தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 mei 2011

ராஜிவ் காந்தியின் படுகொலைக்கு இந்தியாவிடம் மன்னிப்புக் கேட்கிறார் கே.பி.

 (வீடியோ இணைப்பு)
தமிழீழ விடுதலைப்புலிகள், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ததற்காக அரச தடுப்பில் உள்ள விடுதலைப்புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான முன்னாள் செயலாளர் குமரன் பத்மநாதன் இந்தியாவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.


சிஎன்என்- ஐபிஎன் தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தியின் படுகொலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த படுகொலை பிரபாகரனும் பொட்டுஅம்மானும் மிகவும் நன்றாகத் திட்டமிட்டு நடத்தியதென்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.

இந்திய மக்களுக்கு குறிப்பாக ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கு நான் சொல்ல விரும்புவது, பிரபாகரனின் தவறுக்காக நான் மன்னிப்புக் கோருகிறேன்.

தயவுசெய்து எங்களை மன்னித்து விடுங்கள். உங்களை நாம் வேண்டிக் கொள்கிறோம். இதற்காக எல்லோரும் மன்னியுங்கள். ராஜிவ்காந்தியின் மகன் மற்றும் மகளின் உணர்வுகளை நாம் புரிந்து கொள்கிறோம்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏற்கனவே அதிக விலை கொடுத்து விட்டார்கள். இனிமேல் எதையும் இழக்கக் கூடாது. தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்றும் குமரன் பத்மநாதன் அந்த செவ்வியில் மேலும் தெரிவித்துள்ளார்
24 May 2011

Geen opmerkingen:

Een reactie posten