தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 20 mei 2011

யாழ்.நகரில் முள்ளிவாய்க்காலில் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அஞ்சலி - அழையா விருந்தாளிகளாக புகுந்து கொண்ட இராணுவம்

[ வியாழக்கிழமை, 19 மே 2011, 08:03.23 PM GMT ]
முள்ளிவாய்க்காலில் படுபாதகத்தனமாக கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ்மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அஞ்சலிக்கூட்டமொன்று இன்று மாலை யாழ்.நகரில் இடம்பெற்றுள்ளது.
யாழ்.கலைத்தூது கலைக்கூடத்தில் நடைபெற்ற மேற்படி அஞ்சலி நிகழ்வில் கொன்றொழிக்கப்பட்ட இலட்சக்கணக்கான மக்களுக்கா திரண்டு வந்த மக்கள் தீபாராதணைகளைச் செலுத்தினர். தொடர்ந்து சர்வமதத்தலைவர்கள் ஆத்மசாந்தி உரைகளை நிகழ்த்த சர்வமதங்களின் சார்பில் இசை வழிபாடுகளும் நடைபெற்றது.
முன்னதாக தொடர்ச்சியாக 5நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இது தமிழர்கின் சுதந்திரப்போராட்டத்தில் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காக நடத்தப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் அழையா விருந்தாளிகளாக புகுந்து கொண்ட இராணுவக் காடையர்கள் தங்கள் இழிசெயலைக் காண்பித்துள்ளனர்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.நகரில் இந்த அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது. மிகவும் அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் நடந்த மேற்படி அஞ்சலி நிகழ்வின் இறுதியில் அங்கு வந்த இராணுவத்தினர் மக்களை விசாரித்ததோடு.
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் முன்னாள் பராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன்சிவாஜிலிங்கம்சிறில் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்களையும் மக்களையும் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என கூறியுள்ளனர்.
இதற்கு காரணம் கேட்டபோது தமது உயர் அதிகாரி அங்கு வரவேண்டும் என கூறியுள்ளனர். எனினும் அங்கு சுமார் 30நிமிடங்கள் வரை எந்த அதிகாரிகளும் வராத நிலையில் சிப்பாய்கள் மெல்ல அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டனர்.
இது எமது மக்கள் மீது அடிமைத்தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ள தன்மையையும் எங்களை இன்னமும் அடிமைகளா தங்கள் வெற்றி மமதையோடு பார்க்கும் தன்மையையே காண்பிக்கின்றது.

Geen opmerkingen:

Een reactie posten