வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்பனை செய்ய முடியாத வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
வறிய மக்களுக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
காணிச் சட்டத்தை திருத்தி அமைப்பதன் மூலம் வெளிநாட்டவர்கள் இலங்கையில் காணிகளை கொள்வனவு செய்ய முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தம்புள்ள பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten