தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 februari 2013

டெசோ மாநாட்டில் 9 அதிரடித் தீர்மானங்கள் நிறைவேற்றம்!- புலிகளின் மூத்த நிலை உறுப்பினர்கள் எங்கே என கேள்வி?


திமுக தலைவர், கலைஞர் கருணாநிதி தலைமையில் சென்னையில் இன்று இடம்பெற்ற டெசோ மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 2009ம் ஆண்டு மே மாதத்தில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த புலிகளின் மத்திய குழு உறுப்பினர் திரு.பேபி சுப்பிரமணியம், பாலகுமார், ஜோகி, கவிஞர் புதுவை மற்றும் நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பூவண்ணன் ஆகியோர் எங்கே என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரையும் இலங்கை அரசு உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் சர்வதேச சுயாதீன விசாரணை நடைபெறவேண்டும் எனவும் அடுத்த மாதம் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்கவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தவிர, இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து, ஈழப் பிரச்சனை தொடர்பாக விளக்குவது என்றும் அவர்கள் ஆதரவோடு இதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது என்றும் கலைஞர் தலைமையில் கூடிய டெசோ மாநாட்டில் இன்று முடிவுகள் எடுக்கப்பப்பட்டுள்ளன.
இந்திய மீனவர்களை காப்பாற்றுவது, யாழ். பல்கலைக் கழக மாணவர்களுக்கு உதவுவது, இந்தியா வர இருக்கும் ராஜபக்ஷவுக்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்துவது என்பன போன்ற 9 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
இத் தீர்மானங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் கையளிக்கப்படும் எனவும் இலங்கையில் உள்ள இரகசியச் சிறையில் வாடும் புலிகளின் மூத்த தலைவர்களை விடுவிக்க அழுத்தம் கொடுக்கப்படும் எனவும் இக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten