தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

கோட்டபாயவின் இணையம் மீது தாக்குதல்: போர் குற்றத்தை ஓடவிட்டார்கள் !


இலங்கையில் உள்ள பல அரச இணையங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று வருகின்றமை யாவரும் அறிந்ததே. இவ்விணையங்களை ஊடறுப்பவர்கள் அதன் தரவுகளை களவாடிச் செல்வது வழக்கம். ஆனால் வழமைக்கு மாறாக சில விநோதங்கள் நிகழ்ந்துள்ளது. நேற்றையதினம் இலங்கை அரசின் ஊடக இணையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டு, இலங்கை தொடர்பாக செய்தி வெளியிடும் அனைத்து ஊடகங்களும், தம்மோடு பதிவுசெய்யவேண்டும் என்று இலங்கை அரசு ஒரு எழுதப்படாத சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனூடாக அது அதிர்வு, லங்கா ஸ்ரீ , சரிதம் என்று சுமார் 5 இணையத்தளங்களை இலங்கையில் முடக்கியது. இது கோட்டபாயவின் நேரடி உத்தரவில் நடைபெற்றது. குறிப்பிட்ட இந்த மீடியா இணையத்தில், ஊடகங்கள் தம்மை பதிவுசெய்யவேண்டும் என்று இலங்கை அரசு கூறிவந்தது.

இந்த இணையத்தையே இனந்தெரியாத நபர்கள் நேற்று தாக்கி செயலிழக்கச் செய்துள்ளார்கள். அது போதாது என்று போர் குற்ற ஆதாரங்களையும் அதில் பிரசுரித்து, ஆதார வீடியோ ஒன்றையும் ஓடவிட்டார்கள். இதன் காரணமாக இலங்கை அரசு ஆடிப்போயுள்ளது. அடுத்து எந்த இணையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெரியாத நிலையில், இலங்கை அரசு தட்டுத் தடுமாறுகிறது என்று சொல்லப்படுகிறது. இன்று காலை(லண்டன் நேரப்படி) மேற்படி அரச இணையமானது வழமைக்குத் திரும்பியுள்ள போதிலும், நேற்றைய தினம் இரவு முழுவதும், போர் குற்ற ஆதாரத்தையே பார்க்க கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்க விடையம். இலங்கை அரசு தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளின் ஆதாரங்களை, தாக்குதல் நடத்தியவர்கள், இவ்விணையத்தில் தரவேற்றியது இலங்கை அரசை மேலும் இக்கட்டான நிலைக்கு தள்ளிச்சென்றுள்ளது.


Geen opmerkingen:

Een reactie posten