தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 juni 2013

லண்டனில் உள்ள சிங்களவர்களை பாதுகாகவேண்டும்: ஸ்ரீலங்கா !

லண்டனில் உள்ள இலங்கை கிரிகெட் அணியினரையும் சிங்களவர்களையும் பாதுகாக்குமாறு இலங்கை அரசாங்கம் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் பிரித்தானிய வெளியுறவு அமைச்சரை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டே இந்தவேண்டுகோளை விடுத்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. நேற்று முன் தினம் காடிஃப் மைதானத்தின் முன்னதாக, தமிழர்கள் நடத்திய பாரிய ஆர்ப்பாட்டம் காரணமாகவும் மற்றும் பிரித்தானிய தமிழர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள அசைக்கமுடியாத ஒற்றுமை காரணமாகவும் பல சிங்களவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளர்கள். 

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கிரிகெட் போட்டியில் வைத்து , தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர்கள் காடிஃப் மைதானத்துக்கு முன்னர் நடத்தியிருந்தார்கள். அத்தோடு மட்டுமல்லாது தமிழர்களை தாக்கிய பல சிங்களவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இன் நிலையில் அவர்களை காப்பாற்ற இலங்கை அரசு தற்போது பிரித்தானிய அரசின் உதவியை நாடியுள்ளது. இதனைத்தான் ஆளம் அறியாமல் காலை விடக்கூடாது என்று சொல்லுவார்களோ தெரியவில்லை !

Geen opmerkingen:

Een reactie posten