தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 februari 2013

மகிந்த வருகையை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகையிட சென்ற வேல்முருகன் உட்பட 500 பேர் கைது!


 செவ்வாய்க்கிழமை
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ச 3-வது முறையாக இந்தியாவுக்கு 8-ந் தேதி வருகை தர இருக்கிறார். அவரது இந்திய பயணத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளின் கோரிக்கை. இந்து முன்னணியின் ராமகோபாலன் ஒருவர் மட்டுமே ராஜபக்சவை ஆதரிக்கிறார்.
ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப் போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்தது.
இதற்காக இன்று காலை சென்னை சேப்பாகம் அரசு விருந்தினர் மாளிகை முன்பாக வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் கூடினர். பின்னர் அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கடற்கரை சாலை வழியே ஊர்வலமாக செல்ல முயன்றனர்.
அவர்கள் அனைவரையும் பொலிஸார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேல்முருகன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் கட்டுக்கடங்காத கூட்டம்! கைது செய்ய திணறிய காவல்துறை!
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை அனுமதிக்கும் இந்திய அரசைக் கண்டித்து மத்திய அரசின் பிரதிநிதியான தமிழக ஆளுநர் மாளிகையை நோக்கி இன்று மாபெரும் முற்றுகைப் போராட்டம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடந்தது.
தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த சுமார் 5000 தொண்டர்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வந்தனர். அதில் எல்லோரையும் கைது செய்ய முடியாமல் திணறிய காவல் காவல் துறை 2000 பேர்களை மட்டும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தது.
சென்னையில் நடக்கும் ஈழப் போராட்டத்தை பொறுத்தவரை இவ்வளவு பெரிய மக்கள் தொகையை திரட்டி இதுவரை யாரும் போராட்டம் செய்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இன்று பண்ருட்டி வேல்முருகன் பெரும் தொண்டர் படையை திரட்டி போராட்டம் செய்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten