தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

லண்டனில் நடைபெறவுள்ள GTF மாநாட்டை இலங்கை அரசு தடுக்க திட்டம் !


வரும் 27ம் திகதி, பிரித்தானியப் பாராளுமன்ற வழாகத்தில் உலகத் தமிழர் பேரவை(GTF) தனது மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. இதில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பெரும் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். குறிப்பாக பிரித்தானிய துணைப் பிரதம மந்திரி, வெளிநாட்டமைச்சர், ஐ.நா நிபுணர்கள் குழுவில் அங்கம் வகிக்ப்பவர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், பிரான்சிஸ் கரிசன், ஐ.நாவிற்கான முன் நாள் இலங்கைப் பேச்சாளர் கோர்டன் வைஸ் அவர்கள் எனப் பலர் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். அன்றைய தினம், சனல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் காலம் மக்ரே அவர்கள், தனது ஆவணப்படத்தின் முன்னோட்டத்தைக் காண்பிக்கவும் உள்ளார். இதனை எப்படியாவது குழப்பவேண்டும் என்பதில், பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகம் முனைப்புக் காட்டி வருகிறது. 

அதன் திட்டப்படி இவர்கள் பல பிரித்தானிய எம்.பிக்களுக்கு கடிதங்களை எழுதி, நடைபெறவுள்ள மாநாடு புலிகளால் நடத்தப்படவிருப்பதாக மறைமுகமாகத் தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தவிர அன்றைய தினம், பாராளுமன்றத்துக்கு முன்னதாக சிங்களவர்கள் கூடி, தமது எதிர்ப்பைக் காண்பிப்பது தொடர்பாகவும் அவர்கள் ஆலோசித்துவருகிறார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. இருப்பினும் இவ்வாறு ஒரு எதிர்ப்போராட்டம் நடத்த பிரித்தானிய காவல்துறையிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்பது விதிமுறையாகும். இதனை பிரித்தானிய காவல் துறை அனுமதிக்குமா என்பதும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. 

இருப்பினும் மாநாடு திட்டமுறையில் நடைபெறும் எனவும், பிரித்தானிய அரசின் ஆதரவு தமிழ் மக்களுக்கு எப்பொழுதும் உண்டு எனவும் GTF இன் முக்கியஸ்தர்கள் சிலர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.


Geen opmerkingen:

Een reactie posten