சுயலாப நோக்கில் புலம்பெயர் தமிழ் மக்கள் இருக்கிறார்களாம் !
08 May, 2011 by adminகீழ்த்தரமான பிரபலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், நிதி திரட்டுவதற்காகவும் புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நிபுணர் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச்சாட்டுகளுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து அவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவி மிகவும் கௌரவமிக்கது எனவும், அவருக்கு எதிராக சேறு பூசும் செயற்பாடுகள் ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றிய போது அப்பாவி பொதுமக்களையும், எஞ்சிய போராளிகளையும் பாதுகாக்குமாறு தாம் பிரபாகரனிடம் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக்கோரிக்கையை பிரபாகரன் அவர்கள் செவிசாய்க்கவில்லை எனவும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தாம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாறாக, அநேகமானோர் நிதி உதவிகளை வழங்கி யுத்தத்தை ஊக்கப்படுத்தியதாக அவர் புலம்பெயர் சமூகம் மீது பாரிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten