இங்கு இலங்கை அணி ஆடிய அனைத்து ஆட்டங்களின்போதும் மைதானங்களுக்கு வெளியே தமிழர் அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
அதேவேளை இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், கார்டிஃப் நகரில், இந்திய அணிக்கு எதிராக இலங்கை ஆடிய போது மைதானத்துக்குள்ளும் சில இளைஞர்கள் நுழைந்து தமது எதிர்ப்பை காண்பித்தார்கள்.
இவை குறித்து எமது நேயர்கள் மத்தியில் பலவிதமான கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. எமது ஃபேஸ்புக் பக்கத்திலும், மின்னஞ்சல் மூலமும் இந்தக் கருத்துக்கள் பதியப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்தப் போராட்டங்கள் நியாயமானவையா, அவை விளையாட்டு மைதானங்களில் செய்யப்படலாமா என்பவை குறித்து எமது இரு நேயர்களான பிரிட்டனில் வசிக்கும் சஞ்சை மற்றும் இலங்கையில் இருந்து இங்கு வந்து இந்த ஆட்டங்களைப் பார்த்த சாந்தறூபி ஆகியோர் விவாதிக்கின்றனர்.
வழங்குகிறார் சீவகன். BBC
Geen opmerkingen:
Een reactie posten