தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 6 februari 2013

தமிழகத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி இந்தியா பயணம்!- இலங்கை !!


தமிழக அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
இலங்கையின் அரச தகவலை மேற்கோள் காட்டி இந்திய பிடிஐ செய்திசேவை இதனை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று பீகார் புத்தகாயாவுக்கு செல்லும் ராஜபக்ச, 8 ம் திகதியன்று ஆந்திர மாநிலத்தின் திருப்பதிக்கு செல்லவுள்ளார்.
இதன்போது பீகார் மாநில முதல்வர் நித்தேஸ்குமாரை அவர் சந்திக்கவுள்ளார்.
இந்தநிலையில் தமிழகத்தில் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அட்டவணைப்படி ஜனாதிபதியின் பயணம் அமையும் என்று இலங்கை அரச தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten