தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

இப்படி தான் கரு ஜெயசூரியாவின் காரை கல்லால் அடித்தார்கள் !


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காகத் தனது மனைவி மற்றும் மகனுடன் ஆன்மீக சுற்றுலா மேற்கொண்ட இலங்கை எம்.பி., வைகோ, சீமான் கட்சியின் வீர மறவர்கள் தாக்குதல் காரணமாக, சென்னையில் இருந்து விமானம் ஏறி, கொழும்பு சென்றடைந்தார். இச் செய்தியை ஏற்கனவே நாம் அதிர்வி வெளியிட்டு இருந்தோ. ஆனால் இதோ பரபரப்பாக கரு ஜெயசூரியா, சென்னை வந்ததும் பின்னர் அங்கிருந்து சென்ற காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளதால், அதன் புகைப்படங்களை இங்கே இணைத்திருக்கிறோம். 

யார் இந்தக் கரு ஜெயசூரியா ? 

முதலில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அதன் தலைவர் ரணுலுக்கு வாலாட்டியவர். பின்னர் மகிந்தர் தேர்தலில் வென்ற பின்னர், 17 எம்பீக்களோடு சென்று மகிந்தரோடு இணைந்துகொண்டவர். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின்போது மகிந்தருக்கு உதவியாக இருந்தவர். அதுமட்டுமா இன்றுவரை எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் மகிந்தருக்கும் இடையே ஒரு இணைப்பாளராக இருக்கும் பிராடு தான் இவர். வைகோ மற்றும் சீமான் தொண்டர்கள், உண்மையில் வீர மறவர்கள் தான். குறிபார்த்து தான் அடித்துள்ளார்கள். இதன் காரணமாக சென்னை திரும்பிய ஜெயசூரிய, அவசரமாக ஸ்ரீ லங்கன் ஏர் வேஸ் விமானத்தை எட்டிப் பிடித்து, கொழும்புக்கு ஓடித்தப்பியுள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten