தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 mei 2011

உண்மைதான்!!

புலிகள் அழிந்து எம்மையும் பின்தள்ளிவிட்டனர்: பிரபா எம்.பி !
16 May, 2011 by admin
கடந்தகால போராட்டங்களின்போது எங்களுக்கும் உள்மனதில் சிறு ஆசை இருந்தது. சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமென. ஆனால் அவர்கள் (புலிகள்) கிடைத்த பல வாய்ப்புக்களை தவறவிட்டிருக்கிறார்கள். எமது நாட்டின் ஜனாதிபதிகள் பலமுறை பல சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்ததனால் தாமும் அழிந்து எங்களையும் அழிவிற்குள் தள்ளி பின்தள்ளிவிட்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் கூறினார். ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைமை காரியாலயம் கொழும்பு பம்பலப்பிட்டியில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அங்கு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் மேற்படி குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்..

இன்று இங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற தொழிற்சங்க காரியாலயமானது மக்களின் நலனுக்காகவே பயன்படவுள்ளது. குறிப்பாக அடக்கி ஒடுக்கப்படுகின்ற தோட்ட தொழிலாளர்களின் அவலங்களுக்கு குரல்கொடுக்கின்ற இடமாகவே இது இருக்கும். இது என்னுடைய கட்சி காரியாலயமல்ல. இது உங்களின் (தோட்ட தொழிலாளர்களின்) காரியாலயம். இங்கு எந்நேரமும் நீங்கள் வரலாம். உங்கள் குறைகளை எங்களிடம் தெரிவியுங்கள். நிச்சயமாக உங்கள் குறை தீர்க்க நாங்கள் பாடுபடுவோம். ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினராக இருந்து கொண்டுதான் இந்த தொழிற்சங்கத்தையும் ஆரம்பித்திருக்கிறேன். இதன்நோக்கம் எனது அரசியலை ஸ்திரப்படுத்துவதல்ல. பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவுவதே.

எத்தனையோ தொழிற்சங்கங்கள் மலையக்கத்தில் இருக்கின்றன. தோட்டத் தொழிலாளர்களிடம் அவை தவறாமல் சந்தாவும் அறவிடுகின்றன. ஆனால் நினைத்த நேரத்தில் தோட்டத் தொழிலாளர்களினால் அந்த தொழிற்சங்கங்களை நெருங்கக்கூட முடியாது. ஆனால் இந்த ஜனநாயக மக்கள் காங்கிரஸ் காரியாலயம் எந்நேரமும் தோட்டத் தொழிலாளர்களுக்காக திறந்திருக்கும் என்பதை நான் உறுதிபடக் கூறிக்கொள்கிறேன். நான் எந்தக் கட்சியுடன் சேர்ந்திருக்கிறேன் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு என்ன செய்கிறேன் என்பதுதான் முக்கியமானது. அந்தவகையில் ஜனாதிபதியின் இக்கட்டான நிலையில் நாங்கள் அணிசேர்ந்து உதவியிருக்கிறோம். அதற்காக எங்கள்மீது மிகுந்த நம்பிக்கையை வைத்திருக்கிறார் ஜனாதிபதி. எமது மக்களுக்காக ஜனாதிபதியுடன் பேரம் பேசக்கூடிய தகுதி எங்களுக்கிருக்கிறது. நிச்சயமாக அவர் (ஜனாதிபதி) எங்கள் கோரிக்கைகளை செவிமடுப்பார் என்ற நம்பிக்கையும் எமக்கிருக்கிறது.

கடந்தகால போராட்டங்களின்போது எங்களுக்கும் உள்மனதில் சிறு ஆசை இருந்தது. சிறுபான்மை மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமென. ஆனால் அவர்கள் (புலிகள்) கிடைத்த பல வாய்ப்புக்களை தவறவிட்டிருக்கிறார்கள். எமது நாட்டின் ஜனாதிபதிகள் பலமுறை பல சந்தர்ப்பங்களை வழங்கியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்ததனால் தாமும் அழிந்து எங்களையும் அழிவிற்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள். அப்படியொரு வரலாற்று தவறினை நாங்கள் இளைக்க விரும்பவில்லை. எமக்கான வாய்ப்புக்களை சரியாக நாங்கள் பற்றிப் பிடிக்கவே விரும்புகின்றோம்..' என்று குறிப்பிட்டார் நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன்.

Geen opmerkingen:

Een reactie posten