கடந்த வாரம் தமிழகத்திற்கு ஆன்மீக பயணமாக வந்த இலங்கை சிங்கள எம்.பி கரு ஜெயசூரியவை மதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருக்கடையூர், திருச்சியில் தாக்க முயற்சித்தனர். இதனால் அவர் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு, உடனே இலங்கை திரும்பினார்.
இந்நிலையில், இலங்கையே சேர்ந்த 70 பேர் விமானம் மூலம் நேற்று மாலை கொழும்புவில் இருந்து திருச்சி வந்தனர்.
இவர்கள் வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் பல்வேறு கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு, 3 நாள் சுற்றுலாவிற்கு பின் சென்னை வழியாக மீண்டும் இலங்கை செல்ல முடிவு செய்து உள்ளனர்.
இவர்களின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரர்களும், உள்ளூர் பொலிஸாரும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் அவர்களை 2 பஸ்களில் ஏற்றி பாதுகாப்புடன் வேளாங்கண்ணிக்கு அனுப்பி வைத்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten