தீர்வுகளை தமிழ் தலைமைகள் ஏற்றுக் கொள்ளாததே போருக்குக் காரணமாம்! ஆஸி. யூலியிடம் டக்ளஸ்
இச்சந்திப்பின் போது அமைச்சின் செயற்திட்டங்கள் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக கலந்துரையாடினர். கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக இக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.
அத்துடன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவுஸ்திரேலிய நாட்டு பிரதிநிதிகள் அமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டதுடன், இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குச் செல்வோர் தொடர்பாகவும் அவர்கள் திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில் அவர்களது நலன்சார் விடயங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் இதன் போது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதனிடையே பாராளுமன்ற தெரிவுக் குழுவின் சகல தமிழ்க் கட்சிகளும் பங்கு பெறுவதன் மூலம், சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என வலியுறுத்திய அமைச்சர் , கடந்த காலங்களில் இவ்வாறான தீர்வுகளை தமிழ் தலைமைகள் ஆக்க பூர்வமான முறையில் ஏற்றுக் கொள்ளாததே இந் நாட்டில் ஏற்பட்ட கொடிய போருக்குக் காரணம் என்றும் சுட்டிக் காட்டினார்.
இக்கலந்துரையாடலில் அவுஸ்திரேலிய நாட்டின் எதிர்க்கட்சி பிரதித் தலைவர் யூலி பிஷொப் தலைமையிலான இத்தூதுக்குழுவினருடன் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, ஈ.பி.டி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். தவராஜா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, அமைச்சரின் இணைப்பாளர் ராஜ்குமார், ஆகியோர் உடனிருந்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten