தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 7 februari 2013

இரகசியமாக இந்தியா சென்று பேச்சுவார்த்தை: என்னபேசினார் சந்திரிக்கா ?


இந்திய அரசாங்கத்துடன் பேசும்படி எதிர்க் கட்சிகள்தான் சந்திரிக்கா பண்டார நாயக்காவை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன. அண்மையில் இந்தியாவுக்கு இரகசியமாகப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அங்கு உயர் மட்ட தலைவர்களுடன் சந்தித்துப் பேசியுள்ளார். எனினும் சந்திப்புக்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்திய ஊடகங்கள் கூட இந்த விடயத்தை பொருட்டாகப் பார்க்கவில்லை என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் இந்தியப் பயணத்தை அடுத்து சந்திரிகாவும் புதுடில்லியில் சந்திப்புகளை நடத்தியுள்ளார். இதுதொடர்பான எல்லா தகவல்களும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. சந்திரிக்கா புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான அதிகாரமட்டத்தினர் அனைவரையும் சந்தித்துப் பேசியுள்ளார். எனினும் சந்தரிகா குமாரதுங்க இந்தியதலைவர்களுடன் என்ன பேசினார் என்ற விபரம் இதுவரை இரகசியமாகவே உள்ளது. எதையும் இலகுவாக மோப்பம் பிடித்து விடும் இந்திய ஊடகங்களால் கூட கண்டுபிடிக்க முடியாததாக இந்த இரகசியம் உள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் இந்தியாவின் பங்கு பற்றி மோப்பம் பிடிக்கவும், அவை சிங்கள பெளத்த் பெரினவாத சித்தாந்தத்தை பாதிக்க கூடாது என்பதனை வலியுறுத்தவுமே சந்திரிக்கா அனுப்பபட்டுள்ளார். 

ஆனால் சந்திரிக்காவை அனுப்பியது எதிர்க்கட்சிகளும், பெளத்த பீடங்களுமே ஆகும் என செய்திகள் கசிந்துள்ளன. சிங்கள எதிர்க்கட்சிகள் மற்றும் பெளத்த பீடங்கள் ஒரு ஆட்சி மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்களே ஒழிய தமிழர்களுக்கு ஆட்சியில் அதிகாரம் வழங்குவதனை ஒருபோதும் ஏற்கவில்லை என்பதனை இங்கு சுட்டிக்காட்டபப்டவேண்டியது.

Geen opmerkingen:

Een reactie posten