தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 6 mei 2011

வன்னிப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படவில்லை என்கிற பாரம்பரிய தோழருக்கு சுமந்திரனின் தோழமையான கடிதம்…!!!

15 வருடங்களாக நான் ஆயுதம் தாங்கி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் இலங்கை அரசபடைகளுக்கு எதிரான போராட்டத்தைத் தலைமைதாங்கினேன். பின்னதாக நான் பொது அரசியலில் இணைந்து கொண்டேன். தஸ்ருமன் அறிக்கையில் (மகிந்த அரசும் அதன் ஆதரவாளர்களும் ஐக்கிய நாடுகள் அறிக்கையை இவ்வாறு அழைக்கிறார்கள்) கூறப்பட்டுள்ளது போல அப்படி நடந்திருந்தால், நான் ஜனநாயக வழிமுறைகளூடாக இது வரை நீதியைத் தேடிப் போயிருப்பேன்.”
“பிரபாகரனது, தமிழீழ விடுதலைப் புலிகளதும் தோல்வியடைந்த அரசியலின் விளைவாக நாடு ஆயிரமாயிரம் அப்பாவித் மக்களை இழந்துள்ளது. கடந்த முப்பது வருடமாக புலிகளுடைய ஆட்சியில் வடக்கிலும் கிழக்கிலும் கொல்லப்பட்ட 70 ஆயிரத்திற்கும் அதிகமான அப்பாவிகளின் உயிரிற்குப் பிரபாகரனே பொறுப்பானவர். “
கடந்த 28ம் திகதி “மாண்புமிக்க” அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்ற முன்னை நாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலைப் படையின் தளபதி ஆசியன் திரிபியூன் என்ற இலங்கை அரச ஆதரவு இணையத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது உதிர்த்த பொன் மொழிகள் இவை.
(இந்தப் “பொன்மொழிகளிலிருந்து” டக்ளஸ் தேவாவிற்கு ஒரு குறுக்கு ஆலோசனைக்கடிதம் எழுத எண்ணியதன் பலன் கீழே தரும் கடிதம். – சுமந்திரன்)
வன்னியில் மக்கள் ஆயிரமாயிரமாய் உங்கள் அரச படைகளால் கொன்று குவிக்கப்பட்டதைப் பன் கீ மூன் குழு எழுதியதை விடுங்கள், நீங்கள் தானே அந்தத் தேசத்தின் எல்லைப் புறங்களில் குறுக்கும் மறுக்குமாக நடந்து திரிந்தவர். உங்கள் நண்பரும் உலகின் அரச பயங்கரவாதிகளில் அருவருக்கத் தககவருமான கோதாபாய ராஜபக்ச மில்லியன்கள் செலவு செய்து வாங்கிக் குவித்த ஆயுதங்கள் எல்லாம் வானத்தை நோக்கியா சுட்டுத் தீர்த்தார்கள்?
நீங்கள் சார்ந்த ஒடுகப்படும் தேசிய இனமான தமிழ்த் தேசிய இனத்தின் வானை நோக்கி ஒலித்த ஆயியமாயிரம் அவலக் குரல்களுக்கு நீங்கள் வாழ்ந்து, கப்பலோட்டி, வணிகம் செய்து, கொலை செய்து, கொள்ளயடித்து மகிழும் ஜனநாயகத்தில் நீதி பெற்றுக் கொடுத்திருக்கலாமே?
கொலை செய்து, சாட்சியின்றி அழித்துத் துவம்சம் செய்யப்பட்டவர்கள் போக எஞ்சிய குழந்தைகள், முதியோர், நிறைமாதப் பெண்கள் என்று 3 லட்சம் அப்பாவிகளைத் திறந்த வெளி முகாம்களில் அடைத்துவைத்து அழித்த போது நீங்கள் எங்கே போனீர்கள்.
மீள் குடியேற்றம் என்ற பெயரில் நடத்தப்படும் அனீதியான வியாபாரத்திற்கு நீங்களுமா துணை போகிறீர்கள்?
எனக்கும் நாலம் வாய்க்கலிற்கும் பிற்ப்புத் தொடர்புண்டு. அதாவது “தொப்புள்கொடி உறவு”. நான் ரெஸ்ரோரன்டில் இரவிரவாக வேலைசெய்து பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அனுப்பிய பணத்தை உங்களைப் போன்ற துணைக்குழு பகிர்ந்துகொண்டதெல்லாம் பெரிய கதை.
நீங்கள் தளபதியாக தமிழீழம் பெற்றுத் தருவோம் என இந்தியாவிற்கு அழைத்துச் சென்ற நூற்றுக் கணக்கான இளைஞர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் புலம் பெயர் நாடு ஒன்றில் நீங்கள் நடத்திய கூட்டம் ஒன்றிற்கு வந்து அமைதியான மூலையில் அமர்ந்து நீங்கள் ஓதியவற்றைச் செவிமடுத்திருக்கிறேன்.
சங்குவேலியிலும், கட்டுவனிலும், சாவகச்சேரியிலும் துப்பாக்கி நபர்கள் புடை சூழ இயக்கத் தோழனாக மூன்று முறை சந்தித்திருக்கிறேன். இது நான்காவது தடவை. மாண்பு மிகுந்தவரே, அப்போது தமிழ் மக்கள் அழிக்கப்படுவது உண்மை என்றும் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதும் அரசாங்கத்திடமிருந்து அத்தனை உரிமைகளையும் பெற்றுத் தருவதாகக் கூறினீர்கள்.
விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுத் தான் இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டதே, சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல், பட்டினிச் சாவு, நாளாந்தக் கைதுகள், கொலைகள் என்று அத்தனையும் நடக்கும் போது காந்தித் தாத்தா பொம்மை போல “தீயதைக் கேளாதே” என்று கண்களைப் பொத்திக் கொள்கிறீர்களோ?
நான் ஒரு புலம் பெயர் நாட்டில் தான் வாழ்கிறேன். புலியாக மாறிவிட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள்! அதுதானே உங்கள் பிரசாரத் தந்திரோபாயம்!! நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னால் வன்னியில் நடந்தது என்ன என்று அப்பாவி மக்கள் சொன்னதும், யாழ்ப்பாணத்தில் நடப்பது என்ன என்று அவ்வப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்வதும் உங்கள் காதுகளில் விழவில்லையோ. அதுவும் கொல்லப்படலாம் எனத் தெரிந்தும் அவர்கள் துணிந்து சாட்ட்சியமளிக்கும் தியாகத்தை, வீரத்தை, துணிவைக் கண்டு நீங்கள் வெட்கப்பட்டதில்லையா?
தோள்களில் துணிப்பையை மாட்டிக்கொண்டு கொழும்புத் தெருக்களில் அலையும் பிரகீத் போன்ற எத்தனை ஊடகவியலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
சிங்களத்தில் தேசிய கீதமும் தமிழில் தேவாரமும் படித்தால் உரிமை பெற்றுவிட்டதாக அருத்தப்படுத்தினீர்களோ?
சரி தமிழ்ப் பேசும் மக்களில் ஒரு பெரிய பகுதி புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் மீது தீராத வெறுப்படைந்தவராக நீங்கள் இருக்கிறீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். சிங்கள மக்கள் மத்தியில் ஜனநாயகத்திற்காகவும், மனித உரிமைக்காகவும், மனிதாபிமானத்திற்காகவும் குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள், மனிதாபிமானிகள், ஜனநாயகவாதிகள் நடுத்தெருவில் கொலைசெய்யப்பட்டு வீசியெறியப்படும் போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்.?
நீங்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டவர் என்று பெருமிதமாகச் சொல்கிறீர்கள். நீங்கள் ஆயுதம் ஏந்திய போது இருந்த அடக்கு முறைகள் இன்றிருப்பதைவிடக் குறைவாகத் தான் இருந்தன. இன்றோ நேரடியான குடியேற்றங்கள்,இராணுவ அழிப்பு, சிங்கள மயமாக்கல், கொலை, குடும்ப சர்வாதிகாரம், ஜனநாயகமறுப்பு என்பன எல்லாம் மனித குலம் அவமானப்படும் வகையில் மக்களை உயிருடன் தின்ன்றுகொண்டிருக்கிறதே? ஆக, இன்னொரு முறை நீங்கள் ஆயுதம் ஏந்த வேண்டும் என எண்னவில்லையா?
சில மாதங்களின் முன்னால் யாழ்ப்பாணத்திற்கும் கிளிநொச்சிக்கும் சென்று வந்த போதுதான் தெரிந்துகொண்டேன்! அரச பாசிசம் என்பதன் உள்ளர்த்தத்தை கண்முன்னால் புரிந்துகொண்டேன்!! உங்களது காவல்படைகளின் அட்டூழியம், அநாகரீகம் எல்லாம் தெளிவாகத்தெரிந்தது!!!
முன்னை நாள் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மனோவியல் மற்றும் உடலியல் சித்திரவதைகள், முகாம்களில் மக்கள் படும் வேதனை எல்லாம் நீங்கள் அரச பாசிசத்தின் விசுவாசமான பிரதிநிதி என்பதைற்கு வாழும் ஆதாரங்கள்..
உங்களது நேர்காணலில் பன் கீ மூன், அன்பான மகிந்தவிற்கும், திறமையான இராணுவத்திற்கும் எதிரான அறிக்கை விட்டுப் பணத்தை விரயமாக்கியுள்ளதாக அங்கலாய்க்கிறீர்கள். உங்கள் மகிந்த குடும்ப வியாபாரிகளின் வருமான வரி எச்சங்களே நீங்கள் சில முகாம்களில் உள்ளவர்களுக்கு வாழ்வளிக்கப் போதுமானது.
மக்கள் பாவம். உயிர் மீது அக்கறையற்றவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் வேறு. அமைச்சர் வேடமெல்லாம் போட்டு ஒரு அந்தஸ்த்தை வைத்திருக்கிறீர்கள். பருத்தித் துறை முனையிலிருந்து கதிர்காமம் ஈறாக எத்தனை பேர் உங்களுக்கு இருக்கிறார்கள். உங்களால் எல்லாத்தையும் கைவிட்டு மக்களைப் போல் மகிந்தவிற்கு எதிர்ப்புக்க்காட்ட முடியுமா? இல்லையே! உங்களது “முன்னைநாள்” என்ற வகையில் எனக்கு ஒரு குறுக்கு யோசனை தோன்றுகிறது.
எங்காவது அன்னிய தேசத்திற்கு ஏலக்கூடியவற்றை எடுத்துக்கொண்டு வாருங்கள். மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். மகிந்த குடும்பத்தை அம்பலப்படுத்துங்கள். பேரினவாதிகளின் கொடுமைகளைக் கூறுங்கள். அப்பட்டிச் செய்தால் உங்கள் மாண்புமிகுவிற்குப் பதிலாகப் பொறுக்கி என்பதைப் போடலாம் என்று எண்ணுகிற மௌனமாய் அழும் மக்கள் “தியாகி” என்று போட்டுக்கொள்வார்கள். நீங்கள் எதற்காக ஆயுதம் ஏந்தினீர்களோ அதற்காக, பிரபாகரன் வழியில் இல்லாமல் நிதானமாக ஆயுதம் ஏந்தக் காத்திருகும் எதிர்காலச் சந்ததி உங்களை நண்பனாக, தோழனாகப் போற்றும்.
மகாவம்சம் போல அல்லாமல், ராமாயணம் போல அல்லாமல், இலங்கைப் பாடப் புத்தகங்கள் சொல்லும் வரலாறு போல அல்லாமல் உண்மையான வரலாறு உங்களைப் பற்றி எழுதும். செய்வீர்களா?
 நன்றி! இனியொரு இணையம்

Geen opmerkingen:

Een reactie posten