தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 8 mei 2011

ஆளுக்கொரு நீதி!!பணம் பந்தியிலே..............,

போராளிகள் மீது விமானத்தாக்குதல் நடாத்திய லிபிய ராணுவத்தை அடக்குவதாக சொன்ன நேட்டோ உறுப்பு நாடுகள் லிபிய ராணுவத்தை நோக்கி விமானத்தாக்குதல்(லிபிய ராணுவத்திடமில்லாத பயங்கர வெடி குண்டுகள் மூலம்)செய்வதுடன் அதிபர் கடாபி மாளிகையிலும் தாக்கியுள்ளனர்.அதிபர் மாளிகையில் எதைக்கண்டு தாக்குதல் நடத்தினர் என்று அவர்கள் சார்பின கூறுவார்களா?கடாபி சர்வாதிகாரியாயின் உலகின் அதாக நாடுகளால் ஏற்கப்படாத இந்த யுத்தத்தை செய்யும் நேட்டோ நாடுகள் பயங்கரவாதிகளா?

பிரிட்டன் தாக்குதலில் லிபிய ஏவுகணைகள் நொறுங்கின

[ ஞாயிற்றுக்கிழமை, 08 மே 2011, 08:51.24 மு.ப GMT ]
பிரிட்டனின் ஹொரயல் படைப்பிரிவு(ஆர்.ஏ.எப்) தாக்குதலில் லிபியாவின் ராக்கெட் ஏவுதளங்களும், ஸ்கட் ஏவுகணைகளை ஏற்றிச் செல்லும் கன்டெய்னர்களும் நொறுங்கின.
லிபியாவில் உள்ள சிர்தே நகருக்கு அருகே பிரிட்டனின் 2 சூறாவளி விமானங்கள் லிபிய ஆயுதங்களை தகர்த்தன. போர் விமானங்கள் நீண்ட தூர இலக்கை பாய்ந்து தாக்க கூடிய ஸ்கட் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் 30 கன்டெய்னர்களை நொறுக்கின.
மிஸ்ரட்டாவில் கடாபி அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்களை ஒடுக்கி லிபிய ராணுவம் கண்ணி வெடிகளை பரவலாக புதைத்துள்ளது.
லிபிய அரசின் கொடூர நடவடிக்கைக்கு பதிலடி தரும் வகையில் பிரிட்டன் ஆர்.ஏ.எப் போர் விமானத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. லிபிய ராணுவம் சீன கண்ணி வெடிகள் புதைத்துள்ளதை வீடியோ ஆதாரம் மூலம் போராட்டக்காரர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
இதனை மனித உரிமை அமைப்பும் ஆய்வு செய்துள்ளது. லிபியா ராணுவம் பேரழிவை ஏற்படுத்தும் கொத்துக்குண்டுகளை ராக்கெட் மூலம் வரும் பாராசூட்டுகளில் அனுப்பி தாக்குதலை நடத்துகிறது.
வியாழக்கிழமை இரவு மிஸ்ரட்டா நகரில் 20க்கும் மேற்பட்ட சீன கண்ணி வெடிகளை லிபியா ராணுவம் வீசி உள்ளது. லிபியாவின் 3வது பெரிய நகரம் மிஸ்ரட்டா. இந்த நகரம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.
லிபிய ராணுவம் மீதான ஹொரயல் விமானப்படை தாக்குதல் வெற்றிகரமாக அமைந்துள்ளது என பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாம் போக்ஸ் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten