(IPKF)
28 December, 2010 by adminஉத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார், பத்திரமுல்லையில் அமைந்துள்ள இந்தியப் படையினரின் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்டப் போவதாகக் கூறிக்கொண்டு வந்த இந்தியப் படையினர் தமிழர் தாயகத்தில் செய்த பேரழிவுகளை தமிழர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். பல விடுதலைப் போராளிகளை அழித்தும், பொதுமக்களை கொலைசெய்தும், தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தியும் இந்தியக் கூலிப்படைகள் தனது வெறியைத் தீர்த்துக்கொண்டன.
உங்கள் தெருவில் இன்று இரவு திடீர் சோதனை நடக்கவிருக்கிறது, நீங்கள் வயதுக்குவந்த பெண்களோடு இருக்கிறீர்கள் ஆனபடியால் இன்று இரவு உங்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிடுங்கள் என்று இந்திய இராணுவத்தில் பணியாற்றிய தமிழன் ஒருவர் கூறியது இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. தமிழ் நாட்டைச் சேர்ந்த அவருக்கு ஹிந்திக்காரனும், சீக்கியரும், குர்க்கா படையினரும் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பது நன்கு தெரிந்திருக்கிறது. தமிழன் என்ற உணர்வால் இந்திய இராணுவத்தின் ரகசியங்களைக்கூட வெளியே சொல்லிப் பல ஈழத் தமிழ் பெண்களின் மானம் காத்தனர் தமிழ் நாட்டவர்.
இந்திய ராணுவம் இலங்கை வந்தபோது, இந்தியாவின் ஒரு பாகமாக இலங்கை மாறப்போகிறது என்று ஓலமிட்டபடியே திரிந்த அரசியல் அனாதை வேறுயாரும் அல்ல மகிந்தரே தான். அதற்கான வீடியோ ஆதாரங்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இனக்கொலை புரிந்த இராணுவத்திற்கு நினைவுத்தூபிகள் அமைத்துக்கொடுத்துள்ளது இனவாத இலங்கை அரசு.

Geen opmerkingen:
Een reactie posten