தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் இழுத்தடிக்கும் தந்திரம்
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 30 juni 2013
zaterdag 29 juni 2013
vrijdag 28 juni 2013
donderdag 27 juni 2013
zondag 23 juni 2013
zaterdag 22 juni 2013
vrijdag 21 juni 2013
அவலங்களின் அத்தியாயங்கள்- 70
கைதுசெய்யப்பட்ட முக்கிய தளபதிகள் (அவலங்களின் அத்தியாயங்கள்- 70) – நிராஜ் டேவிட்
maandag 17 juni 2013
13ம் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவிற்கு இரகசிய கடிதம் எழுதினார் சம்பந்தன்: சிங்களப் பத்திரிகை
நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றம் செய்யவுள்ளேன்: ஜனாதிபதி
zondag 16 juni 2013
zaterdag 15 juni 2013
zondag 9 juni 2013
vrijdag 7 juni 2013
அவலங்களின் அத்தியாயங்கள்- 68
இடைக்கால நிர்வாகசபையும், அதன் பின்னணியில் வகுக்கப்பட்ட சதிகளும் (அவலங்களின் அத்தியாயங்கள்- 68) – நிராஜ் டேவிட்
கிறிஸ்தவ அமெரிக்கரை நம்பி கம்யூனிச சோஷலிச கொள்கைகளை கைவிட்டு இந்தியாவை இலங்கையுடன் கைகோர்த்து அவமானப்படுத்தி இன்றுவரை இழந்ததை அறியாது சுயபுராணம் பாடி பெருமைப்படும் தமிழர்களை நோர்வேயும் அமரிக்காவும் இணைந்து புலிகளை அழித்ததை அழித்தவர் சொல்லியும் புரிய வைக்கவும் முடியவில்லை,தாங்கள் ஏமாந்ததை ஒத்துக்கொண்டு அப்பாவித்தமிழரின் கனவை பலிக்க வைக்க இந்த காட்டுமிராண்டிகளால் முடியவும் வாய்ப்பில்லை!!இன்று அன்றைய மூடத்தனத்தால் இழந்தவற்றை பெற்றவை போல எழுதும் இந்த அடிவருடி ஒரு அல்லலூயா கிறிஸ்தவன்,பணத்துக்காக மதம் மாறியவர் பணத்துக்காக வேறு என்ன செய்யார்?!!
[ புதன்கிழமை, 05 யூன் 2013, 07:32.30 PM GMT ]
இந்தியா புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் பாதகமான ஏதோ ஒன்றைச் செய்து வருகின்றது என்பது போன்ற ஒரு பேச்சு தமிழ் மக்கள் மனங்களிலும், சர்வதேச நாடுகள் மத்தியிலும் ஏற்பட ஆரம்பித்தன. திலீபனின் மரணம் இப்படியான ஒரு எண்ணத்தையும், சந்தேகத்தையும் அனைத்து மட்டங்களிலும் பரப்பியிருந்தது.
தொடர் உண்ணாவிரதப் போராட்டங்கள்:
இதற்கு மேலாக, தமது 5 அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி, விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை, தமிழீழத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வந்தார்கள்.
இதற்கு மேலாக, தமது 5 அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி, விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை, தமிழீழத்தின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து வந்தார்கள்.
திலீபன் முன்வைத்த 5 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, மட்டக்களப்பில் மதன் என்ற இளைஞன் சாகும் வரையிலான தனது உண்ணா விரதத்தை, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஆரம்பித்திருந்தான். இதேபோன்று தமிழ் பிரதேசங்கள் அனைத்திலும், உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகுந்த உணர்ச்சியுடன் மேற்கொள்ளப்பட்டன.
இது போன்ற உண்ணாவிரதப் போராட்டங்கள் தமிழ் மக்களை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தன. இந்தியாவின் மீது தமிழ் மக்களை காழ்ப்புணர்வு கொள்ள வைத்தன. ஏற்கனவே திலீபனின் மரணம் இந்தியாவின் அமைதிகாக்கும் பணிக்கு தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச மட்டத்திலும் ஏற்படுத்தியிருந்த சேதத்தை நிவர்த்தி செய்வதற்கு அவகாசம் வழங்காமல், தொடர்ந்து பல உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்ததானது, இந்திய அதிகாரிகளை ஆட்டம் காண வைத்தன. இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், இந்த உண்ணாவிரதப் போராட்டங்கள் அவர்களுக்கு பெரிய தலையிடியாகவே அமைந்திருந்தன.
இந்தியப் படை தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கச் சென்ற ஒரு படை என்பது போன்ற எண்ணம் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டுவிடக் கூடிய அபாயத்தை, இந்தியா எதிர்கொள்ள ஆரம்பித்தது.
இப்படியான ஒரு எண்ணப்பாடு வேகமாகப் பரவுவதைத் தடுக்க இந்தியா அவசர அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டியது. புலிகளுக்கு ஏதாவது ஒன்றை வழங்கிவிட்டு, அதன் பின்னரே புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்தியா திட்டம் தீட்டியது.
திலீபனின் மரணத்தை தொடர்ந்து உலகத்தின் பார்வையில் புலிகள் மீது ஏற்பட ஆரம்பித்திருந்த அனுதாபத்தை புலிகளைக் கொண்டே உடைத்து விட்டு, அதன் பின்னரே புலிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என்று இந்திய அதிகாரிகள் ஆலோசனை வழங்கினார்கள்.
வடக்கு கிழக்கில் இடைக்கால நிர்வாக சபை ஒன்றை உடனடியாக அமைத்து, உலகத்தின் சந்தேகத்தைப் போக்கிவைப்பதற்கு இந்தியா தீர்மாணித்தது. ஜே.ஆருடன் கலந்தாலோசித்த இந்தியத் தூதுவர் ஜே.என். தீட்சித் இதற்கான திட்டத்தை வரைந்தார்.
வடக்கு கிழக்கை நிர்வகிப்பதற்கென்று 11 பேர் கொண்ட இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது என்றும், அதில் விடுதலைப் புலிகள் 5 உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இரகசிய ஒப்பந்தம்:
இதற்கான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக செப்டெம்பர் 28ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்குடாவிற்கு விரைந்தார். பலாலி விமானப்படைத் தளத்தில் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்து உரையாடினார். புலிகள் தரப்பில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மற்றும் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையா போன்றோரும் சென்றிருந்தார்கள். மிகவும் காரசாரசாக நடைபெற்ற அந்தச் சந்திப்பில், இடைக்கால நிர்வாகசபை அமைப்பது தொடர்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அதே தினத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ‘‘India’s Intervention in Sri-Lanka’ என்ற ஆய்வு நூலில், இந்த இரகசிய ஒப்பந்தம் பற்றிய விபரம் வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கான கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக செப்டெம்பர் 28ம் திகதி இந்தியத் தூதுவர் ஜே.என்.தீட்ஷித் யாழ்குடாவிற்கு விரைந்தார். பலாலி விமானப்படைத் தளத்தில் அவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைச் சந்தித்து உரையாடினார். புலிகள் தரப்பில் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மற்றும் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையா போன்றோரும் சென்றிருந்தார்கள். மிகவும் காரசாரசாக நடைபெற்ற அந்தச் சந்திப்பில், இடைக்கால நிர்வாகசபை அமைப்பது தொடர்பான ஒரு முடிவு எடுக்கப்பட்டது.
அதே தினத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இந்தியாவிற்கும் இடையில் ஒரு இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன. ‘‘India’s Intervention in Sri-Lanka’ என்ற ஆய்வு நூலில், இந்த இரகசிய ஒப்பந்தம் பற்றிய விபரம் வெளியிடப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள் சார்பில் பிரதித் தலைவர் மகேந்திரராஜா மாத்தையாவும், இந்திய அரசு சார்பில் இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் முதல் நிலை அதிகாரி ஹர்தீப் பூரி|யும், அந்த இரகசிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார்கள்.
அந்த ஒப்பந்தத்தில் காணப்படுகின்ற விபரங்கள் இவைதான்:
பின்வரும் அடிப்படையில் வடக்கு கிழக்கிற்கான ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பதற்கு, ஸ்ரீலங்காவின் பிரதமர் இந்திய தூதுவரிடம் தனது சம்மதத்தை தெரிவித்துள்ளார்.
த.வி.புலிகள் - 5
த.வி.கூ. - 2
முஸ்லிம்கள் - 2( இருவரில் ஒருவர் புலிகளாலேயே நியமிக்கப்படுவார்)
சிங்களவர்கள்- 2
த.வி.புலிகள் - 5
த.வி.கூ. - 2
முஸ்லிம்கள் - 2( இருவரில் ஒருவர் புலிகளாலேயே நியமிக்கப்படுவார்)
சிங்களவர்கள்- 2
மொத்தம் 12 பிரதிநிதிகள். இந்த இடைக்கால நிர்வாக சபையின் தலைவரை புலிகள் ஆலோசனையுடன் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி நியமிப்பார்.
-பெங்களூர் முன்மொழிவுகளின் 10.1, 10.2 பிரிவுகளின்படி, ஜே.ஆர். தனது நிறைவேற்று அதிகாரங்களில் சிலவற்றை, இடைக்கால நிர்வாக சபையின் தலைவருக்கு வழங்குவார்.
-வடக்கு கிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரம் இந்த இடைக்கால நிர்வாக சபைக்கு இருக்கும்.
-இந்தியத் தூதுவரிடம் 13.10.1987ம் திகதி புலிகள் முன்வைத்த ஐந்து அம்சக் கோரிக்கைககள், இந்த இடைக்கால நிர்வாக சபை மூலம் நிறைவேற்றப்படும்.
-1987ம் ஆண்டு ஜுலை மாதம் இந்தியப் பிரதமரால் புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அழுல்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புக்களையும் விடுதலைப் புலிகள் வழங்குவார்கள்.
-புலிகள் அமைப்பின் உறுப்பினர்களதும், தலைவர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் புலிகள் தங்களிடம் மிகுதியாக உள்ள ஆயுதங்களை கையளிப்பார்கள்.
-மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு புலிகள் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
-இந்தியாவும் விடுதலைப் புலிகளும் ஒருவருக்கு எதிராக மற்றவர் மேற்கொண்டுவரும் பிரச்சார நடவடிக்கைளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
-30ம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா அரசாங்கம் இடைக்கால நிர்வாகசபை பற்றிய அறிவிப்பை வெளியிட வேண்டும்.
-இந்திய அரசும், இலங்கை அரசும், இந்த இரகசிய ஒப்பந்தத்தின் வெளிப்படையான அம்சங்கள் சிலவற்றை மட்டுமே வெளியிட வேண்டும்.
-இவற்றிற்கு பதிலாக விடுதலைப் புலிகள் தமது உண்ணாவிரதப் போராட்டங்களை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.
இவ்வாறு அந்த இரகசிய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜே.ஆர்.மேற்கொண்ட தந்திரம்:
இலங்கை-இந்திய ஒப்பந்திற்கு எதிராக தென் இலங்கையில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பு, சில சந்தர்ப்பங்களில் ஜே.ஆர்.இனது காய்நகர்த்தல்களுக்கு தொல்லையாக இருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அதுபோன்ற எதிர் அலைகள் ஜே.ஆருக்கு உதவவே செய்தன.
இலங்கை-இந்திய ஒப்பந்திற்கு எதிராக தென் இலங்கையில் ஏற்பட்டிருந்த கொந்தளிப்பு, சில சந்தர்ப்பங்களில் ஜே.ஆர்.இனது காய்நகர்த்தல்களுக்கு தொல்லையாக இருந்தாலும், பல சந்தர்ப்பங்களில் அதுபோன்ற எதிர் அலைகள் ஜே.ஆருக்கு உதவவே செய்தன.
தென்பகுதி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்கு என்று கூறி, ஒப்பந்தத்தின் சரத்துக்களில் ஸ்ரீலங்கா அரசிற்கு சாதகமான அம்சங்களை இணைத்துக் கொள்ளுவதற்கு ஜே.ஆரால் முடிந்திருந்தது.
தென்னிலங்கையில் ஏற்படுகின்ற நெருக்குதல்களை சமாளிப்பதற்காகவே இடைக்கிடையே சில கடுமையான முடிவுகளை தான் எடுக்கவேண்டி இருப்பதாக, இந்தியத் தரப்பை நம்பவைப்பதற்கும் ஜே.ஆரால் முடிந்திருந்தது.
இடைக்கால நிர்வாக சபை ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஜே.ஆர். மிகவும் அழகாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியினாலோ, இந்தியத் தூதுவர் தீட்ஷித்தினாலோ, ஜே.ஆரின் காய் நகர்த்தல்களைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை@ அவரது தந்திரங்களுக்கு ஈடுகொடுக்கவும் முடியவில்லை.
ஜே.ஆரின் தந்திரோபாய நடவடிக்கைளைப் பரிந்துகொள்ளும் அனுபவமும் அவர்களுக்கு இருக்கவில்லை. மிகவும் இலகுவாகவே அவர்கள் ஜே.ஆரின் வலையில் வீழ்ந்துவிட ஆரம்பித்தார்கள்.
இரகசிய விவாதம்:
இது இவ்வாறு இருக்க, ஜே.ஆரின் காய் நகர்த்தல்கள் பற்றிய ஒரு விவாதம் யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இது இவ்வாறு இருக்க, ஜே.ஆரின் காய் நகர்த்தல்கள் பற்றிய ஒரு விவாதம் யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள், ஜே.ஆர். மேற்கொள்ள ஆரம்பித்திருந்த சதியை வெற்றிகொள்வது எப்படி என்று ஆராய்ந்துகொண்டிருந்தார்கள்.
ஜே.ஆரின் தந்திர வலைக்குள் புலிகள் சிக்காமல் தப்பி விடுவதுடன், அவரது வலையை எப்படி தமது அடுத்த நகர்வுகளுக்கு சாதகமாக்கிக்கொள்வது என்றும் அவர்கள் திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள்.
தொடரும்...
nirajdavid@bluewin.ch
nirajdavid@bluewin.ch
dinsdag 4 juni 2013
விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம்?
இலங்கை பாராளுமன்றில் கூச்சல், குழப்பம்! சபை நாளை வரை ஒத்திவைப்பு!
ஏறாவூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் படைவீரர் படுகாயம்
ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகி சிறுமி மரணம்!- யாழ் உரும்பிராயில் சம்பவம்!
இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற இலங்கைப் பெண்கள் மூவர் விமானநிலையத்தில் கைது
அம்பாறை வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்! மேலும் மூவர் படுகாயம்
தென்னிலங்கையில் இருந்து யாழிற்கு எடுத்துவரும் பொருட்கள் முடிவுத் திகதி அற்றவை!- யாழ். மாநகர சபை ஆணையாளர்
வடமாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கான ஆட்சேர்ப்பு (யாழ்.செய்தித் துளிகள்-3)
ராஜ் ராஜரட்னத்தின் சகோதரர் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குள் போதைப் பொருள் கடத்தல்
maandag 3 juni 2013
zondag 2 juni 2013
ஈழத்து, இந்திய சிறுவர்களின் கூகிள் மென் பொருள் சாதனை.
படிக்கும் வயதில் இணையத்தில் கணனியில் அதிக நேரம் செலவிடுவது மூளைக்கும் கண்ணுக்கும் ஆரோக்கியமானதா!! தமிழன் கண்டுபிடிப்பு என்பதால் தீமை நன்மைதருமா?! பாராட்டுவோர் பகுத்தறிந்தார்களா!?
புலிகளை அழிக்கும் இலக்கில் தோல்வி கண்ட இந்தியப்படை!
மில்லர் தாக்குதல் இந்தியாவின் உணவு விநியோகத்தால் அதிர்ச்சியடைந்து இலங்கை ராணுவம் முகாமில் முடங்கியிருக்க இந்திய அதிகாரிகள் வருகைதந்து அகதிமுகாம்களை பார்வையிட்டுக்கொண்டிருந்த சமயம் நடந்தேறிய தாக்குதலாகும்!!இதை இக்கட்டுரை தந்த சுபத்திரா அறிவாரா!?
zaterdag 1 juni 2013
Abonneren op:
Posts (Atom)