மேலே படத்தில் காணப்படுபவர் ரொறொன்ரோ ஈற்றன் சென்ரரில் கொல்லப்பட்ட “நிக்சன் நிமலேந்திரன்”

கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தில் தமிழர் கொலைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ம் திகதி நயாகராப் பகுதியில் சத்தியராஜ் மகேந்திரன் என்ற 21 வயது இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.சத்யராஜ் அவரது நண்பர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. சத்யராஜ் அவரது நண்பர்களுடன் நயாகராப் பகுதியிலுள்ள “சிப்பாவா” என்ற பூங்காவில் பந்து விளையாடியபின் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். சத்யராஜைக் கொன்றபின் அவரின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்த கொலையாளி உங்கள் மகன் இறந்து விட்டான். வந்து பிணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். 13 மாதங்களின் பின் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் சுந்தரலிங்கம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் மேலும் சிலரைக் கைது செய்ய பொலிசார் பொதுமக்களின் உதவியை நாடி நிற்கின்றனர்.

24096-2.jpg கடந்த வருடம் ஜூலை மாதம் “நிரோசன் தில்லைநாதன்” என்ற 22 வயது இளைஞர் ஸ்காபுரோவில் வெட்டிக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு 10 மணித்தியாலங்களின்பின் சிசான் மாலிக் என்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். “மக்கொவான்” வீதியில் 401 பெருவீதிக்கு வடக்கே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலையாளியின் சகோதரியை ஆபாசமான நிலையில் போட்டோ எடுத்து அதனை அவருக்குக் காட்டி பிளாக் மெயில் பண்ணியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நிரோசனைக் கத்தியால் குத்திக் கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
nixon-nirmalendranகடந்த வருடம் ஜூன் மாதம் ரொறொன்ரோ ஈற்றன் சென்ரரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நிக்சன் நிமலேந்திரன் என்ற 22 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இனத்க் கொலையில் சம்பந்தப்பட்ட கறுப்பினத்தவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நிக்சன் ஒரு கிரிமினல் குற்றவாளி.கொக்கயின் என்ற போதைவஸ்து வியாபாரம் காரணமாக குற்றவாளியாக 2011 மார்ச் மாதம் சிறைத் தண்டனை பெற்றவர். அவருக்கு சிறையில் இருந்தபோது ஒரு கொலைக் குற்றச்சாட்டும் உண்டு. சிறையில் கூடவே இருந்த கைதி ஒருவரைக் கொலை செய்ததில் உடந்தையாக இருந்ததற்காக குற்றம் சுமத்தப்பட்டு பின் வழக்கு தள்ளுபடியாகிவிட்டது.


nixon nisanஇவ்வருடம் மார்ச் மாதம் 21ம் திகதி நிக்சன் நிமலேந்திரனின் சகோதரர் நிசான் நிமலேந்திரன் சுட்டுக் கொல்லப்ட்டார். ரிறொன்ரோ கப்பேஜ் ரவுணிலுள்ள 55 பிளீக்கர்  வீதியில் உள்ள முதியோர் இல்லத்தில் வைத்து நிசான் நிமலேந்திரன் கொல்லப்பட்டார். கொலையாளிகள் வீடியோவில் பதிவாகியுள்ளனர். இருந்தாலும் பொலிசாரால் அடையாளம் காணமுடியவில்லை.
Surendra-Vaithalingam-seithy-150தற்போது ஸ்காபுரோப் பகுதியில் கொல்லப்பட்ட சுரேந்திரா வைத்திலிங்கம் என்ற குடும்பஸ்தரின் கொலையில் தமிழர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். பட்டப்பகலில் நடைபெற்ற இந்தத் துணிகரக் கொலை பொலிசாருக்கும் சவாலாக உள்ளது. எதிரேயுள்ள கண்கானிப்பு வீடியோவில் இந்தக் கொலைகாரர்கள் பதிவாகியுள்ளனர். மூவர் கைது செய்யப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.