பட்டது. நோர்வேயின் உதவியும் கோரப்பட்டது. சட்டரீதியான இந்த விவகாரத்தில் நெதர்லாந்துக்கு உதவ, நோர்வேக்கு எந்தத் தயக்கமும் இருக்கவில்லை. கடந்த புதன்கிழமை (மே 18ம் தேதி) உலகின் வெவ்வேறு நகரங்களிலும் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தது தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.

இவற்றில் பல நெடியவனின் தலைமையிலான குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டவை என்று கூறப்பட்டது. இந்த நிகழ்வுகள் நடைபெற்ற அதே மே 18ம் தேதி, நெடியவன் ஒஸ்லோவில் விசாரணை செய்யப்பட்டுக் கொண்டிருந்தார்! நெதர்லாந்திலிருந்து இந்த விசாரணைக்கென்று விசேடமாக ஒரு நீதிபதியும், ஆறு டிஃபென்ஸ் அட்டேர்னிகளும் நோர்வே சென்றிருந்தனர்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில், மூடிய அறைக்குள் நெடியவன் மீதான விசாரணைகள் நடைபெற்றன. விசாரணைகள் வீடியோவில் படம்பிடிக்கப்பட்டன.

விசாரணையின்பின் என்ன நடக்கும்? தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவாரா? விசாரணையில் என்ன விபரங்கள் வெளிவரும்? வேறு யாராவது, வேறு நாடுகளில் வைத்து விசாரிக்கப்படுவார்களா? இவைதான் இன்று மில்லியன் டொலர் கேள்விகள்.

சும்மா பேச்சுக்குச் சொல்லவில்லை; உண்மையிலேயே ‘மில்லியன் டொலர்’ கேள்விகள்தான். காரணம், இந்த வழக்கே பல மில்லியன் டொலர் பணத்தைப் பற்றியதுதானே

தமிழரை அச்சுறுத்தி புலிகள் பணம் பறித்தனராம் ஊடகவியலாளர் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ் இனத்துரோகி சேது நோர்வே நாட்டு தொலைக்காட்சிக்கு பேட்டி

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் நோர்வேயில் தமிழர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை அச்சுறுத்திப் பறித்தனர் என்று தெரிவித்து உள்ளார் அங்கு வாழும் இலங்கைத் தமிழ்??... ஒருவரான சேது என்று அழைக்கப்படும் நடராஜா சேதுரூபன்.

வயது 33. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்று முடிந்த இறுதி யுத்தத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்று நோர்வே நாடாளுமன்றத்துக்கு வெளியில் நேற்று இடம்பெற்றது.

பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று இருந்தனர். ஆனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாத தமிழ்ப் பிரமுகர்களில் சேதுவும் ஒருவர். இந்நிலையில் நோர்வே நாட்டு தொலைக்காட்சி ஊடகங்களில் ஒன்றான ரி.வி - 2 இவரைப் பேட்டி கண்டது.

இந்தப் பேட்டியிலேயே சேது இவ்வாறு குற்றஞ்சாட்டி உள்ளார். இவர் பேட்டியில் தெரிவித்து இருப்பவை வருமாறு:- " இலங்கையில் போராட்டத்தை தொடர்கின்றமைக்காக புலிகள் நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்களிடம் இருந்து பெருந்தொகைப் பணத்தை அச்சுறுத்திப் பறித்தனர். நான் 33,000 டொலர் கொடுத்து இருந்தேன்.

ஒருவரின் நிதி நிலைமையை அறிந்த பிற்பாடு தொடர்பு கொள்வார்கள். வசதி இல்லை... தர முடியாது என்று சொல்கின்றபோது 300, 000 அல்லது அரை மில்லியன் குரோனுக்கு அதிகமாக அக்ககுடும்பம் சம்பாதிக்கின்றது என சுட்டிக் காட்டுவர்.

நான் 2002 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை நிர்ப்பந்தத்தின் பேரில் பணம் கொடுத்து வந்திருக்கின்றேன். கடைசியில் தொல்லை தாங்காமல் பொலிஸாருக்கு முறையிட்டேன். நோர்வேயில் புலிகள் அச்சுறுதிப் பணம் பறித்த 15 சம்பவங்களை நான் நன்கு அறிவேன். என்னிடம் ஆதாரங்களும் உள்ளன. "
20 May 2011

நோர்வேயில் நெடியவன் ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடி கைது
நோர்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார்.

கொலன் நாட்டில் இருந்து வந்த சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்டு தேடுதலுக்கு உள்ளாக்கபட்டு நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டார்.

நெடியவன் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடியான வழக்கை எதிர் நோக்கி வருகின்றார். இது தொடர்பாக இன்று நோர்வே தொலைக்காட்சியான ரிவி2 செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளதாவது...

நோர்வே நாட்டில் குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் வேலை செய்து வருகிறார் நெடியவன். புலி பயங்கரவாதத்திற்கு பல மில்லியன் பணத்தை இவர் ஜரோப்பாவில் இருந்து கையாள்வதாக கொலன் நாட்டு பொலிசார் நோர்வே நாட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

கொலன் நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டபடி இரகசிய நீதிமன்ற வழக்கு ஒண்றை நோர்வே நாட்டின் நீதிமன்றில் கொலன் அரசாங்கம் நடத்தி வருகிறது.

கொலன் நாட்டின் பயங்கரவாத நிபுணரின் குற்றச்சாட்டுபடி நெடியவன் மிகவும் பலம் பொருந்திய முக்கியமான முதுகெலும்பாக புலிகள் இயக்த்திற்கு செயல்பட்டுள்ளதுடன் முக்கிய பாத்திரமும் வகித்துள்ளார்.

நெடியவனின் வீடு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நோர்வேயில் முற்றுகை

நோர்வேயின் தலைநகரத்திற்கு வெளியே பேகன் என்ற மாவட்டத்திற்கு அருகில் உள்ள ஒரு பிராந்தியத்தில் வாழ்ந்துவரும் நெடியவனின் வீடு கொலன் நாட்டு பொலிசாரால் முற்றுகையிடப்பட்டதுடன் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தினர்.

கொலன் நாட்டில் இருந்து வந்த பொலிசார் நெடியவனின் வீட்டை நீதிமன்ற அனுமதியுடன் சோதனை செய்தனர். புலிகள் ஜரோப்பிய சட்டபடி பயங்கரவாதிகளாக அறிவிக்கபட்டுள்ளதால் புலிகளின் பணத்தை கையாண்ட நெடியவன் பயங்கரவாத சட்டபடி இந்த தேடுதல் வேட்டைக்கும் விசாரணைக்கும் உட்டபட்டதாக ரிவி2 தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

நோர்வே பாராளுமன்றத்திற்கும் வந்திருந்தார்

2003ஆம் ஆண்டு நடுபகுதியில் இருந்து நெடியவன் புலிகளின் தூதுக்குழுவில் ஒரு அங்கத்தவராக பல தடவை நோர்வே வந்திருந்தார். இவர்கள் நோர்வே பாராளுமன்றத்தில் எரிக் சொல்கைம்மை சந்தித்தித்திருந்தனர்.

நோர்வேயில் புலிகள் பகிரங்கமாக செயற்பட்டு வருகின்றனர். அமெரிக்காவிலும் அவுஸ்ரேலியாவிலும் ஜரோப்பிய நாடுகளிலும் புலிகள் பயங்கரவாத அமைப்பாக தடை செய்யபட்டுள்ளது.

நோர்வேயின் அமெரிக்காவுக்கு ஆதரவான கொள்கை உடைய கென்சவேரிவ் (நோர்வேயின் எதிர்கட்சி) கட்சியினர் புலிகளை ஜரோப்பிய நாடுகள் 27இல் பயங்கரவாதிகளாக அறிவித்ததை போன்று அறிவிக்க வேண்டும் என பகிரங்கமாக நோர்வேயில் அறிவித்துள்ளனர்.

கென்சவேட்டிக் கட்சியினரின் காலத்திலேயே புலிகளுக்கும் ரணில் அரசுக்கும் நோர்வே அரசின் ஆதரவுடன் பேச்சகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது தொழில் கட்சி ஆட்சி நடத்தியும் வருகின்றது.
19 May 2011

Geen opmerkingen:

Een reactie posten