14 அகவையில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் தமிழர் புணர்வாழ்வுக்கழகத்தின் பராமரிப்பில் வளர்ந்தேன். பின்னர் என்னை பராமரித்தது படித்து ஆளாக்கியது கணணிதுறையில் சிறப்ப தேர்ச்சி யடைய கற்றுக்கொடுத்ததும் விடுதலைப்புலிகள் தான், இன்றும் அவர்கள் மூலம்தான் நான் இந்த கணணி துறையில் கற்றுக்கொண்டேன். தொடக்கத்தில் காலால் வாயால் எழுவது போன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தேன். 14அகவை தொடக்கம் 2009ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் பராமரிப்பின் கீழ்தான் நான் வளர்ந்தேன் என்று கூறியுள்ளார் செல்வநாயகி.
முல்லைத்தீவு மாமூலையில் கணணிநிலையத்தில் நான் ஒரு ஆசானாகவும் பாடசாலை மாணவர்களுக்கும் கற்பிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். இன்று தற்போது கற்றுக்கொடுக்கும் ஆசானாக திகழ்கின்றேன் தற்போது புலம்பெயர் தமிழ்மக்களின் உதவியுடன் நான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்றும் அவர் பன்னாட்டு செய்திசேவைக்கு தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten