தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

எனது உயிருக்கு ஆபத்து உள்ளது!- செய்தியாளர்களிடம் மைத்திரிபால சிறிசேன


தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இலங்கையின் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாம் இதனை சுகாதார அமைச்சராகவோ, சுதந்திர கட்சியின் செயலாளராகவோ இதனைத் தாம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான ஆபத்துகள் தம்மை சூழ்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, பாசிக்குடாவில் இடம்பெற்ற அமைச்சரின் மகனுக்கும், பிரதி காவற்துறை மா அதிபரின் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
கொள்கை ரீதியிலான இலக்குடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நான் 47 வருடங்களாக செயற்பட்டு வருகின்றேன்.
சொகுசான சூழலில் அல்லது சொகுசு வாழ்க்கையின் மூலம் நான் அரசியலுக்கு வரவில்லை.
நான் வயலிலும் சேற்றிலும் வளர்ந்தவன். அரசியல் வாழ்வில் பல துன்பங்களை எதிர்நோக்கியவன் நான். இன்றும் அவ்வாறான துன்பங்களை எதிர்கொண்டுள்ளேன். அவ்வாறு கூறுவதற்கு என்னிடம் பல காரணங்கள் உள்ளன.
எனது அரசியல் வாழ்க்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது, அக்கட்சியினால் கடும் தாக்குதல்களுக்கும் இலக்காகியுள்ளேன்.
1984 ஆம் ஆண்டு முல்கிரிம இடைத்தேர்தலின்போது துப்பாக்கிசூட்டிற்கும் இலக்காக நேர்ந்தது.
தற்போது இந்த சம்பவத்தின்மூலம் எனது நற்பெயர் மற்றும் அரசியல் விம்பத்தை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றார் அமைச்சர் மைத்றிபால சிறிசேன.
கடந்த 24ம் திகதி பாசிக்குடா பகுதியில் இருந்த பிரதி காவற்துறை மா அதிபரின் மகனது மனைவியை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.
இதில் கடுமையாக காயங்களுக்கு உள்ளான பிரதி காவற்துறை மா அதிபரின் மகன், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRbNYnsy.html#sthash.88cmmsMn.dpuf

Geen opmerkingen:

Een reactie posten