தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

தமிழீழ சுதந்தர சாசன வரைவாக்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


தாயகம் - தேசிய - தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் பெருவிருப்பினை முரசறையும் தமிழீழ சுதந்திர சாசன வரைவாக்கத்திற்கான உத்தியோகபூர்வமான அறிமுகம் கடந்த சனிக்கிழமை அன்று பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் பல்வேறு தமிழர் பொதுஅமைப்புக்கள் பங்கெடுக்கும் வகையில் தமிழீழ சுதந்திர சாசன வரைவிற்கான செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
தமிழீழ சுதந்திர சாசன வரைவாக்கம் தொடர்பிலான கையேடும் மற்றும் கருத்துக்களை பதிவு செய்யும் கேள்விக்கொத்தொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க விடுதலைக்கு முக்கிய காரணியாக விளங்கிய ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் முரசறைந்த தென்னாபிரிக்க விடுதலை சாசனம் மற்றும் பாலஸ்த்தீன விடுதலை அமைப்புகள் முரசைறந்த பலஸ்தீன விடுதலை சாசனம் ஆகியன உலக வரலாற்றில் முக்கிய பதிவுகளாகவுள்ளன.
இந்நிலையில் உருவாகவுள்ள  தமிழீழ சுதந்திர சாசனமானது எதிர்காலத்தில் அமையவிருக்கும் நிகழ்வுபூர்வமான தமிழீழம் குறித்தான ஓர் வரைவினை உலகிற்கு முன்னிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாசன வரைவாக்கம் http://tamileelamfreedomcharter.org/  தொடர்பில் எனும் இணையத்தளமொன்றும் திறந்துவிடப்பட்டுள்ளது.
தமிழீழ சுதந்திர சாசனம் - ஓர் சுருக்கமான அறிமுகம்:
2012ம் ஆண்டு நவம்பர் - டிசெம்பர் மாதங்களில் இலண்டன் மாநகரில் நடந்தேறிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வில் இத் தீர்மானம் அரசவையால் எடுக்கப்பட்டிருந்தது.
-முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நிகழ்ந்தேறி நான்கு ஆண்டுகள் முடிவடையும் காலகட்டத்தில் எதிர்வரும் மே மாதம் 15 தொடக்கம் 18ம் திகதிவரை  அமெரிக்காவின் லங்காஸ்ரர் பென்சில்வேனியா நகரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஒருங்கமைக்கப்படும்  மாநாட்டில் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படுகிறது.
- இச்சுதந்திர சாசனம் தமிழீழ மக்களின் சுதந்திர வேட்கையின் வெளிப்பாடாக தமிழீழ மக்களதும் தமிழீழ விடுதலைக்காய் உழைக்கும் உலகத் தமிழ் மக்கள், சிங்கள மற்றும் அனைத்துலகச் சமூகத்தின் முற்போக்காளர்களினதும் பங்குபற்றலுடன் உருவாக்கப்படுகின்றது.
- ஈழத் தாயகத்தில் வாழும் நமது மக்களுக்கு அவர்கள் அரசியல் விருப்பு வெறுப்புக்களைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கான அரசியல்வெளி, சனநாயகவெளி அங்கு இல்லை. தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இரு நாடுகள் என்ற தீர்வுமுறையினை உள்ளடக்கியதான கருத்து வெளிப்பாட்டுக்கு சிறிலங்காவின் ஆறாவது திருத்தச் சட்டம் தடையாக உள்ளது. சட்டங்கள் மட்டுமல்ல ஈழ மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவமும் மக்களுக்கான அரசியல் வெளியை இறுக அடைத்து வைத்திருக்கிறது.
இதனால் தாயகத்தில் வாழும் தமிழீழ மக்கள் தமது உண்மையான அரசியல் பெருவிருப்பான தமிழீழத் தனியரசு என்ற நிலைப்பாட்டை தமது ஆழ் மனதுக்குள் புதைத்து வைத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள்.
இதனால் உலகத் தமிழ் மக்களால் முரசறையப்படும் இந்தத் தமிழீழ சுதந்திர சாசனம் தாயக மக்களது குரலாகவும் ஒலிக்கிறது.
- தமிழீழ சுதந்திர சாசனத்தை உருவாக்குவதில் உலகத் தமிழ் மக்களின் பங்கு முழுமையாக எதிர்பார்க்கப்படுகின்றது. சாசனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள்  தொடர்பாகவும், அவை எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பது தொடர்பாகவும் மக்கள் கருத்துக்களைக் கேட்டறிவதற்கான  கூட்டங்களை மக்களிடையே நடாத்துவதற்கான ஏற்பாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், ஏனைய அமைப்புகளும் செய்து வருகின்றன.
மக்களின் கருத்தறிவதற்கான கேள்விக் கொத்தொன்றும் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் முதற்கட்டமாக தமிழீழ சுதந்திர சாசனமொன்றை முரசறைவதன் அவசியம் குறித்தும் அதன்  நன்மைகள் குறித்தும் எமது கருத்துக்களை மக்கள்  முன்வைத்தல் அவசியம் எனக் கருதியமையின் நிமித்தம் தமிழீழ சுதந்திர சாசனம் குறித்த விளக்கங்களுடன் கையேடு அமைகின்றது.
- உலகில் சுதந்திரத்துக்காகப் போராடும் மக்கள் தமது விடுதலை வேட்கையினை அனைத்துலகிற்கும் முரசறைவித்து, அனைத்துலக மக்களதும், அரசுகளதும் ஆதரவினைத் தமது விடுதலைப் போராட்டத்துக்கு வென்றெடுக்கும் வகையில் சுதந்திர சாசனத்தினை வெளியிட்டு வந்துள்ளார்கள்.
- நமது மக்களின் அரசியல் தலைவிதியினை நாமே தீர்மானிப்பதற்குத் தேவையான பலமான அடித்தளத்தினையும் நாம் இட முடியும். அனைத்துலக அரங்கில் நடைபெறும் அரசியல் சதுரங்கத்தில் ஏனையோர் வகுக்கும் வியூகத்துக்கு உட்பட்டு நாம் செயற்படாமல், நமக்கென்று நாம் வகுக்கும் ஒரு வியூகத்தின் அடிப்படையில் செயற்படுவதற்கும் இச் செயல்முறை துணைபுரியும்.
இவை அனைத்தும் தமிழீழ சுதந்திர சாசனத்தை முரசறைவதற்கான உற்சாகத்தை உலகத் தமிழ் மக்களுக்கு தருகின்றது.
- ஒடுக்குமுறை சிறிலங்கா அரசுக்கும் அமையப்போகும் தமிழீழ அரசுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் தமிழீழ சுதந்திர சாசனம் சுட்டி நிற்கும்.
உதாரணமாக பௌத்தத்தை முதல் மதமாகக் கொண்ட மதச்சார்பு அரசாக சிறிலங்கா இருக்க தமிழீழம் மதச்சார்பற்ற அரசாக அமைவதனைக் குறிப்பிடலாம். மேலும் சிறிலங்கா அரசு மிகவும் மோசமான முறையில் மனித உரிமைகளை மீறும் அரசாக இருக்க தமிழீழம் உன்னதமான முறையில் மனித உரிமைகளை மதிக்கும் விருப்பும், தகமையும் கொண்டதாகத் தன்னை வெளிப்படுத்தி நிற்பதனை இந்த சுதந்திர சாசனம் பதிவு செய்யும்.
இத்தகையதொரு பின்னணியிலேயே உலகத் தமிழ் மக்களால் தமிழீழ சுதந்திர சாசனம் முரசறையப்படுகின்றது.
இது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முரசறைவு மட்டுமல்ல
ஈழத் தமிழர் தேசத்தின் முரசறைவு… !
உலகத் தமிழினத்தின் முரசறைவு…. !
ஈழத் தேசத்தின் விடுதலையை வேண்டி நிற்கும் அனைவரதும் முரசறைவு….!
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRbNYnr7.html#sthash.i0J0hGo3.dpuf

http://news.lankasri.com/show-RUmryCRbNYnr7.html

Geen opmerkingen:

Een reactie posten