ஒரு காலத்தில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ரோமா இனத்தவருக்குப் புகலிடமாக இருந்த கனடா இன்று ஒட்டவாத் திட்டம்(Ottawa’s plan) போன்ற பல்வேறு சீர்திருத்தங்களாலும், புதிய சட்டங்களாலும் அவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டது.
கனடாவின் புதிய புலம்பெயர்வுச் சட்டங்கள் குறித்து சட்டதரனி சாந்தால் தெஸ்லோகெஸ்(Chantal Desloges) கூறுகையில், கடந்த 2010ம் ஆண்டில் ஹங்கேயினர் 415பேரும், 2011ம் ஆண்டில் 374 பேரும், 2012ம் ஆண்டில் 353 பேரும் அகதி நிலை வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஏழு ஹங்கேரியினர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர் என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் அகதிநிலை கேட்டு வரும் விண்ணப்பங்கள் 70 சதவிகிதமாக குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
அரசுத் தரப்பினர் இதற்கு பதிலளிக்கையில், போலி அகதிகளைத் தடுக்கவே ஒட்டவாத் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகமானதாகவும் மேலும் இச்சீர்திருத்தங்கள் அறிமுகமாகாமல் இருந்திருந்தால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அகதி நிலை வேண்டி விண்ணப்பித்தவர்களின் உண்மை நிலையை அறிய 2 பில்லியன் டொலர் வரை அரசு செலவு செய்யும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறினர்.
Geen opmerkingen:
Een reactie posten