தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் அளப்பெரிய பணிசெய்த மருத்துவர் திரு. நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் 27 .02 .2013 அன்று சுகவீனம் காரணமாகச் சாவடைந்தார்.
திருகோணமலையைச் சேர்ந்த திரு. மூர்த்தி அவர்கள் தொடக்க காலம் முதலே எமது விடுதலைப் போராட்டத்தோடு இரண்டறக் கலந்து பணியாற்றியவர்.
1981ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து தன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிகளில் அளப்பெரிய பங்காற்றியவர்.
1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும் தனது சேவையை ஆற்றினார்.
கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார்.
இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் செயற்பட்டார்.
விடுதலைப்பணிகளை செய்ததற்காக சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்களை இந்தச் சித்திரவதைகளும், கொடுமைகளும் நிரந்தர நோயாளி ஆக்கின.
1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலைப் போராடத்தினை முன்னெடுப்பதில் பெரும்பங்காற்றினார்.
ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார்.
குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றி வந்த இவர் 2004 ஆம் ஆண்டில் “வெண்புறா“ நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
வெண்புறா மூர்த்தி“ என்ற பெயரால் இவர் அழைக்கப்படக் காரணமும் அதுவே.
தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் 1993 ஆம் ஆண்டு Freeman of the City of London என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் மருத்துவர் மூர்த்தி அவர்களின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை.
எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் மருத்துவர் மூர்த்தியும் இணைந்து கொள்கிறார்.
தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை உழைத்த இவரை ’நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமை கொள்கிறது.
அமைதியாகக் கண் மூடியுள்ள மருத்துவர் மூர்த்தி அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryCRcNYnv6.html#sthash.Pfzu1xva.dpuf1981ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் சேர்ந்து தன்னாலான பங்களிப்பினை வழங்கி இயக்கத்தின் தொடக்ககால வளர்ச்சிகளில் அளப்பெரிய பங்காற்றியவர்.
1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட அதேவேளை விடுதலைப்புலிகளின் மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும் தனது சேவையை ஆற்றினார்.
கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார்.
இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகமானது இந்தியாவில் தொடங்கப்பட்டபோது அதன் தொடக்ககால உறுப்பினர்களுள் ஒருவராக மருத்துவர் மூர்த்தி அவர்களும் செயற்பட்டார்.
விடுதலைப்பணிகளை செய்ததற்காக சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட மருத்துவர் மூர்த்தி அவர்களை இந்தச் சித்திரவதைகளும், கொடுமைகளும் நிரந்தர நோயாளி ஆக்கின.
1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலைப் போராடத்தினை முன்னெடுப்பதில் பெரும்பங்காற்றினார்.
ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார்.
குறிப்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றி வந்த இவர் 2004 ஆம் ஆண்டில் “வெண்புறா“ நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
வெண்புறா மூர்த்தி“ என்ற பெயரால் இவர் அழைக்கப்படக் காரணமும் அதுவே.
தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் 1993 ஆம் ஆண்டு Freeman of the City of London என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.
எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்துகொண்டு பயணிக்கும் எமது விடுதலைப் போராட்டத்தில் மருத்துவர் மூர்த்தி அவர்களின் அர்ப்பணிப்பும் செயற்பாடுகளும் முக்கியமானவை.
எமது போராட்டத்துக்காகவே வாழ்ந்து உயிர்நீத்த உணர்வாளர்கள் வரிசையில் மருத்துவர் மூர்த்தியும் இணைந்து கொள்கிறார்.
தமிழீழ விடுதலைக்காகவே இறுதிவரை உழைத்த இவரை ’நாட்டுப்பற்றாளர்’ என மதிப்பளிப்பதில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பெருமை கொள்கிறது.
அமைதியாகக் கண் மூடியுள்ள மருத்துவர் மூர்த்தி அவர்களை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் இழப்பால் தவிக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் எமது ஆறுதலைத் தெரிவிக்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
Geen opmerkingen:
Een reactie posten