தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 28 mei 2011

இஸ்ரேல் மொசாட் படை வழங்கும் ஒத்த பாதுகாப்பு தலைவருக்கு வழங்கப்பட்டதா ?

10 January, 2011 by admin





அவரது வீட்டிற்கு நேரடியாக உள்ளே செல்லக்கூடிய ஒரு பாதையும், பின்புறமாகவும் வேகமாகவும் பதுங்கு குழிக்குள் செல்லக்கூடிய வகையில் ஒரு பாதை இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதாவது இலங்கை போர் விமானங்கள் அவர் வாகனத் தொடரணியை பின் தொடர்ந்து வந்தால் கூட, அவர் வாகனம் நேரடியாக சுரங்கப் பாதைக்கு செல்லும் திறன்கொண்டதாக அது அமைந்துள்ளது என அவ்வதிகாரி விளக்கியுள்ளார். இதுபோன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவான "மொசாட்" அமைப்பாலேயே அதிகம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் விவரித்துள்ளார். அதுபோல மொசாட் படையினர் கொடுக்கும் ஆலோசனைகளைப் போன்ற அமைப்புகளே அங்கே காணப்பட்டதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

மிகவும் நேர்த்தியாகவும், சமாந்தரமாகவும் எவரும் உட்புகுமுடியாத அளவு உச்சக்கட்ட பாதுகாப்பு அவருக்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தலைவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், முக்கிய நபர்களைப் பாதுகாக்கும் பயிற்சிகளைப் பெற்றிருந்ததாகவும், அவர்கள் பல வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் எவ்வாறு தனது தலைவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவார்கள் என்ற விடையத்தை நன்குகற்றுத் தெரிந்துவைத்திருந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இப் பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பல புத்தகங்களும், பாதுகாப்பு சம்பந்தமான வீடியோக்களுமே இதற்கு ஆதரம் என்கிறார் அந்த அதிகாரி. தேசிய தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும், அவ்விடத்தை இராணுவம் தற்போது இரகசியக் கட்டளைப் பீடமாக மாற்றியுள்ளதாகவும் அறியப்படுகிறது.








Geen opmerkingen:

Een reactie posten