17 December, 2010 by admin
2009 மே 18ம் திகதிக்குப் பின்னர் தமிழ் இணையங்களில் மனிதப் பேரவலம் பற்றிப் பேசப்பட்டதோ இல்லையோ அறிக்கைகள் என்ற போர்வையில் தாராளமாக பல கட்டுரைகளும், தொடர் அறிக்கைகளும், தகவல்களும் பாகம் பாகமாக வெளியாகிவருகின்றன. தாம் புலனாய்வுப் போராளி என்றும், சர்வதேசப் பொறுப்பாளர் என்றும், ஊடகப் பொறுப்பாளர் என்றும், படையணிப் பொறுப்பாளர் என்றும், அரசியல் துறை என்றும், ஒரு படி மேலே போய் சர்வதேச புலனாய்வுப் போராளி என்று கூட பலர் தமது சொந்தக் கருத்துக்களை இணையங்களூடாக வெளியிட்டுவருகின்றனர். விடுதலைப் புலிகள் இயக்கம் மீது வேற்று நாட்டவர்கள்( மேற்குலகினர்) பல விமர்சனங்களை வைத்தாலும், ஏன் புலிகள் எதிர்ப்பு தமிழராக இருந்தாலும் அவர்கள் எல்லாரும் கூறுவது ஒன்று தான் ! புலிகள் இயக்கம் சிறந்த கட்டுப்பாடு உடைய இயக்கம் என்று. அதாவது அவர்கள் ஒரு நேர்த்தியான கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்பது பொருள்.
புலிகள் இயக்கத்தில் இருந்து மாத்தையாவை விலக்கிய போது, புலிகள் இயக்கம் அதனை கட்டுரையாக எழுதவில்லை. புலிகள் இயக்கத்தில் இருந்து சில போராளிகள் காட்டிக்கொடுப்புகளை மேற்கொண்டு இராணுவத்தின் பக்கம் சாய்ந்த வேளை புலிகள் அது தொடர்பாக ஊடக அறிக்கை விடவில்லை, அதற்கும் மேல் கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தவேளை புலம்பெயர் மக்களிடம் புலிகள் புலம்பவில்லை, எதனையும் எடுத்து வந்து ஊடக அறிக்கையாகவோ இல்லை கட்டுரையாகவோ சமர்ப்பிக்கவில்லை. புலிகளின் தலைமை இதனை ஒருபோதும் செய்ததில்லை. அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்றே எண்ணிச் செயல்பட்டனர். உண்மையான புலிப் போராளிகள் இதுபோன்று ஊடக அறிக்கையையும் கட்டுரைகளையும் வெளியிட்டு நாட்களை கடத்துவதும் இல்லை.
நான் படையணிப் பொறுப்பாளராக இருந்தேன் என்று சொல்லி ஒருவரைப் பற்றி குறை கூறி ஒரு கட்டுரை. நான் புலனாய்வுப் போராளியாக இருந்தேன் என்று இன்னுமொருவரை குறை கூறி ஒரு அறிக்கை. நாங்கள் ஊடகத்தை ஒன்று சேர்க்கப் போகிறோம் என்று சொல்லி ஒரு கும்பல், ஊடகங்கள் எங்கள் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் என்று சொல்லி மற்றொரு கும்பல், நான் சர்வதேச புலனாய்வுப் போராளி என்று இன்னுமொரு கட்டுரை, நிதித் துறை, நிர்வாகக்கட்டமைப்பு, ஆயுதக் கொள்வனவு, என புலிகளின் துறையில் இருந்தோம் என்று சொல்லி, புலிகளிடம் என்ன என்ன துறைகள் இருந்ததோ அதை அனைத்தையும் பாவித்து கட்டுரை எழுதுகிறார்கள். கட்டுரை எழுதும் எவராவது திரும்பவும் இலங்கை சென்று போராடத் தயாரா ? இல்லை புலம்பெயர் நாட்டில் போராடும் பொது மக்களைக் குழப்ப தயார் நிலையில் நீங்கள் இருக்கிறீகளா ?
இதனால் மக்களுக்கு நீங்கள் சொல்லவரும் செய்தி தான் என்ன ? இவ்வாறு தொடர்ந்து நாமே எமக்குள் மோதிக்கொள்வதாலும், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுப்பதாலும், ஒருவர் மீது ஒருவர் குறைகூறுவதாலும் என்ன பயன் ? இதற்காகவா எமது தேசிய தலைவர் 33 வருடங்கள் காட்டிலும் மழையிலும் கஷ்டப்பட்டுப் போராடினார் ? இதற்காகவா 33,000 போராளிகள் தமது உயிரைத் தியாகம்செய்தார்கள். ஜாலியாகச் சுற்றித் திரியவேண்டிய வயதில் இதற்காகவா கழுத்தில் நஞ்சைக் கட்டித் திரிந்தார்கள் ? குழுக் குழுவாகப் பிரிந்து நின்று நாம் மல்லுக் கட்டுவதைப் பார்த்து சிங்களவன் எள்ளிச் சிரிக்கவா நாம் இவ்வாறு ஈடுபடுகிறோம் ? தெளிவாக உள்ள புலம்பெயர் மக்களைக் குழப்பி, நான் புலிகள் இயக்க உறுப்பினர் என பலர் கட்டுரைகளை எழுதி, வீட்டுச் சண்டையை ஏன் முற் சந்திக்கு கொண்டுவரவேண்டும் ? இதனால் புலம்பெயர் மக்கள் புலிகளை வெறுக்கும் சூழ் நிலைக்கு தள்ள நினைக்கிறீர்களா ?
ஒரு சிலர் தமக்குள் இருக்கும் காழ்புணர்வுகளை ஏன் சந்திசிரிக்கும் அளவுக்கு கொண்டுவரவேன்டும் ? நாம் நாகரீகமான உலககில் 20 ம் நூற்றாண்டில் வாழ்கிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம். எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபரை அழைத்துப் பேசி தீர்வு காணலாம், நாங்கள் ஒன்றும் சிங்களவனை சமாதானம் பேசக் கூப்பிடவில்லையே. நாம் எல்லோரும் தமிழர்கள் தானே ஏன் பேசித் தீர்க்க முடியாது ? இந்தச் சின்ன விடையத்தில் எம்முள் ஒற்றுமை இல்லை என்றால் பின்னர் எங்கிருந்து இந்த ஒற்றுமை வரப்போகிறது ? தமிழ்ச்செல்வன் அண்ணா நினைவு தினம் என்றால் 2 அல்லது 3 அறிக்கை, மாவீரர் தினம் என்றால் 3 அறிக்கை என பல அறிக்கைகள் ஊடகங்களுக்கு அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு அறிக்கையும் தாமே புலிகளின் தலைமைப் பீடம் என்கிறார்கள்.
இதனால் எதைப் போடுவது என்று தெரியாத நிலையில் ஊடகங்கள் திண்டாடுவதை யார் அறிவார் ? இதன் காரணமகவே எந்த அறிக்கையையும் போடுவது இல்லை என அதிர்வு இணையம் முடிவெடுத்தது. முதலில் ஒற்றுமையா முயற்ச்சி செய்யுங்கள், பின்னர் ஒரு அறிக்கையாக எமக்கு தாருங்கள் நாங்கள் அதைப் பிரசுரிக்கிறோம் என்று நாம் கூற, புலிகளின் மாவீரர் தின அறிக்கையை அதிர்வு போடவில்லை அது அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்துவிட்டது என அதற்கும் ஒரு கற்பனைக் காராணத்தை கண்டறிந்து சொல்கின்றனர் சிலர். எமது பலம் ஒற்றுமையில் இருக்கிறது. "எமது பலவீனத்தை வெளிவந்துகொண்டிருக்கும் கட்டுரைகள் காண்பிக்கிறது"
புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் பலமாக இருந்தகாலமாக இருந்தாலும் சரி, பலமிழந்த காலமாக இருந்தாலும் சரி அவர்கள் எப்போதுமே எந்த ஊடகங்களையும் கைப்பற்ற நினைக்கவில்லை. தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ, இல்லை தாம் சொல்லும் செய்திகளை வெளியிடவோ நிர்பந்திக்கவில்லை. இந் நிலையில் புதிதாக புலத்தில் பலர் முளைவிட்டுள்ளனர். தாம் அந்தப் பொறுப்பில் இருந்தோம் இதில் இருந்தோம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்க்க இருக்கிறோம் என்கிறார்கள். நாம் எப்போது பிரிந்தோம் ? பிரிந்தோம் என்று அவர்களே கூறியும் கொள்கிறார்கள்.
இலங்கைக்கு எதிராக எத்தனையோ போராட்ட முன்னெடுப்புகளை நாம் சேர்ந்து நடத்தவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் உள்ளோம். 33,000 போராளிகள், 40,000 பொதுமக்களை காவுகொடுத்துள்ளோம். மேலும் 10,000 பேருக்கு மேல் அங்கவீனர்களாக உள்ளனர். நாம் எவ்வகையான போராட்டங்களை முன்னெடுக்கப்போகிறோம் என்று தமிழர்களை வழிநடத்தவேண்டிய பொறுப்புள்ள சில இணையங்கள் தொடர்ந்தும் இது போன்ற ஒருவரை ஒருவர் குறைகூறும் கட்டுரைகளை வெளியிடுவதை நிறுத்தவேண்டும். அப்படி வெளியிட்டால் கூட மக்கள் அதனைப் படிப்பதை தவிர்க்கவேண்டும். இனி மக்கள் இவ்வாறான கட்டுரைகளை புறக்கணிக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கை. வீண் பிரச்சனைகளை தோற்றுவிக்கும் இது போன்ற கட்டுரைகளும், தொடர் கட்டுரைகளும் நிறுத்தப்படவேண்டும். இதனை நாம் தற்போது எழுதுவதால் எம்மீதும் சேறு பூசும் நடவடிக்கை முடிக்கிவிடப்படும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் மக்களுக்கு சரியான செய்தி சென்றுசேரவேண்டும். விடுதலைப் புலிகள் மீண்டு எழவேண்டும் ! மக்கள் போராட்டம் வெடிக்கவேண்டும் என்பதே எமது நோக்கம் இதில் மாற்றம் இல்லை.
தமிழர்களுக்கு ஒரு பொது எதிரி இருக்கிறான் அவன் தான் சிங்கள அரசு. எனவே அதை மறந்து விட்டு எமக்குள் நாமே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டவேண்டியதில்லை. ஒற்றுமையாக செயல்படுவோம், இல்லை செயல்பட வழி விடுங்கள். உலகில் ஒரு இனமும் கண்டிராத பேரழிவு ஒன்றை நாம் சந்தித்து மீண்டுவரும் நிலையில் இதுபோன்ற நிகழ்வுகள் மக்கள் போராட்டத்தை மழுங்கடிக்கும், இதில் வருந்தத் தக்க விடையம் என்னவென்றல் முரண்பாடாகச் செயல்படும், அல்லது ஒருவரை ஒருவர் குறைகூறும் இது போன்ற நபர்களுக்கும் இலங்கை அரசுக்கும் பெரும்பாலும் தொடர்பே இல்லை. எல்லோருமே தமிழ் தேசியத்துக்காகப் பாடுபடுபவர்கள் தான். ஆனால் சொந்த விருப்பு வெறுப்புக் காரணங்களுக்காக இவ்வாறு செயல்படுகின்றார்கள். எனவே அதனை நாம் கொஞ்சம் விலக்கி, பொதுவான எதிரி சிங்கள அரசு.மீது எங்கள் கவனத்தை திசை திருப்பினாலே போதுமே, எதிரியை திணறடிக்க முடியும்.
எனவே "தமிழால்", "தமிழ் உணர்வால்", "தேசியத்தால்" , "தேசிய தலைவரின் பாதையால்", "எமது தமிழ் தாயால்", "மாண்ட பொதுமக்களால்", "மரணித்த மாவீரர்கள்" இதை அனைத்தையும் நினைத்து ஒன்றுபடுவோம் !
அதிர்வின் ஆசிரியபீடம்.

Geen opmerkingen:
Een reactie posten