தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 februari 2013

13வது அரசியல் திருத்தம் வேண்டுமா?- மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: கோத்தபாய !


இலங்கை- இந்திய அரசின் ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13வது அரசியலமைப்பு திருத்தத்சட்டத்தை தொடர்ந்து அமுல்படுத்த வேண்டுமா, இல்லையா என அறிந்து கொள்ள மக்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாட்டில் பெருபான்மையான மக்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில்,  13 வது அரசியலயமைப்புத் திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா அல்லது அதிகாரங்களை குறைக்க வேண்டுமா அல்லது அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீர்மானிக்கும் அதிகாரத்தை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் மத்தியில் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அரசியல் கட்சிகள், அமைப்புகள் தமது நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் முன்வைத்து, மக்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் மாகாணசபை முறைமையை ஏற்படுத்திய அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை ஒழித்துவிட வேண்டும் என்று ஆளுந்தரப்பில் உள்ளவர்கள் குரல் எழுப்பி வருகின்றமை குறிப்பித்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten