தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 februari 2013

திருமலையில் வைத்து மகிந்தர் சம்பந்தருக்கு அறைந்தார் !



இலங்கையின் 65 வது சுதந்திர தினத்தை திருமலையில் நடத்தி உரையாற்றிய மகிந்தரின் உரையை விரிவு படுத்தி பார்த்தால் இப்படி தான் இருக்கிறது. இதன் பொருட்படவே அவர் உரை அமர்ந்திருக்கிறது. எனவே தமிழ் மக்கள் இதனைப் படிப்பது நிச்சயம் அவசியம் ! 

நாங்கள் எல்லோரும் ஒரு தாய் பெற்ற பிள்ளைகள் ! இங்கு இனவாதம் மதவாதம் பேசக் கூடாது. ஆனா...எமது அரசியல் சட்டத்தில் பௌத்தமே ஒரே மதம். பௌத்த சிங்களவரே அதிபராக வரலாம். ஒரு இனத்திற்கென்று எந்த அதிகாரமும் வழங்க முடியாது. அதிகாரப் பகிர்வு என்ற பட்டுவேட்டிக் கனாவில் யாரும் இருக்கக் கூடாது. தென்னாபிரிக்காவுக்கு போனாலும் அது கிடைக்காது. நாங்கள் போட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செய்யச் சொல்லித்தான் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்தது. அடுத்த கூட்டத்திலும் அதை செய்யுங்க என்றுதான் சொல்லும். நாம் திருக்குணாமலையில் எங்கட சுதந்திர தினத்த வைச்சது ஏன் என்று தெரியுமா ?. அது எங்கட பிரதேசம் என்று அமெரிக்காவுக்கு சொல்லத்தான். 

நான் என்ர உரையில் திருக்குணாமலெ துறைமுகம் பற்றி பேசியது அமெரிக்காவிற்கு விளங்கும். அதிகம் வெருட்டினால், அம்பாந்தோட்டை போல இதையும் சீனக்காரனிட்ட கொடுத்து விடுவேன் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறேன். இங்க இருக்கிற வில்கம்விகாரையை நாங்கள் இரண்டுபேரும் சேர்ந்துதான் கட்டினோம். இங்கு மூன்று மக்களும் ஒத்துமையாய் தான் வாழ்கிறோம். ஆனா சம்பூர் மக்கள் அகதிமுகாமில் வாழ்வதாகச் சொல்லி இனவாதம் பேசக்கூடாது. நாங்க பள்ளிவாசல்களை உடைக்கிறோம் என்று சொல்லி மதவாதம் பேசக்கூடாது. 87 இல இந்திக்காரன் ஒப்பந்தம் போட்டு , வடகிழக்கு தெமிழ மக்களுக்கு மாகாணசபை குடு என்றான். அப்படி தனியா தெமிழ மினிசுக்கு மட்டும் மாகாணசபை கொடுக்க முடியாது எண்டு, நம்மட சிங்கள சகோதரன் ஜூலியஸ் ரிச்சாட் ஜெயவர்தனே நாட்டில் எல்லா இடத்திலும் மாகாணசபையை போட்டான். அவன் யு.என்.பியாய் இருந்தாலும் பண்டா-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிரா கண்டி யாத்திரா போனவனில்லையா !. நம்மட ஆள் அவன்.

ஆகவே மாகாணசபைக்கு காணி உரிமை எல்லாம் கேட்கக்கூடாது. அது பிரிவினைக்கு இட்டு செல்லும். நீங்கள் என்ன கேட்டாலும் அது நாட்டை பிரிக்கும் என்று சொல்லி இந்தியா அமெரிக்காவின் வாயை மூடி விடுவேன். தெமிழ தேசிய கூட்டமைப்பு சனங்களிட்ட வாக்கு கேட்கிறதுக்காக எல்லாம் பேசும். நம்மட அரசியலுக்கும் அது வேணும். இவங்கள வைச்சுத்தான் சிங்கள மக்கள உசுப்பெத்தலாம். ஆனா, நம்மட சம்பந்தன் மாத்தையா எனக்கு எதிரா சரத் போன்செக்காவுக்கு சப்போர்ட் பண்ணினார் , ரணிலோடு சேர்ந்து சிங்க கொடி பிடித்தார்....பார்லிமெண்டில புலி பிழை, அவங்களுக்கு ஜனநாயகம் இல்லை என்று சொன்னார் ...இப்படி சொன்னா நான் அதிகாரம் கொடுப்பேன் என்று பட்டு வேட்டிக் கனவில அவர் இருக்கிறார். மங்கள சமரவீராவையும், சோமவன்ச அமரசேகராவையும் பிடிச்சு சந்திரிக்காவை விழுத்தி ஆட்சிக்கு வந்த எனக்கு, இந்த கொடி பிடிக்கிற இராஜதந்திரமெல்லாம் அத்துப்படி மவனே.
அவங்க ரெண்டு பேரையும் வெட்டி விட்டு இப்ப நான் குடும்ப ஆட்சி செய்கிறேன்.

இந்த புலம்பெயர் ஆட்கள்தான் இப்ப எனக்குப் பிரச்சனை . என்ன சர்வதேச கோர்டில நிப்பாட்ட வேண்டுமென்று நிற்கிறாங்கள். லண்டனுக்கும் போகமுடியேல்ல. இந்தியாவுக்கு போகலாமெண்டால், அங்க வைக்கோ டெல்லி யாத்திரை போறார். அடுத்த வருஷம் தேர்தல் வருகிறபடியால், கருணாநிதியும் எனக்கு ஆப்பு வைக்க வெளிக்கிட்டார். புலத்து புலிகள் இன்னமும் நமக்கு எதிரா வேலை செய்கிறாங்கள் என்று சிங்கள மக்களுக்குக் காட்டத்தான் மகிந்த சமரசிங்க கோஷ்டியை ஜெனீவாவுக்கு அனுப்புறன். பாதுகாப்பு சபையில நம்ம சீனக்காரனும், ரச்யக்காரனும் இருக்கும்வரை நமக்கு பயமில்லை. பொதுச் சபையிலும் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்கள் அதிகம். பாலஸ்தீன் விசயத்தில அமெரிக்காவால ஒண்ணுமே பண்ணமுடியல. அனா இந்த இந்திக்காரனை நினைச்சாத்தான் கொஞ்சம் யோசனையாய் இருக்கு. பூமாலை என்று பொட்டலம் போட்டதுதான் இடிக்குது. இந்த அட்டமத்துச்சனியில் இருந்து தப்புறதுதான் பெரும் பிரச்சினையாய் இருக்கு.

இதில இருந்து தப்புறதுக்கு ஒரே வழி வட மாகாணசபை தேர்தலை வைப்பதுதான் என்று அரசியல் குரு பீரீஸ் ஐயா சொல்லுகிறார். அதுக்கு முன்னால வடமாகாண அரச காணிகளுக்கு ஒரு முடிவு கட்ட வேணும். நம்ம மேஜர் .ஜெனரல் சந்திரசிறியிட்ட எல்லா பவரையும் கொடுத்து விட்டேன். சிங்கள ஆட்களையும் அங்க குடியேற்றிய பிறகு மாகாணசபை தேர்தலை வைக்கலாமென்று இருக்கிறன்.டக்ளசை மட்டும் நம்பி பிரயோசமில்ல. நம்மட ஆட்களும் வேணும். கிளிநொச்சியில அதிகம் தேசியம் பேசிய ஆளை வெருட்டி வச்சிருக்கிறன். நான் பிடிச்சு வைச்சிருக்கிற அவர்ட ஆட்கள விடுவிக்க ஓடித் திரிகிறார். அதனால கொஞ்ச நாளைக்கு அவரால போராட்டங்கள் செய்ய ஏலாது. என்ர பிளான்படி அடுத்த சுதந்திர விழாவ யாழ்பாணத்தில கொண்டாடப் போறான்.

அதிர்வுக்காக,

அபிநய சுந்தரி


Geen opmerkingen:

Een reactie posten