ஈழ தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டுமல்லாமல், மனங்களிலும் பதியப்பட்ட டீ. ஆர்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீரதன், அவரது குடும்பத்தினருக்கு ஈழத்தமிழர் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
டீ.ஆர்.ஜனார்த்தனம் தனது 75வது வயதில் சென்னையில் காலமாகியிருக்கின்றார். இவர் தனித்தொரு மனிதனாக ஈழத் தமிழர்களுடைய விடுதலைக்காக, அந்த மக்களுடைய கனவுகளை மனதில் சுமந்திருந்தவர், 1974ம் ஆண்டு திட்டமிட்டு மின்சார கம்பிகளை அறுத்து ஈழ உ ணவர்வாளர்களை அன்றைய இலங்கை அரசு கொன்றபோது,
உணர்ச்சிப் பெருக்கும், துயரமும் மிகுந்த அந்த களத்தில் நின்றிருந்த ஜனார்த்தனம் அவர்கள் ஈழத்தமிழர் வரலாற்றுப் பங்கங்களில் தனக்கென்றும் ஒரு பக்கத்தை எழுத வைத்தவர், அது மட்டுமல்லாமல் ஒரு முறை ஈழத் தமிழர்களுக்காக அமைச்சர் பதவியையும் துறந்து ஈழத்தமிழர் மனங்களிலும் நிறைந்திருந்தவர்.
அவருடைய இறப்பு எங்கள் வரலாற்றில் பெறுமதியான மனிதர்களின் இறப்பு பட்டியலில் இணைக்கப்படுகின்றது.
ஈழத்தமிழர் சுதந்திரமாக வாழும் ஒரு நாளில் அமரர் ஜனார்த்தனம் அவர்களுடைய பெயரும் வாசம் சேர்க்கும். அவரது குடும்பத்தினருக்கு ஈழத்தமிழர் சார்பில் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Geen opmerkingen:
Een reactie posten