தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 mei 2011

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் பின்லேடனின் 3 மனைவிகள்

அல்-கொய்தா தலைவர் பின்லேடனுக்கு 3 மனைவிகள் உள்ளனர். அவர்கள் மூலம் பின்லேடனுக்கு 11 குழந்தைகள் பிறந்தனர்.

அமெரிக்க ராணுவம் கடந்த 2-ந்தேதி அபோதாபாத் நகரில் அதிரடி தாக்குதல் நடத்தியபோது பின்லேடனுடன் 3 மனைவிகள், 11 மகன்கள், மகள்கள் உடன் இருந்தனர்.


பின்லேடன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவரது ஒரு மகன், ஒரு மகள் அமெரிக்க வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்லேடனின் மனைவிகளில் இளம் மனைவி ஒருவர் மட்டும் பின்லேடனை காப்பாற்ற ஓடினார். அவரது காலில் ராணுவ வீரர்கள் சுட்டனர். இதனால் அவர் மயங்கி விழுந்து விட்டார்.

பெண்கள், சிறுவர், சிறுமிகள் மீது துப்பாக்கியால் சுடுவதைத் தவிர்த்த அமெரிக்க ராணுவத்தினர், அவர்கள் அனைவரையும் விசாரணைக்காக தங்களுடன் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால், அவர்களது திட்டம் தோல்வியில் முடிந்தது. எனவே அவர்கள் பின்லேடன் உடலையும் அவரது மகன் உடலையும் மட்டும் எடுத்துச்சென்றனர்.

பின்லேடன் பயன்படுத்திய பொருட்களை எடுத்துச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் பின்லேடனின் மனைவிகளையும் மகன், மகள்களையும் விட்டுச் சென்று விட்டனர்.

அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி சென்ற பிறகே அந்த பங்களாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் சென்றது. அங்கு இருந்த பின்லேடனின் 3 மனைவிகள் மற்றும் குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தற்போது அவர்கள் ராணுவ முகாம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் கமாண்டோ வீரர்கள் அவர்களுக்கு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். பின்லேடன் மனைவிகளிடம் விசாரணை நடத்த விரும்புவதால் அவர்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் பின்லேடன் உறவினர்கள் யாரையும் ஒப்படைக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
09 May 2011

Geen opmerkingen:

Een reactie posten