தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 2 juni 2013

ஈழத்து, இந்திய சிறுவர்களின் கூகிள் மென் பொருள் சாதனை.


படிக்கும் வயதில் இணையத்தில் கணனியில் அதிக நேரம் செலவிடுவது மூளைக்கும் கண்ணுக்கும்  ஆரோக்கியமானதா!! தமிழன் கண்டுபிடிப்பு என்பதால் தீமை நன்மைதருமா?! பாராட்டுவோர் பகுத்தறிந்தார்களா!?
உலகலாவிய‌ ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நவீன உற்பத்தி முறைகளினால் மூளைசாலிக் கருவிகளின் விலையில் வீழ்ச்சி, அதே நேரம் அவற்றின் இயக்க வேகம் அதிகரிக்க, இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது. இளம் சந்ததியின் கைகளில் இணைபிரியா நன்பனாக இவை போய்ச் சேர்ந்துள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் இந்தக் கருவிகளில் இயங்கும் விளையாட்டு மென்பொருட்களின் சந்தை நிச்சயமாக ஒரு வளரும் சந்தையாகும்.
பல பில்லியன் டொலர் மதிப்புள்ள இந்த தொழிற்துறையில் நம்மவரின் பங்களிப்பு எந்த அளவில் உள்ளது ? நம் இளம் சந்ததி இந்த மென்பொருட்களைத் தயாரிப்பதில் போதிய அறிவூட்டலைப் பெற்றுள்ளதா ? அல்லது நம் சமுதாயம் தொழில்நுட்பம் வளர்ந்து எட்டாத்தொலைவை அடையும் வரைத் தயங்கி நிற்கப் போகிறதா ? இந்தக் கேள்விகள் நிச்சயம் கேட்கப் பட வேண்டியவை.
வர்த்தக மென்பொருட்கள் போலல்லாது விளையாட்டு மென்பொருட்கள் தொழில்நுட்ப ரீதியில் சிக்கல் நிறைந்தவை. அவற்றின் எல்லைகள் வரையறைக்கு உட்பட்டவை அல்ல. விளையாட்டு மென்பொருட்களில் பயன்படும் பல தொழில்நுட்பங்களும் தந்திரோபாயங்களும் இன்று அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானில் டலிபான்களை மடக்க பயன்படுத்துகின்றது. இத்தகைய மென்பொருட்களை வடிவமைப்பவர்களின் திறமைக்கு இது ஒரு சான்று.
இந்தவகையில் ஜேர்மனியில் வளர்ந்துவரும் 16 வயதுடைய சிறுவர்களான ஈழத்துச் சிறுவன் பார்த்திபன் ரமேஷ் வவுனியனும் இந்தியா ஜெய்ப்பூரைச் சேர்ந்த அபே பன்சால் இருவரும் இணைந்து கூகிள் அன்ட்ரொய்ட்டில் இயங்கும் விளையாட்டு மென்பொருளை உருவாக்கி சாதித்துள்ளார்கள். இவர்களுடைய சாதனை நம் இளம் சந்ததியை அடைந்து அவர்களுக்கு ஓர் ஆர்வத்தையும் அவர்களின் அறிவியல் வாசலையும் திறந்து வைக்க வேண்டும்.
இன்று சிறந்து விளங்கும் மென்பொருள் தொழிநுட்பவியலார்கள் ஏதோ ஒரு கட்டத்தில் விளையாட்டு மென்பொருட்களை உருவாக்கியவர்களாகவே இருப்பார்கள். விளையாடு மென்பொருளை உருவாக்கும்போது அவர்களுக்கு ஆர்வத்தோடு தொழில்நுட்ப அறிவும், மூளையோடு சேர்ந்த நுண் அறிவும் கூடவே வளர்கின்றது.
அபே பன்சாலின் பெற்றோர்களான ரமேஷ் அகர்வால் , சீமா அகர்வால் இந்தியா ஜெய்பூரைச் சேர்ந்தவர்கள். பார்த்திபன் ரமேஷ் வவுனியனின் பெற்றோர்களான ரமேஷ் வவுனியன் ,சாந்தி ஈழத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இன்னும் பல சாதனைகளைப் படைக்க பார்த்திபன் ரமேஷ் அபே பன்சால் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பார்த்திபன் ரமேஷ் , அபே பன்சால் உருவாக்கிய பரஷூட் பையன் விளையாட்டை தரவிறக்கம் செய்ய..
420262_366223170065182_1435021814_nabhayO


Geen opmerkingen:

Een reactie posten