விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சினிமா இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் படமாக இயக்குகிறார்.
இதுகுறித்து இயக்குநர் ரமேஷ் தெரிவிக்கையில்,
''விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பிலான ஈழமக்களிடம் இருந்து இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன்.
இதற்கான நிறைய தகவல்களை தமிழ்மக்கள் எனக்கு கொடுத்துள்ளனர்’’ ஈழத்தமிழ் மக்களுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். எல்.ரி.ரி.ஈ குறித்த பல தகவல்களை அவர்கள் எனக்கு கொடுதிருக்கிறார்கள்." என்று பதில் கூறியவரிடம், அந்த பக்கம் இருந்து எந்த தடையும் வராது, ஆனால் இந்திய அரசாங்கத்திடம் இருந்து தடை வருமே! என்று நிருபர்கள் கூறியதற்கு, "பார்ப்போம், படம் எடுப்பது தான் என்னுடைய வேலை, அதனால் பிரச்சனை வந்தால் அதை சமாளிப்போம்." என்றார் ரமேஷ்.

‘’வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன்.
பதினொரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரித்து இந்த படத்தை எடுத்துள்ளேன். உண்மையான கரக்டர்களே இதில் உள்ளன. யாரையும் புண்படுத்தும் சீன்கள் படத்தில் இல்லை.
இப்படத்துக்கு எதிராக வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சில சீன்கள் நீக்கப்பட்டு உள்ளன. பெப்ரவரி 14-ல் படம் வெளிவருகின்றது.

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் எப்படி தமிழகத்தில் இருந்து தப்பிச் சென்றார்கள் என்றும், பிறகு அவர்கள் எப்படி பிடிபட்டார்கள் என்பதையும் 'குப்பி' என்ற தலைப்பில் திரைப்படமாக எடுத்த இயக்குநர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உண்மைக் கதைகளை திரைப்படமாக்குவதே தனது பாணி என்று கூறும் ஏ.எம்.ஆர்.ரமேஷ், "தான் இது போன்ற படங்களை எடுக்கும் போது நடுநிலையாகவும், அதே சமயம் யாருடைய மனதையும் புண்படுத்தாமலும் எடுப்பேன். அதையும் மீறி சிலர் எண்ணுடைய படங்களினால் பாதிக்கப்பட்டால் அவர்களுடைய உணர்வுக்கு நான் மதிப்பளிப்பேன் என்று மேலும் தெரிவித்தார் இஅய்க்குநர் ரமேஷ்.
Geen opmerkingen:
Een reactie posten